தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 29 October 2016

கண்டன ஆர்ப்பாட்டம் - 03-11-2016


8 comments:

  1. இந்த போராட்டத்தை தாங்கள் ஆதரிப்பதாகக் கருதுகிறேன். என் மனதில் எழும் கீழ்க்கண்ட வினாக்களுக்கு பகுத்தறிவாளரான நீங்கள் நேரடியான பதில் தருவீர்களா?

    1. திரு. கிறிஸ்துதாஸ் சொன்னது சரியா ? 'நான் (ஒரு மதத்தின் கடவுளை) செருப்பால் அடித்தால் எப்படி தப்புன்னு சொல்லுவீங்க ? அது தான் செக்குலரிசம்' என்று அவர் சொல்வது உங்களுக்கு ஏற்புடையது தானா?

    2. இது சரி என்றால், ஒரு மதத்தினர், தாங்கள் நம்பாத பிற மதங்களின் அடையாளங்களையோ , ஆத்திகர் தாங்கள் ஏற்காத கடவுள் மறுப்பாளர்களின் படிமங்களையோ இதே போல அவமதிக்க 'செக்யூலரிசத்தி ல்' உரிமை உண்டா?

    3.பல்லாயிரக் கணக்கானோர் பார்க்க தான் தொலைக் காட்சியில் சொன்ன இந்தக் கருத்தை ( இன்றளவும் youtube ல் உள்ளதை ) , எதிர்ப்பு வந்ததும் திரு. கிறிஸ்துதாஸ், தான் அப்படி சொல்லவே இல்லை என்று நாளிதழ்களிடம் மறுத்தது நேர்மையாளர்கள் செய்யும் செயலா?

    4. திரு. கிறிஸ்துதாஸ் எந்த மதத்தை சேர்ந்தவர்? பெயரில் ஒரு மதத்தின் கடவுளை வைத்துகொண்டு இட ஒதுக்கீட்டு சலுகைகளுக்காக சான்றிதழ்களில் வேறு மதத்தினைக் குறிப்பிடுவது நேர்மையாளர்கள் செய்யும் செயலா ?

    5. இந்த பிரச்சனைக்கு சாதி சாயம் ஏன் ? ஒரு குறிப்பிட்ட சாதி என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற உரிமை இருக்கிறதா? இது சாதீய வாதமா இல்லையா? சாதி ஒழிப்பிற்காக நாளும் போராடும் தங்களை போன்றோர் இந்தனை ஆதரிப்பது முரண்பாடா இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. HIV.Raja எங்கள் தலைவரை பற்றி செருப்பால் அடிப்பேன் என்று பேசலாமா ?

      எங்களுக்கு மானத்தையும்,அறிவையும் புகுற்றிய பகுத்தறிவு பகலவனை பற்றி நீங்க பேசலாமா ?

      தலித் சமூகமக்கள் காலம் காலமாக உழைப்பையும் ,அறிவாற்றல் கொண்டவர்கள் தான் - ஒரு உதாரணத்திற்கு, அய்யன் திருவள்ளுவர் , அவையார் , இரட்டைமலை சீனிவாசன் , பண்டிதர் அயோத்திதாசர் ,இம்மானுவேல் சேகரன் , போன்றோர்களை சொல்லலாம் , எந்த விதமான வம்புக்கு போகாதவர்கள் , நீங்கள் பேசும் பொழுது , அராஜகம் செய்யும் பொழுது , அதை கேட்டு கொண்டும் , பார்த்துக்கொண்டும் எவ்வளவு நாட்கள் சும்மா இருப்பது .

      ஆகையால் திரு . கிருஸ்துவத்தாஸ் காந்தி பேசியது சரிதான் . கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

      Delete
    2. வேறு ஒருவரை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லும உரிமை யாருக்கும் இல்லை- அது திரு. கிறிஸ்துதாஸ் ஆனாலும் சரி ராஜா ஆன்னாலும் சரி - கண்டிக்கத்தக்கது தான்.

      அது போகட்டும் திருவள்ளுவர் , அவையார் , இரட்டைமலை சீனிவாசன் , பண்டிதர் அயோத்திதாசர் ,இம்மானுவேல் சேகரன் போன்றோரை எல்லாம் யார் , எப்போது , எந்த தொலைக்காட்சியில் அல்லது ஊடகத்தில் தவறாக பேசினார்கள்? குறிப்பிட்டு சொல்லவும்.

      தவிரவும், என்னுடைய முந்தைய பதிவில் வந்த கேள்விகளுக்கு உங்களது நேரடியான பதில் என்ன?



      Delete
    3. திரு மகேஷ் அவர்களே உங்களுக்கு இவ்வளவு வருத்தம் தேவை இல்லை. அவர் அடிப்பேன் என்றுதானே சொன்னார் இன்னும் அடிக்கவில்லையே. அவர் அடிப்பேன் என்று சொன்னதற்கு உங்களுக்கு கோபம். ஆனால் அவர் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார் என்பது எங்களின் வருத்தம். சரி இது இருக்கட்டும்.

      அவர் பேசியது பற்றி வருத்தப்படுகிறீர்களே, அவரது பேச்சு உங்களின் பேச்சின் செயலின் விளைவு என்பதை உணருங்கள். இந்த இந்தியா என்பது பல்வேறு நாட்டு மக்களின் கூட்டு முயற்சி அதில் அனைவரையும் மதித்து நடந்திட நடத்திட வேண்டிய நீங்கள் சரிநிகர் சமானமாக நடத்தாமல் யாரை கேட்டு சனாதன தர்மத்தை புனித தர்மமாக பகவத் கீதையை தேசிய நூலாக பிரகடன படுத்துகிறீர்கள்? யாரை கேட்டு இந்த நாட்டை பாரதம் என்று அழைக்கிறீர்கள்? இப்படியெல்லாம் நடந்துக்கொள்ளும் நீங்கள் மற்றவர்களிடம் நடுநிலை நாகரீகம் எப்படி எதிர்பார்க்கலாம்? யுகம் யுகமாக இந்த நாடு ஏதோ ஒரு ஒற்றை அரசன் பேரரசன் ஆண்டு வந்ததைப்போல பிதற்றுவதை நிறுத்துங்கள். இன்றைய காலத்துக்கும் ஒவ்வாத ராமாயணத்தை நீங்கள் யாருடைய முன் அனுமதியும் கேட்டு தூக்கி பிடிக்க வேண்டியது இல்லை எனும் அகங்காரம் கொண்டு நீங்கள் நடந்து கொள்ளும் போது உங்களை கேட்டு எதையும் செய்ய நாங்களும் தயார் இல்லை. இன்றும் நீங்கள் ராவண உருவத்தை கொளுத்தும் மனப்பான்மையில் இருக்கும்போது நாங்கள் பதிலுக்கும் எதையும் சொல்லுவோம் செய்வோம். நாங்கள் உங்கள் அடாவடியை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதையே நாங்களும் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் என்பதை உணருங்கள். நீங்கள் மதிக்க வில்லை மரியாதை கொடுக்கவில்லை ஆனால் மதிப்பையும் மரியாதையையும் எதிர்பார்க்கிறீர்கள். முதலில் சக குடிமகனை நீங்கள் மதியுங்கள் அப்புறம் மறு மரியாதையை எதிர் பார்க்கலாம்.

      Delete
  2. கிறிஸ்துதாஸ் காந்தி கொஞ்சம் நிதானத்துடன் பேசியிருக்கலாம். ஒரு பொது ஊடகத்தில் அப்படி பேசியது தவறு.

    ReplyDelete
  3. ராவணனை எரித்தபோது நண்பர்கள் உறங்கி கொண்டிருந்தனர் போலும்

    ReplyDelete
    Replies
    1. ராவணனின் பொம்மையை எரிப்பது உங்களுக்கு வருத்தமளிக்கிறது என்றால், ராவணன் மற்றும் ராமாயணம் உண்மை என்று ஒப்புக் கொள்கிறீர்கள் என்று ஆகி விடுமே நண்பரே?

      Delete
  4. சிரீராம் அவர்களே
    தாங்கள் எதிர்பார்க்கும் நிதானம் என்பது பார்ப்பானுக்கு கை கட்டி சொல்லுங்க சாமி என்பதுதானே?

    பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே!

    ReplyDelete