தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 4 October 2016

சுயமரியாதை - 26

அரசியல் விடுதலை - யாருக்காக?


காங்கிரஸ் கட்சியின் சைமன் கமிஷன் எதிர்ப்பு போலித்தனமானது என்று பெரியார் கருதியதைப்  போலவே அம்பேத்கரும் எண்ணினார். எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் சார்பில் சைமன் கமிஷன் முன்னிலையில் தன் கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும் என்று விரும்பினார். அவ்வாறே 1928 மே மாதம் 29 ஆம் நாள்மும்பை, தாமோதர் அரங்கில், சைமன் குழுவைச் சந்தித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை அவர் கோரினார். அவருடைய கோரிக்கையில் அட்டவணைச் சாதியினருக்கான கல்வித் தேவைகள்  முதலிடம் பெற்றிருந்தன.


உடனே அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் 'தேசபக்தர்கள்' சிலர் தேசவிரோதிகள் பட்டத்தை வழங்கினர். அது குறித்து இருவருமே கவலை கொள்கின்றவர்கள் இல்லை.  அவர்களுக்கெல்லாம் முன்னோடியான ஜோதி ராவ் புலேவுக்கே அந்தப் பட்டம் அளிக்கப்பட்டது என்பதை அவர்கள் அறியாதவர்களா என்ன?


அடுத்த ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்திலும் சுயமரியாதை இயக்கம் கலந்து கொள்ளவில்லை. அதில் தனக்கும், தங்கள் இயக்கத்திற்கும் உடன்பாடில்லை என்றும் பெரியார் அறிவித்தார். முதலில் சத்தியம் போன்ற சொல்லே தெளிவற்றது என்று அவர் கூறினார். ஒருவருக்குச் சத்தியம் என்று படுவது, இன்னொருவருக்கு அசத்தியம் ஆகி விடலாம் இல்லையா என்றார்.

"மாட்டை அறுத்து அதன் மாமிசம் சாப்பிடுவது சத்தியமான தாகவும்நியாயமானதாகவும் மவ்லானா சவுகத் அலிக்குத் தோன்றலாம்.  அதைத் தடுக்க வேண்டியது சத்தியமாகவும், அதற்காக சத்தியாகிரகம் செய்ய வேண்டியது நியாயமாகவும் திரு காந்திக்குத் தோன்றலாம். இருவரும் கடவுள் பக்தர்கள், மத பக்தர்கள்.  இருவரும் சத்தியத்தில் நம்பிக்கை வைத்தே இந்தப்படி முடிவு காண்கிறார்கள். இதில் எது சத்தியம், அது அசத்தியம்?"  என்று கேட்டார் பெரியார். 

எல்லா சாதியினருக்கும் ஒரே மாதிரி சத்தியம் இங்கு உண்டா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். "மற்றொவன் சமைத்ததைச் சாப்பிடுவது பாவம் என்றும், மற்றொவன் தொட்ட  தண்ணீரைக் குடிப்பது தோஷம் என்றும்.....பண்டித மாளவியா போன்ற 'உத்தம பிராமணர்களுக்குத்' தோன்றலாம். ஆனால் இந்தப்படி நினைப்பதே மகா அக்கிரமம் என்றும், ஜாதி ஆணவம் என்றும், அறிவீனம் என்றும், சுயநலம் என்றும், அந்த வழக்கத்தை ஒழித்தாலொழிய நாடு ஒற்றுமையும், சமத்துவமும், முன்னேற்றமும் அடையாதென்றும், அதை ஒழிக்கச் சத்தியாகிரகம் பண்ணவேண்டும் என்றும் சமூகச் சீர்திருத்தக்காரர்களுக்குத் தோன்றலாம்" என்றும் தன் நிலைப்பாட்டைப் பெரியார் விளக்குவார்.  

இந்த அடிப்படையில்தான் நாடு முழுவதும் மிகப் பெரிய ஆதரவுடன் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தையும் அவர் எதிர்த்தார். எங்கள் உப்பை நாங்கள் பெறுவதற்கு வெள்ளையருக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும் என்ற வினாவுடன் உப்புச் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. காந்தியாரின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல் தொலைவிலிருந்த 'தண்டி'யில் உப்பு எடுப்பதென்பதும், வெள்ளையரின் தடையை மீறுவதென்பதும், அப்போராட்டத்தின் அடிப்படை நோக்கம்.


1930 மார்ச் 12 ஆம் நாள் 79 தொண்டர்கள் பின்தொடரத் 'தண்டி யாத்திரை'யைக்  காந்தியார் தொடங்கினார். தமிழ்நாட்டில், ராஜாஜி தலைமையில், வேதாரண்யம் நோக்கி யாத்திரை தொடங்கியது. வேதபாராயணம் முழங்க ராஜாஜி தன் யாத்திரையைத் தொடங்கியபோது, இது இந்தியாவிற்கான யாத்திரையா, இந்துக்களுக்கான யாத்திரையா என்று பெரியார் கேட்டார். 

உப்பு வாழ்க்கைக்குத் தேவைதான். ஆனால் அதனைவிடத்  தண்ணீர் மிக  மிகப் பெரிய தேவையில்லையா? அந்தத் தண்ணீர் கூட இங்கு அனைவருக்கும் பொதுவாக இல்லையே ஏன் என்பது அவருடைய கேள்வி!  "ஜீவாதாரமான தண்ணீரைக் கிணற்றிலிருந்து மொள்ள வொட்டாமல், சாதியின் பேரால் தடுக்கப்பட்டு எத்தனையோ லட்சம் மக்கள் இந்த ஜில்லாவில் வாட்டமுற்று, குட்டைகளிலும், பள்ளிகளிலும் தேங்கி கிடக்கும் அசுத்த நீரைக் குடித்து நோய்வாய்ப்பட்டு வருந்துகின்றனரே, அவர்களுக்கு என்ன செய்தீர்கள்?" 

இவைதான் பெரியார் முன்வைத்த வினாக்கள். சமூக விடுதலை பற்றிக் கவலைப்படாதவர்கள் அல்லது சமூக அநீதியை ஏற்றுக் கொள்பவர்கள் பெற விரும்பும் அரசியல் விடுதலை யாருக்குப் பயன்படும் என்ற ஆழ்ந்த கவலையின் வெளிப்பாடே அவரது எழுத்துகளாக வெளிப்பட்டன.                                                                                      
 (தொடரும்)
                                                                                  

நன்றி: நக்கீரன்    


2 comments:

  1. This New Zealander view is same as periyar's. It's analyzing the roots of all problems.Its from whatsapp..

    Hard hitting article but sadly true: The following message from New Zealand is forwarded as received. Makes interesting reading

    A New Zealander's view on reason for corruption in India:

    Indians are Hobbesian (Culture of self interest)

    Corruption in India is a cultural aspect. Indians seem to think nothing peculiar about corruption. It is everywhere.

    Indians tolerate corrupt individuals rather than correct them.

    No race can be congenitally corrupt.

    But can a race be corrupted by its culture?

    To know why Indians are corrupt, look at their patterns and practices.

    Firstly:
    Religion is transactional in India.

    Indians give God cash and anticipate an out-of-turn reward.

    Such a plea acknowledges that favours are needed for the undeserving.

    In the world outside the temple walls, such a transaction is named “bribe”.

    A wealthy Indian gives not cash to temples, but gold crowns and such baubles.

    His gifts can not feed the poor. His pay-off is for God. He thinks it will be wasted if it goes to a needy man.

    In June 2009, The Hindu published a report of Karnataka minister G. Janardhan Reddy gifting a crown of gold and diamonds worth Rs 45 crore to Tirupati.

    India’s temples collect so much that they don't know what to do with it. Billions are gathering dust in temple vaults.

    When Europeans came to India they built schools. When Indians go to Europe & USA, they build temples.

    Indians believe that if God accepts money for his favours, then nothing is wrong in doing the same thing. This is why Indians are so easily corruptible.

    Indian culture accommodates such transaction

    First: Morally. There is no real stigma. An utterly corrupt JayaLalita can make a comeback, just unthinkable in the West.

    Secondly:
    Indian moral ambiguity towards corruption is visible in its history. Indian history tells of the capture of cities and kingdoms after guards were paid off to open the gates, and commanders paid off to surrender.

    This is unique to India.

    Indians' corrupt nature has meant limited warfare on the subcontinent.

    It is striking how little Indians have actually fought compared to ancient Greece and modern Europe.

    The Turk's battles with Nadir Shah were vicious and fought to the finish.

    In India fighting wasn't needed, bribing was enough to see off armies.

    Any invader willing to spend cash could brush aside India’s kings, no matter how many tens of thousands soldiers were in their infantry.

    Little resistance was given by the Indians at the “Battle” of Plassey.

    Clive paid off Mir Jaffar and all of Bengal folded to an army of 3,000.

    There was always a financial exchange to taking Indian forts. Golconda was captured in 1687 after the secret back door was left open.

    Mughals vanquished Marathas and Rajputs with nothing but bribes.

    The Raja of Srinagar gave up Dara Shikoh’s son Sulaiman to Aurangzeb after receiving a bribe.

    There are many cases where Indians participated on a large scale in treason due to bribery.

    Question is: Why Indians have a transactional culture while other 'civilized' nations don't?

    Thirdly:
    Indians do not believe in the theory that they all can rise if each of them behaves morally, because that is not the message of their faith.

    Their caste system separates them.

    They don't believe that all men are equal.

    This resulted in their division and migration to other religions.

    Many Hindus started their own faith like Sikh, Jain, Buddha and many converted to Christianity and Islam.

    The result is that Indians don't trust one another.

    There are no Indians in India, there are Hindus, Christians, Muslims and what not.

    Indians forget that 1400 years ago they all belonged to one faith.

    This division evolved an unhealthy culture. The inequality has resulted in a corrupt society, in India every one is thus against everyone else, except God ­and even he must be bribed.

    ReplyDelete
  2. இரத்தினவேல்4 October 2016 at 13:56

    சமூக, பொருளாதார விடுதலையில்லாத அரசியல் விடுதலை ஒடுக்கப்பட்டோருக்கு பயன்தருவதில்லை என்பதைக் காலம் மெய்ப்பித்திருக்கிறது.

    ReplyDelete