மாற்று அரசியல் கருத்து
வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, தமிழக முதமைச்சர் விரைவில் குணம் பெற்று
வீடு திரும்ப வேண்டும் என்னும் விருப்பத்தை, ஒரு சடங்காக
அன்றி, உண்மையாகப் பதிவிட விரும்புகின்றேன்.
அதற்கு முன்பாக, அவருடைய
உடல்நிலை குறித்த உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு
உள்ளது என்பதையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அவரது உடல்நலம் பற்றி
அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் செய்திகளிலேயே பல முரண்பாடுகள்
காணப்படுகின்றன.
காவிரி நீர்ச் சிக்கல் குறித்து
அதிகாரிகளுடன் முதல்வர் ஒரு மணி நேரம் கலந்துரையாடினார் என்று சொல்கின்றனர். ஆனால்
அக்காட்சி 10 நொடிகள் கூட, ஜெயா தொலைக்காட்சி உட்பட எந்த
ஊடகத்திலும் காட்டப்படவில்லை. ஆளுநர் நேரில் வந்து பார்த்தார் என்கின்றனர்.
எனினும் அவர் முதலமைச்சரைச் சந்த்தித்து ஓரிரு சொற்கள் கூடப் பேசியதாகத்
தெரியவில்லை. வெள்ளம் வந்தபோது கட்செவி (வாட்ஸ் அப்) ஊடகத்தில் பேசிய முதல்வர்
இப்போது அந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.
இந்தச் சூழலில், துணை முதல்வர்
என்று யாரும் இல்லாததால், அரசின் பணிகளை முதல்வரின் அறிவுரைப்படி ஆற்றுவதற்கு,ஓர் அமைச்சர்
குழு அமைக்கப்பட வேண்டியது உடனடித் தேவையாகும். இல்லையெனில், மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் புறந்தள்ளப்பட்டு, அரசு வட்டத்திற்கு வெளியில் இருப்போர்
கைகளுக்கு அதிகாரம் சென்று சேரும். அது ஜனநாயகத்திற்கும், அரசமைப்புச்
சட்டத்திற்கும் எதிரானதாக முடியும்.
ஆம் ! ஆனால் அந்த போயஸ் பூணைக்கு மணி கட்டப் போவது யார் ?
ReplyDeleteஉடல் நிலை மோசமாக இருக்கிறது அல்லது பயங்கர ஆபத்து நிலையில் இருக்கிறார் என்று அப்பட்டமாக வெளியே சொல்லி ஆகப்போவது என்ன? மக்கள் இடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கவா?
ReplyDeleteமக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, ஜெயலலிதா ஆணையிட்டார் என்று "பொய்" சொல்லுவதில் என்ன பிரச்சனை?
Do you want the state to be stable or chaotic?
மருத்துவமனைக்கு போகும் முன்பே அவசர அவசரமாக இன்னார்தான் ஆட்சியை நடத்துவார் என சொல்லி விட்டு செல்ல முடியுமா?
10 நாளில் ஒண்ணும் குடிமுழுகி போகாது. கொஞ்சம் பொறுங்கள்!!