தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 21 October 2016

ஜனநாயகம் என்பதே வதந்தியா?


தமிழ்நாட்டில் இப்போது 'வதந்தி ஒடுக்குமுறைத் தடுப்புச் சட்டம்' என்று ஓர் அவசரச் சட்டம் மட்டும்தான் கொண்டு வரப்படவில்லை.  மற்றபடி, ஒவ்வொரு நாளும் இரண்டு பேராவது, வதந்தி பரப்பினார்கள் என்னும் குற்றச்சாற்றில் கைது செய்யப்படுகின்றனர். இன்றுவரை 9 பேர்  கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 50 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 


தலைவர்கள் பலர் குறித்த பல வதந்திகள் தமிழ்நாட்டில் உலவி உள்ளன. அப்போதெல்லாம் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டதில்லை. இப்போது மருத்துவமனையில் உள்ள முதல்வர் பற்றி யாரேனும் ஏதோ ஒரு சிறு கருத்தை வெளியிட்டாலும் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமூக வலைத்  தளங்களில் செய்த பதிவுகளுக்காக இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவையில் நடந்தது மிகக் கொடுமையாக உள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர், காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தாராம். "நான் இன்று ஒரு வங்கிக்குச் சென்றிருந்தேன். அங்கே அந்த வங்கியின் ஊழியர்கள் இருவர் அம்மாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிக் கொண்டிருந்தனர்" என்பதுதான் அவருடைய புகார். உடனே அந்த இருவரும் கைது செய்யப்பட்டுவிட்டனர். 

என்ன நியாயம் இது? இங்கே அறிவிக்கப்படாத நெருக்கடிக் காலம் நடைபெறுகிறதா?  எதற்கும் ஓர் அளவுண்டு என்பதை அதிகாரம் செய்வோர் உணர வேண்டும். இல்லையேல் மக்களின் பரிவுணர்ச்சி கூட ஒரு வெறுப்பாக மாறிவிடும்.


நமக்கு ஓர் ஐயம் எழுகிறது....இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளது என்று கூறுவதே ஒரு வதந்திதானோ?

3 comments:

  1. நமக்கு ஓர் ஐயம் எழுகிறது....இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளது என்று கூறுவதே ஒரு வதந்திதானோ? ஆம் !

    ReplyDelete
  2. அப்படிப் பாரத்தால் பேஸ்புக்கில் "ஜெய் சாய் பாபா" அல்லது "ஆமேன்" என்று பதிவிட்டால் பணம் கிட்டும், படத்தை பகிருங்கள் நினைத்தது நடக்கும் என்று பதிவிடுபவர்களைத்தான் கைது செய்ய வேண்டும். பேஸ்புக்க திறந்தாலே இந்த கதைதான். கடுப்பேத்துறார் மை லார்ட்

    ReplyDelete
  3. தீய வதந்திகள் உண்மையாகிவிட கூடாது.

    ReplyDelete