அது 1983 ஆம் ஆண்டு - குடந்தைக்கு அருகில் உள்ள
திருப்பனந்தாள் கல்லூரியில் நான் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது
ஜூலை மாத இறுதியில் ஒரு நாள், தமிழகத்தின் பட்டி
தொட்டியெங்கும் மக்கள் குமுறி எழுந்தார்கள். ஊரெங்கும் ஊர்வலங்கள். தெருவெங்கும்
பொதுக்கூட்டங்கள். இலங்கையில் உள்ள வெலிக்கடை என்னும் ஊரின் சிறையில் தமிழ் ஈழம்
கேட்டுப் போராடியமைக்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் பலர்
கொல்லப்பட்டார்கள் என்னும் செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவியது. குறிப்பாக,
தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் ஆகிய போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதும், அவர்களுள் குட்டிமணியின் கண்கள் பிடுங்கப்பட்டன என்பதும் மக்களிடையே
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குட்டிமணியின் கண்கள் ஏன் பிடுங்கப்பட்டன?
நீதிமன்றத்தில் அவர் கொடுத்த வாக்குமூலம் அதற்கான காரணமாக
இருந்தது. நான் இறந்தபிறகு என் கண்களை
இன்னொருவருக்குப் பொருத்தி விடுங்கள். என் கண்களாவது மலரப்போகும் தமிழ் ஈழத்தைக்
காணட்டும் என்று அவர் நீதிமன்றத்தில்
சொல்லியிருந்தார்.
மேலும் படிக்க
வலிக்காக காத்திருக்கிறேன்
ReplyDeleteவலி என்பதே விரக்தியும் வேதனையும் கொண்டது.
வலிகளை கண்டு நாம் பயப்படலாம்,, உடம்பிலோ மனதிலோ வலி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்,, ஆனால் சில வலிகளை நாம் ஒதுக்கிவிடமுடியாது.
பால் குடிக்கும் குழந்தையினால் ஏற்படும் வலியை தாயால் புறந்தள்ளமுடியாது,
விதை உடைத்து முளைத்து வரும் செடியால் ஏற்படும் வலியை பூமியால் புறந்தள்ளமுடியாது,
கோவத்தில் கண்டிக்கும் தந்தையின் கடுஞ்சொற்களினால் ஏற்படும் வலியை மகனால் புறந்தள்ளமுடியாது,
மழைநேரத்தில் மேகத்தை காற்று வேகமாமக அடிக்க, காற்றால் ஏற்படும் வலியை கார்மேகத்தால் புறந்தள்ளமுடியாது,
அது போன்று தான் அன்பிற்குறிய பேராசிரியர் சுபவீ ஐயா , உங்களின் வலி கட்டுரைகள் என் மனதை எவ்வளவு பாதித்தாலும், வலிக்கிறதே என்று அக்கட்டுரைகளை படிக்காமல் இருக்க இயலாது. ஒவ்வொரு கட்டுரைகளும் நெஞ்சை பாதிக்கிறது, வார்த்தைகளால் படிப்பதற்கே இவ்வாறென்றால் இதை வாழ்க்கையாக கொண்டவர்களை எண்ணிப்பார்பதே கொடுமை,,
இது போன்ற உங்களின் கட்டுரைகள் அதிகமாக வரவேண்டும் உங்கள் புகழ் வான்உயரம் எட்ட வேண்டும் ,,, தினமும் காலையில் நான் கேட்கும் உங்களின் ஒரு நிமிட செய்தி எனக்கு காதலியின் புன்னகைபோல் இனிமையை தரும்,,, புதன்கிழமை தோறும் நான் படிக்கும் உங்களின் "வலி" கட்டுரைகள் எனக்கு பெற்றோரை பிரிந்தது போன்ற பாதிப்பை தரும். ,, என்றும் என் நெஞ்சம் இந்த வலிக்காக காத்திருக்கும்
நன்றி
சையத்