எங்கள் உறவினர் இல்லத்தில் ஒரு மரணம். 35 வயதில் அந்த இளைஞர்
ஒரு விபத்தில் இறந்துபோய் விட்டார். இளம்வயது மனைவியும், ஒரு
மகனும் அழுது கதறிய காட்சி, நெஞ்சை உலுக்கியது. வைதீக
அடிப்படையில் சடங்குகள் நடந்தன. இறுதியில் பிணத்தைப் பாடையில் வைத்துத் தூக்கிக்
கொண்டு போனார்கள். அந்தப் பெண் அழுதுகொண்டே உள்ளே வந்தார். அப்போது, “எல்லாரும் முகத்த அந்தப் பக்கம் திருப்பிக்கிங்க” என்று உரக்கக் குரல் எழுப்பினார்கள். ஏன் என்று புரியவில்லை. என் மனைவி
விளக்கம் சொன்னார். “அந்தப் பொண்ணு உள்ள போயி
குளிச்சிட்டு வர வரைக்கும் அது முகத்த பாக்கக் கூடாதாம்” என்றார்.
எனக்குத் தாள முடியாத சினம் ஏற்பட்டது. மரணத்தை விட இது கொடுமையானதாகத் தெரிந்தது.
இப்படிப் பல்வேறு சமூகங்களிலும், பல்வேறு விதமான
சடங்குகள் உள்ளன. அவை எல்லாவற்றிலும் உள்ள ஓர் ஒற்றுமை, துணைவரை
இழந்த பெண்களை இழிவு படுத்துவதும், அவர்களை மேலும்
துயரத்திற்குள்ளாக்குவதும் தான். தன் துணைவரை இழந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறாமல்,
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இந்தச் சமூகம் அவளை மேலும்
கொடுமைப் படுத்துகிறது.
மேலும் படிக்க
வேதனை ஐயா
ReplyDelete