தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 24 September 2017

தமிழக அரசியலில் ரஜினி - கமல்!

                               
         

ஒரு தேசத்தின் அரசியல் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்பதும், அதனை யாரெல்லாம் தீர்மானிக்கிறார்கள் என்பதும் மிக முதன்மையானவை! தமிழ்நாட்டின் அரசியலை, அரசியலற்ற செய்திகளும், அரசியலை விட்டு விலகி நிற்பவர்களுமே பல நேரங்களில் தீர்மானிக்க முயல்கின்றனர் என்பது நடைமுறை உண்மை.


கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவார்களா என்பதே ஊடகங்களின் விவாதப் பொருளாக இருந்தது. இப்போது அவர்கள் அரசியலை நோக்கிச் சில அடிகளை எடுத்து வைத்துள்ளனர் என்பது தெரிகிறது. 

அவர்கள் எந்தத் திசையிலிருந்து வருகின்றனர் என்பது முக்கியமன்று. எந்த திசை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதே முக்கியமானது. நடிகர் கமலைப் பொறுத்தவரையில்,  வெளிப்படையாகவே இன்றைய தமிழக ஆளுங்கட்சியை விமர்சித்து வருகின்றார். இந்த ஆட்சி நீக்கப்படவேண்டிய ஒன்று என்னும் அளவிற்குத் தன் கருத்தைக் கூறுகின்றார். நடிகர் ரஜினியோ அப்படியெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. வெளிப்படையாக எதனையும் பேசவும் இல்லை. அவர் அரசியலுக்கு வருவது முடிவாகி விட்டது என்று தமிழருவி மணியன்தான்  மாநாடு கூட்டிச் சொல்கின்றார். அதனை ரஜினி மறுக்கவில்லை. மௌனம் சம்மதம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போதுதான் பிரதமர் மோடியின் இரண்டு திட்டங்களை ஆதரித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். 

கமலின் அரசியலில் நமக்கு இரு பெரும் கேள்விகள்  இருக்கின்றன.  ஒன்று, அவர் எந்த  சித்தாந்தத்தையும் முன்னிறுத்தி  அரசியலுக்கு வருவதாகச் சொல்லவில்லை. ஊழல் ஒழிப்பு அரசியல் என்கிறார். இது பொத்தாம் பொதுவானது. இரண்டாவது, தமிழக ஆளுங்கட்சியை நேரடியாகத் தாக்கும் அவர், மத்தியில் உள்ள ஆளுங்கட்சியை மறைமுகமாகக் கூடத் தாக்கவில்லை.

எத்திசை நோக்கினும் ஊழல் மலிந்து கிடக்கும் இன்றைய சூழலில், ஊழல் ஒழிப்பு மிகத் தேவையானதுதான். ஆனால் அது மட்டுமே ஓர் அரசியல் கட்சியின் ஒற்றை நோக்கமாக இருக்க முடியாது. ஒரு பேச்சுக்கு, ஊழலை ஒழித்து விட்டோம் என்றே வைத்துக் கொள்வோம், பிறகென்ன செய்வோம் என்று கூற வேண்டாமா?

இந்தியைத் திணிப்பது, மாநிலங்களின் உரிமைகளைப்  பறிப்பது, மத நல்லிணக்கத்தைக் குலைப்பது போன்ற செயல்கள் எல்லாம் நாட்டில் இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்ல முடியுமா? இவை குறித்தெல்லாம் எதுவும் பேசாமல், ஊழலை ஒழிப்பது குறித்து மட்டுமே பேசுவது, தெளிவற்ற நோக்க்கத்தை அல்லது தெளிவான ஓர் உள்நோக்கத்தையே காட்டுகின்றது. 

மேலும் ஊழல் என்பது வெறுமனே பணம்,  நகை சார்ந்தது மட்டுமில்லை.  சில சாமியார்களை, அரசுக்கு வெளியில் இருக்கும் அதிகார மையங்களாக வைத்துக்  கொண்டு, நாணயமான அரசியலுக்குப் புறம்பாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்குச் சீர்கேடாகவும் நடந்து கொள்வதும் ஊழல்தான். அது குறித்தெல்லாம் கமல் கவலை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட வீராதி வீரர்களான அன்னா அசாரே, கிரண் பேடி எல்லோரும் இப்போது என்ன ஆனார்கள்? ஒருவர் ஊமையானார், இன்னொருவர் துணை நிலை ஆளுநர் ஆனார்.

ரஜினியின் முதல் கீச்சே (டுவீட்) அவருடைய பாதை எது என்பதை நமக்குச் சொல்ல்லிவிட்டது. மோடியின் தூய்மை இந்தியா அவருக்கு மிகவும் பிடிக்கிறதாம். அடுத்து, பண மதிப்பிழப்புத் திட்டமும் நல்ல திட்டமாம். இந்தியாவின் தூய்மையின்மையை வெறும் துடைப்பம் கொண்டு துடைத்துவிட முடியாது. இந்தியாவின் தூய்மைக்கு இரண்டு துடைப்பங்களும், நான்கு காமராக்களும் போதும்  என்று மோடி நினைக்கிறார். அதனை ரஜினி பாராட்டுகிறார்.

1000, 500 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைக் 'கறுப்புப் பணம் என்றால் என்ன என்றே அறியாத'  பெரிய மனிதர்கள் எல்லோரும்  பாராட்டுகின்றனர். வெள்ளைப் பணத்தைக் கூடப் பார்க்காத ஏழை, எளிய மக்களே அல்லல் படுகின்றனர்.  

எடப்பாடி அரசு என்னும் எடுபிடி அரசை முட்டுக்கொடுத்து மத்திய அரசு காப்பாற்றுவதே, இன்னும் பல அவமானங்கள் அந்த அரசுக்கு ஏற்பட வேண்டும், அதிமுக என்று ஒரு கட்சியே இல்லாமல் போய்விட வேண்டும் என்பதற்காகத்தான். ரஜனி, கமல் போன்றவர்களின் துணையோடு அந்த இடத்தைத் தான் பிடித்துவிட வேண்டும் என்பதே பாஜக வின் திட்டம். 


திட்டம் போடுவதற்கு எல்லோருக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் வெற்றி பெறுவதற்கு எல்லோருக்கும் வாய்ப்பிருப்பதில்லை!                                     

10 comments:

  1. G8! keep up your political analysis.

    ReplyDelete
  2. இரத்தினவேல்24 September 2017 at 14:04

    தமிழ்நாட்டைப் பீடிக்க இருக்கும் அடுத்த இரு பீடைகள். உங்கள் எச்சரிக்கையை எல்லாரும் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. இந்த வலைப்புச்செய்தியை ரஜினி கமல் இருவருக்குமே அனுப்பிவைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு கருத்தில் மட்டும் உங்களிடமிருந்து மாறுபடுகிறேன். தூய்மை இந்தியா திட்டத்தை யார் கொண்டுவந்தாலும் அது என் பார்வையில் பாராட்டப்பட வேண்டியது தான். அந்த திட்டத்தை பொறுத்தவரையில், ரஜினி மோடியை பாராட்டியதை நான் வரவேற்கிறேன்.

    ரஜினி கமல் இருவருமே அரசியலில் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சித்தாந்தத்தில் தெளிவும், இளைய தலைமுறை வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் செயல்படுவதும், தொடர்ந்து உழைப்பதும் இல்லையென்றால் இருவருக்குமே வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகத் தான் இருக்கும். குறிப்பாக ரஜினி இன்று அரசியலுக்கு வந்து நாளைக்கே முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைத்தாரென்றால் அது இப்போதுள்ள சூழலில் மக்கள் அடைந்திருக்கும் அரசியல் விழிப்புணர்வை வைத்துப் பார்த்தால் நடக்கவே நடக்காது.

    ஆனால் ரஜினி கமல் இருவருமே ஊழலற்ற அரசியல் தருவார்கள் என்ற நம்புகிறேன். ஒரு மனிதரால் எல்லா பிரச்னைகளையும் தீர்க்க முடியாமல் போகலாம். ஆனால் அவர் ஒரு நல்ல மாற்றத்தின் முதல் படியை எடுத்து வைத்தால் அதுவே ஒரு பெரிய சாதனை தான்.

    சாமியார்களைப்பற்றி எழுதி இருக்கிறீர்கள். சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் நடத்திய நதிகள் இணைப்பு மாநாட்டில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதை பாஜக பின்னின்று செயலாற்றியதா என்பதெல்லாம் ஒரு சாதாரண குடிமகனாக எனக்குத் தெரியாது. ஆனால் பாஜகவிடம் நல்ல பெயர் வாங்கவே அவ்விருவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் போலத் தெரிகிறது. காட்டை அழித்து சிவனுக்கு சிலை வைத்த ஜக்கியை முற்றிலுமாக புறக்கணித்திருக்க வேண்டாமா அரசியல் சட்டத்தின் கீழுள்ள பொறுப்பிலிருக்கும் அவர்கள்?

    ReplyDelete
    Replies
    1. Suresh,
      Unbiased comment on a biased post
      good.
      but remember
      converting lakes and tanks into plots is much more worse than ஜக்கி வாசுதேவ்'s

      Delete
  4. You are correct Sir,,, Both Rajni and Kamal are supporting BJP in tamilnadu Rajni directly,, kamal indirectly..

    ReplyDelete
  5. ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப கமல் ஆசைப்படுகிறார். அவரது எண்ணப்படி அது நியாயமானது. இதே அதிமுக அரசு போன வருடம் ஊழலில் திளைத்த போது என்ன செய்தீர்கள் என்று கேட்டால் அப்போது ஞானம் இல்லை இப்போது வந்து விட்டது. இப்போதாவது வந்ததே என்று சந்தோஷப்படசொல்கிறார். பிஜேபி பின்னால் இயக்குகிறது என்கிறார்கள். ஆனால் இவரது செயல்பாடுகள் கம்யூனிசத்தை நோக்கி போவது போல தெரிந்தாலும் இவர் அந்த கட்சியின் தலைவரானால் மம்தா பானர்ஜி மாதிரி அந்த கட்சியில் இருந்து கொண்டே அது அழிவதற்கு உள்வேலைகள் செய்வார். திரைமறைவில் எல்லாம் நடக்கும், ஆனால் செய்வதே தெரியாது. எப்படியாவது முதலாலித்துவம் வாழ வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். அடுத்தவர்கள் மேல் வரும் அக்கறை வில்லன் பட பாணியில் டக்கென வரவே முடியாது. அன்பும் இரக்கமும் பிறவி குணங்கள். பார்ப்பண குழந்தைகள் இந்த உலகத்தை வெல்ல வேண்டும் தன் ஆளுமையை எல்லாரிடத்திலும காண்பிக்க வேண்டும் தன் அடிமைகள் எங்கும் நிறைந்திருக்க வேண்டும் என்று உறுதி செய்யவே பிறக்கின்றன. ஒவ்வொரு பார்ப்பணரும் இந்த உலகத்தை ரசித்து வாழாமல் அடிமைத்தனத்தை ரசிக்கிறார்கள். முதலாளித்துவ அமெரிக்காவின் புதிய வரவு ட்ரம்ப் சோஷியலிஷ எதிரியான அவரது இலக்கு சைனா, ஆனால் வடகொரியாவை தாக்குவது மாதிரி காட்டிக்கொள்கிறார். கம்யூனிச உலகத்தின் ஒரு பகுதியை அழிக்க துடிக்கும் ட்ரம்ப் ஆனாலும் சரி கமல் ஆனாலும் ஒவ்வொரு ஆரியனுக்குள் ஒரு ஹிட்லர் வாழ்கிறார்

    ReplyDelete
    Replies
    1. சம்பாதிப்பதற்காக இவர்கள் வரவில்லை என்று வைத்துக்கொண்டாலும் சம்பாதிச்சதை தக்கவைத்துக்கொள்ளவாவது இவர்கள் பஜகவிற்கு ஜால்றாதட்டுவார்கள்.எனவே நாம் கவணமாக இருப்பது தமிழகத்திற்கு நல்லது

      Delete
  6. Instead of all these prattles, if DMK would have delivered right governance and listened to people needs, this situation wouldn't have arrised.

    You guys are the root cause for creating the icons and suffered/suffering badly.

    ReplyDelete
  7. ஒரு நாய் கட்சி ஆரம்பித்தால்கூட பத்துபேர் பின்னால் செல்வார்கள் போலிருக்கு. ரஜனியும் போலி பகுத்தறிவாதி கமலும் ஆரம்பித்தால் லட்சம்பேர் செல்வார்கள். தமிழ்நாட்டில் அவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்கள். போதாததற்கு தமிழருவி மணியன் போன்ற அரசியல் புரோக்கர்கள்வேறு. இருவரும் கட்சி ஆரம்பிக்கவேண்டும். தனது செல்வாக்கு எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். மார்கெட் இழந்த நடிகர்களுக்கு அரசியல்தானே புகலிடம். இவர்களையெல்லாம் கலைஞரைப்போல் தகுதிக்குமீரிய மரியாதைகொடுத்து தூக்கி கொண்டாடவேண்டாம். இந்த விழயத்தில் ஜெயலலிதா பாராட்டுக்குரியவர். இவர்களையெல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. சினிமாவிழா என்றாலும் இவர்களெல்லாம் கடைசிவரிசையில் ஓரமாக நிற்க வேண்டியதுதான். கமல் முதல்வர், ரஜனி துணைமுதல்வர், கௌதமி, குழ்பூ,கஸ்தூரி,நயன்தாரா, கண்சிகா, திரிஷா எல்லாம் மந்திரி, பரம ஏழை ஹேமமாலினி ஆளுநர். ....ம்... அதெல்லாம் தமிழர்கள் தவம் செய்திருந்தால் மட்டுமே வாய்க்கும்.

    ReplyDelete
  8. புனே நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது தன்னுடைய ஆதங்கத்தை பகிர்ந்தார். இவர் சரத்பவார் அவர்களின் சமூகத்தை சேர்ந்தவர். வாழ்க்கையில் பார்ப்பணர்களோடு பணி காரணமாக சேர்ந்து வேலை செய்யும் நிலை வரவே கூடாது வேண்டிக்கொள்கிறேன் என்கிறார், காரணம் பட்ட துன்பங்கள். ஸ்டாண்டர்ட் கொண்டு வருகிறேன் என்று சொல்லி சொல்ல முடியாத துயரங்களை ஏற்படுத்துதல், எந்த மாநிலத்தில் இருந்தாலும் அம்மாநில மக்களுக்கு எதிராக ரகசிய வேலைகள் செய்தல் என்று பல கருத்து தளத்தில் நாங்கள் ஒத்திருந்தோம். எப்போதுமே பார்ப்பணர்களும் அவர்களை ஒத்தவர்களும் ஊழல் ஒழிக்கிறேன் ஸ்டாண்டர்ட் கொண்டு வருகிறேன் என்று சொல்லிதான் உள்ளே வருவார்கள். ஆனால் உள்ளே வந்த பின்பு செய்யும் வேலை என்னவென்றால் சாதி ஏணிப்படி அமைத்தல். அதாவது தனக்கு ஒத்து வருபவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு செய்யும் வேலைகள் என்னவென்றால் நல்லவர்களை டார்ச்சர் செயதல் நன்கு வேலை செய்யும் பச்சை தமிழர்கள் மேல் பொறாமை கொண்டு உள்வேலை செய்தல் யதார்த்த்திற்கு எதிராக உண்மைக்கு மாறாக நடந்து கொள்ளுதல். ஆகவே கமலை மோடிக்கு எதிரானவர் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு எதிரானவர் என்பது உண்மையே தவிர பிஜேபி பார்ப்பணர்களுக்கு எதிரானவர் அல்ல. நாளையே மஹாராஷ்டிர பிராமண முதல்வர் பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தால் அல்லது வெங்கையா நாயுடு வந்தால் கமல் போன்றவர்கள் முதல் ஆளாக வரவேண்டும் பிஜேபி வரவேண்டும் என்று வாழ்த்துவார்கள்.

    ReplyDelete