தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 22 December 2017

அறம் வென்றது, அநீதி வீழ்ந்தது


ஏழாண்டு காலம்

எத்தனை இழி சொற்கள், கட்சியின் மீது எத்தனை தாக்குதல்கள், எத்தனை தோல்விகள்!

எல்லாம் கடந்து இன்று நிமிர்ந்து நிற்கிறது நீதி! "அறம் வெல்லும், அநீதி வீழும்" என்று அருமைத் தலைவர் கலைஞர் அன்றே எழுதிய தொடர், இன்று எல்லோர் நெஞ்சிலும் எழுந்து  நிற்கிறது.


2009 ஆம் ஆண்டிலிருந்தே 2ஜி விவாதம் தொடங்கிவிட்டது என்றாலும், அதனை ஊதிப்  பெருக்கி உலகையே மிரள வைத்தவர், அன்று தலைமைத் தணிக்கை மற்றும் கணக்காளராக (சிஏஜி) இருந்த வினோத் ராய்தான். 2010 நவம்பரில், அவர் விடுத்த அறிக்கைதான், "1.76 லட்சம் கோடி ஊழல்" என்னும் பொய்யான அவதூறு நாடெங்கும் பரவக் காரணமாக இருந்தது.

அந்தத் தொகை வெறும் கற்பனைக் கணக்கு. ஆதாரம் இல்லாமல் கட்டப்பட்ட அநியாயப் பொய். அன்று .ராசா அமைச்சராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை, ஒரு மெகாஹெட் 276 கோடி ரூபாய் வீதம், 52.75 மெகாஹெட் அலைக்கற்றை  விற்பனை செய்யப்பட்டது. அதன்மூலம் அரசுக்கு ஏறத்தாழ 16000 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால், முதலில் வருபவருக்கு முதலில் என்று இல்லாமல், அலைக்கற்றையை ஏலத்தில் விட்டிருந்தால்,  ஒரு மெகாஹெட் 3350 ரூபாய்க்கு விலை போயிருக்கக்கூடும் என்று அவராக ஒருகற்பனையில் கணக்கிட்டு, அதன்படி அரசுக்கு 1.76 லட்சம் கோடி (52.75 பெருக்கல் 3350 = 1.76 லட்சம் கோடி) வருவாய் வந்திருக்கும் என்றார்.இதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஆனால்  இதனை நாடே நம்பியது. ஏதோ, 1.76 லட்சம் கோடி ரூபாயை ராசா கொள்ளையடித்து விட்டார் என்பது போல் ஒரு பழி திட்டமிட்டுச் சுமத்தப்பட்டது

அந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் என்பதும் லஞ்சம், ஊழல் என்று அவரே கூட  அறிக்கையில்  எங்கும் சொல்லவில்லை. அரசுக்கு வருவாய் இழப்பு என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் நாடு முழுவதும், 7 ஆண்டுகளாக, ராசாவின் மூலம் திமுக 1.76 லட்சம் கோடி ரூபாய்யைக் கொள்ளையடித்து விட்டது என்றுதான் பேசினார்கள்.

இப்போது நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு ஆதாரத்தைக் கூட சிபிஐ தரவில்லை என்று நீதிபதி சொல்லியிருக்கிறார்ஆதாரத்தைக் கொடுக்கத்  தவறிவிட்டார்கள் அதிகாரிகள் என்று குறைப்பட்டுக் கொண்டுள்ளார் சு.சாமி. பாவம், அதிகாரிகள் என்ன செய்வார்கள்? ஆதாரம் இருந்தால்தானே கொடுக்கமுடியும்?

வினோத் ராய் கூற்றுப்படியே, 2014இல் 3ஜி அலைக்கற்றைகள் ஏலத்திற்கு விடப்பட்டன. அப்போது 350 மெகாஹெட் அலைக்கற்றைகள் விற்பனையாகின. ஒரு மெகாஹெட் வெறும் 297 கோடி ரூபாய்க்குத்தான் விற்பனை ஆகியது. ராசாவின் காலத்திற்குப் பிறகு, 6 ஆண்டுகள் கழித்து, வெறும் 21 கோடிதான் கூடுதல் விலை போயுள்ளது. 3350 கோடி ரூபாய்க்கு விலை போகவில்லை. அவ்வளவு விலைக்குப் போயிருந்தால், 11லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு கிடைத்திருக்கும். எனவே இதனை 11 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று கூறலாமா?

எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை. ஆனால் ராசா 15 மாதங்களும், கனிமொழி 12 மாதங்களும் சிறையில் இருந்துள்ளனரே, அதற்கு யார் நியாயம் வழங்குவது? அவர்கள் மீதும், கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட பழியை யார் துடைப்பது? இந்த அவதூறு பரப்பப்பட்ட காரணத்தால், இரண்டு பொதுத் தேர்தல்களில் தி. மு. கழகம் வெற்றி வாய்ப்பை இழந்ததே, அதனை எப்படி ஈடு செய்வது?


மனசாட்சி உள்ளவர்கள் விடை சொல்லட்டும்!

10 comments:

  1. இந்த இயக்கத்தை வீழ்த்த 15/20 ஆண்டுக்கு ஒரு முறை
    சர்காரியா கமிசன்
    ஜெயின் கமிசன்
    2ஜி.என்று வீழ்த்த சதிகள் பின்னப்பட்டு மீண்டிருக்கிறது.
    கலைஞரின் உறுதியை,கொள்கை பிடிப்பை,இயக்கத்தை முன்னிருத்தும் கடப்பாட்டையும் தொண்டர்கள் மட்டுமின்றி இரண்டாம்கட்ட தலைவர்களும் உள்வாங்கி கொள்ள வேண்டும் என்பது தான் நாம் கற்றுக்கொள் வேண்டியது

    ReplyDelete
  2. orey oru doubt than, 3G elam vidra muraila vitranga, aprom en 2G ah first come first preference la vitinga ? athuku ena karanam ?

    ReplyDelete
  3. மனசாட்சி உள்ளவர்கள் விடை சொல்லட்டும்!

    ReplyDelete
  4. On 31.1.2011 I have made long write up and concluded that there was revenue loss.The supreme Court, CBI, BJP and ADMK, received big blows on their face. They will lose their face if they go for appeal before the High Court and they will lose name and fame if they approach Supreme Court

    ReplyDelete
  5. ஐயா பகத் சிங் பற்றி முழுமையான தொகுப்பு வீடியோ பதிவு பண்ணுங்க

    ReplyDelete
  6. உண்மையை விட பொய் மிக வேகமாக பரவியது வேதனைக்குரியது. ஆயினும் உண்மையை உரக்கச் சொல்வோம், சொல்லிக் கொண்டேயிருப்போம். காலம் நம் கலங்கத்தை துடைக்கும்.

    ReplyDelete
  7. மு. சந்தோஷ் குமார்25 December 2017 at 19:07

    தர்மத்தின் வாழ்வதன்னை சூது கவ்வும்
    தர்மம் மறுபடியும் வெல்லும்...

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
    ஆதவன் மறைவதில்லை

    ReplyDelete
  8. 2ஜி தீர்ப்பு மகிழ்ச்சியைத் தந்தாலும் அதைமீறிய எச்சரிக்கை உணர்வு மிஞ்சுகிறது. இதற்குப்பின்னால் கனிமொழியைக் கொண்டு திமுகவை உடைக்கும் அசைன்மென்ட் பேரம் உள்ளதோ என நினைக்கிறேன். தீர்ப்பு வெளியான முதல் மூன்றுமணி நேரம் எந்த டிவியிலும் ஆ.ராசாவைப்பற்றி செய்தி இல்லை. எல்லாம் கனிமொழிப் பற்றியே ஒரு வெற்றிப்பெண்மணியாக உருவகப்படுத்தி ஒளிபரப்பின. மதியம் இரண்டுமணிக்குமேல்தான் ராசாவைப்பற்றி செய்திகள் கொஞ்சமாக வரத்தொடங்கின. கனிமொழியின் பேட்டிகள் வெளியாகின. அவர் சொல்கிறார், “ இனி நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.” மற்றொன்றும் சொல்கிறார்,” பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் வர்புறுத்தலின் காரனமாக என்மீது பொய்வழக்கு போடப்பட்டது” என்று. பாஜகவின் தூண்டுதல் பற்றியோ, பாஜகவின் பொய் பிரச்சாரம் பற்றியோ, பாஜகவின் சுப்ரமனியாய்சுவாமி, ஆசிர்வாதம் ஆச்சாரி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரின் அயோக்கிய பிரச்சாரம் பற்றியோ விமர்சனம் இல்லை. சென்ற 2016 சட்டமன்ற தேர்தலிலேயே திமுக எளிதாக ஆட்சிக்கு வந்திருக்கவேண்டியது, கனிமொழி மற்றும் அவரது தாயாரால் கெட்டது. கனிமொழியின் கை ஓங்குவது திமுகவுக்கு நல்லதல்ல. தளபதி ஐம்பது வருடமாக தீவிர அரசியலில் இருக்கிறார். எந்த களங்கமும் எவராலும் சொல்ல முடியவில்லை. கனிமொழி அரசியலுக்கு வந்து ஒரு ஐந்து வருடங்களுக்குள் கட்சிக்கே கெட்டபெயர். மிசாவில் அடிஉதைபட்டு ரத்தம் சிந்தி பாடுபட்ட அண்ணன் ஒதுக்கப்பட்டு தாம் முன்னிறுத்தப்படவேண்டும் என தமக்கு தனி ஆதரவாளர்களை சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தது கனிமொழி. எந்த ஒரு மேடையிலும் தாம் நாடு நாயகமாக வரவேண்டும் என முண்டியடித்துக்கொண்டு நிற்பவர் கனிமொழி. தளபதிக்கு இனி உள் எதிரிகளை சமாளிப்பதே பெரும்பாடாக மீண்டும் வர நேரும். இப்போதே தளபதி எச்சரிக்கையுடன் இவர்களை எங்கு வைக்கவேண்டுமோ அங்கு வைக்கவேண்டும். உறவாடிக்கெடுக்கும் குள்ளநரிக்கூட்டம் நம் கையைக்கொண்டே நம் கண்ணைக் குத்தும். எச்சரிக்கை.

    ReplyDelete
  9. திமுகவை அழிக்கவேண்டும் என்பது பாஜகவின் விருப்பம் மட்டுமல்ல, காங்கிரசின் ஆசையும் அதுவே. காங்கிரசும் ஒரு ’timorous foe, suspicious friend’. கபில் சிபல் தவிர அத்தனை காங்கிரஸ்காரர்களும் அன்று திமுக தமக்கு தெரியாமல் ஏதோ ஊழல் செய்துவிட்டதுபோலவும் தாங்கள் உத்தமர்கள் என்றும் கூவினார்கள். இன்று திடீர் ஞானோதயம் ஏற்பட்டு மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் வெற்றியில் பங்குபோடுகிரார்கள். இவர்கள் நியாயம் வெல்ல ஒரு துரும்பையும் கிள்ளிபோடாதவர்கள். முடிந்த அளவுக்கு குழிபறித்து மண் அள்ளிப்போட்டவர்கள். இந்த வழக்கைக்காட்டியே விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து தேர்தல் கூட்டணியில் அதிக இடங்களை பெற பிளாக் மெயில் செய்தவர்கள், அதில் வெற்றியும் கண்டவர்கள். சாக்கோ என்ற ஒரு சைக்கோவை வைத்து கூட்டுக்குழுவில் ராசா தமது விளக்கத்தை சொல்லக்கூட வாய்ப்புத்தராதவர்கள். பாஜகவிற்கு சற்றும் குறையாத அயோக்கிய சிகாமணிகள். மன்மோகன் சிங் இன்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் சொல்கிறார் பொய் குற்றச்சாட்டு என்று, முகாந்திரம் இல்லை என்று. முகாந்திரம் இல்லாத, பொய் குற்றச்சாட்டுமீது விசாரணை செய்ய ஒரு நேர்மையான பிரதமர் ஏன், எப்படி உத்தரவிட்டார். முகாந்திரம் இல்லாதபோது ஏன் ராசாவை ராஜினாமா செய்யச்சொன்னார் மன்மோகன் சிங். கூட்டணி தர்மத்திற்காக சகித்துக்கொண்டேன் என்று அன்று எந்த வாய் சொல்லியது. ஆனால் இன்று இதையெல்லாம் கருதி காங்கிரசை ஒதுக்கமுடியாது. காலராவை ஒழிக்க கசப்பை உண்ணத்தான் வேண்டும். ஆனால் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரவேண்டுமோ அந்த அளவுக்கு குறைவாகவே தரவேண்டும். அரசியல் அனுபவமிக்க தளபதி அதை சரியாகவே செய்வார்.

    ReplyDelete
  10. மக்களில் பலபேருக்கு தெரியாத, புரியாத, மறந்த கணக்கினை தெளிவு படுத்தியுள்ளீர்கள். இதன்மூலம் கிடைக்கும் பாடம்: தெளிவற்ற நிபந்தனைகள் முற்றிலும் நீக்கி, எளிய நேரடி பொருள்தரும் வகையில் அமைக்க வேண்டும். சூசக வாக்கியங்களுக்கு தமிழைக் காட்டிலும் ஆங்கலம் பேர் போனது. புரிதலால் குழப்பம். அதனால் வரும் வெப்பத்தில் குளிர்காய நினைப்போர் பலர். எது எப்படியோ முடிவில் சுபம் மகிழ்சச்சியை தருகிறது.

    ReplyDelete