தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 25 November 2011

காதல்


கொஞ்சம் சோறு
கொஞ்சம் கறிகள்
போதுமென்றது வயிறு !

கொஞ்சம் தண்ணீர்
கொஞ்சம் தேநீர்
தணிந்துவிட்டது தாகம் !

கொஞ்சம் ஓய்வு
கொஞ்சம் உறக்கம்
அகன்றுவிட்டது அயர்வு !

நிறையப் பார்த்து
நிறையப் பேசி
நிறையப் பழகியும்
நிறையவில்லையே மனது !
                                                                - சுபவீ

No comments:

Post a Comment