தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 19 September 2012

விஜய்ராஜுக்கு வீர வணக்கம்!


ராஜபக்சே வருகையைத் தடுப்போம்


ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து, சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயராஜ் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு நம் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது தற்கொலை அன்று, இன மானம் காக்கும் 'தற்கொடை' என்பதை நம்மால் உணர முடிகிறது. அவருடைய உயிர்த் தியாகத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. எனினும் இது போன்ற நிகழ்வுகள் ஒருநாளும் தொடரக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம். நாம் வாழ்ந்து போராட வேண்டுமே அல்லாமல், நம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது.

விஜயராஜ் தியாகத்திற்குத் தமிழ்ச் சமூகம் செய்ய வேண்டிய ஒரே ஒரு கைம்மாறு, ராஜபக்சேவை இந்தியாவிற்குள் கால் வைக்க விடாமல் தடுப்பதுதான். ஏற்கனவே தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் அவ்வருகைக்குத் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. வைகோ தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாஞ்சிக்கே ஆர்ப்பாட்டம் செய்யப் புறப்பட்டுள்ளனர். நான் சார்ந்துள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் 21ஆம் தேதி, சென்னையில் ஓர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளது.
                                       
அனைவரும் ஓர் அணியில் திரள்வோம். அருமைத் தமிழ் உறவுகளைக்  கொன்று குவித்த அந்த மனித குல எதிரியை விரட்டியடிப்போம்.

No comments:

Post a Comment