தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 10 September 2013

பாய்ந்து வரும் அம்புகள்

அச்சமில்லை என்னும் மாத இதழில் சுபவீயை தாக்கி வெளிவந்துள்ள கட்டுரையும் அதற்கு சுபவீயின் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது




சுபவீ பதில்: இதற்கு நான் விடை சொல்வதை விட, இதனைப் படிக்கும் நண்பர்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்வது நல்லது என்று எண்ணுகின்றேன். தேவைப்பட்டால் என் கருத்தைப் பிறகு வெளியிடுகின்றேன்.

17 comments:

  1. இதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை ஐயா

    ReplyDelete
  2. இரத்தினவேல்11 September 2013 at 13:10

    தம் மகனுக்கும் மகளுக்கும் சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து வைத்த பேராசிரியர் சுபவீயைப் பார்த்தா இந்தக் கேள்விகள். தன்னுடைய சாதி வெறியை மற்றவர்மேல் திணிக்க முற்படும் அச்சமில்லை கட்டுரையாளர்தான் வேதம் ஓதும் சாத்தான். எந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு இந்தக் கட்டுரையாளரிடம் எல்லாரும் அனுமதி வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா. ஈழ ஆதரவு நிலைக்காக ஒன்றரை ஆண்டுகள் பொடா சிறைக் கொடுமைகளை எதிர்கொண்ட சுபவீக்கு இவருடைய நற்சான்றிதழ் தேவையில்லை,

    ReplyDelete
  3. முதலில் தலைப்புக்குவருவோம் தெரிந்தோ தெரியாமலோ கட்டுரையாளர் சுபவீயின் அம்மண அர சியல் என்று சரியான தலைப்பிட்டு பெரியர் வழியில் அவர் எப்படி நிர்வானநிலையில் (விருப்புவெறுப்பற்ற)இந்த சமுதாயத்தை பற்றி சுயமாக சிந்தித்தாரோ அந்த வகையில் அரசியலை அலசுவதை பாராட்டித்தான் இருக்கிறார்.
    கட்டுரையாளர் ..."நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் சில சாதி வெறியர்கள் கைதட்டி சபாஷ் போட்டு" .......என்று சொல்லிவிட்டு சுபவீ சாதி வோழிப்பு பற்றி பொதுவாக வைத்த கருத்தை ஏதோ வன்னியர்களை பற்றியெழுதி விட்டது போலநினைத்து
    கடைசி பத்தியில் "வூருக்கு இளைத்தவன் வன்னியன் என்று எங்களிடம் வந்து வுங்கள் சாதிஒழிப்பு சரக்கை விற்க முயலாதிகள்" என்று சொல்லி கட்டுரையாளர் தன்னையும் சாதிவெறியர்கள் பட்டியலில் செர்த்துகொள்வதோடல்லாமல்
    கட்டுரையின் இடையில் செட்டியார் சாதியை விமர்சித்து சமூக நல்லிணக்கத்திற்கும் வூரு விளைவிக்க நினைக்கிறார் கட்டுரையாளர்

    ReplyDelete
  4. இதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை ஐயா

    ReplyDelete
  5. அந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகளில் உள்ள அநாகரீகமே அந்தக் கட்டுரையாளரின் தரத்தை வெளிச்சம் போட்டு விளக்கி விட்டது...
    அவர் கேட்கும் கேள்விகளுக்கு தங்கள் சார்பாக பதில் அளிக்கிறேன்...

    1. கலப்புத் திருமணங்களால் நிச்சயமாக சாதி ஒழியும்... பல சாதிப்பற்றுக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கலப்புத் திருமணத்தினால் அந்த சாதி இருக்கத்தை தளர்திவிட்டு பிள்ளைகளை ஏற்றுக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்...

    அது சரி... கலப்புத் திருமணத்திலாலெல்லாம் சாதி ஒழியாது என்றால் இந்த சாதி பாதுகாவலர்கள் கலப்புத் திருமணங்களை ஆதரிக்கவல்லவா வேண்டும்???

    2. திராவிடக் கொள்கை பேசும் யாரும் இது வரை ”நாங்கள் ஆண்ட இனம்” என்று மக்களை உணர்ச்சி வசப் பட வைத்ததில்லை... ”எங்கள் இன மக்கள் வேறு இன மக்களை காதலோ திருமணமோ செய்யக் கூடாது” என்று பிதற்றியதில்லை... மாறாக “மனிதருள் நீயுமோர் மனிதன்” என்றும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் சமத்துவத்தையே அறிவுறுத்தி வந்திருக்கிறார்கள்..

    3. “சு.ப.வீ அவர்களின் அப்பா, அம்மா, அண்ணன் என்ன சாதி” என்று கேட்பவர்கள் மிக வசதியாக “மறுமக்கள் என்ன சாதி?” என்று கேட்க மறந்த்ததின் காரணத்தை விளக்க வேண்டும்...

    4. வன்னியர்களே நெசவு நெய்தால், துணி தைத்தால் என்ற பட்டியலில் வன்னியர்களே மலம் அள்ளினால், வன்னியர்களே செருப்பு தைத்தால் என்று இருந்தால் கட்டுரையாளர் மீது அளவு கடந்த மரியாதை வந்திருக்கும்...

    என்ன இருந்த்தாலும் ஒரு காரணத்திற்காக கட்டுரையாளருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்... நீங்கள் வேட்டி ஏன் கட்டுவதில்லை என்று நானும் சில நேரங்களில் யோசித்ததுண்டு... தேடி பதிலளித்துவிட்டார் கட்டுரையாளர்... :)

    ReplyDelete
  6. முதலில் எங்கள் சுப.வீ அய்யா அவர்களுக்கும்,அவரை பின்தொடரும் எம்மைப்போன்ற பகுத்தறிவு பகலவன் தந்தைப்பெரியார் பற்றாளர்களுக்கும்
    எனது வாழ்த்துக்களும்,நன்றியும்!

    ஏனெனில் சுப.வீ அய்யா கொடுத்திருக்கும் சாதி ஒழிப்பு மருந்து மாரிமுத்து ஜவகர்,மற்றும் சில மருத்துவர்களுக்கு கூட நன்றாக வேலை செய்திருக்கிறது என்பது தோழர் மாரிமுத்து ஜவகர் அவர்களின் அரைவேக்காட்டு கட்டுரையில் தெளிவாகத் தெரிகிறது.எனவே சுப.வீ அய்யா ஈரோட்டுப் பாதையில் சரியாக செல்கிறார் என்பதும் தெளிவாகிறது.

    ஒரு வாதத்திற்காக முன்வைக்கிறேன்,உடை தயாரிப்பில் 1௦௦% ஒரு வகுப்பை சேர்ந்த தோழர்களை வைத்து மட்டும் செய்யமுடியாது.உழைக்கும் வகுப்பினர் அனைவரின்(திராவிடர் இனத்தமிழர்களின்) பங்களிப்பும் அவசியம்.சரி போகட்டும் உடை உங்கள் வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டும் தயாரித்து உடுத்துவீர்கள் என்றே வைத்துக்கொள்வோம்.முடித்திருத்துவது,சாக்கடையை சுத்தம் செய்வது போன்ற வேலைகளையும் நீங்களே செய்துகொள்வீர்களா? உழைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்று என்றே எங்கள் சுப.வீ அய்யா சொல்வது உங்களுக்கு புரியவேண்டும்.

    நாம் அனைவரும்(திராவிடர் இனத்தமிழர்கள்) உழைத்து நமது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.நாகரீகமாக மானமுள்ள தமிழர்களாய் வாழும் முடியும்.உழைக்கும் தோழர்களின் உழைப்பு உழைப்பவர்களுக்கே என்றால்,உங்களை சாதி வெறிபிடித்த மிருகமாக்கிய பார்ப்பான் தான் அம்மணமாக திரியவேண்டும்.

    தன் மகளை தாழ்த்தப்பட்ட தோழருக்கு திருமணம் செய்துவைப்பாரா? என்ற மாரிமுத்து ஜவகரின் கேள்வி,அடிப்படை புரிதல் இல்லாத கேள்வி.சுயமரியாதை என்றால் என்ன விலை என்று கேட்கும் கூட்டத்தின் கேள்வி. நாம் யாருடன் வாழவேண்டும் என்பதை தனிநபர் விருப்பம் என்பதை உணர்ந்த கூட்டம் சுயமரியாதைக் கூட்டம். சுப.வீ அய்யா அவர்களுக்கு அவருடைய பிள்ளைகளின் வாழ்க்கைத்துணையை தேர்வுசெய்யும் உரிமை இல்லை,அவருக்கு மட்டுமல்ல எவருக்கும் இல்லை.எந்த பெற்றோர்களுக்கும் இல்லை என்பதே எங்களுடைய நிலைபாடு.

    தாழ்த்தப்பட்ட தோழர்களை வாழ்வினையர்களாக ஏற்றுக்கொண்டுள்ள எண்ணிலடங்கா தோழர்கள்! திராவிடர் இயக்கத் தோழர்கள்! சாதி மறுப்புத் திருமணத்திற்கு என்று "மன்றல்" என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வரும் இயக்கம் திராவிடர் இயக்கம்.இவற்றை எல்லாம் பற்றி "கருஞ்சட்டைத் தமிழர்","விடுதலை" போன்ற பகுத்தறிவு நாளேடுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  7. Please pardon me for writing in English.

    Unfortunately, the first generation Atheist or Agnostic were born in a particular religion and/or in a particular caste.

    When they (Atheist / Agnostic) grow and find human inequalities due to caste system and religion, they come out of their religion and caste system. If they are matured, they will not force their family members or friends to become Atheist / Agnostic. Because forcing people to "believe" in something is not a trait of an Atheist / Agnostic. Only a Theist force people to believe - blindly (without any proof).

    When SubaVee has his opinions about religion and caste system, he can't force his family members or friends to "blindly" believe him. They have to believe with their rational thinking.

    The article in "Acham Illai" just shows how frustrated the author is and simply proves that they are sticking to their caste system.

    We need more people like Subavee to keep talking and writing about "rational thinking" as there are many ignorant people who still believe in caste system.

    வாழ்க நல்ல மனிதர்கள் !
    வாழ்க மனித நேயம் !!
    வாழ்க தமிழ் !!!

    ReplyDelete
  8. சாதி வெறியைத் தூண்டி நாட்டைத் துண்டாட நினைக்கும் இது போன்ற இதழ்களை நடத்துகிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பதால் யாருக்கும் எந்த நன்மையையும் கிடைக்கப் போவதில்லை.
    வேலை அதிகம் இருக்கிறது அண்ணன் சுபவீ அவர்களுக்கு. அதைக் கவனிக்கட்டும்.

    குறிப்பு: இந்த இதழ் முறையான பதிவு எண் பெறவில்லை. பதிப்பாளர் பெயரும் rni தளத்தில் தரப்படவில்லை.
    68 ACHAMILLAI 2/8/1999 71297 TAM MONTHLY CHENNAI

    http://achamillai1998.blogspot.in/


    ReplyDelete
  9. இப்படி எந்த ஒளிவு மறைவு இல்லாமல் , தன்னை பற்றிய விமர்சனத்தை / அவதூறை தானே பகிர்ந்து , கருத்து கேட்பதிலேயே தெரிகிறது , மடியில் கனம் இல்லை வழியில் பயம் இல்லை என்ற நேர்மை .. இதே போல் போலி தமிழ் தேசியவாதிகள் மற்றும் சாதி வெறியர்கள் மேல் அய்யா சுபவீ வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை யாரும் பதில் சொன்னதாக நினைவில்லை... அந்த யோக்கிதையும் எவருக்கும் இல்லை என்பதே உண்மை..
    அவர் சொன்னது என்ன ,,,,,
    ஒருவன் அவன் சாதிகாரனே பருத்தி விதைத்து ,
    அவன் சாதிகாரனே நூல் திரித்து
    அவன் சாதிகாரனே ஆடை நெய்து
    அணிய வேண்டும் என்று நினைத்தால் ..
    அவன் அம்மணமாக தான் அலையவேண்டும். என்பது தான் எதார்த்தம்..
    தன் சாதி பெருமை எவரும் , தன் சாதிகாரனே உற்பத்தி செய்ததைதான் பயன்படுத்துவேன் என்று சொன்னால் எந்த சாதி வெறியனும் ஏதும் பயன்படுத்த முடியாது .. தலைவரும் Benz car ல போகமுடியாது நடந்து தான் போகணும்.
    நாம் அன்றாட வாழ்கையில் பயன்படுத்தும் அத்துனை பொருளுக்கும் பலபேருடைய உழைப்பு தேவை .. இதில் தன்சாதி பெருமை பேசுவது அயோக்கிய தனம் என்பதே அதன் பொருள் என்று புரிகிறது ..
    அனால் அதை அப்படியே திரித்து .. பொருள் சொல்ல முயன்றிருக்கிறார்கள் ..
    இங்கே நாம் முன்னெடுக்கும் சாதி மறுப்பு , அனைவரும் சமம் என்ற நோக்கில் .. யாருக்கும் யாரும் தாழ்ந்தவன் இல்லை என்ற பொருளில்.


    மொத்தத்தில் இது ஒரு அப்பட்டமான ஒரு சதி வெறியனின் கூக்குரல் .. எதிரியின் இந்த அம்பு நம்மை நோக்கி வருவதில் இருந்தே தெரிகிறது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று ..

    இது ஒரு சிறந்த சந்தர்பம் .. உங்களின் சரியான பதிலடியை எதிர்பார்கிறேன்
    உண்மையான சமத்துவம் விரும்பும் அனைவரும் உங்கள் பின்னல் இருப்பார்கள் .. அய்யா உங்கள் பணி தொடர வாழ்த்துகள் ....

    - தனி.பிரபு

    ReplyDelete
  10. "பைத்தியக்காரன் கள் குடித்தால் ?" என்று அய்யா பெரியார் ஒரு சொல்லாட்சி செய்வார். அதுபோல சேற்றை வாரி இறைக்கும் முயற்சியில் இழி மதி இனரின் செயல் தான் இது.The person who wrote this does not know what he is writing. There is no strong arguments against our ayya's points. Poor chap was simply mudslinging on him. But one thing is sure, he is just an arrow of a bunch of cowards.Especially the cowards who are against the mankind who propagate castesim. He had not answered whether this crowd is ready to declare that they do not want reservation in education and employment.

    ReplyDelete
  11. Sir
    Please don't waste your valuable time to reply this kind useless comments. The content does not warrant your reply at all. Your WISDOM is known better even to the general public better.

    ReplyDelete
    Replies
    1. நானும் இதில் உடன் படுகிறேன்.சீமான் தங்கள் மீது பேசிய பேச்சுக்கு (ஏச்சுக்கு ) அளித்த பதிலே தங்களை குன்றின் மீது இட்ட விளக்காக பிரகாசிக்க செய்துவிட்டது.அதிகாரபூர்வமற்ற பதிவுபெறாத இந்த கட்டுரைக்கேல்லாம் நீங்கள் பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை.

      Delete
  12. அய்யா ,ஒன்றை குறிப்பிட மறந்துவிட்டேன்.பார்ப்பான் நம்முடைய செயல்பாட்டை விமர்சிக்ககிறான் என்றால் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று பொருள் என அய்யா பெரியார் அவர்கள் குறிப்பிடுவது போல,பார்ப்பனியத்தின் பிடியில் இருக்கும் இவர்களின் விமர்சனமும், நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை உறுதிபடுதிக்கொள்ளலாம்.

    ReplyDelete
  13. அச்சமில்லை பத்திரிகையாளரே ,
    நீங்கள் நெசவு செய்து , சட்டை போடுறது இருக்கட்டும் , முதலில் நீங்கல் சார்ந்த கட்சியை தனியா, எந்தஒரு கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் ஒரு இடத்திலாவது வெற்றி பெறுங்கள் பார்போம்.

    உலகத்தில் உள்ள எந்தா ஒரு மனிதனும் ஒரு தலைவனை பின்பற்றி கொண்டுதான் இருகின்றான். அந்த தலைவன் ஒரு தந்தையாகவோ, தாயாகவோ,ஒரு ஆசிர்யராகவோ, ஒரு கட்சியின் தலைவனாகவோ, அல்லது ஒரு சாதாரண மனிதனாகவோ கூட இரருக்கலாம். அதுபோல் சுபவீ ஐயா , பெரியாரையும், அண்ணாவையும் , பின்பற்றி நடக்கும் கலைஞரை தலைவனாக நேசிப்பது அவருடைய சொந்த விருப்பம். இதை விமர்சிக்க எவருக்கும் தகுதி கிடைத்து.

    ஆயிரம் பெரியார் வந்தால் கூட மாற்ற முடியாது இவர்களுக்கு எல்லாம் நீங்கள் பதில் கூற தேவை இல்லை ஐயா.

    ReplyDelete
  14. பெரியார் ,அண்ணா ,ஆசிரியர் வீரமணி,கலைஞர் வரிசையில் ஐயா சுபவீ அவர்கள் இந்த இயக்கத்திற்கு இருக்கிறார் என்று உறுதி செய்யும் கட்டுரை இது.

    ReplyDelete
  15. அந்த கட்டுரயை முழுவதும் படித்தாலே குற்றம் உள்ள நெஞ்சு குருகுருக்கிறது என்பது புரிகிறது. கருத்துடன் மோதாமல் தனிப்பட்ட விமர்சனம் செய்பவர்களை மக்கள் கவனித்துகொள்வர்கள். இதையெல்லாம் சட்டை செய்யாமல் நம் கருத்தை தொடர்ந்து சொல்வதே - நம் பணியை தொடர்ந்து செய்வதே பெரியார் பிள்ளைகளுக்கு அழகு. தன மீது மலத்தை எடுத்து வீசியவனை பார்த்து பரிதாபபட்டவர் பெரியார்

    ReplyDelete