தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 31 October 2013

கடைசிக் கணக்கையும் முடித்துக் கொள்ளும் காங்கிரஸ்!


(காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடும் என்ற செய்தி வெளியானவுடன், 31.10.2013 அன்று மதியம் கலைஞர் தொலைக்காட்சியில் சுப. வீரபாண்டியன்  அளித்த நேர்காணலின் ஒரு பகுதி) 


        காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வதில் பிழை ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் உயர்  நிலைக் குழு இன்று முடிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தத் தமிழினத்தின் உணர்வுகளை மத்திய அரசும், ஆளும் கட்சியான காங்கிரசும் இழிவு படுத்துகின்றன என்பதையே இது காட்டுகின்றது. தமிழகச் சட்டமன்றத்தில் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே கருத்தில் உள்ளனர் என்பதை அறிந்த பின்னரும், காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள இம்முடிவு, மிகுந்த கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் தன் கடைசிக் கணக்கையும் முடித்துக் கொள்ளக்  காங்கிரஸ் அணியமாகிவிட்டது என்பதையே இது காட்டுகின்றது. தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சியில்தன்மானமும், தமிழ் உணர்வும் கொண்டவர்கள் இருப்பின், சரியான  ஒரு முடிவை அவர்கள் எடுக்க வேண்டிய நேரம் இதுதான்!

3 comments:

  1. தமிழர்களின் எண்ணக் குமுறலை காங்கிரஸ் கட்சி முழுமையாக புறம் தள்ளி விட்டது ஐயா.

    ReplyDelete
  2. பூனைகுட்டி வெளியே வந்துவிட்டது.கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது, காங்கிரஸ் என்றும் தமிழினத்திற்கு துணை நிற்காது.நாம் தனித்து செயல்பட வேண்டிய நேரமிது.இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டியது, காங்கிரஸ் அல்லாத பா ஜ க வின் நிலைப்பாடு ஒன்றும் வேறு மாதிரி இருக்காது. தமிழர்களுக்கு இரண்டுமே, வண்டியில் பூட்டிய இரட்டை மாடுகள்தான். எல்லாம் தேசியமும்,காவியும்,நூலும் படுத்தும் பாடு.

    ReplyDelete
  3. காங்கிரஸ் கட்சியில், தன்மானமும், தமிழ் உணர்வும் கொண்டவர்கள் இருப்பின்,.... முன்பு ஒரு முறை தா மா கா உருவாயுற்று. அதற்குறிய காரணிகள் வேறு பரிமாணத்தில் இப்போதும் இருக்கிறது...பயன் படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்ளலாம்.

    ReplyDelete