தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 3 December 2013

சின்னச் சின்னதாய்...

3. சங்கரராமன் கொலை வழக்கில் தீர்ப்பு வெளியான மறுநிமிடம், தந்தி தொலைகாட்சி, சங்கரராமன் மகன் ஆனந்த சர்மா உள்ளிட்ட சிலரின் எதிர்வினையை நேரலையாக  ஒளிபரப்பியது. அவற்றுள் இரண்டு எதிர்வினைகள் கீழே:
எஸ்.வி  சேகர்: இந்தத் தீர்ப்பு இந்துக்களுக்குக் கிடைத்த வெற்றி.
சுபவீ : அப்படியானால் கொல்லப்பட்ட சங்கரராமன் இஸ்லாமியரா? 




4.  சிதம்பரம் கோயிலை மீண்டும் தங்களிடமே  ஒப்படைக்கக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்ந்துள்ள வழக்கில் அவர்களுக்காக வாதிடும் சுப்ரமணியன் சாமி, 3000 தீட்சிதர்களும் நேரடியாக கைலாசத்திலிருந்து இறங்கி வந்தவர்கள் என்று கூறியுள்ளார். பாவம், அம்மா,அப்பா இல்லாத அனாதைகள் போலிருக்கிறது! 

7 comments:

  1. சாட்சியங்களையும், ஆவணங்களையும் முன்னிலைப் படுத்த வேண்டிய இடத்தில்,இவர்கள் கைலாசத்தில் இருந்து நேரடியாக இறங்கி வந்தவர்கள் என்று கூறுகிறார் என்றால்....

    ReplyDelete
    Replies
    1. சாட்சியங்களையும், ஆவணங்களையும் முன்னிலைப் படுத்த வேண்டிய இடத்தில்,இவர்கள் கைலாசத்தில் இருந்து நேரடியாக இறங்கி வந்தவர்கள் என்று கூறுகிறார் என்றால்....//........பெரியார் இன்னும் தேவைப்படுகிறார் என்று தான் அர்த்தம்

      Delete
  2. சுபவீ அய்யா,சிறு கோரிக்கை. தங்களின் பேச்சுக்களை MP3 ஆடியோ வடிவில் வெப்சைட்டில் வெளியிட்டால் டவுன்லோட் செய்து கேட்கலாம்.

    ReplyDelete
  3. அய்யா, தங்களை தொடர்பு கொள்ளும் வழி தெரியாததால் இந்த பின்னூட்டம் மூலமாகவே என் கோரிக்கையை விடுக்கிறேன்.தங்களின் பேச்சுகள் யூட்யூபில் கிடைக்கின்றன.நன்றி.மேலும் எம்பி3 ஆடியோ வடிவிலும் இங்கு வெளியிட்டால் என் போன்றவர்கள் டவுன்லோட் செய்து கேட்க இயலும்.செய்வீர்களா

    ReplyDelete
  4. அய்யா தனக்கு சாதகமான மறுமொழியை மட்டும தான் வெளியிடுவார் போலும்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா தனக்கு சாதகமான மறுமொழியை மட்டும தான் வெளியிடுவார் போலும்.//......அவர் எதை தன் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறாரோ அதை இந்த தளத்தில் வெளியிடுகிறார் .நீங்கள் கேளுங்கள் எது சாதகமில்லை என்று நினைக்கிறீர்களோ அதை. அவர் அதற்க்கான மறுமொழியை தறாமல் என்றும் அவர் ஒதுங்கியதில்லை. எனவே பொத்தாம்பொதுவாக நீங்களாகவே கற்பனைசெய்து கொள்ளக்கூடாது.

      Delete
  5. பேராசிரியர் சுபவீ , திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞருக்கு ஆதரவு தந்ததை, தருவதை விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு.அவர் , தம் மீது கூறப்படுகிற விமர்சனங்களுக்கு , அவை அவதூறு ஏச்சுக்களாக இல்லாத பட்சத்தில் , விடையளிக்கத் தவறியதில்லை என்பதை மாற்றார் சிலரும் ஒப்புக்கொள்வர். ஈழப்பிரச்சனையில், ஒரு மாநில முதல் அமைச்சரை , அவரிடம் தாம் கொண்டிருக்கிற அணுக்கத்தைப் பயன்படுத்தி, வினையாற்ற வைத்ததில் பேரா.சுபவீக்கு பெரும்பங்கு உண்டு. அரைகுறை கூட்டாட்சி போல் தோற்றமளிக்கிற ஒற்றையாட்சி இந்தியாவின் அன்றைய முதல் அமைச்சர் வினையாற்றிய விதத்தைப் பற்றி வேண்டுமானால் விமசித்துக்கொள்ளுங்கள். ஆனால், புதிய தமிழ் தே(நா)சியர்கள் தூற்றுவது போல , வரலாறு , அவர்கள் இருவரையும் , துரோகிகள் பட்டியலில் வைத்துவிடாது என்பதை மட்டும் புரிந்து கொண்டு அவர்களை விமர்சனம் செய்வது சரியானதாக அமையும் என்பதை தமிழின உணர்வளர்கள் , உணர்ந்துகொள்ள வேண்டும். - இராசா சுந்தர்ராமன் (9003608012)

    ReplyDelete