தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 10 December 2013

சின்னச் சின்னதாய்...

5. "ஏற்காடு தேர்தலைப் பொறுத்தவரை எதிர்பார்த்த முடிவுதான். திருமங்கலத்தை விட மோசமாக நடந்த தேர்தல் வெற்றி இது. அதே நேரம், தி.மு.க. தோல்வி அடைந்ததில் மகிழ்ச்சி."
                                                                  -தமிழருவி மணியன் 
                                                                 (தி இந்து,  09.12.2013)

    மிக மோசமாக நடந்த தேர்தல் என்பது மணியனுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் அது குறித்து அவர் கவலை தெரிவிக்கவில்லை. அதற்காக அந்த 'தருமவான்', 'காந்தியவாதி', வெட்கமோ வேதனையோ படவில்லை. எவ்வளவு மோசடிகள் நடந்தாலும் குற்றமில்லை, தி.மு.க. தோற்றால் போதும், மகிழ்ச்சிதான் என்கிறார்! இவரைப் போன்றவர்கள்  லஞ்சம், ஊழலை எல்லாம் எதிர்ப்பதாக ஒரு போக்குக் காட்டிக்கொண்டு,தி.மு.க.வை எதிர்ப்பதை மட்டுமே தங்கள் வாழ்நாள் இலக்காகக் கொண்டிருப்பவர்கள் என்பதை இப்போதேனும் நாடு புரிந்து கொள்ளட்டும்!



6. டிசம்பர் 6இல் மறுபடியும் ஒரு துயரம்! மண்டேலா மறைந்து போனார். 94ஆம் ஆண்டு அதிபராகப் பதவியேற்றபோது, தன் 27 ஆண்டுச் சிறைவாசத்தில் சுண்ணாம்புப் பாறையை இடிக்கச் செய்து, தன் பார்வை மங்கலானதுக்குக் காரணமாக இருந்த ஒரு சிறை அதிகாரியையும் பகை மறந்து விழாவிற்கு அழைத்தவர் அவர். மறைந்தது மண்டேலா மட்டுமன்று, மனித குலத்தின் பெருந்தன்மையும்தான்!

6 comments:

  1. தென் ஆப்பிரிக்காவின் காந்தி மண்டேலாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
  2. இளசெ(இ.ஜெயக்குமார்)10 December 2013 at 10:42

    தமிழருவி மணியனை புரிந்து கொள்ள http://mathimaran.wordpress.com/2013/11/18/brooklyn-bridge-707/

    ReplyDelete
  3. Mandela was not South Africa's Gandhi, he was South Africa's 'Ayya Periyar' ,since he did not fight for freedom he fought for equality among people like our 'Ayya' , so we can say Ayya and Mandela fought for same reason.

    ReplyDelete
  4. பார்பனர்களை விட மணியன் போன்ற விபீஷ்ணர்களின் இம்சை தாங்கமுடியவில்லை!

    ReplyDelete
  5. திராவிட இயக்க ஒவ்வாமை நோய் கொண்டவர்கள் சற்று சற்று அதிகமாகி உள்ளனர். மணியன் போன்றவர்கள் சற்று கடுமையாகவே பாதிக்க பட்டுள்ளனர். அதனால் தான் எவ்வளவு தவறு நேர்ந்தாலும், தி மு க தோற்றத்தில் மகிழ்ச்சி என்று தன நோயின் தாக்கத்தை வெளிபடுத்தியுள்ளார். நம் ஆழ்ந்த வருத்தங்கள்.

    ReplyDelete