தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 17 December 2013

தோழர் மணியரசனுக்கு ஒரு மடல்

அன்புள்ள தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கு,


வணக்கம். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்திலும் கீற்று, பதிவு முதலான வலைத்தளங்களிலும், நீங்கள் எழுதியுள்ள முள்ளிவாய்க்கால் முற்றமும், முக்காடு நீங்கிய தமிழின வெறுப்பும்என்னும் கட்டுரையைப் படித்தேன். அதில் என்னைப் பற்றியும், என்னை விமர்சனம் செய்தும் சில செய்திகள் எழுதப்பட்டிருந்தன. எனவே, நான், கீழ்க்காணும் செய்திகளை உங்களோடும், நம் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
1. “பா.ச.க., இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்களை முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் சிறப்புரை ஆற்ற அழைத்திருக்க வேண்டியதில்லை என்பது த.தே.பொ.க. நிலைப்பாடுஎன்றும், “முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவில் உரையாற்றத் தோழர் திருமாவை அழைத்திருக்க வேண்டும் என்பது த.தே.பொ.க.வின் கருத்துஎன்றும், உங்கள் கட்டுரையில் குறித்துள்ளீர்கள்.
மகிழ்ச்சி. ஆனால் உங்கள் நிலைப்பாட்டை, உங்கள் இதழிலோ, அறிக்கைகளிலோ இதற்கு முன் வெளிப்படுத்தவே இல்லையே, ஏன்? இத்தனை விவாதங்கள் வந்தபின்புதானே, இப்போது எங்கள் நிலைப்பாடு இது என்று தெரிவிக்கின்றீர்கள். புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில், முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவிற்கு நண்பர் திருமாவளவனையோ, என்னையே பார்வையாளர்களாகக் கூட அழைக்கவில்லையே, இது நியாந்தானா என்று உங்களிடம் நேரடியாகக் கேட்டேன். அதற்கு நீங்கள் சொன்ன விடை என்ன... வரவேற்புக் குழுவில் நான் இல்லை, அது பற்றி எனக்குத் தெரியாதுஎன்பதுதானே! அப்போதும் உங்கள் கட்சியின் நிலைப்பாட்டைக் கூறவில்லையே. இன்னொரு தொலைக்காட்சியில், இதே வினாவைத் திரு பீட்டர் அல்போன்ஸ் உங்களிடம் நேராகவே கேட்டார். அந்த நிகழ்ச்சியிலாவது, உங்களின் நிலைப்பாட்டின் ரகசியம் என்ன என்பதை நீங்கள் உடைத்திருக்கலாம்.
ஒரு கட்சியின் நிலைப்பாட்டை இவ்வளவு ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவை என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.
2. முள்ளிவாய்க்கால் முற்ற மண்டபத்தில், பெரியார், காமராசர் படங்கள் வைக்கப்படாதது குறித்து உங்கள் விளக்கங்களை எழுதியுள்ளீர்கள்.
இலக்கிய படைப்புகள் செய்தவர் அல்லர் பெரியார். எனவேதான் அங்கு பெரியார் படம் வைக்கப்படவில்லைஎன்றும், “அவர் (காமராசர்) இலக்கியப் படைப்பு எதுவும் வழங்கியவர் இல்லை என்பதுதான்என்றும் அரியவிளக்கங்களைத் தந்துள்ளீர்கள்.
முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது வரலாற்று முற்றம் என்று கருதிக்கொண்டிருந்தோம். ஆனால் அது வெறும் இலக்கிய முற்றம்தான் என்று இப்போது தெரிய வந்துள்ளது. சரி, பொன்னப்ப நாடார், வாஞ்சிநாத அய்யர் படங்களை எல்லாம் அங்கு வைத்துள்ளீர்களே... அவர்களின் இலக்கியப் படைப்புகள் குறித்து எம்போன்ற எளியவர்களுக்குத் தெரியப்படுத்துவீர்களா?
3. சாதிப்பட்டம் குறித்து நீங்கள் எழுப்பியுள்ள வினா சரியானதாகவே எனக்குப் படுகின்றது. என் பிழையை ஏற்றுக்கொள்கின்றேன். சேதுப்பிள்ளை, சிதம்பரநாதன் செட்டியார் ஆகிய சாதிப்பட்டங்களை எதிர்க்கும் சுபவீ, டி.எம்.நாயர் என்று அழைப்பது மட்டும் சரியா என்று கேட்டுள்ளீர்கள்.
சரியில்லைதான். இனிவரும் நாள்களில் திருத்திக் கொள்கின்றேன். டி.எம். நாயர். ஜி.டி. நாயுடு, மூப்பனார் ஆகிய சாதிப் பட்டங்கள், நீங்கள் குறிப்பிடுவது போல, இயற்பெயர்கள் போலவே நிலைத்துவிட்டன. எனினும், வருங்காலத்தில் டி.எம். நாயர் என்று அறியப்பட்டுள்ள டி. மாதவனார், ஜி.டி. நாயுடு என்று அறியப்பட்டுள்ள அறிவியல் மேதை துரைசாமியார் என்று மேடைகளில் பேசுவோம். எழுதும்போதும் கருப்பையா(மூப்பனார்)என்று சாதிப்பட்டத்தைச் சில காலம் அடைப்புக் குறிகளுக்குள் போடுவோம். காலப்போக்கில், சாதிப் பட்டங்களை எழுத்திலும், பேச்சிலும் பயன்படுத்த வேண்டிய தேவையே வராது.
பிழைகளை யார் சுட்டிக் காட்டினாலும், திருத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், செட்டியார், பிள்ளை ஆகிய தமிழ்ச் சாதிகளைக் கண்டு நாங்கள் எரிச்சல் அடைவதாகவும், நாயர் என்பது திராவிட மலையாளச் சாதி என்பதால் ஏற்றுக்கொள்வதாகவும் உள்நோக்கம்கற்பித்து எழுதியுள்ளீர்கள். என் போன்ற திராவிட இயக்கப் பற்றாளர்களைத் தமிழினப் பகைவர்களாக உலகுக்குக் காட்டிடும் உங்களின் முயற்சியை நீங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றீர்கள்! அது உங்கள் விருப்பம்.
சாதியே கூடாது, சாதிகள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரியாரியம். பிறகு தமிழ்ச்சாதி என்ன, திராவிடச் சாதி என்ன? அழித்தொழிக்கப்பட வேண்டிய சாதிக்கு எந்த முன்னொட்டும் பொருந்தாது.
4. ஜவாஹிருல்லா, கவிஞர் இன்குலாப், ஹென்றிடிபேன், மருத்துவர் கிருஷ்ணசாமி ஆகியோரை முற்றத் திறப்பு விழாவிற்கு நாங்கள் அழைத்திருந்தோம். நாங்கள் தலித், இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
உண்மைதான். நான் அப்படி உங்களைக் குற்றம் சாற்றவில்லை. ஆனால் திரு நடராசன், பல்வேறு உதவிகளைச் செய்திருந்தார் என்பதால், அவர் பிறந்த சாதி தொடர்பான விளம்பரங்கள், வரவேற்புப் பாதாகைகள் ஏராளமாக இடம் பெற்றிருந்தன என்பது உண்மைதானே!
தமிழினத்தின் பொதுச் செல்வம்என நீங்கள் சரியாகவே குறிப்பிடும் முள்ளிவாய்க்கால் முற்றம், ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சொத்தாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.
5. “பெரியாரில் இருந்துதான் தமிழினத்தின் வரலாறு தொடங்குகிறது என்று கூறி மூடநம்பிக்கைகளை விதைக்காதீர்கள்என்று கூறுகிறீர்கள். அப்படிக் கூறுகின்றவர்கள் யார் என்பதை வாய்ப்பிருந்தால் தெரியப்படுத்துங்கள்.
6. தமிழ் மற்றும் ஆங்கில மொழி குறித்த பெரியாரின் கருத்துகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள்.  ஏற்கனவே 1000 முறைகள் இதுபோன்ற குற்றச்சாற்றுகளை நீங்களும், சோ போன்றவர்களும் கூறிவிட்டீர்கள். அதற்கான விடைகளை நாங்களும் ஆயிரம் முறைகளுக்கும் மேலாகக் கூறிக்கூறி அலுத்துப் போய்விட்டோம். தேவைப்பட்டால் நான் எழுதியுள்ள, ‘பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்உள்ளிட்ட பல்வேறு நூல்களில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள விடைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.
7.  ‘சுபவீ போன்றவர்கள் தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தி மேடையில் பேசுவதில்லை. அதற்காகக் கட்டுரைகள் எழுதுவதில்லை, ஏன்?’ என்று ஒரு வினாவை எழுப்பியுள்ளீர்கள். மேடைகளில் பேசியும், கட்டுரைகள் எழுதியுமே தமிழ்நாடு விடுதலையைப் பெற்றுவிட முடியும் என்று கருதுகிறவன் இல்லை நான். அதற்கான திட்டமோ, படையோ என்னிடம் இல்லை. அதனால்தான் என்னால் இயலாத ஒன்றைப் பொய்யாய், போலியாய் நான் முன்வைப்பதில்லை. உங்களைப் போன்றவர்களிடம் அதற்குரிய திட்டமும், பெரும்படையும் பின்னால் ஒளிந்திருக்கக் கூடும். இன்னும் ஓரிரு மாதங்களில் நீங்கள் தமிழ்நாடு விடுதலையைப் பெற்றுத் தந்துவிடவும் கூடும். அதனால்தான் நீங்கள் தொடர்ந்து அது குறித்து மேடைகளில் பேசியும், கட்டுரைகள் எழுதியும் வருகின்றீர்கள் என்று நினைக்கிறேன். அதற்கான என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் கேட்டிருந்த வினாக்களுக்கு எல்லாம் எனக்குத் தெரிந்த விடைகளைக் கூறிவிட்டேன். இறுதியாக உங்களிடம் கேட்கவேண்டிய ஒரே ஒரு வினா உள்ளது.
முள்ளிவாய்க்கால் முற்றத்தைத் திறப்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒப்புதல் கேட்டு ஐயா நெடுமாறன் அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியதாகவும், அதற்கு எந்த விடையும் வராத காரணத்தால், மீண்டும் தோழர் தா. பாண்டியன் மூலம் முயற்சி செய்ததாகவும், அதற்கும் பயன் ஏதுமில்லை என்றும் திரு வைகோ அவர்கள் தொலைக்காட்சியில் கூறினாரே... ஈழ விடுதலைக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் என்னென்ன உதவிகளை ஜெயலலிதா செய்துள்ளார் என்று எண்ணி அவரை நீங்கள் அழைத்தீர்கள்? ‘எனக்குத் தெரியாது, நான் வரவேற்புக் குழுவில் இல்லைஎன்று விடை சொல்லிவிட மாட்டீர்கள் என நான் நம்புகிறேன். காரணம், நீங்கள் நாணயமானவர்!

மற்றபடி, வன்னெஞ்சக்காரன், தமிழ் இனத்தின் மீது காழ்ப்புணர்வு உடையவன், கித்தாப்பு பேசுகிறவன், கோயபல்சின் கொள்ளுப்பேரன் முதலான, நீங்கள் எனக்கு வழங்கியிருக்கும் இலவயப் பட்டங்கள் எல்லாவற்றிற்கும் நன்றி!

12 comments:

  1. ஐயா உங்கள் எழுத்து நடையும் கருத்துக்களை கொண்டு வந்த பாங்கும் அற்புதம்

    ReplyDelete
  2. இலக்கியம் என்பது வெறும் மொழி / இலக்கணம் சார்ந்தது என்றால் பெரியாரை இலக்கியவாதியாக கருத முடியாது தான். ஆனால் இலக்கியம் என்பது தன் சமுதாய மக்களை சீர்படுத்துவதற்காக எனப் புரிந்து கொண்டால் தந்தை பெரியாரை விட ஒரு பெரிய இலக்கியவாதி கிடைப்பதரிது!

    ReplyDelete
  3. ஐயா உங்கள் எழுத்து நடையும் கருத்துக்களை கொண்டு வந்த பாங்கும் அற்புதம்.
    சா. கர்ணன்

    ReplyDelete
  4. அய்யா மிக அருமையான கட்டுரை ,ஆனால் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி உங்கள் நேரத்தை ஏன் வீணாக்கி கொள்ளுகிறீர்கள் இவர்களின் சாயம் வெளுத்து ரொம்ப நாளாகிறது .இன்னும் ஒரு செய்தியை நான் உங்களுடன் பகிர வேண்டும் அண்மையில் பேரறிவாளன் வரலாற்றை விளக்கும் உயிர்வலி ஆவணப்படம் பார்த்தேன் .பேரறிவாளனுக்காய் தமிழ்நாட்டில் குரல் குடுக்காத இருவர் ஆசிரியர் வீரமணி அவர்களும் ,தாங்களும் தான் ,?உயிரை காப்பாற்ற அணைத்து தரப்பையும் ஒன்றிணைக்க வேண்டியவர்களே அரசியல் செய்து கொண்டு இருக்கும் போது மணியரசன் செய்யமாட்டாரா ?

    ReplyDelete
    Replies
    1. திரு.பழ.பிரபு அவர்களே, பேரரிவாளன் விசயத்தில் சுபவீ அய்யா அவர்கள் கருத்து கூறவில்லை என்பது தவறு. புதிய தலைமுறை யில் சு.சுவாமியுடனான அய்யாவின் விவாதத்தை நேரமிருப்பின் youtubeல் பார்க்கவும். நன்றி.

      Delete
    2. ஆவணப்படம் தயாரித்த யோக்கியர்களுக்கு இதை சொல்லுங்கள் !

      Delete
  5. I don't understand how can these kind of people hide 'Ayya' from youngsters ,since I never saw 'Ayya' but if any one ask me what is my choice whether Tamil or 'Ayya' without any hesitation I will tell I want only 'Ayya's thought not even bother about Tamil and so called tamilar. what is the point saying I am tamilan if you are not ready to consider me as a human. - Bala from South Africa

    ReplyDelete
  6. முத்துத்தேவர்20 December 2013 at 02:25

    ஜாதிப்பட்டத்தை கிண்டல் அடிக்கும் சுப.வீயே சுந்தரமே, உனக்கு(உன் மூதாதையர்களுக்கு)அப்பட்டம் இல்லாவிட்டால் அந் வேலையைச் செய்து நாறியிருப்பீர்கள்.
    உங்களைப்போன்ற திராவிட இயக்கப் பிழைப்புவாதப் பெருங்கூச்சல் கூட்டத்தின் பயன் → நாட்டை ஆளப்பிறந்த சத்திரியனைத் தவிற பார்ப்பான்,மோளக்காரன் முதல் மலையாளி,தெலுங்கன் வரை அனைவரும் தமிழகத்தை ஆண்டு,அனுபவித்து, சொரண்டிக் கொள்ளையடித்தாகிவிட்டது, ஆனால் நாட்டை ஆளப்பிறந்த சத்திரியனால் இதுவரை ஆள முடியவில்லை.
    உன்னைப் போன்றோரின் ஜாதி ஓழிப்பு பிழைப்புவாதப் பெருங்கூச்சலின் விளைவு → நாட்டை ஆளப்பொறந்ததுக {சத்திரியன்} எல்லாம் நாட்டை ஆள முடியாம தவிக்கையிலே அள்ளப் பொறந்ததுகெல்லாம் நாட்டை ஆள துடிக்குது. (பெரியார் கூட இட ஒதுக்கிட்டிற்க்கித்துக்தான் உண்மையாகப் போராடினார், ஜாதி ஓழிப்பைப் பொறுத்தவரை சும்மா ஒப்புக்குத்தான் குரல் கொடுத்தார்[திராவிடக் கட்சி அரசியல்வாதி ஊழலை ஒழிப்பதுக்கு குரல் கொடுப்பது போல])
    ஆதலால் உங்களைப்போன்ற திராவிட இயக்கப் பிழைப்புவாதப் பெருங்கூச்சல் கூட்டத்தின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஒரு நாள் மறவனின் வாளும், கோலும் பதில் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ReplyDelete
  7. வ கு க்ஷ21 December 2013 at 18:42

    உங்களைப்போன்ற திராவிடக்ட்சிகளின் பேச்சிலும்,மூச்சிலும்,செயலிலும் எப்போதும் அநீதியும், அவதூறும்,மோசடியும் நிறைந்திருக்கும். நீதி,நியாயத்தை நீங்கள் மறைப்பதற்கு முன்னர்
    இவற்றுக்கு ஆதார அடிப்படையாக அஸ்திவாரமாக இருக்கும் உங்களின் பொய்யைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்.அதன் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும்.
    அதன் வேடத்தைக் களைந்தெறிய வேண்டும் அதைத்தான் சமூக ஜனநாயகக் கூட்டணி செய்ய உள்ளது.

    ReplyDelete
  8. It is really sad that still some section people are driving in the reverse side.the entire humanity is moving forward for equality, humanity, equal oppurtunity,protecting the underprevilleged etc. Itis very much evident that no relgion has taught them the humanity. It has only implanted oppurtunitism and hatred towards fellowhuman beings. But we cannot consider the above writeups are out of ignorance. They are purely out of greed and chauvunistic mind. They still forget the man is just a social animal and they cannot survive in isolation.we thought that the education would open up their eye.because the education system was bad,they are still in dark.

    ReplyDelete
  9. தமிழ்தேசியம் என்பதே பார்ப்பினியத்தின் மறுவடிவம் தானே அய்யா .அவர்களால் பகுத்தறிவு பகலவனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் .

    ReplyDelete
  10. "சமூக ஜனநாயகக் கூட்டணி" It is a selfish thought to divide the people into groups for the political benefit. "Iyya Periyar" Land will show what it is and how it is.

    ReplyDelete