தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 14 January 2015

கள்ள மௌனம் ஏதுமில்லை!



எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்' நாவல் தொடர்பான போராட்டங்களும், விவாதங்களும் தமிழகம் முழுவதும் முழு வீச்சில் நடந்து கொண்டுள்ளன. 'இது குறித்து ஏன் நீங்கள் வாயே திறக்கவில்லை?' என்று தொலைபேசியில் உரிமையுடன் கேட்டுக் கடிந்துகொண்டார் என் நண்பரும், எழுத்தாளருமான பழ.அதியமான். மௌனம் தவறானதுதான் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். எனினும் அதற்கு உள்நோக்கம் ஏதுமில்லை. 


நான் அந்த நாவலைப் படித்ததில்லை. படிக்கவும்அந்நூல் எனக்கு  உடன்  கிடைக்கவில்லை. படித்துவிட்டுக் கருத்துச் சொல்லலாம் என்று காத்திருந்தேன். அவ்வளவுதான். 

எவ்வாறாயினும்,  மதவெறி, ,சாதிவெறி அமைப்புகள். ஓர் எழுத்தாளனின் கருத்துரிமையைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இதில் அவர்கள் வெற்றிபெற்றால், எதிர்காலத்தில் அதுவே ஒரு தொடர்கதை ஆகி விடும் என்பதில் ஐயமில்லை. அதனைத் தடுக்க வேண்டிய கடமை ஜனநாயகச் சிந்தனையாளர்கள் அனைவருக்கும் இருக்கிறது. 


அந்நூலைப் படித்துவிட்டு, ஓரிரு நாள்களில், முழுமையான என் கருத்தைப் பதிவு செய்வேன். முற்போக்காளர்களின் போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்வேன். 

7 comments:

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சுபவீ அய்யா அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு மற்றும் திருவள்ளுவர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. அய்யா வணக்கம்..!
    ஒரு நியாயமான போராட்டத்திற்கு, உங்களின் குரல் இன்னும் ஒலிக்கவில்லையே என நானும் பார்த்தேன்..
    தங்களின் கருத்தை நானும் எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
  4. subavee! ayya u r the legend of rationalist!
    i saw all your programs best!
    now i revolting rationalist in my family!

    ReplyDelete
  5. புடும்னைவுதான் என்றால் தெருவின் ஊரின் இன்றைய அடையாளங்களை அகற்றிக்கொள்வது சரியானதே.எழுத்தாளன் வரலாற்றின் சாக்கடையை தோண்டட்டும் அதை இன்றைய சந்ததியின் முகங்களில் பூசவேண்டாம். . பெ.முருகன் நல்ல எழுத்தாளர்தான். இருப்பினும் இது தவறுதான். - வில்லவன் கோதை

    ReplyDelete
  6. தந்தை பெரியார் காலத்தில் இந்து நாளிதழ் என்ன சொல்கிறதோ அதை மறுப்பதே திராவிடர் கழகத்தின் நிலை என்று சொல்வார்கள். அதுபோல இப்போது கொ நா மு க ஈஸ்வரன் என்ன சொல்கிறாரோ அதை மறுத்தால் அதில் நியாயம் இருக்கும்.

    ReplyDelete