தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 4 February 2015

சிதறிக் கிடக்கும் தேங்காய்கள்..... மலேசியாவில் தைப் பூசம்
பக்தியின் பெயரால்
சிதறிக் கிடக்கும் தேங்காய்கள்.....
எத்தனை வயிறுகளின் கனவு
எத்தனை ஏழைகளின் உணவு!
13 comments:

 1. கடவுளுக்குப் படைத்ததை
  ஏழை மனிதனுக்கு வழங்கியிருக்கலாம்

  ReplyDelete
 2. கணேஷ்வேல் மணிகாந்தி5 February 2015 at 12:13

  மனிதனின் மடைமைக்கு மற்றுமொரு மகுடம்.

  "கடவுளை மற, மனிதனை நினை" என்பதை உரக்கச் சொல்லும் நேரமிது !

  ReplyDelete
 3. ஷண்முகம்6 February 2015 at 15:16

  எப்பொழுதும் போல இந்து மத நம்பிக்கைகளைக் குற்றம்,குறை சொல்லி பேசாவிட்டால் தூக்கம் வராமல்,துக்கம் தொண்டையை அடைக்குமே சுபவீக்கு!..பிள்ளையார் கோயிலில் சிதறிக் கிடக்கும் தேங்காய்கள் எத்தனையோ ஏழைகளின் பசி வயிறுகளுக்கு இலவச உணவாகிறதே!.அது ஒன்றும் வீண் போகாவில்லையே,அதைப் பொறுக்கவே பல ஏழைகள் பிள்ளையார் கோயிலில் காத்திருப்பதக் கண்கூடாகக் காணலாமே.1 ருபாய் கொடுத்தால்தான் அம்மா உணவகத்தில் கூட இட்லி கிடைக்கும்,ஆனால் இங்கு முற்றிலும் இலவசம்!.பசித்த வயிறுகளுக்கு இலவச உணவை இம்முறையில் கொடுப்பது தான்'ஹிந்துயிசம்'அவர்களை இந்த நிலையில் பிள்ளையார் கோயிலில் தேங்காய் பொறுக்கிகளாக வைத்திருப்பது தான் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்டு சொரண்டிக் கொள்ளையடித்துக் கொழுத்த திராவிடக் கட்சிகளின்'திராவிடயிசம்'.. ஆகவே'திராவிடயிசம்'என்ற கொடுமைக்கு,நோய்க்கு, பசிக்கு நிவாரணமாக,மருந்தாக,அமுதசுரபியாக இருப்பது 'ஹிந்துயிசம்' என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ்வேல் மணிகாந்தி7 February 2015 at 16:44

   தேங்காய் உடைப்பதற்கு இப்படி ஒரு வியாக்கியானமா!

   ஏழைகள் மீதுதான் தங்களுக்கு எவ்வளவு காிசனம். ஒவ்வொரு ஏழையாக தேடிப்பிடித்து, தேங்காயை நேரடியாக கொடுக்க வேண்டியதுதானே? அவர்களை பிச்சைக்காரர்கள் போல் ஏன் பொறுக்கவிடுகிறீர்கள்?

   'திராவிடயிசம்' எப்போதுமே ஹிந்துயிசத்துக்கு வேப்பங்காய்தான்.
   ஏனென்றால் அந்த ஏழைகளை , கோவில் வாசலிலிருந்து கோவிலுக்குள் அழைத்துச் சென்ற இயக்கமன்றோ அது !

   அதனால்தான் திராவிடயிசத்தின் மேல் வெறுப்பபை உமிழ்கிறீர்கள் .

   Delete
 4. கணேஷ்வேல் மணிகாந்தி7 February 2015 at 11:35

  எது ஹிந்து விரோதம்? ஹிந்துக்கள் என்று ஒரு பெரும் மக்கள் கூட்டத்திற்குப் பெயர் சூட்டி பின் அவர்களில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ள மக்களைக் கோவிலுக்குள் வரக் கூடாது என்று சொல்வதுதான் ஹிந்து விரோதம். நாய்களைப் பன்றிகளைக் கூடத் தீண்டலாம், ஆனால் அந்த மக்களைத் தீண்டக் கூடாது என்று சொன்னதுதான் ஹிந்து விரோதம். ஹிந்துக் கோயில்களின் கருவறைக்குள் வெறும் மூன்று சதவீதம் பேர் மட்டும்தான் உள்ளே போகலாம் என்று சட்டம் வகுத்ததுதான் ஹிந்து விரோதம். சொந்தச் சகோதரர்களை நான்கு வருணங்களாகவும், நான்காயிரம் சாதிகளாகவும் பிரித்து வைத்து,அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வைக் கற்பித்ததுதான் ஹிந்து விரோதம்.

  இத்தனை ஹிந்து விரோதச் செயல்களையும் செய்தது யார்? திராவிட இயக்கமா? இவைகளை எல்லாம் ஒழிக்கப் போராடிய இயக்கம் அன்றோ அது! அதனால்தான் 'சிலர்' கோபப்படுகிறார்கள். சாதிச் சட்டகத்தின் கோபுரத்தில் அமர்ந்திருந்தவர்களைச் சந்ததிக்கு இழுத்து வந்து விட்டார்களே என்று சினம் கொள்ளுகிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. ராமசுப்பு8 February 2015 at 13:30

   பூனைகள்,நாய்கள்,பன்றிகள் போன்றவை ஹிந்து மத வழக்குப்படி முனபு தீட்டுதான்.மது அருந்துதும்,புலால் உண்ணும், சுத்தமில்லாமல்லாமல் ஊழலோடிருக்கும், மாதவிடாயிலிருக்கும் பிராமணரும் முன்பு தீட்டுதான்.ஆனால் இப்போது அதில் எதுவுமே கடைபிடிக்கப்படுவதில்லை என்பது தான் உண்மை.ஹிந்துக் கோயில்களின் கருவறைக்குள் வெறும் மூன்று சதவீதம் பேர் மட்டும்தான் அனுமதிக்கப் படுகின்றனர் என்பதும்உண்மையல்ல.பல கோயில்களில் பிற இனத்தவர் பூசாரியாக உள்ளனர்.அவர்கள் குடும்பத்தைத் தவிர பிற பிராமணரும் கருவறைக்குள் அனுமதிக்கப் படுவதில்லை.இவ்வளவு பேசும் நீங்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வாருங்கள் பார்ப்போம்,கை,கால் இருக்கிறதா என்று!.கடலில் மீன் பிடிக்க பிற ஜாதிக்கு உரிமை இல்லையே. கடலை அவர்கள் படைத்தார்களா?அல்லது மீன்களை அவர்கள் படைத்தார்களா?.அங்கே இதே கேள்வியை ஏன் நீங்களெல்லாம் கேட்பதில்லை?.அனைத்து ஜாதிக்கும் வருமானத்திற்கு வழி பிறக்குமே.அங்கு மட்டும் ஏன் ஒரு ஜாதிக்கு ஏக போக உரிமை?.

   Delete
  2. திரு ராமசுப்பு நீங்கள் என்ன சொல்ல வருகிர்கள் ?பூனை,நாய் போல நான்காம் வர்ணதினரும் ஒதுக்கப்படலாம் என்று சொல்கிறீர்கலா?புலால் உண்ணுவது தவறு என்றால் புலால் உண்கிற ப்ராமணர்களை ஏன் கோயிலுக்குள் அனுமதிகிர்கள் [வங்காள பிரமணர்கள் மீனை தங்கள் அன்றாட உணவில் சேர்த்து கொள்கிறர்கள் ],மாதவிடாய் தீட்டு என்றால் அது பெண்களின் தவறல்ல .அதை படைத்தவன் தவறு அவனை ஏன் ஒதுக்க வில்லை ?மீன் பிடிப்பதும் ,மதமும் வெவ்வேறானது .இது என்ன மடத்தனமான வாதம் .?

   Delete
  3. கணேஷ்வேல் மணிகாந்தி9 February 2015 at 12:35

   மனு அத்தியாயம்-12, சுலோகம்-59
   ("பிராமண ஹிம்சை செய்பவர்கள் பூனையாகப் பிறப்பார்கள்.")
   சொல்வதைப் போல், பூனை சூத்திரனின் வடிவம் போலும். அதனால்தான் பூனை தீ்ட்டாகத் தெரிகிறது.

   மனு அத்தியாயம்-9, சுலோகம்-30
   ("கணவன்சொற்படி நடவாதவள் உலகத்தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப்பிணியால் வருந்துவாள்")
   சொல்வதைப் போல், மாதவிடாயின் போது மட்டுமல்ல-இந்து மதத்துக்கு பெண் என்பவள் எப்பொழுதுமே தீட்டுதான், அடிமைதான்.

   ஆனால், எப்போது முதல் பன்றியும், நாயும் தீட்டானது? அப்படியானால் தங்களுக்கு, "வராக" அதாரம் எடுத்த விஷ்ணு தீட்டா ? "பைரவர்" அவதாரம் எடுத்த சிவனும் தீட்டா?

   கோவில் கருவரையில் அனைவரும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால்-

   கோவிலில் சாமி சிலை உள்ள கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை 1970-ஆம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடத்தப்போவதாகப் பெரியார் அறிவித்ததைத் தொடர்ந்து, அன்றைய முதல்வர் கலைஞர், 2.12.1970-இல் தமிழக சட்டப் பேரவையில்  அர்ச்சகர் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

   45 வருடமாகியும், இந்த சட்டத்தின் இன்றைய நிலை என்ன? யார் இதை எதிர்க்கிறார்கள்? என்ன காரணம்?

   கடைசியாக மீன் பிடி தொழிலைப்பற்றி தாங்கள் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது. அப்படியே இது உண்மையென்றால், அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து நீதி மன்றம் சென்றது போல் இதை எதிர்த்து சட்டபூர்வ நவடிக்கை எடுத்து, இத்தொழிலை செய்யலாமே !

   இதோடு, சாக்கடை அள்ளுதல், தெருவைச் சுத்தம் செய்தல் போன்ற தொழில்களுக்கும் உரிமை கோரலாமே?

   எந்தத் தொழிலும் , எந்தச் சாதிக்கும் சொந்தமானது கிடையாது. எங்களைப் பொருத்தவரை, சாதியே கிடையாது !

   Delete
 5. நீ" பொறுக்கியாகவே "தான் இருக்கவேண்டும் என்று ஏழைக்கு சொல்லாமல் சொல்வதே இந்த தேங்காய் உடைக்கும் நோக்கம் .சரி தேங்காய பொறிக்கிகலாம் .வசதி இருக்கும் காரணத்தால் அழும் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய பாலை அதிக விலை கொடுத்து வாங்கி கல்லுக்கு ஊற்றுவது என்ன வகையான இந்து தர்மம் ?.விளக்கு போடா நல்லெண்ணை லிட்டர் ,லிட்டராக வாங்குவதால் தாளிக்க கூட என்னை வாங்க முடியாத நிலைக்கு ஏழைகள் தள்ளப்பட்டது யாரால் ?ஏழையின் வயிற்றில் அடித்து விட்டு கடவுளை ஆரதிப்பதுதான் இந்து தர்மம் என்றல் அந்த தர்மம் நாசமாய் போகட்டும் .

  ReplyDelete
 6. கணேஷ்வேல் மணிகாந்தி9 February 2015 at 13:37

  மது தீட்டு என்றால், சோமபானம் அருந்திய கடவுளர்கள் அனைவரும் தீட்டு இல்லையா?

  புலால் தீட்டு என்றால், யாகத்தில் பழியிடச்சொல்லி மாடு, குதிரை இவற்றையெல்லாம் கணக்கில்லாமல், விவசாயத்துக்குக் கூட மிச்சம் வைக்காமல் , தின்று தீர்த்தவர்கள் தீட்டு இல்லையா?

  ReplyDelete
 7. ராமசுப்பு10 February 2015 at 15:05

  சோமபானம் மது/போதை அல்ல,சுரபானம் தான் மது/போதையானது.யாகத்தில் மாடு,குதிரை பலியிட்டதெல்லாம் >2000 ஆண்டுகளுக்கு முன்னால்,இன்றல்ல பழைய கதையையே சொலலிக் காலம் தள்ள வேண்டாம்.உங்கள் கூற்றுப்படி இந்து தர்மம் நீ பொறுக்கியாகவே தான் இருக்கவேண்டும் என்று ஏழைக்குச் சொன்னதாகவே இருக்கட்டும்,அதற்கு 50 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த நீங்கள் ஏன் அதற்கு முடிவு கட்டவி்லை?திராவிடக் கட்சிகளிலுள்ளவர்கள் கொள்ளையடித்து ஊழல் செய்து கொழுத்திருக்கிறார்களே!திராவிடக் கட்சிகளின் அகராதியில் ஏழ்மையை விரட்டுவது என்பது அவர்களுக்கு மட்டும் தான் போலும்!. பாலையும், நல்லெண்ணையும் யாரும் பக்தர்கள் வீட்டிற்கு வந்து பிடுங்கிக்கொள்ளவில்லையே!.பக்தர்களுக்கு கடவுள்,அவர்களின் பார்வையில் பதர்களுக்கு (நாத்திகர்கள்)அவை கல்லாகத் தெரிகிறது என்ன செய்யவது!.அர்ச்சகர் சட்டத்தைத்தைக் கொண்டுவந்தது அரசு,நீதிமன்றமல்ல!அதே அரசை மீன் பிடி தொழிலுக்கும் அர்ச்சகர் சட்டத்தைப் போல இடதுக்கீடு படி முதலில் சட்டம் கொண்டுவரச் சொலலுங்கள் பார்ப்போம்,நீதிமன்றத்தில் சட்டமியற்ற முடியாது!அப்போது பார்ப்போம் யார்யாரெல்லாம் அதை எதிர்க்கிறார்கள் என்று?.தலித்களில் மிகவும் பின் தங்கியுள்ள அருந்ததியருக்கு உள் ஒதுக்கீட்டிற்கு உங்கள் தோழர்கள் திருமா,கிருஷ்ணசாமி போன்றோர் எவ்வாறு எதிர்க்கிறார்கள் என்பதைக் கவனிக்கவும்.மீன் பிடிப்பதும்,மதமும் வெவ்வேறானது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை,அர்ச்சகர் தொழில்Vsமீன் பிடிக்கும் தொழில் பற்றிதான் இங்கு வாதம்.சாக்கடை அள்ளுதல், தெருவைச் சுத்தம் செய்தல் போன்ற தொழில்களை உங்கள்,சுபவீயின் முன்னோர்களும் செய்ததில்லை,உங்கள்,சுபவீயின் வாரிசுகளும் செய்யப் போவதில்லை,அதைச் செய்பவர்களிம் எந்த ஒட்டும்,உறவும் நீங்களெல்லாம் வைத்துக்கொள்ளப் போவதுமில்லை!அவர்களைக் அதே நிலையில் வைத்து(திராவிடக் கட்சிகள் ஏழைகளைப் தேங்காய் பொறுக்கியாக வைத்திருப்பது சாக்கடை அள்ளுதல்,தெருவைச் சுத்தம் செய்தல் போன்ற தொழில்களைச் செய்பவர்களை அதே நிலையில் வைத்து)அதைக் காண்பித்து நீங்கள் சலுகைகளைப் பெறத்தான் இந்த வாதமெல்லாம்.{மனிதக் கழிவை மனிதனே அல்லக் கூடாதென்று சட்டம் கொண்டு வந்தவர் நரசிம்மராவ் கருணாநிதி அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்}.அதோடு இன்னுமொரு கோரிக்கை கொளை,கொள்ளை,கறபழிப்பு... போன்ற கொடுங்குற்றங்களைச் செய்பவர்களின் விபரங்களை நேர்மையாக ஜாதிவாரியாக வெளியிடச் சொல்லுங்கள் பார்ப்போம்,உண்மையை அனைவரும் தெரிந்து கொள்வோமே!

  ReplyDelete
  Replies
  1. கணேஷ்வேல் மணிகாந்தி10 February 2015 at 22:51

   2000 வருடங்களுக்கு முன்னால் தாங்கள் புலால் உண்டபாேது அது தீட்டு இல்லையா? இப்போது நாங்கள் அதை உண்பதால் தீட்டாக மாறி விட்டதா?

   2000 வருட இந்து மத கொடுமையை வெறும் 50 வருட திராவிட ஆட்சி முழுமையாக மாற்றமுடியாது. இது 2000 ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகம். ஆனால் தங்கள் எதிர்பார்ப்பு கூடிய விரைவில் 'திராவிட ஆட்சியால்' நிறைவேறும்.

   கல்லைக் கடவுளாக்கும் வித்தையை அறிந்த தாங்கள், அந்தக் கடவுளிடமே அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து முறையிடலாமே? எதற்காக நீதிமன்றம் ஓடுகிறீர்கள்? கடவுளிடம் சொல்லி உலகத்தில் சமத்துவத்தை உருவாக்கச் சொல்லலாமே? இதையெல்லாம் செய்யமுடியாத பதர்கள்தான் (பக்தர்கள்) கடவுள் பெயரைச் சொல்லி காசு பார்க்கிறார்கள்.

   மீன் பிடிக்கக் கூடாது என்று யாரையும் எந்தச் சட்டமும் தடுக்கவில்லை, அப்படியிருக்க எதற்கு அதில் பிடிப்பதற்குச் சட்டம்? அர்ச்சகர் என்பது 'இந்த' ஜாதிக்குத்தான் என எழுதாத சட்டமிருந்ததை மாற்றத்தான் அர்ச்சகர் சட்டம். இதே போல்தான் கல்வியும். கல்வி என்பது 'அந்த' மூன்று சதவீதத்தினருக்கு மட்டும்தான் என 2000 வருடமாக இருந்த எழுதாத சட்டத்தை மாற்றத்தான் கல்விச் சட்டம்.
   இதையும் எதிர்த்து நீதிமன்றம் போனது யார்?

   இவையனைத்தையும் கடவுளிடம் முறையிடாமல், நீதிமன்றத்தில் முறையிடுவதன் மூலம் அந்தக் கடவுளையே தாங்கள் நம்பவில்லையே? இப்போது யார் பக்தர், யார் பதர் என்பது புரியும் என நினைக்கிறேன்.

   2000 வருடமாக மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும், நான்கு வருணமாகவும் நான்காயிரம் ஜாதியாகவும் மனிதனைப் பிரித்து அடிமைப்படுத்திவிட்டு, நோகாமல் கேள்வி கேட்கிறீர்கள் "ஏன் திராவிட ஆட்சி 50 வருடத்தில் சரி செய்யவில்லை" என்று.

   கொலை,கொள்ளை,கற்பழிப்பு.. போன்ற கொடுங்குற்றங்களைச் ஜாதிவாரியாக கேட்கிறீர்களே, நான் கேட்கிறேன் - யார் இந்த ஜாதியை உருவாக்கியது?

   உயிரற்ற கல்லையே கடவுளாக்கத் தெரிந்த தாங்கள், இந்த உயிருள்ள குற்றம்புரிபவர்களை 'நீர்' தெளித்து திருத்த முடியாதா?

   அதோடு தாங்கள் தீட்டு எனக் கருதும் சூத்திரர்கள் மீதும் 'நீா்' தெளித்து, அவர்களைக் கடவுளாகக் கூட ஆக்க வேண்டாம், குறைந்தது மனிதனாக மாற்றலாமே?

   Delete
  2. வார்த்தை ஜாலம் உங்கள் கை வந்த கலை என்று தெரியும் அதை வைத்துத்தானே 2000 ஆண்டுகள் சொந்த மண்ணில் தமிழர்களை அடிமையாக வைத்திருக்க முடிந்தது .சோமபானம் ,சுரபானம் ஆராய்ச்சியெல்லாம் உங்களோடு போகட்டும் .நீங்க சாப்பிட்ட வரைக்கும் மாடு ,ஆடு எல்லாம் புனிதம் இப்போ அதெல்லாம் தீட்டு,ராமன் ,கிருஷ்ணனு பழைய கதைய நீங்க சொல்லி காலத்தை ஓட்டலாம் .நாங்க ஓட்ட கூடாது .வெள்ளைகரனிடம் அடிமை வேலை செய்து கொள்ளை அடித்து .கோயில் சொத்தை சுரண்டி தின்ன கூட்டம் யார் என சொல்லிதெரிய வேண்டியதில்லை .அர்ச்சனை செய்யற வேலைய விட்டு விடு மீன் பிடிக்க நீங்க தயார் என்றால் அப்படி ஒரு சட்டம் கொண்டுவர சொல்லி போராட நான் தயார் .உள்ஒதுக்கிட பத்தி பேச உங்களுக்கு தகுதி உண்டா?பெண்களுக்கு 33 சதவீதத்தில் உள் ஒதுகிடு தர தயாரா ?சாக்கடை அள்ளவும் ,தெருவை சுத்தம் செய்யவும் உங்கள் வாரிசுகள் தயாரா ?கருணாநிதி இந்த மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் அவர் மீது உங்களுக்கு உள்ள கோபமா ?அடடடே தெரியாமல் போய் விட்டதே .கொலை ,கொள்ளை கற்பழிப்புகளை படிப்பறிவில்லாத[இதுகாலம் வரை படிக்க விடாமல் தடுக்க பட்ட ] மக்கள் செய்வதற்கும் மடாதிபதிகள் செய்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு திரு ராம சுப்பு

   Delete