தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 3 March 2015

நாடும் மாடும்



(02.02.2015 அன்று, சென்னை, ராணி சீதை அரங்கில், திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய சுபவீ உரையிலிருந்து)

இன்றைக்கு நம் பிள்ளைகள் அனைவரும் படித்தவர்களாக இருப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் இந்நிலையை அடைவதற்கு நாட்டில் நடந்த போராட்டங்கள் எண்ணிறந்தன. ஒரு கால கட்டத்தில் நம்மை எல்லாம் பள்ளியில் சேர்க்கவே மாட்டார்கள். அப்படியே பெரு  முயற்சி செய்து சேர்ந்தாலும், உங்களுக்கெல்லாம் படிப்பு வராது, நீங்களெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்பார் ஆசிரியர். என்ன வேடிக்கை என்றால், நம் நாட்டிற்குள் மாடுகளையும் ஆடுகளையும் மேய்த்துக் கொண்டு உள்ளே வந்தவர்கள்தாம், நம்மைப் பார்த்து 'நீங்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு' என்றனர். 


 ஆப்ரிக்கக் கவிதை ஒன்று உண்டு. ஆங்கிலேயர்கள் அவர்கள் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டது பற்றியது அது!  அந்தக் கவிதை சொல்லும், "அவர்கள் உள்ளே வரும்போது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது, எங்கள் கைகளில் நாடு இருந்தது. பிறகு  அவர்கள் கைகளுக்கு நாடு போய்விட்டது. எங்கள் கைகளுக்கு பைபிள் வந்துவிட்டது" என்று. நம் கதையும் அதுதான். "அவர்கள் உள்ளே வரும்போது அவர்கள் கைகளில் மாடு இருந்தது நம் கைகளில் நாடு இருந்தது. பிறகு நாடு அவர்கள் கைகளுக்குப் போய்விட்டது. மாடு நம் கைகளுக்கு வந்து விட்டது.


இந்நிலையை மாற்ற இம்மண்ணில் திராவிட இயக்கம் போராடியது. திராவிட இயக்கத்தால் பயன் பெற்று, படிப்பைப் பெற்ற பலர் இன்று திராவிட இயக்கத்தைக் குறி வைத்துத் தாக்கிக் கொண்டுள்ளனர்.

9 comments:

  1. "There was a time in this very India ,When without eating Beef , No brahmin could remain a brahmin" ----- vivekananda ( The complete works of vivekananda , Volume III , page number 174)

    ReplyDelete
    Replies
    1. கணேஷ்வேல் மணிகாந்தி4 March 2015 at 14:29

      பௌத்தத்தை எதிர்கொள்ளவே அவர்கள் புலால் உண்பதை நிறுத்தினர், பிறகு புலால் உண்பவர்களை தாழ்வாகவும் நினைக்க ஆரம்பித்தனர்.

      அவர்கள் உண்ட போது அது புணிதம், அதையே நாம் உண்டால் அது தீட்டு. பச்சைப் பார்ப்பனியம் !

      Delete
  2. சிற்சபேசன்4 March 2015 at 16:11

    மாடு மேய்க்கச் சொன்னாலும் குற்றம்,பசு மாட்டை புனிதமென்றாலும் குற்றம்,பசுவதை தடையென்றாலும் குற்றம் என்று குற்றம் கண்டுபிடிப்பதில் பிஹெச்டி பட்டம் வழங்கலாம் உங்களுக்கு!.அன்று புனிதமான பசு மாடுகளை மேய்த்தவர்கள் பிறகு புனிதமானவர்களாக கருதப்பட்டார்கள்.இன்று அந்த புனிதமான வாய்ப்பு உங்களுக்கு வந்துள்ளது மேய்த்துவிட்டு போங்களேன், நாளை நீங்களும் புனிதமானவர்களாகலாம்!.

    ReplyDelete
    Replies
    1. கணேஷ்வேல் மணிகாந்தி5 March 2015 at 11:43

      நீங்கள்தான் புனிதர்களாயிற்றே,

      ‘நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம்,பல்பு, ஃபேன், பயணிக்கும் கார்,பேருந்து, ரயில், ஆகாயவிமானம்,எழுதும் பேனா, தொலைபேசி, நவீன உலகின் கண்டுபிடிப்பான கம்ப்யூட்டர், இண்டெர்னெட், மருந்து,மாத்திரை, டிவி, ஏன், உங்களை டீசண்ட்டாக காட்ட உடுத்தும் பேண்ட்,சட்டை, கோட், ஏடிஎம் எந்திரம்... என எல்லாமே மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் சாப்பிடுபவன் கண்டுபிடித்தவைதான்! ஐயோ,இவற்றை நான் தொட மாட்டேன் என்று சொல்லுங்களேன்?’

      Delete
    2. திரு சிற்சபேசன் ,நாங்கள் எதை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையை உங்களிடம் தந்தது யார் ? மாட்டை மேய்பதா ,தின்பதா என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம் .உங்களுக்கு புனிதம் என்றால்ஒதுங்கி போங்கள்.என்னை எதை சாப்பிட வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை .துளசியை கூட புனிதம் என்கிறிர்கள் அப்புறம் ஏன் பிய்த்து வாயில் போட்டு கொள்கிறிர்கள் .நீங்கள் போட்டு கொள்கிற லெதர் செருப்பு ,பெல்ட் ,பர்ஸ் இதெல்லாம் எதில் இருந்து செய்தது?.நாங்கள் சாப்பிட கொன்றால் பசு வதை ,தோளுக்கு கொன்றால் புண்ணியமா ?இந்த நாட்டில் பசுவை கொன்றால் பாவம் ,மனிதர்களை ,பெண்களை ,சிறுபான்மையினரை கொன்றால் புண்ணியம் .

      Delete
    3. அய்யா மாட்டை தின்பவர் தான் தீட்டு,முன்பு கூட அவரின் ஊழைப்பினால் விளைந்த பொருள்கள் தீட்டாக கருதப்பட்டதில்லை, அதுபோல பேருந்து,ரயில்,ஆகாயவிமானம், தொலைபேசி,கம்ப்யூட்டர்,டிவி...ஆகிய அவர்கள் ஊழைப்பினால் வந்த பொருட்கள் தீட்டாகாது.வேண்டுமென்றால் புரோகிதரை வைத்து அவைகளை தீட்டுக் கழித்து பயன்படுத்துங்களேன்!

      Delete
  3. நான் மத நம்பிக்கை இல்லாதவன். பகுத்தறிவு பேசுபவன். பெரியார் பகுத்தறிவை போதித்த இதே மண்ணில்தான் ஜீவா காருணியத்தை வள்ளலாரும் போதித்தார். பிற உயிர்களிடத்து அன்பு கட்டுவதுதான் மிக உன்னதமான பகுத்தறிவாகும். மத நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்த மத நம்பிக்கையின் பெயரால் மனிதனுக்கு உணவளிக்கும் ஒரு உயிர் காக்கப் படுகிறது என்றால் அது நல்லதுதானே! பகுத்தறிவின் பெயரால் எல்லாவற்றையும் குறைசொல்வது சரியல்ல. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதே பகுத்தறிவு! வாடிய பயிரை காணும்போதெல்லாம் வடிநேனே! என்று கருணையை போத்தவர் வள்ளலார்! பசு தெய்வமாக வணங்கபடவேண்டும் என்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே சமயத்தில் அந்த பால் கொடுக்கும் பசு காக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. தனக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி சொல்லி அதனைக்கொண்டாட மாட்டுப்பொங்கல் என்றே நாம் கொண்டாடுகிறோமே! எல்லா உயிர்களிடத்தும் கருணை கட்டுவோம்! அதுதான் மேலான பகுத்தறிவு!

    ReplyDelete
  4. கணேஷ்வேல் மணிகாந்தி5 March 2015 at 11:24

    முற்றிலும் உண்மை அய்யா !

    எந்த இயக்கத்தின் போராட்டத்தால் கல்வி கற்கும் உரிமை பெற்றார்களோ, அதே இயக்கத்தை கல்வி கற்றபின் தாக்குகிறார்கள்.

    சிலர் வரலாறு தெரிந்தும் தாக்குகிறார்கள்,
    பலர் வரலாறு தெரியாமலே தாக்குகிறார்கள்.

    வரலாறு தெரிந்தே தாக்குபவர்களுக்கு உள்நோக்கம் வேறு உள்ளது என்பது வெளிப்படை. ஆனால் வரலாறே தெரியாமல் இயக்கத்தை எதிர்ப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

    2000 ஆண்டுகளாக ஆரியத்தால் நாம் இழந்த உரிமைகள், திராவிட இயக்க வரலாறு, மொழிப்போர், திராவிட இயக்கத்தின் போராட்டங்களால் தமிழர்கள் மீட்டெடுத்த உரிமைகள், அதனால் பெற்ற பயன்கள் என அனைத்தையும் பள்ளிக் கல்வியில் சேர்த்து மாணவர்களை 'நன்றியுள்ள' மனிதர்களாக உருவாக்க வேண்டும்.

    "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று மட்டும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் - 'சாதி' எப்படி உருவானது, சாதியத்தின் வேர் எங்குள்ளது, சாதியின் கொடுமை என்ன என அனைத்தையும் பள்ளிக் கல்வியில் சேர்த்து மாணவர்களை 'சாதியற்ற' மனிதர்களாக உருவாக்க வேண்டும்.

    "தீண்டாமை ஒரு பாவச் செயல்" என்று மட்டும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் -
    'தீண்டாமை' யாரால்/எப்படி உருவாக்கப்பட்டது, மண்ணின் மைந்தர்கள் எப்படி தாழ்த்தப்பட்டவர்களாக மாற்றப்பட்டனர், தீண்டாமையின் தற்போதைய வடிவம் என்ன என அனைத்தையும் பள்ளிக் கல்வியில் சேர்த்து மாணவர்களை 'மனிதநேயமிக்க' மனிதர்களாக உருவாக்க வேண்டும்.

    தாங்கள் மற்றொரு கட்டுரையில் குறிப்பிட்டது போல "ஒரு தேசிய இனம், தன்னை ஒரு தேசிய இனமாக உணர்வதற்குத் தன் வரலாற்றைச் சரியாக அறிந்திருக்க வேண்டும் என்பது, ஒரு மீற முடியாத முன்நிபந்தனை."

    தன் வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்ளாத ஒரு இனம் அழிந்து போகும் அல்லது எதிரிகளால் அழிக்கப்பட்டுவிடும்.

    இன்றைய உடனடி தேவை கல்வித்துறை வாயிலாக, 'சரியான' வரலாற்றை மாணவப்பருவத்திலிருந்தே கற்றுத்தர வேண்டும். திராவிட ஆட்சியில் இதை செய்யமுடியாவிட்டால் வேறெப்போதும் இதைச் செய்ய முடியாது.

    நன்றி அய்யா !

    ReplyDelete
  5. ""பால்''கொடுக்கும். ""பசு''மாடு பாதுகாக்கனும் சொல்லற உங்க "பகுத்தறிவை' ""எருமை''மாடு வரை நீட்டிக்க வாய்ப்பிருக்கா? அப்பறம் ""மாடு தின்னும் புலையா''""உனக்கு மார்கழித் திரு நாள் ஒரு கேடா''ன்னு ஏன் கேட்டாங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க தோழர்.

    ReplyDelete