தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 30 August 2015

கற்றறிந்த அறியாமை

படித்த - அறிவியல் படித்த -  பலரிடம் கூட மூட நம்பிக்கைகள் மண்டிக் கிடப்பதை நாம் பார்க்கிறோம்.இந்த நிலை எல்லா நாடுகளிலும் எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறது.15ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பிறந்து வாழ்ந்த நிகோலஸ் குசா (Nicholus of Cusa) என்னும் மேலை நாட்டுத் தத்துவ அறிஞர் இது குறித்து 1440 ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அந்த நூலுக்கு அவர் வைத்த பெயர் learned ignorance என்பது.கற்றறிந்த அறியாமை என்பது அதன் பொருள்.இப்படிக் கற்றவர்களிடமும் அறியாமை மண்டிக் கிடப்பதற்கு என்ன காரணம் என்றால்,அறிவியலை அவர்கள் பாடமாகப் படிக்கிறார்களே அன்றி, வாழ்வில் அதனைப் பயன்படுத்துவதில்லை. They are scientists, but not scientific என்பார்கள். அறிவியல் அறிஞர்கள் அவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அறிவியல் பார்வை உடையவர்களாக இல்லை. அதுதான் காரணம்.


2 comments:

  1. கற்றறிந்த அறியாமை
    நம்மவர்களிடம் நிறையவே உள்ளது ஐயா
    இந்நிலை என்று மாறுமோ?

    ReplyDelete
  2. உண்மை தான் அய்யா படித்தும் பாமரர்களாக நம் மக்களிில் பெரும்பான்மையோர் உள்ளனர் இதற்கு காரணம் படித்ததை பகுத்தறிந்து வாழ்வில் பயன்படுத்தாததும் வாழ்க்கை சிக்கலில் உள்ள பயத்தில் கடவுள் என்ற கற்பனையில் சிந்திக்கும் திறனை அடகு வைத்ததும் தான் .

    ReplyDelete