தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 10 October 2015

பாண்டவர் அணி


ஐந்து பேர் ஒன்றாகச் சேர்ந்தால், அவர்களைப் பாண்டவர் அணி என்று அழைக்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது. என்ன வேடிக்கை என்றால், மகா பாரதத்திலேயே அந்தப் பெயர் எவருக்கும் பொருந்தவில்லை என்பதுதான். 'பஞ்ச' என்றால் (பாஞ்ச்) ஐந்து என்று பொருள். பாண்டவர் என்றால், பாண்டுவிற்குப் பிறந்தவர்கள் என்று பொருள். ஆனால் தருமரோடு பிறந்தவர்கள் ஐவரல்லர், கர்ணனையும் சேர்த்து அறுவர். எனவே பஞ்ச என்பது பொருந்தாது. அந்த அறுவரில் ஒருவர் கூடப் பாண்டுவிற்குப் பிறக்கவில்லை. பாண்டுவிற்கு இரண்டு மனைவியர் இருந்தபோதும், மனைவியரைத் தீண்டக்கூடாது என்று அவருக்குச் சாபம் இருந்ததால், சூரியன், எமன், வாயு, இந்திரன், இரட்டைத் தேவர்கள் ஆகியோர் மூலமே அறுவரும் பிறந்தனர் என்று மகா பாரதத்தின் ஆதி பருவம் சொல்கிறது. ஆகவே அவர்கள் ஐவரும் இல்லை, பாண்டவர்களும் இல்லை. பஞ்ச பாண்டவர் என்னும் பெயர் அவர்களுக்கே பொருந்தாது. அவர்களுக்கே பொருந்தாத பெயர், மற்றவர்களுக்கு எப்படிப் பொருந்தும்?

(குறிப்பு: இந்தச் செய்திக்கும், இன்று நடிகர் சங்கத் தேர்தலையொட்டிப் பேசப்படும் பாண்டவர் அணிக்கும் எந்தத் தொடர்புமில்லை. அந்தத் தேர்தலில் நம் நிலைப்பாடு என்ன என்பதைப் பகிர்வு பகுதியில் காணலாம்). 

7 comments:

  1. If the term "Pandavas" is inappropriate for Yudhishtira and his brothers, then the term "Kauravas" is also inappropriate. "Kauravas" literally means "descendants of the King Kuru", the founder of the Kuru dynasty. The term "Kaurava" is used in the Mahābhārata with two meanings:

    The wider meaning, is used to represent all the descendants of Kuru. This meaning, which includes the Pandava brothers, is often used in the earlier parts of popular renditions of the Mahabharata

    The narrower but more common meaning, is used to represent the elder line of the descendants of King Kuru. This restricts it to the children of King Dhritarashtra, as his line is the older line of descent from Kuru.

    Both these meanings are inappropriate, since both Dhirtharashtra and Pandu were not born to the Kuru King Vichitraveerya, but to Vyasa and Vichitraveerya's two wives Ambika and Ambalika respectively. Vyasa was the son of Satyavati and Parashara, a sage who had no connection to the Kuru dynasty.

    But there is another important piece of information that also needs to be considered. There is one thing common between the way Kunti, Madri(wives of Pandu) and Ambika, Ambalika(wives of Vichitraveerya) gave birth to their respective sons. All of them followed the Niyoga tradition. According to the niyoga tradition, the biological father should not lay any claim to the child and the child will be considered the son/daughter of the husband-wife and not the biological father. So, while Kunti and Madri practiced niyoga with the gods to give birth to the Pandava brothers, Ambika and Ambalika did the same with Vyasa. So, both the terms "Pandava" and "Kaurava" are correct if we take the niyoga tradition into account.

    Regarding the term "Pancha" in "Pancha Pandava", it is important to note that Kunti was not married at the time of Karna's birth. The niyoga tradition applies only when there is a childless husband-wife and another biological father. So, while Kunti is the mother of Karna, Pandu is definitely not the father either biologically or according to the niyoga tradition. So the term "Pancha Pandavas" is also correct in this sense.

    Ref: Candrabalī Tripāṭhī (1 January 2005). The Evolution of Ideals of Womenhood in Indian Society. Gyan Books. p. 140. ISBN 978-81-7835-425-5.

    ReplyDelete
    Replies
    1. So Niyoga tradition means prostitution right?

      Delete
    2. No, Prostitution is done for pleasure and money. Niyoga does not have either of these two, and is done primarily for begetting a child. Niyoga has the following strict rules for avoiding pleasure:

      There would be no foreplay, oral or any other type of sexual activity except the intercourse.

      There would be a semi-transparent curtain covering the upper part of the woman, only allowing view and access to her lower part for the man performing niyoga.

      To avoid misuse, a man was allowed a maximum of three times in his lifetime to perform niyoga.

      The bodies were to be covered with ghee so that lust may not take root in the minds of the participants but the actual act may take place for conception.

      The woman would agree to this only for the sake of rightfully having a child and not for pleasure.

      The appointed man would do this, considering it as his duty to help the woman bear a child and not for pleasure.

      If any of these rules are violated, then it is not niyoga.

      Delete
  2. சுப்பிரமணியசாமி10 October 2015 at 15:32

    2000வருஷத்திற்கு முன் எழுதப்பட்ட மகாபாரதத்தின் ஆதி பருவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து,பேசி காலம் தள்ளும் நீங்கள்(அது உண்மையான நிகழ்வல்ல அது ஒரு கட்டுக்கதை என்ற முடிவுக்கு நீங்கள் வந்த பிறகும்) விபச்சார விடுதிகளில் பல ஆண்டுகள் காலம் தள்ளி, பெண்கள் கற்பை கரன்ஸி நோட்டில் கறந்த ஈனச் செயல் செய்து விட்டு பிறகு பெண் விடுதலைப் பற்றி பேசியதற்காக(உதட்டில் வெல்லம் உள்ளத்தில் கள்ளம் என்பதிற்கேற்ப உண்மையில்,கட்டுக்கதையாகல்ல பெண்களுக்கெதிராக ஈனத்தனமான இழி செயல்கள் செய்துவிட்டு பிறகு பேச்சில் பெண் விடுதலை பேசி புனிதாராக காட்டிக் கொண்டதிற்காக பெரியார் என்று கூறினார்களே,கூறுகிறிர்களே அதையும் ஆராய்ச்சி செய்தால்,பேசினால் நன்றாக இருக்குமே!.அதோடு பேருக்கு முன்னால் போட்டுக் கொள்ள ஆசைப்படும் டாக்டர் பட்டமும் உங்களுக்கு கிடைக்குமே!!.

    ReplyDelete
  3. என்னைப் பொருத்தவரை புதிய செய்தி...நன்றி அய்யா..
    –செழியன்.மா.

    ReplyDelete
  4. விவேகானந்தரிடம் நீங்கள் மாறுபடும் கருத்துகள்
    என்ன? சுபவி ஜயா?

    ReplyDelete