தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 26 November 2015

பாதுகாப்பற்ற உணர்வு - ஆமீர் கான் ஆதங்கம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு  நிகழ்ச்சியில் 26-11-2015 அன்று "பாதுகாப்பற்ற உணர்வு - ஆமீர் கான் ஆதங்கம்" குறித்த விவாதத்தில் சுபவீ 

8 comments:

  1. நிகழ்ச்சி முழுவதும் நேரலையில் பார்த்தேன். காவிக் கோஷ்டியினர் விவாதத்தில் கலந்து கொண்டாலே கூச்சல் போட்டு பங்கு கொள்வோர் என்ன பேசுகிறார்கள் என்பதை நேயர்கள் கேட்க முடியாதபடி செய்யும் ஒரு யுக்தியை தங்களது வழக்கமான பாணியாக கையாண்டு வருகின்றனர். நாராயணன் செயலும் அப்படியே. முரட்டுத்தனமாக எந்த ஒரு தெளிவில்லாத கருத்துகளை சொல்லி எரிச்சலை ஊட்டுகின்றனர். எனக்கென்னவோ ஏதாவது ஒரு தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொள்ளும் பிரமுகர்களிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் வந்தாலும் வியப்பில்லை..- வே. பாண்டி / தூத்துக்குடி

    ReplyDelete
    Replies
    1. S ராகவன்28 November 2015 at 16:52

      காவிக் கோஷ்டியினர் விவாதத்தில் கலந்து கொண்டாலே கூச்சல் போட்டு பங்கு கொள்வோர் என்ன பேசுகிறார்கள் என்பதை நேயர்கள் கேட்க முடியாதபடி செய்யும் ஒரு யுக்தியை தங்களது வழக்கமான பாணியாக கையாண்டு வருகின்றனர் என்பது ஒருதலைப்பட்சமான கருத்தாகும்.இரண்டு திராவிட கட்சிகள் பங்கேற்கும் விவாதமேடைகளில் பலமுறை மலிவான கூச்சல்கள் போடுவதை நீங்கள் பார்த்ததே இல்லையா?.ஏன் இந்த விவாதத்தில் கூட ஆளூர் சாநவாசு எப்படி கேவலமாக நாராயணன் பேசும்போது கூச்சலிட்டு குறுக்கிட்டார் என்பதை கூற உங்கள் மனம் மறுப்பதேன்.மேலும் கூச்சலிட்டு,குறுக்கிட்டு, இடையுறு செய்வதில் இன்று நம்பர் 1ஆன திரு.மனுசியபுத்திரனும் திராவிட கட்சியை சேர்ந்தவர்தானே!

      Delete
  2. N முத்துராமன்27 November 2015 at 01:23

    சகிப்புத்தன்மையற்ற பேச்சை யார் பேசினாலும் வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது, தண்டனைக்குறியதாக்கப்படவேண்டும்.ஆனால் அதில் சுபவீ போன்றோரின் இரட்டை நிலைப்பாடும் வெட்கக்கேடானது,கண்டிக்கத்தக்கதாகும்.பிராமணரை அடித்துக் கொள்ளவேண்டும்,மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க வேண்டும் என்று சொன்ன மிகுந்த சகிப்புத்தன்மையுள்ளவருக்கு பெயர்தான் இங்கு பெரியார்!.பிறர் உருவபொம்மையை எரிப்பது போன்ற இழி செயல்களை திராவிட கட்சிகள் [திக,திவிக,பெதிக...] போல தமிழகத்தில்,ஏன் இந்தியாவிலேகூட யாரும் இதுவரை செய்தது கிடையாது[சமீபத்தில் ஸ்மிருதி இரானி உருவபொம்மையை எரிப்பு ஒரு உதாரணம்].இதைப்போன்ற காலிகளையும் கண்டிக்க ஒரு நேர்பட பேசு கூட நடத்தப்படவில்லையை ஏன்?.தினகரன் அலுவலகம் எரிப்பில் 3அப்பாவிகள் எரிக்கப்பட்டார்களே அப்போது எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்?.எத்தனை குரல்கள் பேச்சு,எழுத்து சுதந்திரம் பற்றி கதறியது?.எத்தனை பேர் பத்ம விருதுகள்,சகித்ய அகாடமி விருதுகள் திருப்பி அளித்தார்கள்?.ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.

    ReplyDelete
    Replies
    1. அய்யா முத்துராமன் திராவிட கட்சிகள் போல தமிழகத்தில் இந்தியாவில்கூட யாரும் செய்தது கிடையாது என்று சந்தடி சாக்கில் சொல்லி விட்டு போய்விடலாம் என்ற எண்ணம் சரியல்ல. குஜாரத்தில் ஒரு நாள் முழுக்க ஒரு பாராளுமன்ற உறுப்பினர்(CM மோடியிடம்) ஓலக்குரல் எழுப்பியும் செவிமடுக்காமல் அவரையும் அவரை சேர்ந்த மக்களையும் கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்தது யார்?
      ஒரிசாவில் தந்தையையும் மகன்மாரையும் உயிரோடு கொழுத்திய பஜ்ரங்தள் எவரது செல்லப்பிள்ளை ?
      சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வன்முறை வெறியாட்டம் ஆடுவது யார்?
      திராவிட இயக்கங்களை இழிவு செய்ய வேண்டும் என்று நோக்கில் வரலாற்று உண்மைகளை மறைக்க கூடாது, முழு இந்தியாவிலும் தமிழகத்தில் மட்டும்தான் ஜாதி பெயரை போட்டுகொள்வது அநாகரிகம் என்று மக்கள் கருதுகிறார்கள். இந்த முற்போக்கு பண்பு யாரால் உருவானது?
      நம்ம ஜாதி வேறுபாடுகளை பார்த்து உலகமே சிரிப்பது உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா? அதற்கு எதிராக போராடும் இயக்கங்கள் மேல் அப்படி என்ன கோபம் அய்யா? உண்மையில் பெரியாரும் அம்பேதாரும்தான் இந்தியாவையே பெரிய ஆபத்தில் இருந்து காப்பற்றி உள்ளார். ஜாதி கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சிவில் யுத்தம் செய்யவிடாமல் அவர்களின் போராட்டத்திற்கு சரியான பாதை அமைத்து கொடுத்துள்ளார்கள். .

      Delete
    2. ரவிக்குமார்27 November 2015 at 18:07

      ஜாதி பெயரை போட்டுகொள்ளாமலிருப்பதெல்லாம் ஒரு Tokenism அவ்வளவே!ஏமாற்று வேலை; உதட்டில் வெல்லம் உள்ளத்தில் கள்ளம் என்பதற்கு சிறந்த உதாரணம்.அதைத் தாண்டி அதற்கு எந்த மரியாதையுமில்லை!!.ஜாதி பெயரை போட்டுகொள்ளும் வட இந்தியாவை விட இங்குதான் கலப்புத் திருமணங்கள் எண்ணிக்கை மிகமிக குறைவு என்பதை நினைவில் கொள்ளவும்.தமிழகத்தில் அப்படி மிக சொற்ப எண்ணிக்கையில் நடக்கும் கலப்புத் திருமணங்களும் அக்கிரமான கௌரவக் கொலையில் முடியும் என்பதே இங்கு கண்கூடு.ஜாதியை ஒழிப்பதற்காக திராவிடக் கட்சிகள் முனைப்பாக போராடுகிறது என்பது உள்நோக்கம் கொண்ட பித்தலாட்டமான வாதமாகும்.ஆரம்ப காலத்தில் அப்படியொரு மாயையை தோற்றுவித்து இன்று வேறு திசையில் வெகுதூரம் பயணித்து விட்டது."Aninhilation of caste"is[now]never an agenda for them.இதையெல்லாம் மாற்ற சிவில் யுத்தம் வரும் என்பதும் கற்பனையே.3000 வருடமாக அவ்வாறு வராமல் இருக்க படிநிலை படுத்தப்பட்ட சமமின்மை என்ற சூட்சமத்தைதானே மனு செய்துவிட்டு சென்றுவிட்டான்.சமமின்மை என்ற நிலையாக இருந்திருந்தால் இங்கு வெளிநாடுகள் போல சிவில் யுத்தங்கள்,புரட்சிகள் பல வெடித்திருக்கும்.ஆனால் படிநிலை படுத்தப்பட்ட சமமின்மை என்ற தந்திரயுக்தியால்(அவரவர் படிநிலையில் நின்று தான் செயல்களை செய்ய,போராட முடியும்)அவைகள் அனைத்தும் வராமல்,வரமுடியாமல் ஆகிவிட்டது.ஹரப்பா நாகரிகம்,பௌத்தம் முதல் களப்பிரர்கள் வரை அனைத்தையும் இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டது அந்த தந்திரம்.இப்போது திராவிடக்கட்சிகள் அவ்வளேவே!.அதை ஒழிக்க ஒரே வழி"Aninhilation of caste"தான் இல்லையேல் அது தன்னை தகவமைத்துக் கொண்டு திராவிடக்கட்சிகளின் நிலைமையை திராவிடமாயையாக்கி அதோகதியாக்கிவிடும் ஜாக்கிரதை!

      Delete
    3. 10 ஆண்டுகளுக்கு முன் வெகு தொலைவில் உள்ள குஜாரத்தில்,ஒரிசாவில் நடந்த கொலைகளுக்கு கலங்கும்,வன்முறை வெறியாட்டம் என்று கோபப்படும் ராதா மனோகரன் அவர்களே,இங்கு நமது மாநிலத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் ராசேந்திரன் கொலை முதல் தினகரன் அலுவலகம் எரிப்பில் 3அப்பாவிகள் எரிக்கப்பட்டது வரை சாட்சிகள் கலைக்கப்பட்டு,தடயங்கள் அழிக்கப்பட்டு அரசியல் பலம் வாய்ந்த திராவிட கட்சியின் தலைகள் தப்பித்ததே,மற்றும் இந்தியாவிற்கே கேவலமான முன்மாதிரியாக கிழவெண்மணியில் திராவிட கட்சியின் ஆட்சியில்தான் பல தலித்கள், தலித்பெண்கள்,தலித்குழந்தைகள் உட்பட பலர் எரிக்கப்பட்டார்களே அவையனைத்துக்கும் மோடியும்,பஜ்ரங்தளும்தான் காரணமா?. மேலும் தற்சமயம் திராவிட கட்சியின் ஆட்சியில்தான் தர்மபுரி,சேஷசமுத்திரம் சம்பவங்கள் நடக்கிறது அதற்கும் மோடியும்,பஜ்ரங்தளும்தான் காரணமா?. இங்கு நடந்த அநியாயங்களை,நடக்கும் அநியாயங்களை மறைத்து 2000கிமீ அப்பாலுள்ள குஜாரத்தில்,ஒரிசாவில் நடந்த கொலைகளை (அவைகளுக்கும் நிச்சயம் மரண தண்டனை அளிக்கப்படவேண்டும்)மையப்படுத்தி திசை திருப்புவதேனோ?

      Delete
  3. ஜாதி பெயரை போட்டு கொள்ளாமல் இருப்பதை வெறும் token அதாவது உள்ளார்ந்த அர்த்தம் எதுவுமே இல்லாத வெற்று அடையாளம் என்பதுதான் தாங்கள் கூறவந்த விடயம். மனிதர்களின் உணர்வுகள் பற்றிய அளவீடு அவ்வளவு சாதரணமாக இருக்கமுடியுமா?
    வட இந்தியா என்று ஒட்டு மொத்தமாக நாம் ஒரு கருத்தையும் முன்வைக்க முடியாது, மாநிலத்திற்கு மாநிலம் இனங்களுக்கு இனங்கள் இடையே எத்தனையோ வேறுபாடுகள் வித்தியாசமான புள்ளிவிபரங்கள் உள்ளன.
    வடநாட்டவர்கள் இன்றும் கூட திராவிட இயக்கங்களை (அதிமுக அல்ல) வெறுப்பதற்கு உரிய முக்கிய காரணம் அவர்கள் ஜாதிப்பாகுபாடுகளுக்கு எதிராக மிக வலிமையான பகுத்தறிவு சுயமரியாதை கருத்துக்களை பரப்புவதுதான், சோ ராமசாமி சுப்பிரமணியம் சாமி குருமூர்த்தி மற்றும் வடநாட்டு அவா பத்திரிகைகளை படித்தாலே இது பற்றி மேலும் பல நல்ல தகவல்களை அறிந்து கொள்ளலாம்
    சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமக்கு எதிரி யார் என்பதை மனுவாதிகள் அடிக்கடி இனங்காட்டி கொண்டே இருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. தற்போது திராவிட கட்சியின் ஆட்சி நடைபெறுவதாக உங்களுக்கு யார் சொன்னது, பாஜக கரசேவை அய்யங்கார் அம்மணி ஆட்சி அல்லவா நடக்கிறது .எஸ்.ராஜாராம் அவர்களே தங்களின் நகைச்சுவை உணர்ச்சியை பாராட்டுகிறேன்

    ReplyDelete