தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 30 December 2015

சூரிய ஒளியால் சுடர்விடும் தேசம்!


எங்கள் தமிழ்க்கொடி எங்கள் தமிழ்க்கொடி 
எழுந்தது ஒருகாலம் 
எங்கும் தமிழ்மொழி எங்கும் தமிழ்மொழி 
ஏற்றது பொற்காலம் 
                               
ஆரிய மாயைகள் அடங்கி ஒடுங்கியே 
அன்னியப் பட்டனவே 
திராவிடப் போர்க்கொடி திசைகள் எங்கிலும் 
சிறந்து பறந்தனவே!

பெரியார் அண்ணா கலைஞர் என்றே  
பெறற்கரும் பேறுபெற்றோம்  
உரியோர் பலரும் உயர்வினைப் பெற்றார் 
உயர்ந்தது தமிழ்நாடே!

கலகம் பிறந்தது கழகம் பிரிந்தது
கருமை  வந்ததுவே
காட்சிகள் மாறி மாட்சிகள் மாறி
ஆட்சியும் மாறியதே

ஆரிய மாலா ஆட்டம் போடும் 
அரண்மனை ஆனதுவே 
வீரியம் இன்றி  வேள்விகள் கண்டு   
வீழ்ந்தது நம்நாடே 

காரிருள் விலகும் காலம் வந்தது 
களித்திடும் வருங்காலம் 
சூரிய ஒளியால் சுடர்விடும் தேசம் 
சூழ்ந்திடும் பொற்கதிரே!!

9 comments:

  1. வணக்கம்,அருமையான கவிதை! பெரியார் அவர்களை பற்றி எப்பொழுதும் வைக்கபடும் விமர்சனம் அவரது திருமணம்.அதற்கு நிறைய விளக்கம் கொடுக்கபட்டும் மீண்டும்,மீண்டும் அதுவே பேசப்படுகிறது. அதை விடுத்து ஒரு தலித்துகளை தரகுறைவாக பேசியதாகவும்( தலித் பெண்கள் சட்டை போடுவது தொடர்பான) அதற்கு தோழர் மீனாம்பாள் பெரியாரை "செருப்பால் அடிப்பேன் என்று சொன்னதாகவும்,பெரியார் சிவராஜ் அவர்களுக்கு கடிதம் எழுதி அவரை சமாதான படுத்தும்படி கேட்டதாகவும் அதற்கு சிவராஜ் அவர்கள் " மீணாள் சொல்லியது அவரது சொந்த கருத்து அதற்கு அவரிடம் தான் பேசவேண்டும் .நான் தலையிடுவது அவர் சுயமரியாதையை அவமதிப்பதாகும் என கடிதம் எழுதியதாகவும், அதன் பின் மீனாம்பாள் பெரியாருடன் கருத்து முரண் பட்டே இருந்தார் என்றும் சொல்லபடும் தகவலின் உண்மை நிலை என்ன என்று விளக்கம் தரமுடியுமா?

    இந்த கேள்வியை அனுமதிக்க வேண்டும் என்று கூட எதிர்பார்க்கவில்லை ! விளக்கம் ஒன்றே சொல் நிகழ்ச்சியில் தந்தாலும் நலம்( என் ஒருவருக்கு தெரிவதை விட அனைவருக்கும் கிடைக்கும்)

    இது குறித்து நூல் ஏதாவது இருந்தால் பெயரும்,எழுதியவரும் தெரிவித்தால் கூட போதும்.

    உங்கள் மீது மதிப்பும்,மரியாதையும் உடைய ஒரு பெண்.நன்றி

    ReplyDelete
  2. இவ்வாறு "சொல்லப்படும் தகவலுக்கான" முதல் நிலைச் சான்று ஏதேனும் இருப்பின் உடனே அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அனுப்பினால் நான் விடை சொல்ல அணியமாக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. குடி அரசு பத்திரிக்கையில் பறச்சிகள் சட்டை போடுவதால் துணி விலை ஏறிவிட்டது என்று அய்யா எழுதியிருப்பதாக சொல்லி ஒரு பேப்பர் கட்டிங் படத்தை காட்டுகிறார்கள் என்னால் அந்த லிங்கை எடுக்க முடியவில்லை.அய்யா எழுதியது உண்மையா?

      Delete
  3. உங்கள் கவிதை தன்னை உணர்ந்த ஒவ்வொரு தமிழனின் ஏக்கம் ஆகும்

    ReplyDelete
  4. தங்களுடைய கவிதை நயம் அருமை. அதே வேளையில் சூரியன்தான், மழை-வெள்ளத்திற்கு அடிப்படை காரண கர்த்தா என்பது இயற்கையின் நியதி.உண்மையும் கூட.

    ReplyDelete
  5. இந்த முயற்சி ஒரு கன்னி முயற்சி ஆகும். இரு துருவங்கள் இங்கு உள்ளது. ஒன்று அதிமுக. அது பிராமணர் மற்றும் ஆரிய ஷத்திரியர்கள் கூட்டணி. (ஆரிய ஷத்திரியர்கள் பிராமண ஆதரவாளர்கள் என்று அம்பேத்கர் கூறியதை நினைவு கூர்வோம் ) மற்றொன்று திமுக. அது திராவிட கூட்டணி. இங்கே அதிமுகவுக்கு ஒட்டு போடும் ஜாதிகள் தேவர், கவுண்டர்,நாயுடு,யாதவர் மற்றும் வன்னியர் ஆரிய ஷத்ரியர்கள் ஆவர் . திராவிடர்களாக ஏனைய மற்ற ஜாதிகள் செட்டியார், பிள்ளை, தலித்துகள்,கள்ளர், நாடார், முதலியார் , முத்தரையர் மற்றும் பிற ஜாதிகள் (இரு பக்கமும் ஜாதிகள் விட்டு இருக்க வாய்ப்பு உண்டு) உள்ளது . ஆக இப்போது உருவாக வேண்டியது இரண்டு பக்கமும் ஏற்றுக்கொள்ளகூடிய தலைமை. அதாவது எதிர்பக்கம் இருக்கும் தலைமை இந்த பக்கம் இருப்பவரும் ஏற்றுகொள்ள வேண்டும். அப்படி இரண்டு பக்கம் இரண்டு ஜாதிகள் தேர்வு செய்ய சொன்னால் இந்த பக்கம் வன்னியர் மற்றும் யாதவர் அந்த பக்கம் செட்டியார் மற்றும் முதலியார். இந்த நான்கு ஜாதிகளும் எல்லாருக்கும் பொதுவாக இருக்கிறார்கள். அதனால் அனைவரும் ஏற்று கொள்வார்கள். வன்னியர் முதலில் பிராமணரை முதல் அமைச்சராக ஆக்கி அழகு பார்ப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் உங்களை முதல் அமைச்சராக ஆக்கி அழகு பார்க்கட்டும். அதுதான் எல்லாருக்கும் நன்மை தருவதாக இருக்கும். இன்றைய தேவை இது என்பதை அணைத்து தரப்பினரும் உணர வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் இதே போல மனிதர்களை நேசிக்க தெரிந்த, குழப்பம் ஏற்படுத்தாத ,மக்களை முட்டாள் ஆக்காத, ஜாதிகளை தூண்டி விட்டு சண்டை ஏற்படுத்தாத, மனிதனை பிரித்து பார்க்காத மனிதர்கள் இருக்கும் ஜாதிகளில் இருந்து தலைவர்கள் தேர்ந்து எடுக்க பட வேண்டும். இந்த நாலு ஜாதிகளில் கூட குறைகள் இருக்கலாம். அப்போது பின்னால் பார்த்தும் கொள்ளலாம். ஆனால் ஜெயலிதா போல குறைகள் நிச்சயம் இருக்காது. எல்லாரும் இது பற்றி யோசிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நாட்டில் 50000குடும்பங்கள் கூட இல்லாத மோளக்காரரும்,அவர் குடும்பமுமே தமிழகத்தில் மீண்டும்,மீண்டும் ஆட்சி செய்வதைக் காட்டிலும் வன்னியர்,பிள்ளை, கள்ளர்,நாடார்,முதலியார்,முத்தரையர் போன்றோர்கள் இனியாவது,இந்த 2016 புத்தாண்டிற்கு பிறகாவது ஆட்சி செய்தால் தமிழகத்திற்கு நலமானதாகும்.ஒரே சாதி மீண்டும்,மீண்டும் ஆள்வெதென்பது சமூகநீதி கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.

      Delete
  6. ஒரு பக்கம் பெண்ணுரிமைப் பற்றி பீலா விடுவது மறு பக்கம் ஒரு பெண் தனி ஆளாக முயன்று [கனிமொழி போல தந்தையின் செல்வாக்கால் மேலே வந்தவர் அல்ல அவர்]முதல்வராக இருப்பது கண்டு பொறுக்காமல் வயிற்றெரிச்சல் கொள்வது எனபது உங்களைப் போன்றோர்களிடமுள்ளது இயல்பானதே. இது பல திராவிட மாயைகளில் ஒரு திராவிட மாயையாகும்!.

    ReplyDelete
  7. அடடா! இது தான் பெண்ணுரிமையா? இது தெரியாம அந்த ஈரோட்டு கிழவன் ஆணும் ,பெண்ணும் சமம் பேசிட்டு போய்டார். அவர் கட்சிகாரர்களை ஒழிந்து போகட்டும் ,மக்களையும் தன் காலில் போட்டு மிதிப்பது பெண்ணுரிமை என்றால் அது நாசமா போகட்டும்!அப்புறம் தனி ஆளாக முயன்று ,ஹா,ஹா,ஹா சாரி சிரிப்பு வந்துடுச்சு! எம் ஜி ஆரோட ஆவி கூட உங்கள மன்னிக்காது! தைரியம்,இருந்தால்,திராணி இருந்தால்,தெம்பு இருந்தால் இரட்டை இலையை விட்டுட்டு வேற சின்னத்துல நின்னு செயிக்க சொல்லுங்க!

    ReplyDelete