தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 8 December 2015

மழை வெள்ளம்


மழையும் வெள்ளமும் கொண்டுவந்த துயரங்கள் கொஞ்சமென்று சொல்ல முடியாது. ஆனாலும், இந்த மண்ணில் மனிதநேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை இம்மழை எடுத்துக் காட்டியுள்ளது. தண்ணீரில் தத்தளித்தவன் கையைப் பிடித்துக் காப்பாற்றியவன் எந்த சாதி என்று காப்பற்றப்பட்டவனுக்குத் தெரியாது. கைக் குழந்தைகள் உள்ள வீடுகளின் கதவுகளைத் தட்டிக் காலையில் பால் பாக்கெட்களைக் கொடுத்த இளைஞர்கள்  எந்த மதம் என்று அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாது. சாதி, மதத்தை மட்டுமன்று, மொழி, மாநில எல்லைகளைக் கடந்தெல்லாம் உதவிகள் ஓடோடி வருகின்றன. இந்த மழையும், வெள்ளமும் ஆயிரம் அழிவுகளைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இந்த மழையும் வெள்ளமும்தான் மனிதர்களையும் அடையாளம் காட்டிச் சென்றுள்ளது!

7 comments:

 1. வெள்ளம்
  மனித நேயத்தை
  மக்களின் உண்மை உள்ளத்தை
  வெளிப் படுத்தியிருக்கிறது

  ReplyDelete
 2. உண்மை தான் அய்யா, ஆனால் இது ஒரு போர்க்கால ஒற்றுமையை போல

  ReplyDelete
 3. அன்புள்ள அய்யா,

  மழை வெள்ளத்தால்
  மனிதம் வெல்லமானது...
  மனிதநேயமே உள்ளமானது...
  மனிதனுக்குச் சாதியில்லை
  மதமும் இல்லையென்றே உறுதியானது...
  மானிடசமுத்திரம் ஒன்றென்பது உண்மையானது!

  நன்றி.

  ReplyDelete
 4. Ayya, mutrilum unmai,

  Anayyai Udaithu thaandi varum vellathaivida vegamai adimanathil ulla saathi mathangalai marandu matkkal neyam matume athanai udaithu vandu uthavi seigirathu.

  Nandri

  ReplyDelete
 5. பீமாராவ்11 December 2015 at 20:09

  அனைத்தையும் அழித்துச் சென்ற வெள்ளம் மக்களை ஒன்றிணைத்து சென்றிருக்கிறது என்பது உண்மைதான்.ஆனால் அது எதுவரை என்ற கேள்வி நம் முன்னே நிற்கிறது.உணவு உடை அத்தியாவசிய பொருட்களை கொடுத்த தன்னாவலர்கள் வெள்ளம் விட்டுச் சென்ற மலைபோல் குவிந்துள்ள குப்பைகளையும்,இறந்து கிடக்கும் மிருகங்களையும், அதன் தூர்நாற்றங்களையும்,மழைப் பெருக்கால் வெளியேற்றப்பட்ட மனிதக் கழிவுகளையும் கண்டு திகைத்து நிற்கிறார்கள்.‘இது அரசு செய்ய வேண்டிய பணியல்லவா?’என்று கருதுகிறார்கள்.பாதிக்கப்பட்ட மக்கள்கூட தங்கள் பகுதியில் உள்ள கழிவுகளை அரசு அல்லது வேறு யாராவது சுத்தம் செய்ய மாட்டார்களா?என்று காத்திருக்கிறார்கள்.
  வெள்ள நிவாரணப்பணிகளில் தீவிரமாக செயல்படாத அரசுகூட பெரும் மலையளவு குவிந்துள்ள குப்பைகளை எப்படி அப்புறப்படுத்துவது என்று பெரும் நெருக்கடியோடு யோசித்துக் கொண்டிருக்கிறது.சென்னையில் மட்டும் அரசு துப்புறவு தொழிலாளர்கள் 20,000 இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.வருணாசிரம அடிப்படையில் சாதிக்கோபுரத்திற்கு வெளியே உள்ள‘பஞ்சமர்கள்’ என்று சுட்டிக்காட்டப்படுபவர்கள்.சென்னை முழுவதும் உள்ள பெரும் குப்பை கூளங்களை இவர்களால் எப்படி அப்புறப்படுத்த முடியும்?
  எனவே,தமிழக அரசு கோவை மற்றும் வேறு பகுதிகளில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட துப்புறவு தொழிலாளர்களை வரவழைத்து,சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது. இத்தொழிலாளர்களும் வர்ணாசிரம அமைப்பின்படி பஞ்சமர்கள்.தமிழக அரசின் இப்போக்கை துப்புறவு தொழிலாளர் நலன்களுக்காக பாடுபடும் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கடுமையாக கண்டனம் செய்கிறார்."மழை வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னையை மீட்க தமிழக அரசு வர்ணசாதி முறையில் நடவடிக்கை மேற்கொள்கிறதா?”என்ற மனக்குமுறலை எத்தனை கலைஞர்களால்,சுபவீக்களால்,வீரமணிக்களால் உணர முடிந்தது?.தூய்மைப்பணி என்றால் அது தாழ்த்தப்பட்டவர்கள் செய்ய வேண்டியது என்று ஒரு அரசே செயல்படுமானால் பொது சமூகத்தின் சாதிப்புத்தியின் பிரதிநிதியாகத் தானே அரசின் செயல்பாடும் உள்ளது?.பெரும் மக்கள் கூட்டம் செய்ய வேண்டிய மிகப் பெரிய கடமையை ஒருசில நபர்களிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?.உங்கள் மலத்தை அள்ள ஒரு சாதி இருக்க வேண்டும். உங்கள் குப்பையை அள்ள ஒரு சாதி இருக்க வேண்டும்.அதைக் காக்க ஒரு அரசு இருக்க வேண்டும் என்றால் இந்த சாதி ஆணவம் இன்னும் வாழத்தான் வேண்டுமா?.அந்தப் பெருவெள்ளம் சாதி ஆணவத்தை அழித்தொழிக்காமல் சாதி சமூகத்தை அப்படியே விட்டுச் சென்றிருக்கிறதே... பெரியார், அண்ணா வாழ்ந்த மண் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் திராவிட நாட்டில் இன்னும் ஆரிய மனுவின் சட்டம் தானே திராவிடர்களை உளப்பூர்வமாக ஆண்டு கொண்டிருக்கிறது!.அதை தானே திராவிட சமுதாயம் விரும்புகிறது!. இந்த‘சாதி குப்பை’ச் சமூகத்தை சுத்தப்படுத்த இன்னும் எத்தனை 1000ஆண்டுகள் ஆகுமோ?

  ReplyDelete
 6. கடந்து போன வெள்ளம் பல பாடங்களை தந்துள்ளது. மக்கள் இனியாவது கொஞ்சம் சொந்த ஊர்களை மறவாது கொஞ்சம் அதைப்பற்றியும் யோசிக்கலாம். சென்னை நகரம் எல்லா பெரிய நகரங்களையும் போலவே அளவுக்கு அதிகமாக மைய்யப்படுத்த (centralized)பட்டுவிட்டது. சென்னை நகரம் சர்வதேச தரத்துக்கு உயர இன்னும் பல படிகளை தாண்ட வேண்டியுள்ளது. செம்பரப்ப்பாக்கமா அல்லது மழையா என்பதையும் தாண்டி இன்னும் பல புதிய பிரச்சனைகள் உருவாக பல காரணங்கள் உண்டு, சுகாதாரம் வடிநீர்கால்வாய் மற்றும் நீரின் தாக்கத்தால் வலுவிழந்து போன கட்டிடங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்று பல உண்டு. இனி வரப்போகும் புதிய ஆட்சியாளர்களுக்கு மிக பிரமாண்டமான கடமைகள் காத்திருக்கிறது.இனி வரப்போகும் ஆட்சியாளர்களுக்கு தமிழகம் ஒரு கேக் வாக்காக இருக்கப்போவதில்லை. மூச்சுக்கு மூச்சு இதயதெய்வம் என்றவர்களின் பிரார்த்தனை பலித்தது என்பதை தவிர வேறு என்ன சொல்வது? அடிமைகளாக இருப்பதன் பலாபலன்கள் இதுதான்.எல்லாம் அவருக்கே தெரியும் எல்லாம் அவரே....சர்வாதிகார ஆட்சியாளர்கள் எல்லோரும் இறுதியில் மக்களை இருட்டில்தான் தள்ளி விடுவார்கள். அம்மாவோ இன்னும் ஒரு படி மேலே போய் இருட்டில் (த)கண்ணீரில் அல்லவா தள்ளிவிட்ட்டார்.

  ReplyDelete
 7. ரவிகுமார்15 December 2015 at 00:43

  மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் குணமும்,மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய குணமும்,ராமராஜ்யம்‬ முதல் பிரிட்டிஷ் ராஜ்யம் இடையாக,திராவிடக் கட்சிகள் ராஜ்யம் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது!.இன்று திராவிடக் கட்சி‬ ஆட்சியிலும் அதுவே நடைமுறை படுத்தப்படுகிறது.
  வெள்ள நிவாரண பணிகளில் சென்னையில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் எண்ணிக்கை போதாது என்று மற்ற மாவட்டத்தின் மாநகராட்சிகளில் உள்ள துப்புரவு தொழிலாளர்களை 'குப்பை லாரிகளில் கொண்டு வந்து' சென்னை குப்பை / கழிவுகளை சுத்தம் செய்ய வைக்கிறார்.இவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் இல்லை. அவர்கள் தங்குவதற்கான பராமரிப்புகளைக்கூட கவனிக்கவில்லை.வெற்றுத்தரையில் தூங்குகிறார்கள்."5 நாட்களுக்குதான் வேலை. பிறகு திருப்பி அனுப்பி விடுவோம் என்றார்கள்.அதனால் மாற்று உடை கூட இல்லாமல் வந்துவிட்டோம். தற்போது இருக்கிற ஒரே உடையை துவைத்து போடுகிறோம்.படுத்துக் கொள்ள ஒரு போர்வைகூட இல்லை. வெற்றுத் தரையில் படுக்க வேண்டி இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் கொடுக்கப்படும் உணவுகள் சுகாதாரமற்றவையாக இருக்கின்றன" என்கிறார்கள் துப்புரவு தொழிலாளர்கள்.
  சென்னையில் தேங்கி கிடக்கும் ஒரு லட்சம் "டன்" குப்பைக்கழிவுகளை அள்ளிச்சுமக்க வற்புறுத்தும் ‪#‎அரசு‬ இயந்திரம், இப்பணியின் போது ஒரு ‪துப்புரவு_தொழிலாளர்‬ இறந்துள்ளதை குறித்தும் அக்கறை கொள்ளவில்லை.இயந்திரங்களைக் கொண்டு டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு தமிழக அரசு முயற்சி செய்யாமல், பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் இல்லாமல் துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்தப்படுவது உட்பட அரசின் அனைத்துச் செயல்பாட்டிலும் காட்டப்படும் அலட்சியம் '‪‎தோட்டிகள்‬' என்பதால் தானா?.இன்ன ‪‎சாதி‬, அல்லது இன்ன மதம் அல்லது இன்ன இனத்தார் அல்லது இன்ன பிரிவினர் தான் சுத்தம் செய்ய வேண்டும் வேண்டும் என்பது நாகரிக நாடு எதிலும் காண முடியாத அக்கிரமமாகும்."இந்த மனித நாகரிகமற்ற வேலைதான் இந்தியாவில்/தமிழ்நாட்டில் மட்டும் சாதியின் பெயரால் நடந்துக் கொண்டிருக்கிறது. இதை இப்படியே அலட்சியப்படுத்தலாமா?.இதை எதிர்த்து தமிழ்நாட்டிலுள்ள சமூகநீதிக் கட்சிகள் குரல் கொடுக்காதது ஏன்?

  ReplyDelete