தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 8 January 2016

கி.பி., கி.முஇயன்ற வரையில், மதச் சார்பற்ற சொற்களை நாம் பொதுத்தளங்களில் பயன்படுத்த முயற்சிக்கலாம். வரலாற்றில் ஆண்டுகளைக் குறிக்கும்போது கி.மு., கி.பி. என்னும் குறியீடுகளை நாம் பயன்படுத்துகிறோம். கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ்து பிறந்ததற்குப் பின் என்னும் இவை மதச் சார்புடையவை.இதே போலத்தான் ஆங்கிலத்திலும் B.C., A.D., என்று குறித்துக் கொண்டிருந்தார்கள். அதாவது, Before Christ, Amno Domni என அவை விரியும். Amno Domni என்றால் after death, இயேசு இறந்ததற்குப் பின் என்று பொருள். இன்றைக்கு அந்தக் குறியீடுகளை அவர்கள் BCE, CE என்று மாற்றிவிட்டார்கள். Before Common Era, Common Era என அவை ஆகி விட்டன. நாமும் அது போலவே, தொடர் ஆண்டுகளின் முன், தொடர் ஆண்டுகளில் என்று குறிப்பிடலாம். சுருக்கக் குறியீடுகளில், தொ.ஆ.மு., என்றும், தொ.ஆ., என்றும் ஏன் எழுதிப் பழகக் கூடாது? 

5 comments:

 1. அனைவரும் ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டிய சரியான கருத்தாகும். சிந்தனையை தூண்டும் செய்தி. It is a good food for thought.

  ReplyDelete
 2. மிகவும் சரியான ஒரு கருத்தாகும். சிலர் வேண்டும் என்றே மதசார்ப்பு சொற்களை திணித்து பேசுகிறார்கள். அரபி சமஸ்கிருத சொற்களை வலிந்து திணித்து தமிழ் உட்பட இதர மொழிகளின் வளத்தினை சிதைக்கும் காரியம் இதுவாகும். Before Christ என்பது போல இதுவும் Before christian era என்று இதுவரை நான் தவறாக புரிந்து கொண்டேன். Before Common Era என்பது தங்கள் குறிப்பின் மூலம்தான் எனக்கு தெரிகிறது.நன்றி அய்யா.

  ReplyDelete
 3. Typo : anno Domini

  ReplyDelete
 4. Subavee Sir,
  Just one small correction. Anno Domini means "In the year of our Lord", not "After Death(of Christ)".

  ReplyDelete
 5. கணேஷ்வேல்11 January 2016 at 13:14


  உரத்த சிந்தனை அய்யா !

  அச்சு ஊடகங்கள் இதை செயல்படுத்தினால் விரைவில் பரவலாகிவிடும்.

  நமது 'கருஞ்சட்டைத் தமிழர்' இதழில் தொ.ஆ.மு., என்றும், தொ.ஆ என்றும் அடுத்த இதழிலிருந்து பயன்படுத்த ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வரும் காலங்களில் மற்ற இதழ்களும், அச்சு ஊடகங்களும் பயன்படத்துவதற்கு நாமே முன்மாதிரியாக இருந்து வழி காட்டலாம்.

  நன்றி அய்யா !!!

  ReplyDelete