தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 31 March 2016

அரசியல் மேடை - 20

இன்னொரு 'மக்கள் முதல்வரை'
இந்த நாடு தாங்காது!


அ.தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துக் கூறி ஆட்சி மாற்றத்திற்குத் தமிழ்நாட்டில் வழிவகுக்க வேண்டிய நேரத்தில், மக்கள் நலக் கூட்டணி போன்ற கட்சிகள் குறித்துப் பேசுவது தேவையற்றது என்பது உண்மைதான். அது, நம்மை,  நம் முதன்மை நோக்கத்திலிருந்து திசை திருப்பிவிடும் என்பதையும் உணர முடிகிறது. ஆனாலும் அவர்களின் பேச்சுகளையும், போக்குகளையும் விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை.


இன்னும் முழுமையாகக் கூட்டணிகள் நிலவரம் தெளிவாகி  விடவில்லை. பெரும்பான்மைக் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடவில்லை. வேட்பாளர்கள் பட்டியலும் பல  கட்சிகளில்  முடிவாகவில்லை.  அதற்குள்ளாக, பதவி ஏற்பு, அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்தெல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர்.  முதலமைச்சர் வேட்பாளர்  மட்டுமின்றி மற்ற அமைச்சர்களின் பெயர்களும் பேசப்படுகின்றன.

எங்களின்  பதவி ஏற்பு விழா மதுரையில்தான் நடக்கும் என்கிறார் பிரேமலதா.  இன்னொரு கூட்டத்தில், துணை முதல்வர் வைகோ, கல்வித் துறை அமைச்சர் திருமா, நிதி அமைச்சர் முத்தரசன், உள்துறை அமைச்சர் ஜி. ராமகிருஷ்ணன் என்று பட்டியலை வெளியிடுகின்றார் அவருடைய தம்பி.

இவையெல்லாம் எங்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு என்று அவர்கள் சொல்லக்கூடும். ஆனாலும் நுனிக் கொம்பு ஏறுவதாகவும், மக்களால் வேடிக்கைப் பேச்சுகளாகப்  பார்க்கப் படுவதாகவும்தான் இவை அமைந்துள்ளன. 

உண்மையைச் சொன்னால், விஜயகாந்தை முன்னிறுத்தி, அவருடைய மனைவியும், மைத்துனரும் அரசியல் விளையாட்டு நடத்துவது போலத் தெரிகிறது. இருவரும் எதிர்காலத்து பன்னீர்செல்வத்தை உருவாக்குவது போன்றே சூழல்கள் தென்படுகின்றன. 

அண்மையில் ஒரு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் குறித்துப்   பேசும்போது, "கேப்டன் அம்பியாகவும் இருப்பார், அந்நியனாகவும் இருப்பார். காந்தியாகவும் இருப்பார், கோட்சேயாகவும் இருப்பார்" என்கிறார். இதற்கு என்ன பொருள் என்று எந்த அரசியல் வல்லுனருக்கும் புரியவில்லை.(பாவம் கம்யூனிஸ்ட் தோழர்கள்)

பதவி ஏற்றுக் கொள்ள ஒரு முதல்வரும், பின்னால் இருந்து ஆட்சி நடத்த இன்னொரு 'மக்கள் முதல்வரும்' என்னும் அவர்களின் பகல் கனவு நம் கண்களுக்குத் தெரிகின்றது. இன்னொரு மக்கள் முதல்வரை இந்த நாடு தாங்காது! "மக்கழே" விழிப்போடு இருங்கள்!!

5 comments:

  1. இவர்களால் ஒருசில தொகுதிகளிலாவது வெல்ல முடியுமா என்பதே கேள்வி குறி என்று பாமரருக்கும் தெரியும் ஏனெனில் நடைபெறும் சீரற்ற ஆட்சியை எதிர்த்து இவர்கள் ஒன்றும் கிளர்ச்சியில் ஈடுபட்டு மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவர்கள் அல்லர் . அப்படியிருந்தும் இவர்களின் இதுபோன்ற செயல் திரைமறைவில் ஏதோ பெற்றுக் கொண்டு அதற்கேற்ற வண்ணம் அரங்கேற்றும் காட்சிகள் என்று உறுதி படுத்துகிறது. இவர்களின் இந்த மிகை நடிப்பே இவர்களையும் அதிமுக வையும் ஒருசேர வீழ்த்தும்

    ReplyDelete
  2. நன்று,1949 இல் தந்தை பெரியாரை பிரிந்து பேரறிஞர் ஆரம்பித்த கழகம் இன்று சக்கர வியுகத்தில் அபிமன்யு சிக்கிவிடத்தை போல் தவிக்கிறது, 1967 இல் தி மு க , முஸ்லிம் லீக், இன்னும் சிறு கூட்டணிகள்கூடன் தேர்தலை புரட்டி போட்ட பெருமை தலைவர் கலைஞர் அய்யா வைஏ சாரும், இன்றோ நாம் எதிர் கட்சி உம் இல்லை, ராஜ்ய சபா வில் சீட்டும் இல்லை , இருந்தாலும் கருணாநிதி தான் தமிழகத்தின் தலைப்பு செய்தி,, காமராஜர்,பக்தவாசலாம், ராஜாஜி, இவர்களை வெற்றி பெற்ற தலைவர் வுக்கு இப்போதைய தேர்தல்,, சதுரங்கம் அல்ல, வெறும் பல்லாங்குழி ஏ,, மே 19 இற்காக காதிருக்கிறேன்,,,

    ReplyDelete
  3. இரத்தினவேல்31 March 2016 at 15:11

    ஆட்சிக்கு வந்துவிடப் போவதாக மக்கள்நல கூட்டணியும், பா.ம.க.வும் கூறுவது தொண்டர்களுக்கு உற்காகமூட்டுவதற்குதான். அவர்களுக்கே தெரியும் அது சாத்தியமில்லையென்று. எனவே இன்னொரு மக்கள் முதல்வர் உருவாக வாய்ப்பில்லை.

    ReplyDelete
  4. திரு சுபவீ அய்யா அவர்களுக்கு
    மக்கள் நலக் கூட்டணி என்பது admk வின் B டீம் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் உண்டு ,போன 2011 தேர்தலில் admk வில் தொகுதி பங்கீடு நடை பெற்றபோது வை கோ விற்கு மிக மிக குறைந்த தொகுதிகளே ஒதுக்கபட்டது. அதனால் வை கோ வெளியேறினார் ,ஆனால் கவனமாக 2006 போல் தொகுதி கிடைக்காததால் எதிர் அணிக்கு போகாமல் ,தேர்தலை புறக்கணித்தார் ,ஏன் என்றால் தன்னுடைய கட்சி புறக்கணித்தால் தொண்டர்கள் பாதி பேராவது admk க்கு ஓட்டு போடுவர் ,ஆனால் DMK கூட்டணிக்கு போனால் தொண்டர்கள் ஓட்டு முழுவதும் DMK கூட்டணிக்கு போகும் ,அவருடைய உள் மனது ஆசை DMK எப்போதும் ஆட்சிக்கு வர கூடாது ,ஆனால் admk ஆட்சிக்கு வரவேண்டும் ,இப்பொழுதும் அதையே செய்கிறார் ,
    (வை கோ விற்கு எப்போதும் பாசம் ஜெயலலிதா மீது ஏன் என்றால் DMK -வை வைகோ உடைக்க நினைத்த போது அதற்காக அனைத்து உதவிகளையும் ஜெயலலிதா உம் மற்றும் அவரது மீடியாக்களும்,ஜெயலலிதா இன நடுநிலையாளர்களும் தான் உதவியது )
    ஏன் ஊர் ஊராகப் பிரசாரம் செய்யும் ம.ந.கூ தலைவர்கள் பருப்பு விலை ,கரண்ட் பில் ,பால் ,நிர்வாகம் இல்லாமை ,சென்னை வெள்ளம் ,அமைச்சர்கள் கொள்ளை ,சினிமா தியேட்டர் ,குன்ஹா vs குமாரசாமி தீர்ப்பு ,மதவெறி ,ஈழ நாடகம் ,7 பேர் விடுதலை நாடகம் ,சல்லிகட்டு நாடகம் ,gail குழாய் பதிப்பு ,விவசாயி தற்கொலை ,அதிகாரிகள் தற்கொலை ,கோகுல்ராஜ் ,இளவரசன் ,சங்கர் மரணம் ,எழுத்தாளர் பெருமாள் முருகன் ,நடிகர் கமல் ,விஜய் ,தூத்துகுடி துப்பாக்கி சூடு ,ஆம்பூர் கலவரம் ,தருமபுரி கலவரம்,ஸ்டிக்கர் காலச்சாரம் ,மண்சோறு ,மக்களை சந்திக்காமை ,நிழல் ஆட்சி ,சசி குடும்ப கொள்ளை இப்படி பேச எவ்வளவோ இருந்தும்
    -------
    இரண்டு திராவிட கட்சிகளும் ஒன்று என்று பொத்தாம் பொதுவாக பேசி admk வை தப்ப வைக்க முயற்சி செய்கிறார்கள்

    ReplyDelete
  5. அய்யா, தங்களின் கணிப்பு மிக சரியான திசையில்தான் உள்ளது. கேப்டனின் தன்னிலை அனைவரும் அறிந்ததே. இம்முறை மக்களுக்கு கூடியநன்மைகள் செய்துகாட்டி, மக்களுக்காக நல்ல பல செயல் படுத்தக்கூடிய திட்டங்களை முன்னிறுத்தும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும்.

    ReplyDelete