தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 5 March 2016

அரசியல் மேடை- 8

 தினமணியின் "அன்பு"!


திரு வைத்தியநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து தினமணி நாளேட்டின் சென்னைப் பதிப்பில், என் பெயரோ, என் படமோ இடம்பெறுவதில்லை. எங்கோ ஓரிரு விதிவிலக்கு இருக்கலாம். அது அவர்கள் உரிமை. தினமணி என்னும் மாபெரும் மக்கள் ஏடு வெளியிடுகின்ற அளவுக்கு என் வளர்ச்சி இல்லாமலும்  இருக்கலாம்.


ஆனால் திடீரென்று, சில  நாள்களுக்கு முன், தினமணி அலுவலகத்தில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டனர். விஜயகாந்த் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரையைத் தினமணியில் வெளியிடலாமா என்று கேட்டனர். என்னை நான் ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். கனவில்லை, நினைவுதான். 

அந்தக் கட்டுரையை வெளியிடுவதன் மூலம் ஏதோ வில்லங்கம் ஏற்பட வழியுள்ளது என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். எப்படி என்றாலும் எனக்கு  அது குறித்துக் கவலை ஏதுமில்லை. மக்களிடம் நம் கருத்து பரவ வேண்டும் என்பதற்காகத்தானே எழுதுகிறோம்! ஆகவே மகிழ்ச்சிதான். ஆனாலும் ஓர் எண்ணம் குறுக்கிட்டது. என்னைத் தொடர்புகொண்ட நண்பரிடம் இப்படிச் சொன்னேன் – 

"திரு வைத்தியநாதன் ஆசிரியராக இருக்கும் வரை, என் எழுத்து எதுவும் தினமணியில் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை."


ஆம், அதனை நான் இழிவாகக் கருதுகின்றேன்.

10 comments:

  1. உங்கள் நெஞ்சுரம் வரவேற்க தக்கது

    ReplyDelete
  2. இதனை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.
    1. திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்து விடக் கூடாது என்பதற்காக எந்த ஆயுத்த்தையும் பயன்படுத்த அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

    2. சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருக்கும் உங்களை திமுகவிலிருந்து பிரிக்க எண்ணியிருக்கலாம்..

    நான் ஏதோ சுபவீ வலைப்பூ ஒரு சிறு வாசகர் குழுவால் மட்டுமே வாசிக்கப்படுகிறது என்று குறைத்து மதிப்பிட்டிருந்தேன்.இல்லை!! இல்லை!! மிக எளிமையாக நீங்கள் எடுத்துக் கூறும் ஆழமான அரசியல் கருத்துக்கள் பலபேரை சென்றடைவதால், உங்களின் ஒவ்வொரு எழுத்துமே வாசகர்கள் மட்டுமல்லாமல் எதிரிகளாலும் உற்றுநோக்கப்படுகிறது.சரியான முடிவையே எடுத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  3. பெரியார் பாசறையில் பயின்றவரல்லவா நீங்கள் அதனாலேயே உங்களுக்கு ஈரோட்டு கண்ணாடி எளிதில் நல்லது எது கெட்டது எது என்று தரம் பிரிக்க உதவுகிறது

    ReplyDelete
  4. நம் கண்களை குத்த நம் கைவிரலை கேக்கிறார்கள்! விடலாமா!!
    தெறிக்க விட்டுட்டிங்க!!!!

    ReplyDelete
  5. நல்ல முடிவு அய்யா... உங்கள் பேச்சு மட்டுமல்ல முடிவுகளும் திடமாக உள்ளது

    ReplyDelete
  6. நாங்கள் விரும்பும் எங்களுக்கு சாதகமான ( சிண்டு முடியும் ) செய்தியை மட்டும் தான் வெளியிடுவோம் என்று நினைக்கும் அவர்களுக்கு சரியான சாட்டைஅடி கொடுத்திருக்கிறீர்கள்

    ReplyDelete