தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 13 June 2016

எழுவர் விடுதலையில் நமது நிலை



பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் அன்று முதல் இன்று வரை நாம் உறுதியாக உள்ளோம். இதனை, 'கோரிக்கைப் பேரணி' நடைபெற்ற நாளிலும் புதிய தலைமுறை, தந்தி தொலைக்காட்சிகளில், பேரவையின் பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் வெளிப்படுத்தினேன். பேரவைத் தோழர்கள் பலர் அப்பேரணியில் கலந்து கொண்டனர். 


மரண தண்டனையை எதிர்த்தும், எழுவரின் விடுதலையை வலியுறுத்தியும் பேரவை  தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடத்தியும், தோளில் பதாகைகளை அணிந்துகொண்டு கல்லூரி வாசல்களிலும், மக்கள் கூடும் கடற்கரை போன்ற இடங்களிலும் கைகோத்து நின்றும் இன்னும் பலவாறாகவும் நாம் செயல்பட்டுள்ளோம்.

எனினும் பேரணியில் நான் மட்டும்  கலந்து கொள்ள வேண்டாம் என்று வருத்தத்துடன் முடிவெடுக்க வேண்டியதாயிற்று. அதற்கான காரணத்தைப் பதிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

திரு நா. அருணாசலம் அய்யா அவர்கள் மறைந்த நாளில், கண்ணீர் இரங்கல் செலுத்துவதற்காக நானும், பேரவைப் பொறுப்பாளர்கள் சிற்பி, மாறன், குமரன் உள்ளிட்ட பலரும் அங்கு சென்றிருந்தோம். அந்த நிகழ்வில் அற்புதம் அம்மா அவர்களைச் சந்தித்தேன். அங்கு தா.பாண்டியன், வைகோ, பழ.நெடுமாறன், தொ.திருமாவளவன், சீமான் ஆகியோரும் வந்திருந்தனர். அந்த இடத்தில் இந்தப்  பேரணி பற்றி அவர்கள் அனைவரிடமும் கூறப்பட்டுள்ளது.. என்னிடம் மட்டும்  எவரும் கூறவில்லை. 

பிறகு, அற்புதம் அம்மாள், பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் சிங்கராயரிடம் இது குறித்துக் கூறியுள்ளார். வேறு சிலரும் அவருடன் பேசியுள்ளனர். 'பொதுச் செயலாளரிடம் கூறினீர்களா?' என்று அவர் கேட்டதற்கு யாரும் நேரடியாக விடை கூறவில்லை. பிறகு அவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, "நான் வர வேண்டாம் என்று கருதுகின்றனர் போலும். நான் கலந்து கொண்டால் முதலமைச்சருக்கு வருத்தம் வந்துவிடும் என்று எண்ணியிருக்கலாம்.  அது குறித்துக் கவலை கொள்ளாமல் நீங்களும் நம் அமைப்புத் தோழர்களும் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள், பேரணியிலும் கலந்து கொள்ளுங்கள் என்று கூறினேன். 

இயல்பாகவே ஈழ உணர்வு மிக்க சிங்கராயர், நான் கூறியதும், தன் பணத்தைச் செலவழித்துத் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்தார். அனைவரோடும் தொடர்பு கொண்டு பணியாற்றினார். ஆனால், வேலூரில் தடை செய்யப்பட செய்தியைக் கூட அவரிடம் இன்றுவரை  யாரும் தெரிவிக்கவில்லை. திருமண மண்டபம் இறுதியில் மறுக்கப்பட்டு விட்டது. முதல் நாள் இரவே வந்து சேர்ந்துவிட்ட தோழர்களை எங்கு தங்க வைப்பது என்று தெரியாமல் அவர் தடுமாறினார்.

25 ஆண்டுகளாகத் தங்கள் பிள்ளையைப் பிரிந்திருக்கும் பெற்றோரின் துயரம் எவ்வளவு கொடியது என்பதை நாம் அறிவோம். எனவே இவைகளை எல்லாம் நாம் பெரிது படுத்தக் கூடாது என்பதை நாங்களும் உணர்ந்துள்ளோம்.  ஆனாலும் இதனைப் பதிவு செய்ய நேர்ந்தமைக்கு ஒரு முதன்மையான் காரணம் உண்டு.   "பாருங்கள், கோரிக்கைப் பேரணியில் கூட, சுபவீ  கலந்து கொள்ளவில்லை, இனத் துரோகியாகி விட்டான்" என்று நா கூசாமல் பழி சுமத்துவார்களே என்பதால், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தோம்.  அவ்வளவுதான்!.. 

                                                                                    -சுப. வீரபாண்டியன் 
                                                                                     பொதுச் செயலாளர் 
                                                                            திராவிட இயக்கத் தமிழர் பேரவை  

17 comments:

  1. Perarivalan and Nalini can be released first. By joining other convicts with perarivalan tamil organisations are delaying perarivalans release. Other 6 convicts are tactically projecting perarivalan in front. Arputham ammal should distant herself and fight only for release of his son. This tamil organisations have cheated her for 20 years.

    ReplyDelete
  2. Absolutely right Mr.Srivatsan. Other convicts has to face the trial for Late Mr.Pathmanaba assassination. In that brutal mass killing, 16 Eprlf members were killed and one of them was a member of parliament Mr.Yogasangari(relative of TULF leader Mr.Anandasangari.) They never show any remorse for that heinous crime. All these facts are comfortably ignored. I hope at leas now they could ask apology for their past and seek clemency.

    ReplyDelete
  3. அய்யா உங்களின் உண்மைத்தன்மையை நான் நன்கு அறிவேன். எனவே கவலையை விடுங்கள். உண்ஐ என்றும் அழிவில்லாதது.

    ReplyDelete
  4. இதுவே தி மு க ஆட்சியாக இருந்தால் நீங்கள் கலந்து கொண்டால் தான் பேரணியை நடத்துவோம் என்று கூறி இருப்பார்கள்!!!!

    ReplyDelete
  5. Good one, but why you are not allowing all the comments to appear ? Any reason why someone with a different view should not comment in your blog ?

    ReplyDelete
  6. யார் மனிதர்கள் என்பதை அவர் அவர் உணர வேண்டும்...

    https://www.facebook.com/al.hariharan/posts/1188980434453791

    ReplyDelete
  7. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சொன்ன ஒரு தகவல் நினைவிற்கு வருகிறது . " யாரோ ஒருத்தன் சொன்னான் என்பதற்காக , எல்லோரிடமும் காலைத் தூக்கிக்காண்பித்துதான் நமக்கு யானைக்கால் இல்லை என்று நிரூபிக்கத் தேவையில்லை " தோழர் சுபவீ அவர்களை நன்கறிந்தவர்கள் நாங்கள்.

    ReplyDelete
  8. வியனரசு15 June 2016 at 00:53

    அய்யா நீங்கள் சமூகநீதி பற்றி கரைப்பீர்கள் ஆனால் 70ஆண்டுகள் பழமையான திராவிட இயக்கமாகிய திமுகவில் தலைமைப் பதவிகளில்,முதலமைச்சர் பொறுப்பில் தாழ்த்தப்பட்டவரைகளை நியமிக்கவேண்டும், தலித் கூட்டணிக் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவேண்டும் போன்றவைகளுக்காக போராட வேண்டாம் குறைந்தபட்சம் வெளிப்படையாக கருத்து கூட தெரிவிக்கமாட்டிர்கள்!.அந்த எண்ணம் உங்களுக்கு அன்றும் இல்லை,இன்றும் இல்லை,என்றும் இருக்குமா என்று தெரியவில்லை.முன்பு ஈழப்பிரச்சனையில் இருந்த ஈடுபாடு இப்போது உங்களுக்கு இல்லை என்பது வெள்ளிமடை!.உங்கள் சாயம் வெளுக்கத் தொடங்கியிருக்கிறது!.இப்படி ஒவ்வொரு விடயத்திலும் நீங்களும் பிற திராவிடக் கட்சிகள்,அவற்றின் தலைவர்கள் போல பச்சோந்திதான் என்பது மெல்லமெல்ல தமிழர்களுக்கு குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு இப்போது நன்றாக தெரிய ஆரம்பித்திருக்கிறது!.

    ReplyDelete
    Replies
    1. ஈழத்தை குத்தகைக்கு வாங்கி இருக்கும் கோபால் சாமியோ, சீசீசீசீ மான்னோ அல்ல, ஐயா சுப.வீ. அவர்கள் தலித் கூட்டனி கட்சிக்கு ஆட்சியில் பங்குகேட்டு வரவில்லை சில பூனைகள் கட்சி அங்கிகாரத்துகாக அலைந்த சில பேர், இப்போது பாடுபடுங்கின்றனர். அருந்ததியர் மக்களுக்கு உள்இடஒதுக்கிடு கொடுத்த போது, உள்ளே பொசிங்கிய கூட்டம் உண்டு, அது தலித் மக்களின் ஒரு சிலர் என்ற செய்தி வியப்பு!! ஈழ வியாரியாக மாற வேண்டும் என்று சொல்லுறிங்க அது பக்கத்து கடை சீசீசீ மான்,, கோபால்சாமி இருப்பாங்க, இது ஈரோட்டு பாசறை

      Delete
    2. திமுகவில் தலைமை பதவிகளில் யார் யார் நியமிக்கபடவேண்டும் என்ற விருப்பங்களை கோரிக்கைகளை விடுக்ககூடிய சுதந்திரம் இருப்பது அதன் ஜனநாயக மாண்பு.
      ஏன் இதுபோன்ற விமர்சனங்களை அதிமுக வை நோக்கி உங்களால் முன்வைக்க முடியாது.
      அந்த தைரியம் உங்களை போன்றவர்களுக்கு இல்லாமல் போனது? பணமா பதவியா பயமா காரணம்?
      இதை நீங்களாகவே சுயநிவர்த்தி செய்து கொள்ள வேண்டியதுதான்.
      ஈழத்தமிழர்களின் அபிப்பிராயங்கள் என்று நீங்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு சிறு கூட்டத்தின் ஊதுகுழலாக ஒலிப்பது ஈழத்தமிழர் அபிப்பிராயம் ஆகாது.
      ஈழத்தமிழர்களின் உண்மையான அப்பிபிராயம் என்னவென்று கொஞ்சம் அங்கு சென்று பார்த்து விட்டு தெரிவித்தால் அதில் நியாயம் இருக்கும்.

      Delete
    3. திருமாவளவன் கருணாநிதியின்,ஸ்டாலின், திமுகவின் வாழ்நாள் அடிமையா? கருணாநிதிக்கு ஒத்து ஊதி,குடை பிடித்தே வாழவேண்டுமா வாழ்நாள் முழுவதும்? அவருக்கு என்று லட்சியங்கள்,சுயமரியாதை இருக்கவே கூடாதா? உங்களைப் போன்றோர்கள் பார்வையில் திருமாவளவன் என்ன பெரிய தவறை செய்து விட்டார் தலித்தாக பிறந்ததை தவிர?.நாங்கள் சமூகநீதியை காப்பாற்றக்கூடியவர்கள், அதிமுகவிலிருந்து மாறுபட்டவர்கள் என்று சொல்லப்படும் திமுகவில் 70ஆண்டுகளாகியும் திமுகவின் தலைமை பதவிகளில் ஏன் தலித் வரவில்லையென்றால் அதிமுகவை நோக்கி உங்களால் அந்தக் கேள்வியை முன்வைக்க முடியுமா என்று எதிர் கேள்வி கேட்பது வெட்கக்கேடானது!.நீங்கள் தானே மேடைக்கு மேடை,ஊடகத்திற்கு ஊடகம் சமமில்லாதவரை சமமாக ஒப்பிடுவது தவறு என்று கூறினீர்கள். இந்த விடயத்திற்கு மட்டும் ஏன் அதிமுகவோடு ஒப்பிடு?

      Delete
    4. திரு அன்நோநிமஸ் அவர்களே!
      திராவிட முன்னேற்ற கழகம்தான் சமுத்துவபுரங்கள் அமைத்ததன் மூலம் இந்தியாவிலேயே ஒரு ஜாதி இல்லாத சமுகத்தை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. இன்றுவரை இதர மாநிலங்கள் செய்ய துணியாத புரட்சி அது. கம்யுனிஸ்டுகள் கூட இன்னும் அந்த அளவு வளரவில்லை (தோழர் நம்பூதிரி பாடு, வேதங்களோட நாடுன்னு புத்தகம் எழுதிய மனுவாதி) அந்த உன்னத நோக்கம் இன்னும் பெரிய அளவில் நிறைவேறாமல் தடுத்தது எம்ஜியாரின் அதிமுக அரசியல்.
      இன்றுவரை ஜாதி அரசியலுக்கு மிகபெரும் சவாலாக இருப்பது திராவிட முன்னேற்ற கழகம்தான். அதன் பொறுப்புக்களில் பல ஜாதியினரும் இருந்தனர் இருக்கிறார்கள். அந்த வரலாறு அறியவேண்டும் என்றால் நூல்களை கொஞ்சம் படித்து பாருங்கள். மேலோட்டமாக நுனிப்புல் மேச்சலால் ஒரு பயனும் இல்லை

      Delete
  9. அய்யா சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு என்னுடைய வணக்கம்,
    தாங்களை விமர்சிக்கும் அளவிற்கு நான் வளரவில்லை, என்னுடைய கருத்தை மட்டும் சொல்ல விளைகிறேன்,
    என்னுடைய பார்வையில் திமுக ஈழ பிரச்சனையில் துரோகம் செய்ததாகவே கருதுகிறேன்,மத்திய அரசில் அங்கம் வகித்து கொண்டும், காபினட் அமைச்சர்களை வைத்து கொண்டும் என் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் எங்களை அழித்தது திமுக, தாங்களை போன்ற முற்போக்கு தன்மை கொண்டவர்களே திமுக வை ஆதரிப்பது சரிதானா? நான் எந்த கட்சியையும் சார்ந்தவனல்ல,சாதாரண ஒரு பார்வையாளன் மட்டுமே,
    திராவிட பாரம்பரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தற்பொழுது தான் பெரியார் எனும் மாமனிதரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.மிக கேவலமான சாதி பற்று கொண்ட நான்,பெரியாரை படித்த பின் வெக்கி தலைகுனிகிறேன்,எனக்கு பெரியார் எனும் மனிதரை அடையாளம் காட்டியமைக்காக உங்களுக்கும், எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்களுக்கும் என் முதற்க்கண் வணக்கத்தையும்,நன்றியையும் சொல்லக் கடமை பட்டவன் நான்,என்னுடைய தேசிய தலைவர் பிரபாகரன் மீது அளவற்ற அன்புகொண்டவன் நான்,ஏழு தமிழர் விடுதலைக்கு நீங்கள் ஆற்றிய பணிகளை நன்கு அறிவேன், ஆனால் பேரணியில் கலந்து கொள்ளாமல் இருந்தது வருத்தமளிகிறது.

    ReplyDelete
    Replies
    1. இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்


      முனைவா் பு.பிரபுராம்
      தமிழக அரசியல் கட்சிகளே உங்கள் தோ்தல் போதைக்கு, இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் இல்லை என்பதை முதலில் உணருங்கள். கடந்த சட்டமன்றத் தோ்தலில் எத்தனை போலி வாக்குறுதிகளை வாரித் தெளித்தீா்கள். தனி ஈழம் அமைப்பேன் என்றது ஒரு தரப்பு, இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பேன் என்றது மற்றொரு தரப்பு, இவை மட்டுமா? ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பேன், சா்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று பல முழக்கங்களைத் தோ்தல் மேடைகளில் அரசியல் கட்சிகள் முன்வைத்தன. இம்முழக்கங்களில் ஒன்றைக்கூட நிறைவேற்றுவதற்கான வல்லமை தமிழக முதலமைச்சா் பதவிக்கு இல்லை என்பதே நிதா்சனமான உண்மை.
      உலக அரங்கில் தமிழ்நாடு தனிநாடு அல்ல. ஒருங்கிணைந்த இந்திய தேசத்தின் ஒரு மாநிலம் அவ்வளவே. தமிழ்நாட்டின் அரசுப் பணிகளைக் கவனிக்க மக்களால் தோ்ந்தெடுக்கப்படுவோர் சட்டமன்ற உறுப்பினா்கள் அவ்வளவே. மத்திய அரசையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்களையும் மீறி ஒரு அணுவைக்கூட தமிழக முதலமைச்சராலும், சட்டமன்ற உறுப்பினா்களாலும் அசைத்துவிடமுடியாது. அதிகபட்சமாக சட்டமன்றத்தில் ஒரு தீா்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கு முதலமைச்சா் அனுப்புவார். இறுதி முடிவு மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது. மத்திய அரசை எதிர்த்துப் போராடும் வல்லமையும் நிச்சயமாகத் தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லவே இல்லை. உண்மை இப்படியிருக்க இலங்கைத் தமிழா் விடயத்தில் எத்தனை, எத்தனை போலி முழக்கங்களும், பொய் வாக்குறுதிகளும் வாரி, வாரி வழங்கப்படுகின்றன. இதெல்லாம் ஏமாற்றுவேலை என்பதை இந்தத் தோ்தலிலாவது மக்கள் உணரவேண்டும்.
      தமிழகத்தில் தோ்தல் என்றால் தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற அரசியல் முன்னிருத்தப்படுகிறது. ஏன் தமிழ் மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பது போதாதா?. மொழி வழியாகவும் பிரிந்து நிற்கவேண்டும் என்ற பிரிவினைவாதக் கொள்கைதான் தமிழக அரசியல் தா்மமா?. நினைக்கவே அருவறுப்பாக இருக்கிறது. அறிவுப்புரட்சி செய்ய வல்லமையற்ற அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக மொழிவெறியையும் சாதிவெறியையும் இளைஞா்களுக்குள் திணிக்கின்றனா்.
      2009-இல் விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டன. இன்னொரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் உருவாவதற்குச் சாத்தியமே இல்லை. உருவானாலும் அதற்குப் பயன் இல்லை என்ற நிலையே உள்ளது. உலக நாடுகளுக்கும் இலங்கைத் தமிழா்கள் மீது அவ்வளவு கரிசனம் வந்துவிட்டதாகத் தெரியவில்லை. 2009க்குப் பிறகு ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டங்கள் பல முடிந்துவிட்டன. ஐந்து வருடங்களில் எந்தப் பெரிய அரசியல் அழுத்தங்களோ, நிர்வாக அழுத்தங்களோ இலங்கை அரசிற்குக் கொடுக்கப்படவில்லை. இன்னும் இலங்கை மண்ணில் தமிழ்மக்கள் வீடிழந்து, விவசாய நிலங்களை இழந்து, உரிமைகளையும் உணா்வுகளையும் இழந்து அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவலச் சூழல்தான் நிலவுகிறது.
      தமிழகத்தில் இந்தப் போலி அரசியல்வாதிகள் விடும் பொய்கள் காதுகளில் நாராசமாய் வந்து விழுகின்றன. நான் முதலமைச்சரானால் இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பேன் என்று இன்னும் எப்படி அவா்களால் வெட்கமில்லாமல் சொல்ல முடிகிறது. சீச்சீ… தமிழகத் தோ்தல் அரசியல் மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் சதிவலையாக அல்லவா உள்ளது. தமிழக அரசியல் கட்சிகளே மக்கள் தரப்பிலிருந்து கடுமையான எச்சரிக்கை. இனிமேல் உங்கள் அரசியல் சுயலாபத்திற்காக இலங்கைத் தமிழா்களை பயன்படுத்தாதீா்கள்.
      இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் இலங்கைவாழ் தமிழ் மக்கள் பட்டதெல்லாம் போதும். இலங்கை இராணுவத்தால் வீசப்பட்ட கொத்துக் குண்டுகளுக்கும், கொடுமையான பாஸ்பரஸ் குண்டுகளுக்கும் தமிழா்கள் பலா் பலியான, துயரத்தின் வடு இன்னும் யார் மனதிலும் ஆறிவிடவில்லை. அவா்கள் துயரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் நாம் ஆகிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டும் அரசியல்வாதிகளே உங்கள் மனதில் கொஞ்சமாவது ஈரம் இருந்தால், அவா்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணமிருந்தால், இலங்கைத் தமிழா்களை வைத்துத் தமிழகத்தில் தோ்தல் அரசியல் செய்யாதீா்கள்.

      Delete
  10. எந்த அளவுக்கு, கருனாநிதி எதிர்ப்பு என்ற அரசியல் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது ஐயா!! ஈழ வியாபாரிகளின் வேலையே இதுதானே! ஒரு வேலை நீங்கள் கருனாநிதி அயோக்கியன் என்ற நிலை எடுங்கள், இந்த வியாபாரிகள் இந்த நூற்றாண்டு கண்ட தமிழ்தேசிய போராளி என்று வாழ்த்தி இருக்கும்! ஆனால், இந்த திருமாவளவனும் இப்படி போவார் என நான் நினைக்கவில்லை!

    ReplyDelete
    Replies
    1. க.பெருஞ்சேரல்18 June 2016 at 01:15

      மதுரையில் 15 வயது பால் மனம் மாறாத தலித் சிறுவன் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகப்போகிறது. மதுரை தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. கொல்லப்பட்டவன் தமிழன் தான். மனித உரிமை போராளிகள், சமூக நீதிக் காவலர்கள், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரல் என்றெல்லாம் அழைக்கப்படுகிற அரசியல் அமைப்புகளும் அதன் தலைவர்களும் தனி நபர்களும் ஏராளமாக நிறைந்திருக்கும் மாநிலம் தான் தமிழ் நாடு. ஆனால் விடுதலைச் சிறுத்தைகளை தவிர வேறு எவரும் களத்தில் இல்லை. தங்கள் கண்டனத்தை பதிவு செய்யக் கூட எவருக்கும் தோன்றவில்லை. நேரமில்லை. அக்கறையில்லை. பொருப்புமில்லை.
      கொல்லப்பட்டவன் ஒரு மாணவன், அதற்கு மேலாக ஒரு சிறுவன் என்ற அடிப்படையில் கூட முகநூலில் கூட அவ்வளவாக எதிர்ப்போ கன்டன பதிவுகளோ இல்லை. நாளேடுகளில் ஒரு வரி செய்தி கூட இல்லை. தொலைக்காட்சியில் ஒரு நிமிட செய்தி கூட இல்லை.எல்லோருக்கும் இன்னும் கொலைக்கான காரணம் சரியாக தெரியவில்லை.கொல்லப்பட்டவன் ஒரு தலித் (அருந்ததியன்) அவன் கொல்லப் படுவதற்கு அந்த ஒரு காரணமே போதுமானதாக இருக்கிறது. கொன்றவர்கள் முக்குலத்தோர்(கள்ளர்கள்). அந்த ஒரு காரணமே போதும் நடந்து முடிந்த கொடூரக் கொலையை மூடி மறைப்பதற்கு. அல்லது மறந்து போவதற்கு. ரோட்டில் போகிற நாய்கள் கொல்லப்டுவதற்கெல்லாம் அலட்டிக் கொள்ள முடியாதென்கிற தெனாவட்டு தலித் சிறுவர் சிறுமியர் கொல்லப்படும் போது வந்து விழுகிற வார்த்தைகள். வார்த்தைகளுக்கு சொந்தக் காரர்கள் நம்மை பாதுகாக்கும் பிதாமகன்களாயிருப்பது இப்படிப்பட்ட சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்க தூண்டுவதும், அப்படி நடப்பதே தர்மமென அனைவரும் வாய்மூடி ஆமோதிப்பதும் இங்கே வாடிக்கையாகி வருகிறது.இது தான் மனிதாபிமானமுள்ள திராவிட அரசியல்?!.நாம் சார்ந்துள்ள பெரியார் மண் என்று சொல்லப்படும் தமிழ்நாட்டிலுள்ள சமூகங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான அறிவுபூர்வமற்ற ஆனால் திடமான கற்பிதங்கள் எல்ல சாதி இந்துக்கள் வாயிலிருந்தும் ஒரே சீராக வருவதைப் பார்க்கமுடியும். ஆமாம் இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கற்பிக்க பட்டவை. கண்மூடித்தனமாக பின்பற்ற படுபவை. இதற்கு தீர்வு கிடையாது. அண்ணல் அம்பேத்கார் ஆயிரம் திருமாவளவனுக்கு சமம். ஆனால் சமகாலத்தில் ஒடுக்கப்பட்ட அல்லது தலித் சமூகத்தில் இருந்து கடந்த 30 ஆண்டுகளில்,ஏன் கடந்த 100 ஆண்டுகளில் கூட இன்னொரு திருமாவளவன் உருவாகவேயில்லை. சாதி ஒழிப்பை (தீண்டாமையை அல்ல) பேசுகிற இன்னொரு அமைப்பு உருவாகவேயில்லை. பிறகு எப்படி தீர்வை நோக்கி நகர. மாறாக சாதி ஒழிப்பை பேசுகிற விசிக அமைப்பை முற்றிலுமாய் நசுக்க வீரியமாய் வேலை நடைபெறுகின்றன.
      தோழர் தமிழரசன் சொன்னது: தலித்துகளால் தான் சாதியை ஒழிக்க முடியும். அதற்கு முக்கியமாக ஆட்சி அதிகாரத்தையும் அதன மூலம் நிலங்களையும் கைப்பற்ற வேண்டும். சேரி சிறைகளிலிருந்து மீள வேண்டும்.திருமா சொன்னபடி சாதியை ஒழிக்க தலித் அல்லாத சமூகத்தில் இருந்து அம்பேத்கர்கள் உருவாக வேண்டும்.ஆட்சி அதிகாரத்தில் விசிகவிற்கு பங்கு வேண்டும்.ஆம் இவையிரண்டும் சமகாலத்தில் நிகழ வேண்டிய அவசர அவசியமான தேவைகள்.திருமாவளவன் எப்படியும் போகவில்லை தலித்துகளுக்காக அவர்களின் உரிமைக்காக சளைக்காமல்,களைக்காமல் பேசிக்கொண்டு போராடிக்கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் வருந்துமளவிற்கு தேர்தலிலுக்காக சாதி இந்துக்கள் ஒட்டுக்கள் பறிபோயிவிடும் என்று நினைத்து சமுதாய இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகளைப் போல ஊமையாக ஒருபோதும் இருக்கமாட்டார்!.நீங்கள் கவலைப்படவேண்டாம்!.

      Delete
  11. அய்யா, தங்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கு இசைந்து முகம் மலரும் திராவிட முன்னேற்ற கழகம், கடந்த காலத்தில் இந்தப் பிரச்சினையில் வளைந்து நெளிந்து யார் பக்கம் சாய்வது என்று புரியாமல் குழம்பியது / குழப்பியது. திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி கொண்டுள்ள பேரியக்கம், இதைப் பொறுத்தவரை தெளிவான முடிவில் உள்ளது.

    ReplyDelete