தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 1 August 2016

கடுமையாகக் கண்டிக்கிறோம்

விழுப்புரத்திற்கு அருகில் நவீனா என்னும் பெண் செந்தில் என்னும் இளைஞனால் எரித்துக் கொலை செய்ய முயன்று இருக்கும் செய்தி மிகப் பெரும் வேதனை தரும் செய்தியாக வெளி வந்துள்ளது. இதே செந்தில் முன்பு ஒருமுறை தான் ஒரு பெண்ணை காதலித்ததற்காக கை கால் வெட்டப்பட்டிருப்பதாக சொல்லி காவல்துறையில் புகார் கொடுத்து இருந்தார்.

அதனை ஒட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் நானும் கலந்து கொண்டேன். அவன் பக்கம் நியாயம் இருப்பதாக எண்ணி கை கால் வெட்டப்பட்ட அவனுக்காக பரிதாபப்பட்டு அன்று கருத்துக்களை நான் தெரிவித்தேன். அதற்காக இப்போது வெட்கமும் வேதனையும் அடைகிறேன்.

தன்னை விரும்பாத ஒரு பெண்ணை அடையவேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று நினைக்கும் மிருக குணம் கொண்ட ஒருவனுக்காகவா பரிந்து பேசினோம் என்று எண்ணி இப்போது நான் துயரப் படுகிறேன் . செந்திலின் நடவடிக்கை மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது.


நவீனா இல்லத்தினரோடு துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

20 comments:

 1. இவ்வளவு நாளாக ஒரு பக்கமாகவே பேசி வந்தீங்க.. இனியாவது ராமதாஸ் அவர்கள் சொல்லும் நியாயத்தை புரிந்துகொள்ளுங்கள். புதியதலைமுறை தொலைக்காட்சி இந்த செய்தியை விவாதிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ராமதாஸ் ஒரு சாதி வெறி பிடித்தவர் .. சங்கர் கொலை நடந்தபொழுது அதை பற்றிய ஒரு கேள்வியில் நான் எவ்வளவோ முக்கியமான விஷயங்களை சொன்னேன் அதை விட்டுவிட்டு இதைப்பற்றி கேள்வி கேக்குறீங்களே என்றவர். யாரோ ஒருவர் செய்யும் செயலுக்கு உங்களைப்போன்றோர் ஒட்டுமொத்த சமூகத்தையே குறை கூறுவது கண்டிக்க தக்கது... என்னமோ பார்ப்பனர்கள் தப்பே செய்யாதவர்கள் மாதிரி.சங்கராச்சாரியார் செய்யலையா? எல்லா சாதிலயும் தப்பு செய்றவங்க இருக்காங்க... அது மட்டும் இல்ல சில சாதிகாரங்க, வெறி பிடிச்சு திரியுறாங்க... அதுக்கு முக்கிய காரணம் இந்து மதமும், கடவுளும் தான்... அதை எதிர்ப்பது தான் தி.கவும், தி.இ.த.பேயும் மற்றும் தி.மு.கவும்.

   Delete
  2. இது மாதிரி செயல்களை யாரும் நியாய படுத்தவில்லை...இது இதுமாதிரி குணம் உள்ள நபருக்காக பேசியதை வருத்தத்தோடு பதிவு செய்தது, அவரின் முதிர்ச்சி.
   அதே போல அந்த நபரின் கைகளை, இந்த காரணத்தினால் வெட்டியிருந்தால் அதுவும் சட்ட ரீதியில் கண்டிக்க தக்கது!
   தனிப்பட்ட முரையில் யார் யாரை துன்புறுத்தினாலும் அது ஏற்கத்தக்கதல்ல!
   ராமதாஸ், செயல்கள் எல்லாம் நியாயமானதாக இல்லை. நடக்கும் எல்ல செயல்களையும், ஒரு குரிப்பிட்ட சமூகத்திண்ணை நோக்கி திருப்புவது அரசியல் காரணத்திற்காக. அது அருவருக்க தக்கது.

   Delete
  3. சங்கர் கொலை நடந்தபொழுது அதை பற்றிய ஒரு கேள்வியில் நான் எவ்வளவோ முக்கியமான விஷயங்களை சொன்னேன் // சாதி கொலை என்றவுடன் மருத்துவரிடம் பேட்டி எடுத்து அவரை கலங்க படுத்த வேண்டும், ஏன் ஸ்வாதி ஒரு தலை காதலால் கொலை செய்ய பட்டபோது ஏன் அந்த கேள்வி மறுத்தவர் ராமதாஸ் அவர்களிடம் கேட்கப்படவில்லை

   மேலும் 20 வயது வரை வளர்த்த பெற்றோர்களை விட்டு ஓடி போகும் சுயநல வாதிகளுக்கு எப்போதும் மருத்துவர் ஆசி இருக்காது .

   Delete
  4. காலம் காலமாய் காதலுக்கு பல தடைகள் இருந்துள்ளது, இருகின்றது!
   சாதியை காப்பாற்ற இவர்கள் குடும்ப centimentai காட்டுகின்றனர்...

   நான் பெற்றவர்களை விட்டுவிட்டு போகிறவர்களை பேசலை, சாதியின் பெயரில் அதை காப்பாற்ற...இவர்களை பேரறிகின்றதை எப்படி நியாயம் என்பீர்கள் ?

   ஐயா மருத்துவர், சாதி மாற்றுப்பை ஏற்று கொள்கிறாரா ? ஏத்தன்னை சாதி மாற்றுப்பு திருமணங்கள் (பெற்றோர் சம்மதத்துடன், மருத்துவர் ஆசி உடன்) நடத்தி வைத்துள்ளார் ? அல்லது தலைமை தாங்கி உள்ளார் ?
   இதை செய்ய செய்ய 100 வழி உண்டு செய்ய வேண்டும் என்றல்!...
   செய்யக்கூடாது என்பவன்தான் போலி சாக்கு சொல்லி மக்களை திசைதிருப்புவான், தன் கட்சி காரர்களிடம் சாதி வெற்றியை ஊட்ட சொல்லுவான்!...

   நீங்கள் எந்தந்த காரணத்திற்காக உங்களின் கீழ் உள்ளவர்களை பழிக்கின்றீர்களோ...அவை அனைத்தும்...உங்களை விட மேல் சாதி என்று கூறுபவர்கள்...உங்கள் மேலும் கூறலாம்...இதை நீங்கள் ஏற்பீர்களா ?

   Delete
 2. பாஸ்கரன்1 August 2016 at 19:50

  நவீனாவுக்கு எதிரான செந்திலின் கொடுமை இன்றோ நேற்றோ தொடங்கியதில்லை.செந்திலின் நாடகக் காதலால் நவீனாவும்,அவரது குடும்பத்தினரும் கடந்த சில ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். பள்ளிக்கும்,வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும்,காதலிக்கும்படி மிரட்டுவதும் ஒரு சாதி கும்பலின் புதிய கலாச்சாரமாக உருவெடுத்திருக்கிறது.ஸ்வாதி போன்ற தங்களின் ஒருதலைக் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பெண்களை தொடர்வண்டி நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்வதும்,நவீனா போன்ற தங்களின் ஒருதலைக் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பெண்களை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிப்பதும் அந்த சாதி கும்பலின் வாடிக்கையாகி உள்ளன. இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றுபவர்களுக்கு அவர்களின் சாதியைச் சேர்ந்தவர்களும்,சமூகநீதி என்ற போர்வையில் சமுதாயங்களிடையே வன்மத்தை வளர்த்து குளி்காயும் நவீன சமூக விரோதிகளும் அளிக்கும் ஆக்கமும்,ஊக்கமும் தான் இதுபோன்ற கொடிய செயல்கள் பெருக காரணமாக உள்ளன. நவீனாவுக்கு செந்தில் அளித்த பாலியல் தொல்லைகளை அனைவரும் ஒரே குரலில் கண்டித்து இருந்தால் இன்று அந்த அப்பாவிப் பெண் பெரும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்காது.கடந்த ஆண்டு குடிபோதையில் தொடர் வண்டிப் பாதையில் படுத்தது தான் அவரது கை,கால்கள் துண்டிக்கப்பட்டதற்கு காரணம் என்பது சமூகத்தில் குழப்பம் விளைவிக்கும் விஷமிகள் சிலரைத் தவிர அனைவருமறிந்த உண்மையாகும்.மாணவி நவீனாவை செந்தில் உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றதன் பின்னணியில் பெரும் சதித்திட்டம் இருக்கக்கூடும்!.இந்த நாடகக் காதல்&கொலையில் அவரை முன்பு ஆதரித்த பலர் துணை நின்றிருக்கக்கூடும்.இது குறித்தும்,கடந்த காலங்களில் செந்திலுக்கு ஆதரவாகவும்,துணையாகவும் செயல்பட்டவர்கள் குறித்தும் விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.


  ReplyDelete
 3. அய்யா உங்களை போலவே அந்த பெண்ணின் குடும்பத்திற்கு நானும் என் துயரத்தை பகிர்கிறேன். இன்றைய கால கட்டத்தில் தலித்துகள் சலுகை கொடுத்து ஏமாற்றும் மனிதர்களைத்தான் நண்பர்களாக பார்க்கிறார்கள். சலுகைகள் பெறுவதுதான் அழிவின் ஆரம்பம். சலுகைகளை கொடுத்து சில சமூகத்தை ஆள வைப்பதும், சலுகைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து பல சமூகத்தை அடிமை படுத்த முயற்சிப்பதும், சலுகைகளை கொடுத்து சிலரை சோம்பேறி ஆக்குவதும், நேரு காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் வழி முறைகள். மீனை நமக்கு கொடுத்து மீன் பிடிக்க அவர்கள் கற்று கொண்டு விட்டார்கள். இந்த செந்தில் தோற்றதற்கு அந்த சலுகைகள்தான் காரணம். இல்லை என்றால் இவர் உழைத்து முன்னேறி இருப்பார்.

  இதற்கு ஜெயலலிதாவும் விலக்கு அல்ல. ராம்குமார் கொலையில் அவருக்கு சலுகை காட்ட படுவதாகவே சொல்ல படுகிறது. ஏன் என்றால் அதில் சாதி அரசியல் கலந்து இருக்கிறது. அதனால் ஜெயலலிதா பார்வையில் சாதிகளை அலச வேண்டியது தேவை இருக்கிறது. தலித்துகள் தவிர்த்து மற்ற சாதியினரின் மீது பார்த்தால், ஜெயலலிதாவின் பார்வையில் பிசினஸ் செய்யும் அத்தனை திராவிட சாதிகளும் அவருக்கு எதிரிகள். ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட் சாதிகள். அதாவது ஜெயலலிதா ஒழிக்க நினைக்கும் சாதிகள், வரிசைப்படி (முதலில் குறிப்பிட்டது முதலில் ஒழிக்க நினைப்பது, பிறகு ஒவ்வொன்றாக ஒழிக்க வேண்டும்) என்னுடைய உள்ளுணர்வு படி.

  1) நாடார்
  2) செட்டியார்
  3) உடையார்
  4) பிள்ளை மற்றும் முதலியார்
  5) முத்தரையர்
  6) கள்ளர்
  7) வன்னியர்
  8) கவுண்டர்
  9) தேவர்
  10) நாயுடு
  11) பள்ளர்
  12) பறையர்

  இந்த வரிசையில் 11,12 கடைசியில் இருப்பவர்கள் கடைசியாக ஒழிக்க நினைப்பது ஏன் என்றால் அவர்கள் அரசாங்கத்தில் சலுகையை எதிர் பார்த்து இருப்பவர்கள். இவர்களை எளிதில் ஒழிக்க முடியும். மற்ற எல்லாரையும் ஒழித்து முடிக்கும் வரை அம்மா என்ன சொன்னாலும் நம்புவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். அது போதும் அவருக்கு.

  இந்த வரிசையில் 8,9,10 இவர்கள் பாதி திராவிடன் பாதி ஆரியன். ஆனால் இவர்களை முழுதுமாக அம்மா ஏற்று கொண்டு விட்டார் என்று இவர்கள் நம்புகிறார்கள். உங்கள் மனமோ திராவிடர், அதில் இரக்கம் உண்டு. ஆனால் மூளை ஆரியர் என்று சொல்கிறது. அதில் கர்வம் உண்டு. மூளை சந்தோசம் கொடுக்காது. மனம்தான் கொடுக்கும் என்பதை எப்போது உணர போகிறீர்கள்.
  தங்களை உயர்ந்த சாதி என்று மன கோட்டை கட்டி கொண்டு அவரது சலுகை பிச்சைக்கு காலில் விழுந்து கிடக்கிறீர்கள். சலுகைகள் கொடுப்பது மற்ற சாதிகள் உங்களை வெறுப்பதற்க்கே. நாளை உங்களுக்கு மற்றவர்க்கும் சண்டை வந்தால் அதை பார்த்து குதூகலிப்பது முதலில் பிராமணர்கள். இயற்கையை அழித்தால் நம்மை அழிப்பது ஆகும். தமிழக இயற்கையை அழிக்கும் இவர் எப்படி உங்கள் எல்லாரையும் காக்க போகிறார்.

  இந்த வரிசையில் 6,7 இவர்கள் திராவிடர் ஆனாலும் இவர்களுக்கு சரியான வழி காட்டல் இல்லை.கலைஞர் எங்களை வெறுக்கிறார் என்று சொன்ன கள்ளர் நண்பர் என்னிடம் உண்டு. இது எதனால் இப்படி ஆனது என்று கலைஞர்தான் பதில் சொல்ல வேண்டும். எந்த சாதியை ஒழிக்க விரும்பினாலும் முதலில் கள்ளர்களை அனுப்புகிறார் ஜெயலலிதா. வன்னியர்களும் சூழ்ச்சிக்கு தப்புவது இல்லை. திராவிடர்களை வைத்து திராவிடர்களை அழிக்கும் முயற்சிக்கு முதலில் பலி ஆவது இவர்கள்தான்.

  இந்த வரிசையில் 5 வரிசையில் இருக்கும் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரிய வில்லை. இரண்டு கட்சிகளும் இந்த எளிமையான மனிதர்களை புறக்கணிக்கின்றன. எப்போதும் உண்மை விரும்பிகளாகவும் கொஞ்சம் முன்கோபிகளாகவும் இருக்கும் தலை சிறந்த தமிழர்கள். என்னை பொறுத்தவரை இந்த இரண்டு கட்சிகளும் ஓட்டுக்காக பயன் படுத்தி கொண்டு இவர்களை புறம் தள்ளி விடுகிறார்கள்.

  இந்த வரிசையில் 1,2,3,4 இவர்கள் முதலில் ஒழிக்க பட வேண்டியவர்கள். என் என்றால் இவர்கள் பிசினஸ் செய்கிறார்கள். இவர்களை எப்படியாவது முதலில் அழித்து விட வேண்டும்.. பிறகு ஒவ்வொருவராக.

  தமிழ் சமூகத்தில் என்பது சதவிகித்தினர் சமுத்திரக்கனி படத்தில் வரும் கண்டு கொள்ளாத கேரக்டர். இதனால் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்ற முடிகிறது. ஒருநாள் இலங்கையில் அல்லாடும் தமிழர்களை போல நாம் ஒற்றுமை இன்மையால் அல்லாடத்தான் போகிறோம்.

  ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எதாவது ஒரு புள்ளியில் நாம் இணைவோம் என்று. உலகத்தில் உள்ள இரக்கம் மிகுந்த எல்லா கடவுள்களையும் எல்லா மதத்திலும் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். தீய சக்திகள் விலக வேண்டும் என்று. தமிழர்களும் திராவிடர்களும் ஒன்று பட வேண்டும் என்று.

  ReplyDelete
  Replies
  1. 100% true sir.I agree with you sir.Great words.
   Vellai varanan

   Delete
 4. இதை அடுத்த முறை தொலைக்காட்சிக்கு பேசப்போகும் போது சொல்லிவிட்டு அதன் பின் பேசுங்கள், அதெப்படி பல இலட்சம் பேர் பார்க்கும் தொலைக்காட்சியில் ஒரு பொய் செய்தியை பேசிவிட்டு, ஏதோ ஒரு சிலர் மட்டும் வலைப்பூவில் வருத்தம் தெரிவிக்கிறீர். இதை தொலைக்காட்சியில் அல்லது ஊடகங்களை அழைத்து பேட்டியாக தரும் நேர்மை உள்ளதா?

  ReplyDelete
 5. பள்ளி மாணவிகளைச் சிதைக்கும் கொடூரக் கூட்டம்.

  ஒரு பெண் பள்ளிக்குச் செல்லமுடியவில்லை.
  ஒரு பெண் வேலைக்குச் செல்லமுடியவில்லை.
  ஒரு பெண் கோவிலுக்குச் செல்லமுடியவில்லை.

  அழுக்கடைந்த மனதுடன்,
  சொறி பிடித்த மூளையுடன்,
  பெண்களைத் துரத்துகிறது,
  சிரங்கு பிடித்தக் கூட்டம்.

  காதல் என்றால் என்னவென்றே தெரியாது,
  பள்ளி மாணவிகளையும் காமத்துக்காகத்
  துரத்துகிறது,
  கயவாளிகளின் கூட்டம்.

  பெண்களின் பெற்றோர்களிடம்
  பணம் பறிக்க,
  ஒரு தலைக் காதல் என்று பிதற்றி,
  பள்ளி மாணவிகளைத் துரத்தி,
  காதலிப்பதாக சொல்
  என கொடூரமாக மிரட்டுகிறது,
  பணம் பறிக்கும் தரங்கெட்ட கூட்டம்.

  தமிழனின் பண்பாடு எங்கே போயிற்று?
  பெண்களைப் படிக்கவிடாமல்,
  முன்னேற விடாமல்,
  துரத்தும் அழுகிய பிண்டங்களை,
  அப்புறப்படுத்தும் நாளும் வருமோ?
  அநாகரீகத்தை, அசிங்கத்தை,
  அப்புறப்படுத்தும் காலம் வருமோ?

  பெண்களைத் துன்புறுத்தாது,
  தூரப்போ சனியனே.

  கணேஷன் குரு

  ReplyDelete
 6. செத்துப்போன பொண்ணு தலித்தா இருந்துருந்தால்
  தலித் எதிரான வன்கொடுமைனு சொல்லிருப்பிங்களே

  கொன்றவன் தலித் இப்போ ஜாதி எங்க போய் ஒளிந்து கொண்டது

  ___________________________________________  ReplyDelete
 7. திரு குணசேகரன் அவர்களே உங்களை பற்றி சில தினங்களாக செய்திகள் முகநூலில் வந்துகொண்டே இருக்கிறது இதற்க்கு எல்லாம் பதில் சொல்ல நேரமில்லையா இல்லை

  சும்மா நானும் மீடியாக்காரன் என்று சொல்லி ஒரு ஊடகத்தில் வேலை செய்யும்போது அங்கு அந்த தொலைக்காட்சி நிருவனம் என்ன செய்தி போட சொல்கிறதோ அல்லது பொய்யான செய்தியை பரப்ப சொன்னாலும் அதை செய்து முடிக்கும் கூலிப்படை போல் செயல்படுவதுதான் ஊடகவியலாளர் வேலையா என்ன ?

  சில மாதங்கள் முன் நீங்கள் புதியதலைமுறையில் வேலை செய்தபோது உங்கள் ஊதியத்திற்க்கும் நீங்கள் பணியாற்றிய தொலைக்காட்சி க்கு trp rating க்கும் நீங்கள் செய்த விவாதம் தான்

  விழுப்புரம் கை கால்கலை குடித்துவிட்டு ரயில் தண்டவாளத்தில் விழ்ந்த ஒரு நபரை அவரை ஜாதியை வைத்து தலித் vs non தலித் மோதலை உருவாக்கும் விதமாக உங்கள் விவாதம் அமைந்தது ..

  பொய்யான தகவலை பரப்பி இன்று அந்த பெண் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார்.. இதற்க்கு யார் பொருப்பு ஏற்ப்பது நீங்கள் பொருப்பேற்க்க வேண்டும் ..

  ReplyDelete
 8. வன்கொடுமை பயங்கரவாதம் வளருவதை தடுங்கள் அய்யா.

  ReplyDelete
 9. தாழ்த்தப்பட ஒருவர் ஒரு குற்றமிழைத்தால் பக்கம் பக்கமாக ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை ஒழித்துக்கட்டுவதற்கு எழுதி குவிக்கும் கயவர்களே! நான் தலித் அதனால் மேல்சாதி பெண் காதலிக்கமறுத்தால் கொலை செய்கிறேன் என்று கூறியா அந்த கயவன் செந்தில் கொலை முயற்சியில் இறங்கினான்? ஆனால் ஆணவக் கொலை செய்யும் கயவர்கள் கீழ்சாதி பையனை காதலித்தால் கரம்பிடித்தால் அதனால் கொன்றோம் என்று ஆணவமாக கொக்கரிக்கும் மேல்சாதிவெறி கயவர்களே!பெண்களுக்கு எதிரான கொடுமை என்பதும் சாதிவெறி கொலை என்பதும் தனிதனி என்பதை மூடி மறைத்து எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி ஒடுக்குவது என்று திட்டம் தீட்டி அதை செயல்படுத்த முனைகிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சாதி ஒழிப்பு,பெண்விடுதலை என்று பெரியாரியல் பக்கம் நின்று பாருங்கள் சமூகத்தில் நடக்கும் மொத்தபிரச்சினைக்கும் காரணம் ஆதிக்கசாதி மனோபாவமும்,அதை வழிநடத்துகிற பார்ப்பனியமும் என்பது தெரியும்.பெரியாரின் வழியில் வந்தவர்கள் அறியாமல் ஒரு தவறிழைத்துவிட்டால் மனப்பூர்வமாக அது தவறுதான் என்று ஏற்றுக்கொண்டு அதற்காக வருத்தப்படுவார்கள்.ஆனால் சாதி வெறியர்கள் தான் செய்யும் கொடுமைகளுக்கு காரணம் கற்பித்து மேலும் சமூக சீர்கேட்டிற்கு வழிவகை செய்வார்கள்.சாதிவெறியர்களே மனந்திருந்துங்கள் தமிழகத்தை வாழவிடுங்கள்!

  ReplyDelete
 10. 1) நாடார்
  2) செட்டியார்
  3) உடையார்
  4) பிள்ளை மற்றும் முதலியார்
  5) முத்தரையர்
  6) கள்ளர்
  7) வன்னியர்
  8) கவுண்டர்
  9) தேவர்
  10) நாயுடு
  11) பள்ளர்
  12) பறையர்
  We can simply solve these 12 caste by simply becoming as a Bai (Muslim). I dont have the guts to stand up and do that. Do you have guts to do that. Let us join and do that.

  ReplyDelete
 11. தாக்குதல் மற்றும் கௌரவக் கொலைகள் என்று அழைக்கப்படும் சாதிவெறிக் கொலைகள் எதைக் காட்டுகின்றன? நகரமயமாக்கம், பெண் கல்வி ஆகியவற்றின் காரணமாக ஒரே இடத்தில் படிக்கின்ற ஆண்களும் பெண்களும் சாதிய எல்லை கடந்து அறிமுகமாகிறார்கள். பழைய சாதிய இறுக்கங்களும் மனத்தடைகளும் தகர்ந்து காதலிக்கிறார்கள். அவர்களுடைய எதார்த்த வாழ்க்கைக்கும் விருப்பத்துக்கும் சாதி பொருத்தமற்றதாக, அவர்களது சுதந்திரத்துக்குத் தடையாக இருக்கிறது. சாதி நிராகரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளைஞர்களைக் காதல் மணம் புரிந்துள்ள பிற சாதிகளைச் சேர்ந்த பெண்கள் நக்கீரன் இதழுக்கு அளித்துள்ள பேட்டிகளில், அவர்களிடம் சாதி மறுப்பு ஜனநாயகக் கருத்துகள் இயல்பாக அரும்பியிருப்பதை காணமுடியும்.

  ஒருபுறம் சாதியின் அடித்தளம் பலவீனப்பட்டு வந்த போதிலும், சாதி ஆதிக்க விழுமியங்கள் அழிந்து விடவில்லை. சாதி கடந்த திருமணங்களில், தொடக்கத்தில் பெற்றோர்கள் முரண்படுவது, பின்னர் மெல்ல ஏற்றுக் கொள்வது என்பதுதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. திவ்யாவின் தந்தை நாகராஜ் விசயத்திலும் அதுதான் நடந்திருக்கும். அவ்வாறு நடக்க விடாமல் அங்கே சாதிவெறியைத் தூண்டி, இத்தகைய கொடூரமானதொரு தாக்குதலை நடத்தக் காரணமாக இருந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சி எனும் சாதிக்கட்சி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டி, அக்குற்றச்சாட்டுகளுக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் பொறுப்பாக்கி, இதன் அடிப்படையில் ஆதிக்கசாதி சங்கங்கள் அனைத்தையும் திரட்டி நிறுத்தியிருக்கிறார் ராமதாசு. சாதி கடந்த திருமணத்தை எதிர்ப்பது என்று தொடங்கி வன்கொடுமைச் சட்டத்தையே முடக்குவது, சாதி- தீண்டாமையைத் தங்கள் பிறப்புரிமையாக அறிவிப்பது என்ற எல்லைக்குச் செல்கின்றனர் சாதிவெறியர்கள்.

  இதில் தலித் தோழர்களை மட்டுமே தாக்குதல் தொடுப்பது என்ன நியாயமோ?

  ReplyDelete
 12. சாதி என்ற அடையாளத்தின் சாரமே ஏற்றத்தாழ்வுதான். படிக்கட்டில் எத்தனாவது படி என்பதுதான் சாதி என்ற அடையாளத்தின் சாரம். சமமான படி இருக்க முடியாது. சாதி சமத்துவமும் இருக்க முடியாது. இதனால்தான் பட்டியல் இன மக்களைக் குறிப்பதற்கு ‘தலித்’ என்ற சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்திக் கொண்டாலும், ‘தலித் ஒற்றுமை’ என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளர், பறையர், அருந்ததியர் என்ற மூன்று முக்கியப் பிரிவினரைக் கூட ‘தலித்’ என்ற பெயரில் ஒன்றுபடுத்த முயலவில்லை. ‘நாங்கள் தலித் அல்ல, தேவேந்திர குலம்’ என்கிறார்கள் பள்ளர் சமூகத்தினர். அருந்ததியர் சமூகத்துப் பையனைக் காதலித்த பறையர் சமூகத்துப் பெண் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப்படுகிறாள். திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோர் தங்கள் கட்சியினரின் உட்சாதி மேட்டிமைத்தனத்துக்குத் துணையாகத்தான் நின்று வருகின்றனர். இதனை ஒழிக்க முயன்றால் இவர்களது கட்சியே ஒழிந்துவிடும் என்பதே உண்மை.நிற்க

  இது போன்றொரு தனி மனிதனின் செயலை வைத்து ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்த முனைவதும் சாதிய வெறியே.

  மனித சமூகத்தில் காதல் இயற்கையே.அதை அழிக்கவே முடியாது.

  சாதிஅழியும் அழிக்கப்பட வேண்டியது சாதியே!

  ReplyDelete
 13. அடால்ப் ஹிட்லர் ஆரிய இன வெறியைத் தூண்டி ஒரு பேரழிவை தோற்றுவித்தது போல மருத்துவர் ராமதாசு வன்னிய சாதிவெறியைத் தூண்டி முயற்சி செய்கிறார். 25.04.13 இரவு மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா அதை முன்னுரைக்கிறது.

  சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கி முத்தெடுக்க முயன்று அதில் தோற்றுப் போன ராமதாசு இப்போது அப்பட்டமான சாதி வெறி அரசியலைக் கையிலெடுத்து அதில் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். அதற்காக ஆண்ட பரம்பரை என்று தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்ளும் ஆதிக்க சாதி வெறியர்கள் அனைவரையும் திரட்டி வருகிறார்.

  எண்பதுகளில் ராமதாசு வன்னியர் சங்கத்தைத் தொடங்கி மார்க்ஸ் முதல் அம்பேத்கர், பெரியார் வரை இணைத்துக் கொண்டு முற்போக்கு வேடமிட்டபோது தமிழகத்தின் பல்வேறு “முற்போக்குகள்” சிலிர்த்துப் போனார்கள். ஆனால் ‘ராமதாசு அப்படிப்பட்டவர் அல்ல. அவர் ஆதிக்க சாதிவெறியால் ஓட்டுப் பொறுக்கி பிழைக்கும் ரகம்தான்’ என்பதை அன்றிலிருந்தே மகஇக உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்கள் சொல்லி வருகின்றன. அதனை இன்று உண்மையென்று உணர்த்தியிருக்கிறார் ராமதாசு.

  ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கள், முசுலீம் எதிர்ப்பு இந்துமத வெறி பாசிசத்தை முன்னிறுத்தி  அட்டூழியங்களை எப்படிச் செய்து வருகின்றனவோ அப்படியே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை நிறுத்தி மோடியைப் போல ரத்தச் சேற்றில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் துணிந்து விட்டார் ராமதாசு.

  அதனை எடுத்துரைக்கவே இந்தச் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் கலாச்சார மாநாடு”.

  தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை, சம நீதிப் பேரவை என்ற பெயர்களிலே ஆதிக்க சாதிச் சங்கங்களையெல்லாம் ஒன்றிணைத்திருக்கிறார். அவரே சொல்வதைப் போல பிராமணர்கள் முதல் நரிக்குறவர் வரை இதில் இணைத்திருக்கிறார்களாம். இவர்களெல்லாம் தாழ்த்தப்பட்ட குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் (பறையர்) சேர்ந்தவர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். சொத்து பத்துக்கள் பெண்டு பிள்ளைகளைப் பாதுகாக்க முடியாமல் ராமதாசை அடைக்கலம் தேடி வந்துள்ளார்களாம். இதை மேடையில் அறிவிக்கிறார், ராமதாசு.

  தேவர் சாதியின் பெயரால் தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது கட்ட விழ்த்து விடப்படும் வன்கொடுமைக்குத் தலைமை தாங்கும் சாதிவெறியன் பி.டி.அரச குமார், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் வாண்டையார், மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் கொங்குவேளாளர் சங்கத் தலைவர் நாகராஜ், நாடார் பேரவை, செட்டியார், ரெட்டியார், முதலியார், நாயுடு, பிராமணர் சங்கங்களின் தலைவர்கள் எல்லாம் இனைத்து தமிழகத்தில் சாதி இரத்தத்தை ஓட விட முயற்சிப்பவரை எங்களின் பொதுச்செயலாளர் அய்யா சுப.வீ அவர்களுக்கு சாதி வெறி பிடித்தவர்கள்தான் அடையாளம் காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

  ReplyDelete
 14. ராமதாசின் அறிக்கையின் பல பெயர்கள் இருந்தபோதும், ஐயா சுபவீ அவர்கள் மட்டும்தான் உடனேயே இப்படியொரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். இதற்கு திமுக வின் அரசியல் நிர்பந்தம் காரணமாக இருக்கலாம். செந்தில் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற பொழுது, எல்லோரும் எதை நம்பினார்களோ, எது சமூக நீதியோ அதற்காக வாதிட்டது எப்படி தவறாக முடியும்? செந்தில் இப்போது இப்படி செய்துவிட்டதற்காக, பின்னால் சென்று "அப்போது அவன் மேல் பரிதாபப்பட்டு அவ்வாறு வாதிட்டேன்" என்று வருந்த வேண்டிய அவசியமே இல்லையே. வருங்காலத்தில் இவன் இப்படி செய்யப்போகிறான் என்று எல்லோருக்கும் தெரிந்த இருக்கும்? இப்போது செந்தில் செய்திருப்பது மிகப்பெரிய கண்டனத்திற்குரியது, அதில் மாற்றுக்கருத்து இல்லை , அதற்காக ஐயா சுபவீ அவர்கள் கண்டனம் தெரிவிப்பதில் தவறில்லை. ஆனால், முன்பு உண்மை என்று நினைத்து சமூக நீதியின் பக்கம் நின்று வாதிட்டதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் "அவன் மேல் பரிதாபப்பட்டு வாதிட்டேன்" என்று ஐயா கூறியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. யாருடைய "பரிதாபமும்" தலித் மக்களுக்குத் தேவையில்லை. இப்படி ஒரு செய்தியை ஐயா வெளியிட்டவுடன், இங்கே கருத்து பதிவு செய்திருக்கும் சாதி வெறியர்கள் அனைவருக்கும் இது மிகப்பெரிய தொக்காக அமைத்துவிட்டது. பேட்டி கொடுக்க வேண்டும் என்கிறார்கள், இதுவரை நடந்த அத்துணை வன்கொடுமைகளும் இப்படித்தான் நடந்திருக்கும் என்கிறார்கள், சாதிவெறி ராமதாஸ் சொல்வதுதான் சரியென்றும் அவர் பேச்சைத்தான் இனிமேல் கேட்க வேண்டும் என்கிறார்கள். என்ன ஒரு அநியாயம்? கடந்த காலங்களிலெல்லாம் எவ்வளவு பெரிய வன்கொடுமைகள் வெறும் வன்னியர்களால் மட்டுமே தலித் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது என்று பட்டியலிட இந்தப் பக்கம் போதுமானதாக இருக்குமா? அவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயமும், ராமதாசும் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாரா? நீதி வழி தண்டனையை அனுபவிக்க தயாரா? பெருசா வந்துட்டாங்க நியாயம் கேட்டுக்கொண்டு. மருத்துவர் ராமதாசுக்கு என்ன ஆயிற்று என்றே புரியவில்லை. அத்துணை தலித் அமைப்புகளையும் இயக்கங்களையும், பல்வேறு புரட்சிகர இயக்கங்களையும் தோழமையாக இணைத்து சிறப்பாக பயணித்த மருத்துவர் ராமதாஸ் தானா இப்போது இவ்வளவு பெரிய சாதி வெறியராக இருக்கிறார் என்பதை பல நேரங்களில் ஏற்க முடியவில்லை. சாதி அரசியலை கையில் எடுக்காமல் அதே சமூக நீதிப் பாதையில் பயணித்திருந்தால் இந்நேரம் ராமதாஸ் தமிழக முதல்வராகக் கூட ஆகியிருக்கக் கூடும். சாதிப் பேய் யாரை விட்டது? இனி பாமக வினாலும், ராமதாசினாலும், எத்தனை குட்டிகரனங்கள் போட்டாலும் சாதிவெறியர்கள் என்ற பெயரிலிருந்து மீண்டு வரமுடியாது. மேற்கொண்டு அன்புமணி ராமதாஸ் வேறு இன்னும் எதை எதை சேர்க்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 15. சகோதரி நவீனா இறந்த செய்தி மிகுந்த வருத்தத்தினை கொடுக்கிறது. இது எங்கு போய் முடியும் என்று எனக்கு தெரிய வில்லை. காதல் மட்டும்தான் சாதிகளை இணைக்கும் என்று எப்போதோ சொல்லப்பட்ட கருத்துக்களை எடுத்து கொண்டு அலைகிறார்கள். அமெரிக்காவில் வசிக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இப்படி எல்லாம் சொல்லுவது இல்லை. வெள்ளையர்களை முரட்டுத்தனமாக திருமணம் செய்தால் இனப்பிரச்சினை ஒழிந்து விடும் என்று எவரும் சொல்ல வில்லை. முரட்டுத்தனமாக காதல் செய்ய எந்த நாட்டிலும் சொல்லி தரப்பட வில்லை. இவர்கள் இப்போது ஒன்று சொல்கிறார்கள். ஆணவக் கொலைகள் நடக்கிறது. அதனை தடுக்க வில்லை என்று. எல்லாம் தவறுதான். உங்கள் தவறை பேசினால் நீங்கள் என் அடுத்தவன் தவறை சொல்லி உங்கள் தவறை நியாயப்படுத்துகிறீர்கள்.

  ReplyDelete