தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 15 January 2017

இனி நாகரிகம் பயன்படாது!


 ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) விளையாட்டுக்கு  அனுமதி  வேண்டி, ,மதுரை, அவனியாபுரத்தில், திரைப்பட இயக்குனர் கவுதமன் மற்றும்   பலர், சாலை  மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டபோது,  தமிழக அரசின் காவல்துறை தடியடி நடத்தி அவர்களைக் கலைத்திருக்கிறது. இது மிகுந்த  கண்டனத்திற்குரியது. ஜனநாயக உரிமைக்கு எதிரானது.  அதற்குக் காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இச்செயலை, எதிர்க்கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின், .பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பல்வேறு கட்சியினர் கண்டித்துள்ளனர். ஆனால், சுப்பிரமணிய சாமி, 14.01.2017 அன்று இரவு 10 மணிக்குத் தன் ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ள பதிவு,  நாகரிகமற்ற, கயமைத்தனமான ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள அப்பதிவு இதுதான்:- 

        "Today, the TN govt has thrashed all porukkis who tried flouting 
          SC stay order on Jallikkattu.  Are OPS and VKS also not Tamil 
          anymore. Ha!ha!" 

(உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீற முயன்ற அனைத்துப் பொறுக்கிகளையும், இன்று தமிழக அரசு அடித்து நொறுக்கியுள்ளது. . பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகியோரும் கூட இனிமேல் தமிழர்கள் இல்லையா. ஹா ஹா!) 

உரிமைகளுக்குப் போராடிய இளைஞர்களைப்  "பொறுக்கிகள்" என்கிறார் சு.சாமி. எவ்வளவு திமிர்!   பா... அந்த ஆளை, 'டாக்டர் சாமி' என்று தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது.  மானமுள்ள தமிழர்கள் சு.சாமியையும், பா.ஜ.க.வையும் ஒட்டுமொத்தமாகப் .புறக்கணிக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல், நாகரிகம் இனிமேல் பயன்படாது என்று தெரிந்துவிட்டதால், நாமும் சற்று நம் கண்ணியமான போக்கை விட்டுக் கீழிறங்கித்தான் வர வேண்டியுள்ளது. பா.ஜ.க. அவரை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும்.  நாம் அனைவரும் இனி அவரை, அவருக்குப்  பிடித்த சொல்லால்  "பொறுக்கி  சாமி"  என்றே அழைப்போம்.   

                                     பொறுக்கி  சாமி 
                               
                                     பொறுக்கி  சாமி 


                                     பொறுக்கி  சாமி!

13 comments:

  1. மற்ற அறிஞர்களுக்கும் எங்கள் பேராசிரியாருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். தன் இனத்திற்கு என்ன இழுக்கு நேர்ந்தாலும் சரி, 'மிதவாதி' என்கிற தன் போலி பிம்பம் பட்டுப்போகாமல் பாதுகாக்கும் மற்றவர் எங்கே, தேவையும் தன்மையும் கருதி பல விடயங்களில் இப்படி நம் இனத்தின் போர் குரலாக கர்ஜிக்கும் இவர் எங்கே!
    Love you ayya
    -GANESH BABU

    ReplyDelete
  2. This post was hilarious :) ! Poriki Sami LOL !

    ReplyDelete
  3. இவர் அண்மையில் கேரளாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காமையால் கைது செய்ப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வடஇந்திய தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தமிழ்நாட்டில் தேச விரோத சக்திகள் இப்படித்தான் நாட்டுக்கு துரோகம் இளைத்து வருகிறார்கள் தேசிய கீதத்தை மதிப்பதில்லை என்று ஏதோதோ நீட்டி முழங்கினார். எந்த இடத்திலும் கேரளா என்ற சொல்லை கூட பயன்படுத்தவில்லை. சம்பவம் நடந்தது கேரளாவில் ஆனால் பொருக்கி சாமியோ அதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவமாக பொய் பிரசாரம் செய்தார் திராவிட இயக்க ரவுடிகள் இப்படித்தான் என்று என்ன்னவோ விஷவார்த்தைகளை .... இதெல்லாவற்றையும் விட இவர் செய்த பச்சை துரோகம் மகிந்த அரசுக்கு மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்று கொள்கை வகுத்து கொடுத்ததுதான் . தேச துரோக குற்றச்சாட்டில் இவரை கைது செய்யவேண்டும் அல்லவா? https://www.youtube.com/watch?v=Ji22oXIbVB4

    ReplyDelete
  4. Porukki samy Down..Down

    ReplyDelete
  5. Porukki Samy Quit India

    ReplyDelete
  6. ஐயா வணக்கம். பெரியாரியவாதிகள் அனைவரும் சல்லிக்கட்டை எதிர்ப்பதாகவே அறிகின்றேன். உங்களின் அரசியல் சார்பினைத் தாண்டி, தனிப்பட்ட முறையில், சல்லிக்கட்டைப் பற்றிய உங்களின் கருத்து என்ன? நீங்கள் சல்லிகட்டை ஆதரிக்கின்றீர்களா? எதிர்க்கின்றீர்களா?

    ReplyDelete
  7. பாஜக எப்போதும் தமிழர்களைப் பொறுக்கிகளாகத்தான் விமரிசிக்கிறார்கள். ஒட்டுக் கேட்டு வரும் போது தமிழர்கள் தங்களை யாரென்று நிருபிக்க வேண்டும் !

    ReplyDelete
  8. (anonymous தொடர்ச்சி) சல்லிகட்டை நடத்த வேண்டும் என்பதற்கு அவர்கள் கூறும் காரணம் அனைத்தையும் நீங்கள் ஏற்கின்றீர்களா?

    ReplyDelete
  9. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்வீட்டில் போலீஸிடம் அடி வாங்கிய சென்னை பொறுக்கிகளைத்தான் பொறுக்கிகள் என்று சொல்லி உள்ளார். தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்திவரும் மற்ற தீரர்களை அவர் அப்படிச் சொல்லவில்லை. ஆனால், சுப வீரபாண்டியன் அவர்கள் இந்த உண்மையை திரித்து எழுதுகிறார். சாக்கடைத் தண்ணீரும், குடிநீரும் தண்ணீர்தானே என்கிறார்.

    ReplyDelete
  10. திருமணத்தின்போது, அடிமை சின்னத்தை மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக, மணமகள் கழுத்தருகே கொண்டு சென்றவர். விட்டு விடுங்கள்.

    ReplyDelete