தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 4 January 2017

காவிகள் ஆட்டம் ஒடுங்கும்!

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ஜோதிமணிக்கு எதிராக ஒரு ஆபாசப் போரைத் தொடங்கியுள்ளது காவிக்கூட்டம். மோடிக்கு எதிரான ஒரு அரசியல் விமர்சனப் பதிவை தன் முகநூலில் பதிவேற்றியதற்காக, தமிழில் உள்ள அனைத்துக் 'கெட்ட வார்த்தைகளையும்' அவர் மீது அள்ளி எறிந்திருக்கிறது அந்தக் கும்பல்.


தொலைக்காட்சி உரையாடல்களில் அவரை நான் சந்தித்திருக்கிறேன்அறிவார்ந்த முறையிலும் , கண்ணியமாகவும் பேசும் இயல்புடையவர் அவர்.  புள்ளி விவரங்களும், தர்க்கமும் அவர் வாதங்களில் இடம் பெற்றிருக்கும். அவரை ஏன் இப்படிக் கொச்சையாகத் தாக்க முயல்கின்றனர் என்று தோன்றலாம்

ஜோதிமணியை மட்டுமன்று, ஆர்.எஸ்.எஸ். அல்லது பா.. உள்ளிட்ட சங் பரிவாரங்களில்  எதனை  ஒருவர்  விமர்சனம் செய்தாலும், .அவரின்  மீது இப்படி ஒரு வன்முறையைத் தொடுப்பது அண்மைக்காலமாக அவர்களின் வழக்கமாக ஆகியுள்ளது. ஓரிரு மாதங்களுக்கு முன்புதான், திரு கிறித்துதாஸ் காந்தி  அவர்களின் மீது இதே போன்ற அநாகரிக வன்முறையைத் தொடுத்தனர்.  இரவு முழுவதும் தூங்க விடாமல் தொலைபேசித்  தொல்லை செய்வது, கெட்ட  கெட்ட  சொற்களைப்  பேசுவது, அதன் மூலம் ஒருவிதமான மன உளைச்சலை ஏற்படுத்துவது என்பது அவர்களின் நோக்கம். அரசியல் எதிர்க்கருத்துகளை அவர்கள் எதிர்கொள்ளும் ஜனநாயகப் போக்கு இதுதான்

இவைகளுக்கு திரு ஜோதிமணி முகம் கொடுத்துள்ள விதமும், எதிர்ப்பை  ஓர் இயக்கமாகவே ஆக்க அவர் எடுத்துள்ள முயற்சிகளும் பாராட்டிற்குரியவை. இது பெண்கள் இனத்திற்கே ஏற்பட்டுள்ள அவமானம் - பா...வில் உள்ள பெண்கள் உட்பட. ஜோதிமணி தனி நபர் இல்லை. அவர் பின்னால் ஒரு பெரிய கட்சி இருக்கிறது. கட்சி எல்லைகளைக் கடந்து, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள நாம் அனைவரும் உள்ளோம்.

இது போன்ற மிரட்டல்களால் எதிர்க்கருத்துகளை வென்றுவிடலாம் என்றோ, விமர்சகர்களின் வாயை அடைத்து  விடலாம் என்றோ பா.. கருதுமானால், .அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.  "அடிக்க அடிக்கப் பந்து எழும்!"


10 comments:

  1. தமிழிசையை தவறாக பேசலாம்...
    வானதியை தவறாக பேசலாம் ...
    ஸ்ம்ரிதி இராணியை தவறாக பேசலாம்...

    ஆனால்,
    ஜோதிமணியை தவறாக பேசும்போது மட்டும் பொங்குவோம். பாஜகவில் உள்ள பெண்களை தரக்குறைவாக பேசும்போது உதட்டளவில் மட்டுமே கண்டித்துவிட்டு மனதுக்குள் ரசிப்போம்.

    இது தானே உங்களை போன்றவர்களின் நிலைப்பாடு?

    ReplyDelete
    Replies
    1. தமிழிசைக்கோ , வானதிக்கோ இப்படி தொலைபேசியில் எத்தனை பேர் தொல்லை கொடுத்துள்ளார்கள் ???

      உங்கள் வீட்டு பெண் மோடியை எதிர்த்து பேசினாலும் இப்படித் தான். whats app குழு துவங்கி அந்த பெண்ணையும் அதில் இணைத்து உங்கள் நண்பர்களை விட்டு வசை பாட சொல்லுவீர்களா Mr.Sri Ram

      Delete
    2. ராஜேந்திரன் அவர்களே, நா எழுதின comment க்கும் உங்க reply க்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. எல்லா கட்சிலயும் பெண்கள் இருக்காங்க. ஜோதிமணிக்காக பேசுவது போல் பாஜகவில் (மற்றும் அதிமுக) உள்ள பெண்களுக்காகவும் குரல் குடுங்கள் என்பதே ஏன் கருத்து. இதுல எங்க விட்டு பொண்ணு, உங்க விட்டு பொண்ணு, எதிர் விட்டு பொண்ணுன்னு எதுக்கு சம்மந்தம் இல்லாம பேசுறீங்க. ஏதாவது சொல்லணும்னு சொல்லகூடாது.

      Delete
    3. தமிழிசையை, ஸ்மிருதி இரானியை, வானதி சீனிவாசனை யார் ஆபாசமாக விமர்சனம் செய்தார்கள்? அவர்களின் அரசியல் நிலைபாடுகளை விமர்சிக்கிறோம். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வாய்ப்புள்ள போதிலும் கூட யாரும் விமர்சிக்கவில்லையே...! ஸ்ம்ருதி இரானி தனது நெருங்கிய தோழியின் கணவரை திருடிக் கொண்டார் என்று முகனூலில் பதிவு செய்யப்பட்ட போது கூட ஸ்மிருதி இரானியை அவரது சந்தேகத்திற்குரிய கல்விப்புலத்தை விமர்சனம் செய்யலாமேயன்றி அவரது மணவாழ்க்கை குறித்து விமர்சனம் செய்ய தவிர்த்தவர்கள் தமிழர்கள். தேர்தல் நிதியை வானதி திருடி விட்டார் என்ற செய்தி வந்த போது கூட அது அவர்களது கட்சி விவகாரம் என்று அமைதி காத்தவர்கள் தமிழர்கள் என்பதை நினைவில் கொள்க...!

      Delete
    4. தெளிவான வாதம், சீலன்

      Delete
    5. ஜோதிமணியை ஆபாசமாக அதிலும் மோசமான ஆபாசமாக பெண்ணென்றும் பாராமல் ஊடகங்களில் பதிவு செய்தது போல் தொலைபேசியில் பேசியதுபோல் தமிழிசை ,வானதி ,ஸ்மிரிதி இராணியை யாரும் ஆபாசமாக பதிவு செய்யவில்லை பேசவும் இல்லை என்பதுதான் உண்மை

      Delete
  2. "அடிக்க அடிக்கப் பந்து எழும்!"
    இது உண்மைதான்...

    ReplyDelete
  3. திரு சுப வி அவர்களே,

    பெரியார் பிறந்த தமிழ் மண்ணில், மனிதனை மதிக்க வேண்டிய மனித மனம் இல்லாத இவர்கள் தான் தெய்வத்தை பற்றிய பரப்புரை நடத்துகிறார்கள்.

    முதல் முறையாக அதுவும் பெண்ணாக அணைத்து தடைகளையும் உடைத்து வெளில வந்த செல்வி ஜோதிமணி அவர்களுக்கு நாம் துணை நிற்போம்.

    ReplyDelete
  4. வதந்தி,அநாகரீகம், பொய், பிணை சுருட்டு, பித்தலாட்டம், அராஜகம், பிரித்தாளும் சூழ்ச்சி, ஊழல் ஆகியவற்றின் மொத்த உருவம் பாஜக !

    ReplyDelete
  5. பொதுவெளியில் தரம் தாழ்ந்த சொற் பிரயோகம் பாஜகவினருக்கு மிகவும் பழகி போனதுதான். தொலைகாட்சி விவாதங்களில் இந்துத்வாக்களில் படித்த மேட்டு கோடி கனவான்களே சற்று அடாவடி பேச்சுக்களில் ஈடுபடுவதை நாடே கண்டு கொண்டுதான் இருக்கிறது. அதிகம் கூறுவானேன் ரங்கராஜ் பாண்டே கூட எந்த சமயத்திலும் அசிங்க மான வார்த்தைகளை கூறிவிடுவாரோ என்று நான் கொஞ்சம் யோசித்த தருணங்கள் உண்டு. அப்படி நேர்மையற்று உன்மத்த நிலையில் பேசுவது அவர்கள் கலாச்சாரம்.ஜோதிமணி அவர்களை தூசித்தவர் படிக்காத பாமரர் அவருக்கு ஏற்ற உன்மத்த நிலயில் அவர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். ஜோதிமணியின் ஆளுமை அந்த கயவர்களை அவ்வளவு தூரம் பயப்படுத்தி இருக்கிறது.. வாழ்த்துக்கள் ஜோதிமணி அவர்களே!

    ReplyDelete