தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 11 February 2017

எல்லாம் 'அவாள்' செயல் (2)


அனைத்துக் குழப்பங்களுக்கும் அவாளே காரணம் என்று நான் சென்ற கட்டுரையில் கூறியிருந்தேன். அது உண்மை என்பது மெல்ல வெளிச்சத்திற்கு  வந்து கொண்டுள்ளது. 

பா.ஜ.கட்சியால் ஒருநாளும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. எனவே குறுக்கு வழிகளைத் தேட வேண்டிய நிலையில்தான் அது உள்ளது. இப்போது அக்கட்சியின் முன்னால்  இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று, அ.தி.மு.க.வின் இரண்டு பிரிவுகளில் ஒன்றைத் தன் வயப்படுத்திக் கொண்டு, பின்இருக்கையில் அமர்ந்து அரசை நடத்துவது.   இரண்டாவது, யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையை உருவாக்கி இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துவது.


முதல் முயற்சி பலிக்குமா, பலிக்காதா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும். பன்னீர்செல்வத்த்திற்குப் பின்னால் காவிகள் இருக்கின்றனர் என்பது உண்மைதான். அதற்காக அவர்கள் சசிகலாவுக்கு எதிரானவர்கள் என்று யாரும் கருதிவிட முடியாது. சசிகலா குழுவினரை வளைப்பதற்காத்தான், ஜெயலலிதா இறந்த அன்று, ஒரு நாள் முழுவதும் வெங்கையா நாயுடுவை அவர்கள் 'நேர்ந்து' விட்டிருந்தனர். அதில் ஏதோ சரிவரவில்லை போலிருக்கிறது. பிறகு பன்னீர்செல்வத்தை ஆவியிடம் குறி கேட்க வைத்தனர்.

எனவே இனி எப்போதும் பன்னீரைத்தான் அவர்கள் ஏற்பார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. சசிகலாவும், நடராசனும் சரியாகி விட்டால், பன்னீர்செல்வத்தை அடுத்த நிமிடமே கைகழுவி விடுவார்கள். அந்த முயற்சி இன்னும் நடக்கிறது என்பதன் அடையாளம்தான், சு.சாமி சசிகலாவை  இப்போதும்  ஆதரிப்பதன் பொருள்.  அவர்களின் ஒரே எண்ணம் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான். 

சசிகலா, பன்னீர் இருவரும் சரிவரவில்லையென்றால், குடியரசுத் தலைவர் ஆட்சியைக்  கொண்டு வருவார்கள். அதனால் தி.மு..விற்குத்தானே பயன் என்று எண்ணலாம். அடுத்து ஒரு பொதுத்தேர்தல் வந்தால் இன்றைய சூழலில் தி.மு.. மிகப் பெரும் வெற்றி பெறும் ஏன்னும் எளிய உண்மை நம்மைப் போன்றவர்களுக்கே தெரியும்போது, மத்தியில்  அரசாளும் அவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா? அதனால்தான் சசி, பன்னீர், தீபா என்று பலரையும் வளைக்க முயல்கின்றனர். இயலாதெனில் வேறு வழியில்லை.  குடியரசுத் தலைவர் ஆட்சி ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கு இங்கு நடக்குமானால், அது  மறைமுகமான பா.ஜ.க. ஆட்சியாகத்தானே இருக்கும்!

அவ்வாறாயின், அதனை உடனே கொண்டு வந்திருப்பார்களே  என்று எண்ணலாம். கர்நாடக அரசு கலைக்கப்பட்ட போது, அன்று முதல்வராக இருந்த எஸ்.ஆர். பொம்மை தொடுத்த  வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புதான் அவர்களின் தயக்கத்திற்குக் காரணமாக உள்ளது.

கர்நாடகத்தில், ராமகிருஷ்ண ஹெக்டே, ஜெ.ஹெச்,படேல், தேவே கவுடா எல்லோரும் சேர்ந்து தொடங்கிய ஜனதா கட்சி 1983இல் அங்கு முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது. சில காரணங்களால் ஹெக்டே விலகிய பின், பொம்மை ஆட்சிக்கு வந்தார். பிறகு மீண்டும், லோக் தள் கட்சியோடு இணைந்து ஜனதா தள் என்னும் பெயரில் கூட்டணி ஏற்படுத்தித் தேர்தலில்  வென்று 1988இல் முதலமைச்சர் ஆனார். அவர் கூட்டணியிலிருந்து ஒரு கட்டத்தில்  19 பேர் விலகினர். அதனைக் காரணம் காட்டி, அன்று கர்நாடக ஆளுநராக இருந்த வேங்கட சுப்பையா ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரை செய்தார். ஆனால் சட்டென்று 7 பேர் மனம் மாறி ( நம் பன்னீர்செல்வம் போல) தங்கள் பதவி விலகல் கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.  ஆனால் அதனை ஆளுநர் ஏற்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டது. 

பொம்மை கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். நீதிமன்றம் ஆளுநர் செய்தது சரி என்று சொல்லி விட்டது. பொம்மை மீண்டும் உச்ச நீதி மன்றம் சென்றார். நீதிபதி குல்தீப் சிங் தலைமையிலான 9 பேரைக் கொண்ட ஒரு பெரிய நீதிபதிகளின் அமர்வு அதனை விசாரித்தது. அப்போது வழங்கப்பட்ட தீர்ப்புதான், இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் திருப்பமாக அமைந்தது.  ஆட்சியைக் கலைத்தது செல்லாது என்று கூறிவிட்டது. பொம்மை மீண்டும் முதல்வரானார். 

அன்றிலிருந்து மாநில அரசுகளைக் கலைப்பதில் மத்திய  அரசுகள் நிதானம் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. இன்றைய மத்திய அரசின் தயக்கத்திற்கும்  அதுதான் காரணம். எனவே யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்பது உறுதியாக வேண்டும் அல்லது யாரேனும் ஒரு குழு தங்களிடம் சரணாகதி அடைய வேண்டும் என்பதற்காகக் காத்திருக்கின்றனர்.  


என்ன செய்தாலும் இன்னும் சில மாதங்கள் அல்லது ஓராண்டிற்கு மேல் யாருடைய ஆட்டமும் செல்லாது. விரைவில் இருள் கலையும். உதயசூரியன் உலா வரும்! 

6 comments:

 1. Fwd msg


  @அன்பே செல்வா

  திடீர்னு ஜனநாயகத்தை காக்க சினிமாக்காரன்னு சொல்லிட்டு கமல், அரவிந்த சாமி, மாதவன் எல்லாம் வர்றாங்க..

  பத்திரிக்கையாளர்னு சொல்லிட்டு பத்ரி, ஞானி, ஹிந்து ராம், மாலினி பார்த்த சாரதி எல்லாம் வர்றாங்க..

  அரசியல் விமர்சகர்னு சொல்லிட்டு பானு கோமஸ், சுமந்த சி ராமன், பாண்டெவெல்லாம் வர்றானுங்க..

  கிரிக்கெட் வீரர் அஸ்வின் வர்றான்.

  பாரதியஜனதா ஆர்.எஸ்.எஸ்-ல இருக்க அத்தனை பெரும் வர்றாய்ங்க..

  அதுமுகவுல இருந்தே மைத்ரேயன் வர்றாரு.

  ஷ்ஷ்ஷப்ப்பா கொய்ங்ங்கினு புற்றீசல் மாதிரி வர்றானுங்களே தமிழ்நாட்டு ஜனநாயகத்தை காப்பாத்த...

  அவ்ளோ அக்கறையாம் நம்ம மேல..

  ஈழ படுகொலையப்ப..

  அணுஉலை போராட்டத்தப்ப,

  பரமக்குடி சம்பவத்தப்ப..
  மீத்தேன் போராடத்தப்ப..

  சல்லிக்கட்டு நெருக்கடியப்பவெல்லாம்

  டெம்ப்ரவரியா செத்துட்டாய்ங்க போல..

  இந்த உலகமகா உத்தம புருஷர்களுக்கு..

  பன்னீர் -சேகர் ரெட்டி ஊழல், நத்தம்
  சாராய மந்திரி ஊழல் எல்லாம் இப்போ ஞாபகத்துகே வராது..

  எவ்வளவு அயோக்கியங்கடா நீங்க..

  ஆனா இன்னைக்கே இவ்ளோ நயவஞ்சகம் பண்றானுங்களே, அன்னைக்கி எவ்ளோ பண்ணியிருப்பானுங்க

  அப்பவே ஒங்க குடுமியெல்லாம் நெருக்கி பிடிச்ச்சு ஒங்க கொட்டத்தை அடக்கி வச்சு எங்களுக்கும் சொல்லிக்கொடுத்தாரே ஒரு பெரியவர் அவரு உண்மையிலேயே

  "பெரியார்'தான்யா..

  ReplyDelete
 2. "எனவே இனி எப்போதும் பன்னீரைத்தான் அவர்கள் ஏற்பார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. சசிகலாவும், நடராசனும் சரியாகி விட்டால், பன்னீர்செல்வத்தை அடுத்த நிமிடமே கைகழுவி விடுவார்கள்"

  அய்யா. ஒன்று மற்றும் சொல்கிறேன். மக்கள் ஆதரவு பன்னிர்செல்வம் அவர்களுக்கு இருக்கும் வரை யாரும் அவருக்கு பதிலாக மாற்று ஆட்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இப்போ இருக்கிற சூழ்நிலையில் பன்னீர் செல்வத்திற்கு பின்னாடி யார் இருகுகிறார்கள் என்று முக்கியம் இல்லை. சசிகலா மானார்குடி குடும்பம் வரக்கூடாது.

  ஆனாள் முக்கியமான விஷயம், தி.மு.க விற்கு பன்னீர் செல்வம் வருவது பின்னடைவு தான். ஏன் என்றால் குறை கூற கரணங்கள் எளிதாக கிடைக்காது.

  ReplyDelete
 3. ரௌடீயிசம் கேஷ்டீயிசம் என்ற இரண்டு இருக்கிறது. ரௌடீயிசத்தை விட கேஷ்டீயிசத்தை மோசமானதாக இங்கு பார்க்கப்படுகிறது. நடக்கும் சம்பவங்களால் இங்கே கவனிக்கப்பட வேண்டியது பார்ப்பணர்களின் மனம். ஜெயலலிதா எல்லா சாதியிலும் நல்லவர்களை தேர்வு செய்யாமல் ரௌடீயிசத்தில் தலைசிறந்தவர்களை தேர்வு செய்தார். மக்களை அச்சத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். மற்றும் அதன் மூலமாக நாட்டையும் குட்டிச்சுவராக்க முடியும் என்பது அவர்களின் விருப்பம்.அவரின் எண்ணத்தை நிறைவேற்ற சசிகலா அவர்களை முன்னிறுத்தினார். கெட்ட பெயர் சசி போன்ற தனக்கு பிடிக்காதவர்களுக்கு போகும்படி செய்தார். எம்ஜிஆர் கூட சில சாதிகளுக்கு கெட்ட பெயர் போகும்படி பார்த்துக்கொண்டார். அவர் வழியில் இப்படி ஜெயலலிதாவின் எண்ணத்தை சசிகலா மற்றும் அவரது சகாக்கள் நிறைவேற்றினர். சசிகலா அவர்கள் இங்கே ஒரு செயலி மட்டுமே. மூளை பார்ப்பண மூளை. அதனை எப்படி ஜெயலலிதாவை முன்னிருத்தி பின்னால் அமைச்சர்கள் செய்தனர் என்பதனை பழ கருப்பையா அவர்கள் சொன்னார். தனக்கு பிடிக்காதவர்களை கவிழ்க்க வேண்டும் என்பது பார்ப்பணர்களின் இயல்பு. ராஜாஜி காமராசரை தோற்கடிக்க பட்ட பாட்டை பல பார்ப்பணர்கள் இப்போது சேர்ந்து செய்கிறார்கள். மக்கள் முட்டாள்களாகி பல நாள்களாகிறது

  ReplyDelete
  Replies
  1. பழ கருப்பையாவின் கூற்றையெல்லாம் மேற்கோள் காட்டி அவரை கதாநாயகனாக்க வேண்டாமய்யா.அவர் ஒரு சரியான பிழைப்புவாதி Cum துரோகி.ஜெயாவால் MLA பதவி கிடைத்தும் மந்திரி பதவி கிடைக்காததால் இறுதிவரை வாய்மூடி இருந்துவிட்டு ஒரு மோசமான சூழ்நிலையில் (மழை,வெள்ளம்,மதுவிலக்குக்கான அதரவு போராட்டம்) ஜெயா முதுகில் குத்திவிட்டு ஜெயாவுக்கு முதல் துரோகம் செய்தார்.வெளியேறிய பிறகும் ஜெயாவை அம்மா அம்மா என்று கூறிவிட்டு அம்மாவின் அளுமையால் ஈர்க்கப்பட்டதால் தான் நான் அங்கு இருந்தேன் அம்மா மீது மரியாதை உள்ளவன் என்று கூறினார்.பிறகு பழ கருப்பையா சுயமாகவோ(less likely)அல்லது சுபவீ போன்றவர்களின்(சுபவீ என்று கூறவில்லை, சுபவீயாகவும் இருக்கலாம் அல்லது அவரைப் போன்று சிந்தனையுள்ளவர்களாகவும் இருக்கலாம்)தூண்டுதலால் 10 வருடம் கழித்து திடீர் ஞனோதயம் பெற்று ஜெயா மீது பல அக்கப்போர்களை வாரியிறைத்து இரண்டாவது துரோகம் செய்தார்.முன்பு திமுக மீது கலைஞர் மீது என்ன என்ன பேச்சுக்கள் பேசினார்,அதோடு எவ்வளவு அதிக்க சாதி மனப்பான்மை கொண்டவர் பழ கருப்பையா என்பதை வலைதளங்களிலுள்ள,யூடுப்களிலுள்ள வீடியோக்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்!.

   Delete
 4. All your logics are completely accepted including DMK will get massive seats and majority. But TN people saw DMK govt many times. Party people and supporters can get benefits but not public.

  ReplyDelete
 5. I agree with your rational views,but Erul velagurathu DMK party ku vena vilagum,Tamilnatuku iruley ADMK'vum,DMK'vum than athu ipothiku vilagathungrathuthan kavalayaga irku sir.

  ReplyDelete