தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 13 February 2017

குருதியில் கலந்த உணர்வு


கடந்த 11 ஆம் தேதி இரவு  குடந்தைக்கு அருகில் உள்ள கபிஸ்தலத்தில்,  வெகு சிறப்பாகத் தமிழ் மக்கள் கலை விழா  ஒன்று நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாக அதனைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர், ஆடிட்டர் சண்முகம், மோகன், குணசேகரன் உள்ளிட்ட ஒரு குழுவினர்.  மாலை 6 மணிக்குத்  தொடங்கி விடிய விடிய நடைபெறும் அந்தக் கலைவிழாவில் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் கூடுகின்றனர் என்பது வியப்பாகத்தான் உள்ளது. 10 ஆயிரம் பேருக்கு  இரவு உணவு வழங்குகின்றனர். இன்னொரு புறம் புத்தக நிலையங்களில் நூல்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. 

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை,வேளாண் அறிவியல் அறிஞர்,  மதிப்பிற்குரிய அய்யா நம்மாழ்வாருடன் இதே விழாவில் கலந்து கொண்டேன். அவரை முதலும் கடைசியுமாக அந்த மேடையில்தான் சந்தித்தேன். இப்போது மீண்டும் இந்த ஆண்டு அதே விழாவில் கலந்துகொள்ளும் நல்வாய்ப்பினைப் பெற்றேன். 

நான் பங்கேற்ற பாராட்டு அரங்கில்,ஜோக்கர் திரைப்பட இயக்குனர் ராஜு முருகன், உலக அளவிலான சடுகுடு விளையாட்டில் பங்குபெற்று வரும் சேரலாதன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் மணி, திருநங்கை கல்கி, தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ள சக்திவேல் ஆகியோர் பாராட்டப்பெற்றனர். அவர்கள் எல்லோரையும் பாராட்டி விருது வழங்கும் பெருமையினை விழாக்குழுவினர் எனக்கு அளித்திருந்தனர்.  

நண்பர் ராஜு முருகன் பேசியபின் இறுதியாக நான் உரையாற்றினேன். அவருடைய உரைதான் எனக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. அவர் பற்றிய நல்மதிப்பு எனக்கு உண்டு.  ிறமை மிக்க இளைஞர்கள்  பலரை இன்று நம் கலையுலகம் பெற்றுள்ளது. அண்மையில் வெளிவந்த அவருடைய ஜோக்கர் உள்பட, காக்கா முட்டை, வாகை சூட வா, மாவீரன் கிட்டு, தர்மதுரை போன்ற சமூக, அரசியல் பார்வை கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் இன்று வெளிவந்துகொண்டிருப்பது பாராட்டிற்குரியதாக உள்ளது. குறிப்பாக, ஜோக்கர் படம் குறித்து எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தாலும், அது ஒரு தேவையான நல்ல திரைப்படம் என்பதில் இன்னொரு கருத்து இல்லை. 

அப்படி ஒரு நல்ல படைப்பைத்  தந்த தம்பி ராஜு முருகன், அன்று மேடையில் பேசும்போது ஒரு விவாதத்திற்குரிய செய்தியை முன்வைத்தார். "தமிழ்நாட்டை விட்டுத் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் ஒழிக்க வேண்டும். அவை ஒழிந்தால்தான் நாடு உருப்படும்" என்னும் போக்கில் அவர் பேசி அமர்ந்துவிட்டார்.

இப்படிப் பேசுவது இப்போதெல்லாம், ஒரு நாகரிகமாக (பேஷன்) ஆகிவிட்டது. இரண்டு கட்சிகளையும் ஒருசேர எதிர்ப்பதுதான்  முற்போக்குச் சிந்தனையின் அடையாளம் என்பதாகச் சிலர் கருதுகின்றனர்.இரண்டையும் ஒழித்துவிட்டு, வேறு எந்தக் கட்சி அவற்றிற்கு மாற்று என்று அவர்கள் சொல்வதில்லை  என்றாலும்,  அது அவ்ர்கள் விருப்பம், அவர்கள் உரிமை.  ஆனால் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கூடியுள்ள பொதுமேடையில் அதனை அவர் தவிர்த்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

அடுத்துப் பேச வந்த நான் அது குறித்தது எதுவும் கூறவில்லையென்றால், அந்தக்  கருத்தில் எனக்கும் உடன்பாடு  என்று ஆகிவிடும்.   எனவே நான் மதிக்கும்  ஒருவரை அவர் இருக்கும் மேடையிலேயே மறுத்துப் பேச வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.  இயன்றவரை நயமாக என் கருத்தை எடுத்துரைத்தேன்.  

முதலில் நான் நூற்றுக்கு நூறு தி.மு.க. காரன் என்பதை வெளிப்படுத்தினேன். இருப்பினும் இந்த மேடைக்கு நான் ஒரு கட்சி சார்பில் வரவில்லை, ஒரு தமிழனாக மட்டுமே வந்துள்ளேன். ஆதலால் இதனை இங்கு நான் விவாதப் பொருளாக ஆக்க விரும்பவில்லை. ராஜு முருகன் அவர்களும் அவருடைய அக்கருத்தை வெளிப்படுத்த இந்த மேடையைப் பயன்படுத்தியிருக்க வேண்டுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்"  என்று மட்டும் கூறினேன்.  "இன்றைக்கு நீங்களெல்லாம் நல்ல படங்களைத் தருகின்றீர்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வேலைக்காரி, பராசக்தி, ரத்தக்கண்ணீர் ஆகிய படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களையும் புறந்தள்ளி விடாதீர்கள்" என்று வேண்டுகோள் வைத்தேன்.

விழா முடிந்து உணவுண்ண அனைவரும் கூடிய வேளையில், ராஜு முருகன் என்னிடம் வந்து, "இப்போதும் என் கருத்து அதுதான். அதில் மாற்றமில்லை. ஆனாலும், நீங்கள் சொன்னதுபோல் இந்த மேடையில் அதனை நான் தவிர்த்திருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன்"  என்றார்.  அவருடைய பெருந்தன்மைக்கு நன்றி சொல்லி விடைபெற்றேன்.  

திராவிட இயக்கம் என்பது வெறுமனே ஓர் இயக்கம் அன்று. என்னைப்  போன்ற  கோடிக்கணக்கானவர்களின் குருதியில் கலந்து ஓடுகின்ற ஓர்  உணர்வு.    

8 comments:

 1. Yes. So many peoples are comparing DMK with AIADMK and there corruptions, I reject those opinions. I can not see there is no history of works in AIADMK for the right of the Tamils. Some corruptions in DMK is also seen, but we need to think the history of Dravida Movement lead by Anna, kalaignar, etc. And now we need a CM for TN with full rights of people welfare.

  ReplyDelete
 2. இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில் காமராசரும் கலைஞரும்தான் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை இதுவரை தந்த முதல்வர்கள் என்பது நன்கு சிந்திக்க கூடியவர்கள் அறிவாளர்கள் சொல்கிறார்கள். சில குறைகள் இருக்கலாம். ஆனால் அவர்கள்தான் மேலே இருக்கிறார்கள். ஆகவே தமிழகத்தின் இன்றைய ஆட்சி மட்டும் அல்லாது நாளைய ஆட்சியும் முக்கியம். பன்னீர் செல்வம் அவர்களோ சசிகலா அவர்களோ அடுத்த தலைவர்களாக இடைநிலை சாதியை சேர்ந்த நடிகர்கள் அல்லாத தமிழர்களாக உருவாக்க வேண்டும். ராஜாஜியோ ஜெயலலிதாவோ தங்களது மோசமான ஆட்சியாலும் தமிழர் விரோத சிந்தனையாலும் பார்ப்பணர்கள் ஆகிய உங்கள் மேல் வீசி சென்ற கறையை போக்க உண்மை மற்றும் அன்பு என்ற சோப்பை பயன்படுத்த வேண்டும். இனியும் பிரித்தாலும் சூழ்ச்சி பலிக்காது என்று உணர வேண்டும்.

  ReplyDelete
 3. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி தீர்ப்பு வந்து இருக்குமா அல்லது இவ்வளவு சீக்கிரமாக வந்திருக்குமா என்பது சந்தேகமே. வென்றது சாதி மட்டுமே. எல்லாருமே எதிர்த்தார்கள் என்றாலும் எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் எந்த சந்தோஷ துக்கங்களிலும் நம்மோடு பங்கு கொள்ளாமல் இருக்கும் பார்ப்பணர்களின் எதிர்ப்பை யாரும் மறந்து விடக்கூடாது. அவர்களின் எதிர்ப்பை வைத்தே உண்மையான திராவிடன் யார் என்பதை அறியலாம்.

  ReplyDelete
 4. How old Mr.Raju Murugan?.Let me try to open his eyes.British ruled India more than 360 years and Congress ruled Tamilnadu for twenty years.In 380 years,the total colleges in Tamilnadu including medical and engineering only 99 colleges.But the DMK established another 100 colleges with in years which opened the eyes of all Tamilians and few of them who could not open their eyes are only abusing DMK for their own self interest.1.Man was carrying man by pulling hand rickshaw before 1967 and the same was replaced by cycle rickshaw during DMK ruling.Uniform of text books and syllabus introduced during DMK ruling.The complete public transport was nationalized during DMK ruling.In the south the agricultural Farm
  workers were not having own residential houses and if they change the Landlord,they have to vacate their huts and late Jeevanandam was struggling to revoke this atrocities in his entire life but could not to achieve.The DMK over night purchased 3 cent lands for all poor farmers and handed over to farmers at free of cost.No schedule cost community members was elevated to the court as judge and the DMK made it.The tamil weddings are recognized.During British India if we want to join in the medical college you have to know sanscrit language and this hurdle was removed by the Himalayan work by the DMK parent justice party

  ReplyDelete
 5. The real differences between the DMK and AIDMK is as follows:The DMK is doing every thing for next generation and the AIDMK is only acting for next election.
  The DMK might have licked the spayed over honey while drawing honey but in AIDMK ruling the entire honey comb itself missing

  ReplyDelete
 6. I am a true admirer and follower of Periyar therefore i cannot stand with D.M.K nor A.D.M.K,Periyar always stood by integrity ,he never wanted to compromise integrity for anything,But its a plain truth that the current political parties will never consider integrity,ethics,moral kind of things,these words are already alienated in Tamil Nadu politics.Is there a good road,sanitation system,garbage disposal,enough public toilets,basic necessities in village,quality education ? what did these pseudo dravidian parties achieve other than having glittering cars,tall party headquarter buildings,Assets,looting people's money !.

  ReplyDelete
 7. ராஜு முருகன் நிகழ்வு மட்டுமல்ல.ஊடகத்தில் இருந்து பேட்டி அரசியல் நிலை பற்றி கேட்டபோதும் நாகரீகமாக இந்த மேடை பொது மேடை இங்கு அரசியல் வேண்டாமே என்று தெரிவித்து தவிர்த்தது அறிவு நாகரீகத்தின் உச்சம் அய்யா!எல்லோரும் கடக்பிடிக்கவேண்டியது.

  ReplyDelete