இன்று (14.02.17) காலை ஜெயலலிதா, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தவுடன், என் கருத்தைப் பின்வருமாறு பதிவிட்டிருந்தேன்.
"தவறுகள் சிலரைத் தண்டிக்கின்றன.
மரணம்
சிலரைக் காப்பாற்றுகிறது."
இதற்கு மேல் அது குறித்து விரிவாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் அ.தி.மு.க. நண்பர்கள் நினைவில் கொள்ள வேண்டும். விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அப்படியே உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கு என்ன பொருள் - ஜெயலலிதா உள்பட நால்வரும் குற்றவாளிகள் என்பதே. இத்தீர்ப்பைக் கொண்டாடும் பன்னீர்செல்வம்
உள்ளிட்ட அனைவரும் அவர்களின் 'தங்கத் தலைவியின்' குற்றத்தை ஏற்கின்றனர் என்பது மகிழ்ச்சியே!
கடுமையான சதி மற்றும் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டதாகக்
கூறிக் குற்றம் சாற்றப்பட்டுள்ளவர்களைத் தண்டித்துள்ளது
நீதிமன்றம். ஆனால் அவர்களை, ஒரு சாதாரணக் கணக்கில் பிழை செய்து விடுதலை செய்த நீதிபதி குமாரசாமிக்குத் தண்டனை வழங்க சட்டத்தில் இடமே இல்லையா?
அது ஒருபுறமிருக்க, தீர்ப்பு வந்ததன் பின்னும், இதனை நான் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரையில் (இரவு 09.30 மணி) ஆளுநர் மாளிகையிலிருந்து எந்த ஒரு குறிப்பும் வரவில்லை. இந்த மௌனம், நாட்டில் பல்வேறு குழப்பங்களை உருவாக்க மட்டுமே பயன்படும். இதற்கு என்ன உள்நோக்கம் என்னும் கேள்வி இன்று மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.
மக்களுக்கு விடை சொல்ல வேண்டிய கடமை ஆளுநருக்கு உள்ளது.
மத்திய அரசு அவரை இயக்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது. அல்லது கவர்னரே மத்திய அரசின் மீது பழியை போட்டுவிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை பார்க்க முடிந்தது. ஒருவரை பற்றி தெரிய அவரை சுற்றி உள்ளவர்களை கேளுங்கள் என்பார்கள். ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்காமல் ரிசார்ட்டில் இன்னமும் தங்கி இருக்கிற சட்டசபை உறுப்பினர்கள் வியக்க வைக்கிறார்கள். ஜெயலலிதா இறந்த போது செல்பி எடுத்து கொண்டிருந்தவர்கள் இன்று தீர்ப்பு வந்தவுடன் அழுதார்கள். அந்த அழுகை முழுமையான நடிப்பு மாதிரி தெரியவில்லை. ஆனால் பன்னீர் செல்வம் தரப்பில் அரங்கேரும் காட்சிகள் நாடகத்தனமாக இருக்கிறது என்பதை பீட்டர் அல்போன்ஸ் அவர்களே சொன்னார். தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு காலதாமதம் நல்லதல்ல என்று அவர் உணர வேண்டும்.
ReplyDeleteகவர்னரின் அழிச்சாட்டியத்தை தமிழர்களுக்கு நேர்ந்த அவமானமாகதான் பார்க்கிறேன். துண்டு போட்டவர் அவரை பார்த்த பிறகுதான் அவர் இப்படி நடக்க ஆரம்பித்தாக நாளிதழில் இருந்தது. எது எப்படியோ வேறு மாநிலமாக இருந்தால் எதிரெதிர் கட்சிகள் இந்நேரம் மாநில நலனுக்காக ஒன்று சேர்ந்திருக்கும். அவர் யாருக்கோ உதவுவது வெளிப்படையாகவே தெரிகிறது. தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ பிரச்சனைகள் இருக்கையில் உங்களை போன்ற எதிர்கட்சிகளின் மௌனம் மிக மிக வருத்தத்திற்குரியது.
ReplyDelete2016 ஏப்ரல் மாதமே தீர்ப்பு வழங்கியிருந்தால் உச்சநீதி மன்றத்தைப் பாராட்டியிருக்கலாம் ! தமிழ்நாட்டின் தலைவிதியைத் தீர்மாணிக்கும் தீர்ப்பு தாமதமாக வந்திருப்பாது மறுக்கப்பட்ட நீதியே !
ReplyDeleteEdapadi Palanisamy is more dangerous than sasikala ! He is notorious for his caste discriminating atrocities,Without doubt,These 4 years will be the darkest years in Tamil Nadu's history.One more nagging problem is what if sasikala got transferred from karnataka jail to tamilnadu !!
ReplyDeleteசுப்ரமணியசாமி பேட்டியை பார்த்தீர்களா?.எப்படியிருந்தாலும் அதிமுக திமுகவை விட மேன்மையானது.ராமர் சுக்கிரிவன் நல்லவன் இல்லையென்றாலும் ராவணனை வீழ்த்த அவன் நண்பன் என்ற காரணத்தால் வாலியை சுக்கிரிவனோடு சேர்ந்து வீழ்த்தனார் என்பதை மேற்கோள் காட்டினார்.மற்றும் திமுக anti national[தேசவிரோத],anti social[சமூகவிரோத], anti woman[பொம்பளை பொறுக்கி]களின் கட்சி,அதோடு இந்து விரோத கட்சியும் கூட.ஆகவே நான் இவைகளை கூறவேண்டியவர்களிடம்,கூறவேண்டிய இடத்தில் கூறிவிட்டேன் அதன் விளைவாகத்தான் இரண்டு மத்திய மந்திரிகள்+OPS+DMK கூட்டணியை மீறி பழனிச்சாமியை கவர்னர் அழைக்க நேர்ந்தது என்று சுப்ரமணியசாமி பேட்டியளித்துள்ளார்.
ReplyDelete