தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 6 February 2017

அதிசயம் நிகழும்!!


 (05.02.2017 இரவு 9 முதல் 10 மணி வரையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரலை விவாதத்தில் பங்கேற்று நான் கூறிய சில செய்திகளின் சாரம்  இங்கு தரப்பட்டுள்ளது) 

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார். கட்சித் தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்  கூறியுள்ளனர். அப்படி வாழ்த்துச்  சொல்வதுதான் நாகரிகம் என்றும் சொல்லப்படுகிறது. நான் கொஞ்சம் நாகரிகம் குறைந்தவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். என்னால் வாழ்த்த இயலவில்லை என்பதோடு இதனைக் கண்டிக்கின்ற வனாகவும் நான் இருக்கின்றேன்.  நான் மிகவும் மதிக்கின்ற தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் கருத்திலிருந்தும்  மாறுபட்டவனாகவே நான் இருக்கின்றேன்.


எல்லாம் சட்டப்ப்படிதானே நடந்திருக்கிறது என்கின்றனர். ஆம், அதில் எந்தக் குறையும் இல்லை. ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட மக்களைச்  சந்தித்து வாக்குகளை இன்றுவரை பெறாத ஒருவர், நேரடியாக நாட்டின் முதலமைச்சராக ஆகி விடுவதற்குச்  சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் இது அறம் சார்ந்த அரசியல்தானா என்பது மட்டுமே என் கேள்வி. மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அது உறுத்த வேண்டாமா என்றுதான் உரத்துக் கேட்கிறேன். 

உடனே, 1967இல் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத அண்ணா, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட வில்லையா என்று கேட்கின்றனர். அண்ணா இறந்து 48 ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு இப்படி ஓர் அவமானம் நிகழக்கூடாது. யாரை யாரோடு ஒப்பிடுவது? அண்ணா கண்ட களங்கள் எத்தனை, கலந்துகொண்ட கூட்டங்கள் எத்தனை, சென்ற சிறைகள் எத்தனை? இந்த அம்மையார் ஒரு பொது நிகழ்வில் கலந்திருக்கிறாரா? கட்சி நடவடிக்கை ஏதேனும் ஒன்றில் பங்கெடுத்துள்ளாரா? கட்சிக்காகச் சிறை சென்றுள்ளாரா? ஒருமுறையாவது, ஒரு சிறிய தேர்தலிலாவது மக்களைச்  சந்தித்து வாக்குகளைக் கோரியிருக்கிறாரா?

ஒரே ஒரு முறையேனும் தேர்தலைச் சந்தித்து மக்களிடம் வாக்குகளைப் பெற்று, அதன்பின் இந்தப் பதவிக்கு ஆசைப்பட்டிருக்கலாகாதா? அந்த நாகரிகத்தைப் பற்றி எதுவும் பேசாதவர்கள், நம் நாகரிகத்தைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக உள்ளது.

அவர் மீதான வழக்கு என்ன ஆகும், மறுபடியும் பன்னீர்செல்வம்தானா என்று சிலர் எழுதுகின்றனர். அது குறித்தெல்லாம் நமக்கு எந்தக் கவலையும் இல்லை.அது அவருடைய சிக்கல். எதிரியைக் களத்தில் சந்திப்பதே வீரம். அதற்கு அணியமாவதே அரசியல். 

இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது  எழுதப்படாத விதியாக உள்ள நம் நாட்டில், சசிகலா போட்டியிட இருக்கும் இந்தத் தேர்தலில் மட்டும் என்ன அதிசயம் நேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கின்றனர். 

குறித்துக்  கொள்ளுங்கள், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அந்த அதிசயம் உறுதியாய் நிகழும். நிகழ்த்திக் காட்டுவார்கள் நம் மக்கள்! 


16 comments:

 1. Sir , what was the situation when janaki become CM? If I am not wrong AIADMK not doing for this first time, they keep doing it.An inexperienced or even not deserved person to make a CM.

  ReplyDelete

 2. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார்என்ற செய்தி கேட்டதிலிருந்து தமிழக மக்கள் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதே நேரம் ஆசிரியர் அவர்களின் வாழ்த்தும் மிகுந்த வேதனையையே அளித்துள்ளது.

  தாங்கள் நேற்றைய விவாதத்தில் பேசியவை அனைத்துமே எல்லோர் மனதின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன். மற்றவர்கள் சொல்லத்தயங்கிய அல்லது சொல்வதற்கு பயந்த கருத்துக்களை வெளிப்படையாகக் கூறியதை கேட்டு மகிழ்கிறோம் அதே நேரம் இதை மற்றவர்களிடம் பகிர்வதில் பெருமை கொள்கிறோம்.

  தாங்கள் கூறியபடி "அந்த அதிசயம்" நிகழவேண்டும். "இந்த அவமானம்" விலகவேண்டும் .

  ReplyDelete
 3. நல்ல பதிவு.ஆனால் இடைத்தேர்தலில் சசிகலா வெல்வார்.பல வித்தைகள் [போதைகள் ]அவர்கள் கைவசம் உள்ளன.

  சாராய போதை.ஊரிலுள்ள லும்பன்களையெல்லாம் சாராயத்தாலும் காசாலும் அடிப்பார்கள்.ஒரு பதினைந்து நாட்களுக்கு தொகுதியில் சாராய ஆறு ஓடும்.

  சாதிய போதை.சொந்த சாதி செல்வாக்குள்ள தொகுதிக்கு ஓடுவார்கள்.

  முதலமைச்சர் தொகுதி,இதுவும் மக்களை மயக்கும் ஒரு போதை.ஏதோ முதலமைச்சர் தொகுதி என்றாலே பாலாறும் தேனாறும் ஓடவிருக்கின்றன என நம்பும் அப்பாவிகளுக்கு பஞ்சமா என்ன.

  அப்புறம் கடைசி நாள் .இருக்கவே இருக்கு வாக்குக்கு இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை விநியோகிக்க காவல்துறை ஈப்புகளும் மருத்துவ அவசர ஊர்திகளும்.

  ReplyDelete
 4. பொது செயலாளர் என்பதற்கும், ஆளுங்கட்சி பொது செயலாளர் என்பதற்கும் வித்யாசம் உள்ளது என்று பேராசிரியர் சுபவீ ஐயா ஆரம்பத்திலேயே கூறினார்......இப்போது புறிகிறதா

  ReplyDelete
 5. எந்த அடிப்படையில் சசிகலா அவர்களை ஆதரிக்கிறாய் என்று என் நண்பர்கள் என்னை துளைத்து எடுக்கிறார்கள். நான் ஒன்றே ஒன்றுதான் சொன்னேன். எங்கள் ஊரான மன்னார்குடியில் தலைசிறந்த குழந்தைகள் நிபுனர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். எப்போதும் கூட்டமாக காணப்படும் அந்த கிளினிக் மக்களால் உருவாக்கப்பட்டது. அந்த ஊரில் பெரும்பான்மை மக்கள் சசிகலா அவர்களின் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். சாதி வேறுபாடு பார்க்காமல் அவர்கள் ஆதரித்ததால் அவர் வளர்ந்து நிற்கிறார் என்றேன். இந்த மாதிரி விஷயங்கள் எல்லா ஊரிலும் நடப்பது இல்லை. கள்ளர்கள் நல்லவர்கள். ஆதலால் ஆதரிக்கிறேன் என்றேன். மனிதர்களை ஒரு சமூகமாக பார்ப்பது எனக்கு இருக்கும் பழக்கம். இது கண்டிப்பாக பலன் தரும் என்றே நம்புகிறேன்.

  ReplyDelete
 6. ‌பினாமி என்று ஓட்டுகிறார்கள். உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேச தெரியாது எனக்கு. அவர் சார்ந்த சமூகமும் அல்ல நான். உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும். இங்கே மேம்போக்காகவே எல்லா விஷயங்களும் நம் மக்களால் பார்க்கப்படுகிறது. சில படங்கள் கூட பாடம் கற்றுக்கொடுக்கிறது. கத்துக்குட்டி மாதிரி படம் பார்த்து விட்டு அப்படியே மறந்து விடக்கூடாது. மக்கள் வேரை நோக்கி நகர வேண்டும்.

  ReplyDelete
 7. R.முத்துசேதுபதி6 February 2017 at 17:15

  நமது பசும்பொன் அய்யாவாலே முடியாத 'ஆண்ட பரம்பரை ஆட்சிக்கு வருவது' என்பது உன்னைப் போன்ற எட்டப்பன்களின் வயிற்றை எரியத்தான் செய்யும்!.முதன்முறையாக முக்குலத்தோர் குலவிளக்கு,வீரமங்கை வேலுநாச்சியாரின் வாரிசாக ஒரு பிற்படுத்தப்பட்ட இனத்தை சார்ந்த பெண் முதல்வர் ஆவதை வாழ்த்த மனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை எதிர்த்து பேசி முக்குலத்தோரின் பரம்பரை எதிரியாகாதே!

  ReplyDelete
  Replies
  1. முக்குலத்தோர் இன அரசர்கள் அனைவரும் இப்படித்தான் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தார்களா?

   Delete
 8. No one can compare Anna in this subject because Anna already won the election in Parliament and then took CM office and more over He was a statesman.

  ReplyDelete
 9. ஆம் ! மக்கள் அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டும் ! அவர்கள் காட்டுவார்கள் !

  ReplyDelete
 10. செங்குட்டுவன்7 February 2017 at 00:16

  சவுக்கடியும் சாணிப்பாலும் இருந்திருந்தால் இப்படிப்பட்ட கருத்தை நீ வெளியிருக்கமாட்டாய்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதற்குபதிலாக செங்குட்டுவன் போன்றோரை சவுக்கைக்கொண்டு நான்கு விலாசிவிட்டு சாணிப்பாலை குடிக்க வைத்திருப்பார்

   Delete
 11. இள.செயக்குமரன் , சேலம்7 February 2017 at 11:49

  // ஒரே ஒரு முறையேனும் தேர்தலைச் சந்தித்து மக்களிடம் வாக்குகளைப் பெற்று, அதன்பின் இந்தப் பதவிக்கு ஆசைப்பட்டிருக்கலாகாதா? அந்த நாகரிகத்தைப் பற்றி எதுவும் பேசாதவர்கள், நம் நாகரிகத்தைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக உள்ளது. // . இதோட சேர்ந்து அ.திமு.க. ஆட்சிகள்ல கடந்த ரெண்டு மாசமா தான் சட்டமன்றம் சட்டமன்றமா நடந்து வருது , இனி அதோட நிலம என்னங்கறது தான் மக்கள் கருத்தும் .
  - இள.செயக்குமரன் , சேலம் .

  ReplyDelete
 12. தாங்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவிட்டீர்கள். ஆனால் பார்ப்பனீயமோ வெறுப்பை செயல் மூலம் தற்போது நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 13. சசிகலா முதல்வர் பதவிக்கு சரியானவர்தான் என்று அவரின் "தகுதி" குறித்து அதிமுக வினர் குறிப்பிடுவது மிக கேவலமான விஷயங்கள்.

  ReplyDelete
 14. ஐய்யா நீங்கள் பேசிய கானொளிகளின் இனைய இனைப்பை உங்கள் பதிவில் இட்டால் எங்களுக்கெல்லாம் நிரம்ப வசதியாக இருக்கும்.

  ReplyDelete