இத்தனை மாற்றங்கள் அடுத்தடுத்து இவ்வளவு விரைவில் நடைபெறுவது நல்லதா என்று தெரியவில்லை. "மோசத்திலிருந்து படு மோசத்திற்கு' நாடு ஓடிக் கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது.
மதியம் ஒரு மணி நேரம் தூங்கி எழுவதற்குள் முதலமைச்சரை
மாற்றி விடுகின்றனர். மாலை ஒரு கூட்டத்தில் பேசி முடித்து இறங்குவதற்குள், புதியவர் பதவி ஏற்பதில் பல சிக்கல்கள் என்று செய்திகள் கசிகின்றன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து இரண்டு
மாதங்களுக்குப் பிறகு, அன்று
என்ன நடந்தது என்று இன்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சசிகலா முதலமைச்சர்
பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இந்த மருத்துவர் குழு ஊடகங்களை அவசரம்
அவசரமாகச் சந்திக்கிறது. நேற்றுவரை காட்சியிலேயே இல்லாத மருத்துவர் சுதா சேஷய்யன்,ஜெ.யின் உடல் பதப்படுத்தப் பட்டது உண்மைதான்
என்கின்றார். எம்.ஜி.ஆரின் உடலும் அவ்வாறுதான் செய்யப்பட்டதாம் (30 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் அதனையெல்லாம் சொல்லத் தோன்றுகிறது
போலும்). ஏறத்தாழ 100 நாள்கள் "ராஜ வைத்தியம்"
செய்ததற்கு அப்பல்லோ மருத்துவமனை வெறும் 5.4 கோடிதான்
கட்டணமாகப் பெற்றதாம்.
கிராமங்களில், "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்று ஒரு பழமொழி
சொல்வார்கள். இப்போது அது நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
சசிகலாவை மக்கள் ஏற்கவில்லை என்பதும், ஜெயலலிதா மரணத்தில் விடுவிக்கப்படாத
புதிர்கள் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர் என்பதும் ஆளும் கட்சிக்குப் புரிந்த
பிறகுதான், மருத்துவக் குழு சட்டென்று விழித்துக் கொண்டு,
30 ஆண்டுகளுக்கு முன்னே நடந்ததையெல்லாம் நமக்குச் சொல்கின்றனர்.
"சசிகலா குற்றமற்றவர்,நம்புங்கள் மக்களே!" என்று மறைமுகமாகக்
கெஞ்சுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, இதுதான் நல்ல வாய்ப்பென்று கருதி,
மத்தியில் உள்ள பா.ஜ.க. தன் தலையை உள்ளே நுழைக்கிறது. அ.தி.மு.க.
தொண்டர்கள் சட்டைப் பைகளில் எல்லாம் தீபாவின் படம்தான் இருக்கிறதாம். ஒவ்வொரு
தொண்டரின் சட்டைப் பையையும் தொட்டுத் துழாவிக் கண்டு பிடித்திருக்கிறார் ஹெச்.ராஜா. ஆளுநர்
வித்யாசாகர் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகின்றார். கோவைக்கு வர இருந்த அவர்
தில்லியிலிருந்து நேராக மும்பைக்குப் போகின்றார். பதவிப் பிரமாணம் செய்துகொள்ள
சசிகலா குழுவினர் மும்பைக்குப் போனாலும் போவார்கள். ஆசை வெட்கம்
அறியாது. அந்த நேரம் பார்த்து ஆளுநர் சென்னைக்கு வந்துவிட வாய்ப்புள்ளது.
பன்னீர்செல்வம் முழு அதிகாரம் உள்ள முதல்வராக இருந்தபோதே எதனையும் தன் விருப்பப்படி செய்ததில்லை. குறைந்தது, நிமிர்ந்து நின்றே அவருக்குப் பல
நாள்கள் ஆகிவிட்டன. இப்போது பாதுகாப்பு அமைச்சரவையின் (காபந்து
சர்க்கார்) முதல்வர். என்ன வேலை நடக்கப் போகிறது?
தமிழகம்
செயலற்று நிலைகுத்தி நிற்கிறது - தனி ஒருவரின் பேராசையால்!
மக்கள் கருத்தை தூசி என்று கூட நினைக்காதது தான் மிகவும் வருத்தமளிக்கிறது ஐயா...
ReplyDeleteதீபாவிடம் ஆட்சி போவதைவிட சசிகலாவிடம் இருக்கலாம்.
ReplyDeleteதெரியாத பேயைவிட தெரிந்த பேய் மேலானது.
உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன். தமிழர்கள் ஒன்றை அறிய வேண்டும். ஓரளவாவது வரலாறு அறியுங்கள் முதலில். யாரையும் குறை சொல்வதற்கு முன்பாக ஓரளவேனும் கொஞ்சமாவது தற்கால வரலாறு படியுங்கள். இந்த http://www.vinavu.com மாதிரி வெப்சைட்டில் சொல்லப்பட்ட விஷயங்களை அறியுங்கள். சசிகலா அவர்களை குறை சொல்லும் முன்பு எல்லாருமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதை அறியுங்கள். சசிகசலா அவர்கள் மீது குறை சொல்லி அவர்களை வராமல் தடுத்து விட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று ஒதுங்கி விடாதீர்கள். அவர் மேல் இருக்கும் கெட்ட பெயர்கள் பெரும்பாலானவை பார்ப்பணர்களால் மிக மிக சாமர்த்தியமாக அவர் மேல் பின்னப்பட்டது என்று அறியுங்கள்.
Deleteசசிகலா மேல் இருக்கும் கெட்ட பெயர்கள் பெரும்பாலானவை பார்ப்பணர்களால் மிக மிக சாமர்த்தியமாக அவர் மேல் பின்னப்பட்டது என்பது உண்மையென்றால் ஜெயலலிதா உழைப்பினாலும் ஊழலினாலும் சேர்த்த சொத்துக்கள்,கட்சி,ஆட்சி அனைத்தும் இப்போது சசிகலாவிற்கும் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட சசிகலா குடும்ப உறுப்பினர்களான நடராஜன் திவாகரன் தினகரன் பாஸ்கரன் மகாதேவன் ராவணன் மோகன் etc etc etc etcபோன்றவர்களிடம் மட்டுமே இன்று உள்ளது!.ஜெயலலிதாவின் இரத்த சொந்தமான தீபாவால் ஜெயலலிதா உழைத்து சேர்த்த சொத்துக்களைக் கூட அனுபவிக்க முடியவில்லையே!.தீபக் பிணைக்கைதியாக வீட்டுக்காவலில் உள்ளார்!. பார்ப்பணர்களை குற்றம் சொல்லும் சிவசுப்ரமணியமும், சுபவீயும் இந்த மனித உரிமையை மீறல்களை எதிர்த்து பேசாதது ஏன்?
Delete."பதவிப் பிரமாணம் செய்துகொள்ள சசிகலா குழுவினர் மும்பைக்குப் போனாலும் போவார்கள்"--
ReplyDeleteஇதைவிட கேவலமாக யாராலுமே எழுத முடியாது.
இந்த கட்டுரை செங்கோட்டையன் மற்றும் அய்யா பண்ருட்டியார் இருவருக்கும் தனிப்பட்ட மெயில் இல் forward செய்ய வேண்டும்.
உண்மையிலேயே சுதா சேஷையனை நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பார்த்து அதிர்ந்து தான் போயுள்ளது தமிழகம்.
அதேநேரம்.... பரவாயில்லை நீங்கள் கொஞ்ச நேரமாவது தூங்கி இருக்கிறீர்கள். இந்த செய்தி கேள்விப்பட்டதிலிருந்து எங்களுக்கெல்லாம் தூக்கமே தொலைந்துவிட்டது.... ஏதாவது ஒரு அதிசயம் நடந்து இவையெல்லாம் நடக்காமல் செய்துவிடாதா என்று நொடிக்கு நொடி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சின்னம்மா என்பது பொது சொல்லா அம்மா என்ற சொல் போல ? இது உறவு சொல் மட்டுமா ? இதனை வைத்து பிறரை புகழ பயன் படுத்தலாமா ?
ReplyDeleteஇது தமிழ்க்கு உகந்தா? என் சந்தேகத்துக்கு நேரம் கிடைப்பின் விடை அளியிங்கள். நன்றி
பார்ப்பண ராஜா பார்ப்பண தீபாவிற்கு ஆதரவு தருகிறார். சாதிகள்தான் இங்கே மறைமுகமாக அனைத்தையும் இயக்குகிறது. தெற்கே தேவர் வடக்கே வன்னியர் என்ற வேலம்மாள் பள்ளி நிறுவனரின் வார்த்தைகள் அர்த்தம் பெறுவதை பார்க்க முடிகிறது. சசிகலா அவர்களை எல்லாரும் எதிர்க்கவே செய்கின்றனர் என்பதை மறுக்க இயலாது. என் தந்தை கூட எதிர்க்கிறார்.ஆனால் உணர்வு பூர்வமான எதிர்ப்பை சில வட தமிழகத்தை சேர்ந்தவர்கள் பதிவு செய்கிறார்கள். இவர்கள் மற்றவர்களிடம் என்ன தகுதி எதிர் பார்க்கிறார்கள். தீபாவிடம் தகுதியாக பார்த்து ஜெயலலிதா போன்ற வெள்ளைத்தோல். வட மாவட்டத்தை சேர்ந்த பார்ப்பண ஆதரவாளர்கள அவரை் ஏற்றுக்கொள்கிறார்கள். பன்னீர் செல்வமும் அவர்களை போன்றவர் தான். அவரும் தீபாவை ஏற்கவே செய்கிறார். தமிழர்களில் பார்ப்பண ஆதரவு தமிழர்கள் பார்ப்பண ஆதரவு இல்லாத தமிழர்கள் என்று இரண்டு பிரிவுகள் ஏற்படுத்த வேண்டும்.
ReplyDeleteராஜா தீபாவிற்கு ஆதரவு தருகிறார் என்பதற்கு ஜாதிதான் காரணம் என்றால்,நீங்கள் சுபவீ வீரமணி போன்ற ஷூத்ராஸ் எல்லாம் கலைஞரை ஆதரிப்பதற்கு காரணம் அவரும் ஒரு ஷூத்ரா என்பதால் தானே.இங்கு திருவிழாவில் காலேஜில் பஸ்ஸில் திரை அரங்கில் ஒன்றாக இருந்து கும்மாளம் அடித்தாலும் வீட்டுக்கு செல்லும் முன் இல்லை இல்லை தெருவிற்கு செல்லும் முன் ஜாதி உணர்வு உங்களைப் போன்ற ஷூத்ராக்கு தலைதூக்குவது உண்மையா இல்லையா?.ஆகவே ஜாதி உணர்வு விஷயத்தில் பிரமணர்களை மட்டும் வெறுப்போடு அணுக உங்களைப் போன்ற ஷூத்ராக்கு எதாவது அருகதை உள்ளதா?.யார் செய்தாலும் தவறுதானே?.அதை கண்டிக்காமல் இருப்பததும் ஷூத்ரா mindset இல்லையா?
Deleteநிச்சயம் நல்லதே செய்ய மாட்டார் என்று அடிவயிற்றில் இருந்து பேசுகிறார்கள். இதற்கு அர்த்தமாக சசிகலா அவர்கள் பழைய வரலாறை பார்ப்பதை விட அவர் முதல்வராக வந்து நல்ல திட்டங்கள் செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கி விடுவாரோ என்பதுதான் இவர்களின் கவலையாக இருப்பதாகத்தான் பார்க்கிறேன்.
ReplyDeleteஇந்த கண்ணோட்டத்தில் தான் தி க தலைவரின் அறிக்கைகளும் இருக்கிறது
Deleteதலித் அல்லாதவர்கள் பார்ப்பண ஆதரவில்லாத தமிழர்கள்
ReplyDeleteதிருமாவளவன் அவர்களின் பின்னால் திரள வேண்டும்.இதனை பார்ப்பண ஆதரவாளர்களின் எதிர்ப்புகுரலாக பதிவிடுகிறேன்
நேத்து ஹெச்.ராஜா , தருண் விஜய் , தமிழிசை சௌந்திரராஜன் , ஊடகவியலாளர் ரமேஷ் ( இவர இதுக்கு முன்னாடி அவ்வளவா ஊடகத்தல பாத்த நெனப்பில்ல ) இவங்க நேத்து காட்டுன பரபரப்பு , முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு கூட இருந்த மைத்ரேயன் ( இவரு பா.ச.க.- வுல இருந்து வந்தவர் ) , இன்னைக்கு காலைல தீபா பத்தின பேச்சுங்க , இதெல்லாம் கண்டிப்பா நல்லத்தில்ல .பன்னீர் செல்வத்த நம்பலாம்னு பாத்தா , தி.மு.க எதிர்பக்கம் அ.தி.மு.கனு இல்லாம மறைமுகமா பா.ச.க , ஆரியம்னு போகும் போல .
ReplyDelete- இள.செயக்குமரன் , சேலம் .
நிச்சயமாக இது பாஜக-வின் வேலைதான். தமிழகத்தில் காலூன்ற இதைவிட நல்ல குழம்பிய சூழல் அமையாது
Deleteநச்சுனு ஒரே பக்கத்தில சொல்லிடீங்க.
ReplyDeleteஎப்போதெல்லாம் ஜெயலலிதாவை இவர் தவறான முடிவெடுக்கிறார் என்று நாம் நிணைத்த தருணங்கள் எல்லாம் இப்போது நிணைவுக்கு வருகிறது ! சின்னம்மா பேசுவதைப் பார்த்தால் அதற்கெல்லாம் இவர்தான் காரணம் என்று இப்போது புரிகிறது !
ReplyDeleteஅதிமுக அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எம் எல் ஏ க்கள் பிளவு பட்டு நிற்கும்போது திமுக 89 உறுப்பினர்களை கொண்ட அடுத்த பெருபான்மை கட்சி என்ற முறையில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சிசெய்யலாம் ஆனால் அதற்க்கு பிஜேபியின் ஆளுநர் அனுமதிப்பாரா என்பது தெரியவேண்டும் அது முடியாத போது மத்தியிலுள்ள பிஜேபி அரசு ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் இடைத்தேர்தல் நடத்த கிடைக்கும் 6 மாத இடைவெளியில் தன்னுடைய ஆர் எஸ் எஸ் கோரமுகத்தை காட்டும் அதன் இந்துத்துவ பாசிச கொள்கையை நடைமுறைப்படுத்த பார்க்கும் அப்போது திக வின் நிலைப்பாடு சரியென புரியும்
ReplyDeleteஐயா! நான் பகுத்தறிவாளன் என்றாலும் எனக்கு சந்தேகம்.
ReplyDeleteநேரெதிர் திசையில் இருக்கும் ஐயா வீரமணி அவர்களும்,மற்றும் பொறுக்கி சுப்ரமணிய சாமியும் சசிகலா விசயத்திற்கு மட்டும் ஒரே நேர்கோட்டில் இயங்குவது ஏன் எனறுதான் புரியவில்லை.