தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 10 May 2017

வலி 10 – பசியில் வாடும் மன்னர்கள்


சின்ன வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிப்பதில் எனக்குப் பெரிய ஆசை இருந்தது. என் மூத்த அண்ணன் எஸ்பி. முத்துராமன் அப்போது ஏவி.எம்மில் உதவி இயக்குனராக இருந்தார். அவரிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர் ஏற்கவில்லை. கடிந்து கொண்டார். இந்த ஆசையை விடு, படிப்பில் கவனம் செலுத்து என்றார். அப்போது எனக்கு அது கசப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் என் விருப்பத்தை  ஏற்று, கோடை விடுமுறையில் அண்ணன் வீட்டிற்கு வரும்போதெல்லாம் படப்பிடிப்புற்கு அழைத்துச் செல்வார். அது ஒரு பளபளப்பான உலகம். இயக்குனர்கள், பெரிய நடிகர்கள் வரும்போது அவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பும், அவர்களின் பணம், புகழும் மீண்டும் அந்த ஆசையை எனக்குள் தூண்டும். எப்படியாவது நடிகர் ஆகி விட வேண்டும் என்று ஓர் எண்ணம்  பெரிதாக உருவெடுக்கும். பட்டம் பெற்று வெளியில் வந்த பின் மீண்டும் அண்ணனிடம் அந்த ஆசையை வெளிப்படுத்தினேன்..அப்போது அவர் இயக்குநராகி, தன் முதல் படமான கனிமுத்துப் பாப்பாவை இயக்கிக்  கொண்டிருந்தார். எனினும்,  நிதானமாகப் பல செய்திகளை எனக்கு எடுத்துச் சொன்னார்.


மேலும் படிக்க

1 comment:

  1. எனக்கு, திரைத்துறையில் நடிக்க வேண்டும் என ஆர்வம் கொண்ட அலுவலக நண்பர்மூலம் கிடைத்த அறிதல் இதுதான்.

    மிக சுய ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடுடனும், குறிக்கோளுடனும், திறமையுடனும் இருந்து ஒருவர் வெற்றி பெற்றுவிட்டால்தான், பின்னாளில், அவரை பெற்ற வெற்றிதான் இறுதிவரை காப்பாற்றுகிறது.

    திரைத்துறையில் எல்லாமே செயற்கை. ஆனால் இயற்கைபோல் காட்டப்படும். இத்துறையில் இறங்குவது என்பது, புலிவாலை பிடிப்பது போன்று உள்ளது. எச்சரிக்கை எங்கும் தேவை.

    ReplyDelete