தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 10 May 2017

மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்
 நாடெங்கும் நீட் தேர்வு எப்படி நடத்தப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம்.எப்படி உடை அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்து விட்டார்களாம். அதனைச் சரியாகக் கவனிக்காமல் உடை அணிந்து வந்த மாணவர்களின் உடைகளைக் கிழிப்பார்களாம். காதில் உள்ள கடுக்கனை அறுத்து எடுப்பார்களாம். எல்லாவற்றையும் தாண்டி,கேரளாவில் ஒரு பெண்ணின் உள்ளாடையை நீக்க வேண்டும் என்றே சொல்வார்களாம். 


தேர்வு நடத்த்த்தப்பட்ட முறை இவ்வாறிருக்க,  நீட் தேர்வே தமிழ்நாட்டில் கூடாதென்று, ஓரிரு காட்சிகள் தவிர, அனைத்துக் கட்சிகளும், கல்வியியல் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன. குறிப்பாக, தி,மு,கழகம் தமிழ் நாடெங்கும் நீட் எதிர்ப்புக் கருத்தரங்குகளை நடத்தி  வருகின்றது. 

அவ்வாறே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நீட் தேர்வுக்கு எதிராகத் தன் குரலை ஓங்கி ஒலித்து  வரு கின்றது. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தன் அறிக்கை ஒன்றில், நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும், நீட் தேர்வு முடிவு வரும்போது மாணவர்கள் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்.  மேலும, 2017 பிப்.3 ஆம் தேதி ஆங்கில ஏடு இந்துவில், நீட் போன்ற இந்திய அளவிலான தேர்வுகளை நீக்குவதற்கு, மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக்  கொண்டுவரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.  


ஆனால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ரவிக்குமார், 09.05.2017 காலை, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, நீட் குறித்தும், பா.ஜ.க குறித்தும்  கூறிய கருத்துகள்  பேரதிர்ச்சியைத் தந்தன.  நீட் தேர்வினால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பது வடிகட்டிய பொய் என்றார்.  ஓராண்டு விதிவிலக்கை மத்திய  அரசு கொடுத்ததே, ஏன் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ளவில்லை என்று வினா எழுப்பினார்.  அருகிலிருந்த வெங்கடராமன் (நடுநிலையாளர் என்னும் பெயரில் பா.. வை ஆதரிக்கும் பெரியவர்) 'நண்பரின் பேச்சு எனக்கு மிக மகிழ்ச்சியாய்  இருக்கிறது. என் கட்டுரை ஒன்றை நானே படித்துப் பார்ப்பது போல் இருக்கிறது  என்றார்.  

அவருக்கு மகிழ்ச்சியாய் இருந்தது, நமக்குத்தான் அதிர்ச்சியாய் இருந்தது. நீட் தேர்வில் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்ன என்பதில் சற்றுக் குழப்பமாகவும் இருந்தது.


4 comments:

 1. இரத்தினவேல்10 May 2017 at 11:22

  நீட் தேர்வு பிரச்சினையில் தொல்.திருமாவளவன் அவர்களின் நிலைப்பாடு சரியானதாகவும், பாராட்டும்படியும் உள்ளது. அக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான ரவிக்குமார் போன்ற சந்தர்ப்பவாதிகள் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ReplyDelete
 2. ஏற்கெனவே பொறியியல் துறை வேலை வாய்ப்புகளில் கேட்டில் அதிக மார்க் வாங்குபவர்களுக்கே வேலைவாய்ப்பு என்று பார்ப்பணர்களால் வகுக்கப்பட்ட மனப்பாட முறையால் ஆந்திரா காரர்களுக்கும் ராஜஸ்தான் காரர்களுக்கும் வேலை வாய்ப்பு போய் விடுகிறது. இந்த இரு மாநிலத்தில் இருந்தும் அதிகமாக தேறுபவர்கள் பார்ப்பணர்கள் மற்றும் பார்ப்பண ஆதரவாளர்கள். இந்த நீட் தேர்வு முறையும் சிபிஎஸ்சி படித்தவர்களால்தான் பாஸ் ஆக முடியும் என்ற நிலையை உருவாக்கி மறைமுகமாக அடித்தட்டு மக்களை நசுக்கி எலைட் மக்கள் எனப்படும் உயர்சாதி மக்களுக்கு மத்திய அரசு உதவுகிறது. இந்த நிலை நீடித்தால் பணக்காரன் மேலும் பணக்காரணாவான். ஏழை மேலும் ஏழை ஆவான்.

  ReplyDelete
 3. This Neet exam can be solved as follows:Those who wants to work in other states,they can go for NEET exam and those who wants to serve in the same state,they can write as per the existing exam.Doctors with five years of practical experience in the state,can apply for other state positions.Authorities should analyse the concept of the NEET Exam and its benefits to man kind.The eminent doctors like Dr.Rangachari,Sir.AL Lakshnaswamy Mudaliar,
  Dr.Guruswamy Mudaliar and AL.Annamalaiand they were are excelled very well in their life time with international repute.The policy makers should examine the real benefit of the Neet rather can scoring high marks.Whether the students is really having intrinsic interest in analyse the disease with practical experience to be considered by the track record.Scoring high marks is only writing sugar on paper and liking but it is not real sugar.

  During British India students wants to enter medical college should have Sanskrit knowledge and this was objected by Justice party and appealed Vth George King in London by three eminent leaders led by Sir.A.Ramaswamy Mudaliar,Sir .AT Panneer selvam and Dr.TM.Nair.During this period DR.TM.Nair passed away in London.Vth George King sent a commission led by Sir.Stafford Kriffs who came to Madras and scraped the Sanskrit after examining the truth

  ReplyDelete
 4. பாஜக வின் '' வையப்பம் ஊழலை '' நாடு தழுவிய ஊழலாகச் செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு.

  ReplyDelete