தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 31 May 2017

"வாழ்க வசவாளர்கள்" - அண்ணா


"சுபவீயை வெளுத்த தாமரை" என்று தலைப்பிட்டு மகிழ்ந்துள்ளது இவ்வாரம் வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர்(02.06.2017).  சென்ற வாரமே சமூக வலைத்தளங்களில்,  கவிஞர் தாமரையின் இந்தப் பதிவேற்றத்தை நான் பார்த்தேன். அவரே எழுதியிருப்பாரா அல்லது அவரது பெயரில் யாரேனும் (Fake id) பதிவிட்டிருப்பார்களா என்ற ஐயத்தை நண்பர்கள் சிலர் எழுப்பினர். எப்படியிருந்தாலும் அது குறித்துப் பெரிதாகக் கவலை கொள்ள வேண்டாம் என்று தோன்றியது. அதனால் அதனை அமைதியாகக் கடந்து போய்விட்டேன்.  

இப்போது மீண்டும் அதனைப்  பெரிதுபடுத்தி, 4 பக்கங்கள் செலவிட்டு, ரிப்போட்டர் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் 2010ஆம் ஆண்டு சென்னை வந்தபோது நடந்த விவாதங்களை, 7 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் எழுதி ஒரு சர்ச்சையை இப்போது நான்  கிளப்பி இருப்பதாக அந்த ஏடு சொல்கிறது.  அந்தப் பதிவும்  7 ஆண்டுகளுக்கு முன்னால் நான் பதிவேற்றியது. இந்த உண்மையை குமுதம் ரிப்போர்ட்டர் ஏனோ மறைக்கிறது அல்லது திரிக்கிறது. இது குறித்துப் பேச என்னைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, 'ஒரு மோசமான சண்டைக்கு சுபவீ தயாரில்லை என்று மட்டும் சொன்னார்களாம். யாரென்று தெரியவில்லை

போகட்டும், தாமரையின் குற்றச்சாற்றுகளுக்கு வருவோம். தமிழர்களுக்கு கலைஞர் செய்த துரோகம் என்று ஒரு நீண்ட பட்டியலை நான் வைத்திருக்கிறேனாம். அதனைத் தோழர் தியாகுவிடம் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறேனாம். இதனைக் கழகத்தின் கடைசித் தொண்டன் கூட நம்ப மாட்டான். பிறகு  இது குறித்து நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்

மற்றபடி நான் ஒரு பொய்யர் என்றும், யோக்கியன் போல நடிக்கிறவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை இருக்கும். என்னைப்  பற்றிய அவருடைய பார்வை அவ்வாறு இருக்குமானால் அதனை வெளியிட அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. நான் என்னை மெய்ப்பித்துக் கொண்டு யாரிடமும் சான்றிதழ் வாங்க வேண்டிய தேவை இல்லை.


நண்பர் தாமரை ஒரு நல்ல கவிஞர் (இதனையும்  பொய் என்று மறுத்துவிட மாட்டார் என்று நினைக்கிறேன்). அவருக்கு என் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை.அதனை ஆராய்ந்து கொண்டிருக்கவும் எனக்கு நேரமில்லை.  இது குறித்து எந்த விவாதத்தையும் இனி தொடரவும் நான் விரும்பவில்லை

மனசாட்சி உறுத்தினால் தோழர் தியாகு நடந்ததைச் சொல்லட்டும். குமுதம் ரிப்போர்ட்டர் உள்பட அனைவருக்கும் நன்றி


12 comments:

 1. நீங்கள் சொன்னதை போல, இதை அலச்சியப்படுத்துங்கள் ஐயா,.. நல்லவர் தங்களை பற்றி நன்கு அறிவர்..

  ReplyDelete
 2. ஐயா தாமரைக்கு உங்கள் மீது கோபம் என்பதைவிட தியாகுவை பழிதீர்க்க வேண்டும் என்கிற வெறி தலைக்கேறி மது குடித்த பைத்தியமாய் உளறிக்கொண்டிருக்கிறார்.சொந்த வாழ்கையில் தோல்வியடைந்தவர்கள் அடுத்தவர்களை பார்க்கும் பார்வையில் ஒரு மோசமான பழிதீர்க்கும் பார்வையாகத்தான் இருக்கும்.சமூக அக்கரைஎன்பது தாமரைக்கு கிஞ்சித்தும் இல்லையென்பது அவரின் கடந்தகால நடவடிக்கைகளே சான்று.எப்படியாவது தியாகுவை பழி தீர்க்கவேண்டும் எனும் காரியத்திற்கு உங்கள் பேரை பயன்படுத்திக்கொள்ளும் கீழ்த்தரமான சிந்தனையே தாமரையின் அந்த கட்டுரை.தியாகுவே இதற்கு பதில் சொல்ல வேண்டுமா என்பதே என் கருத்து.ஏனெனில் தெருவில் போவோர் வருவோரெல்லாம் ஏதோவொன்றை தூக்கிவீசுவதற்கு நாம் வினையாற்றுவது அவர்களின் கேடுகெட்ட மனநிலையை நாமே அங்கீகரிப்பதுபோல் ஆகிவிடும் எனும் தங்களின் நிலைப்பாடுதான் சரி.ஆனாலும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொருப்பு தியாகுவிற்கு 100% உள்ளது.பொருத்திருந்து பார்ப்போம். இன்றைய பத்திரிக்கை தர்மம் தாமரையின் கீழ்த்தரமான சிந்தனையைவிட மோசமாக இருப்பதற்கு குமுதம் ரிப்போர்ட்டரே சாட்சி.தாமரையின் உண்மையில்லாத கற்பனை கட்டுரைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்தே தெரிகிறது தங்களின் சமூகநீதி செயல்பாட்டால் பார்ப்பனியம் எந்தளவிற்கு பயந்துபோய் உள்ளதுஎன்று.ஆகவே இதுகூட பெரியாரியலுக்கு கிடைத்த வெற்றிதான்.தங்களைக்கண்டு பார்ப்பனியம் அஞ்சுகிறது.அதனால்தான் தங்களுக்கு எதிராகஎதுகிடைத்தாலும் அதைவிடாமல் பற்றிக்கொள்கிறது பார்ப்பனியம்.தங்களோடு நாங்களும் இந்த தமிழ்சமூகமும் இருக்கிறோம்.

  ReplyDelete
 3. முன்பு குமுதத்திடம் குறும்பு உண்டு. தற்போது குசும்புதான் அதிகம்.

  ReplyDelete
 4. இரத்தினவேல்31 May 2017 at 14:18

  கவிஞர் தாமரையிடமிருந்து இத்தகையக் கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை. வேறு யாரோ ஒருவருடைய ஊதுகுழலாகச் செயல்படுகிறார் என்று தோன்றுகிறது. அவரின் இந்தப் போக்கு குறித்து தோழர் தியாகு விளக்கம் அளிக்க வேண்டும்.

  ReplyDelete
 5. தாமரை என்றாலே ..problem

  ReplyDelete
 6. Thiru Subavee we should not listen to these letter pad party people and opportunists.

  Frankly speaking these people are using your name for their own livelihood .Let them enjoy

  ReplyDelete
 7. குமுதம் ரிப்போர்ட்டர் திமுகவை இழித்து பழித்து நக்கல் நையாண்டி ஏளனம் செய்யும் இதழ். கலைஞர் குஷ்பு பற்றி தரக்குறைவாக எழுதி பாதாளத்தில் தொலைந்த ஏடு. அது மாறிவிட்டால் நம்பமாட்டார்கள். சுயமரியாதை சிங்கம் நீங்கள். உங்களை வாதங்களில் வெல்லமுடியாத கோழைகள் வாந்தி எடுக்கட்டும் நமக்கென்ன!

  ReplyDelete
 8. குமுதம் ரிப்போர்ட்டர் திமுகவை இழித்து பழித்து நக்கல் நையாண்டி ஏளனம் செய்யும் இதழ். கலைஞர் குஷ்பு பற்றி தரக்குறைவாக எழுதி பாதாளத்தில் தொலைந்த ஏடு. அது மாறிவிட்டால் நம்பமாட்டார்கள். சுயமரியாதை சிங்கம் நீங்கள். உங்களை வாதங்களில் வெல்லமுடியாத கோழைகள் வாந்தி எடுக்கட்டும் நமக்கென்ன!

  ReplyDelete
 9. உங்களுடைய பணியை கண்டு ஆரிய கோட்டை நடுங்க ஆரம்பித்திருக்கிறது அதனால் தான் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி சிந்தியது சிதறியது எல்லாம் எடுத்து சுட சுட பழைய சோறு விற்கிறது.

  ReplyDelete
 10. சூரியன் தாமரை ஆரோக்யமான ஒப்பீடு...
  சூரியன் நாய் தரம் தாழ்ந்த ஒப்பீடு...
  சூரியனுக்கு இரண்டுமே ஒன்று தான்...
  நாய்களுக்கு தெரிய வாய்ப்பில்லை
  நாம் கவலைகொள்ளவும் தேவையில்லை...!

  ReplyDelete
 11. நேருக்கு நேராய் வரடடும் நெஞ்சில் திறமிருந்தால் ஆதாரம்யிருந்தால் தரட்டும் உண்மை திறமிருந்தால.பார்பணியத்தின் கைப்பாவையான தாமரையின் தகிடுதத்த கிறுக்கல்கள் எடுபடாது.

  ReplyDelete