தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 27 May 2018

லண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? 



நீதி கேட்டு எழுந்த தூத்துக்குடி மக்களின் மீது நடத்தப்பட்ட நியாயமற்ற துப்பாக்கிச் சூடும், இறந்துபோன 13 பேரின் உயிர்களும், உலகம் முழுவதும் வாழும் தமிழ்  மக்களிடையே பெரும் அதிர்வலைகளை  உருவாக்கியுள்ளன. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனிலும், அயர்லாந்திலும், தூத்துக்குடிப்  படுகொலைகளுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.  


26.05.2018 மாலை லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தை, தமிழ்த் தோழமை இயக்கம் (Tamil Solidarity), பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்டம் ஆகியன முன்னின்று  நடத்தின. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இயலுமா என்று அதன் அமைப்பாளர்கள் என்னிடம் கேட்டனர். நான் தற்போது லீட்ஸ் (UK) என்னும் நகரத்தில் உள்ளேன். அங்கிருந்து மூன்று  அல்லது நான்கு மணி நேரப் பயணத்தில் லண்டன் சென்றுவிட முடியும். எனவே உறுதியாகக் கலந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். நான் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் செய்தியை நானும், அமைப்பாளர்களும்  சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்தோம். என்னுடன் சேர்ந்து லீட்ஸ் நகரிலிருந்தும்  ஏழெட்டுப் பேர் கலந்துகொள்ள வருவதாகக் கூறினர்

இந்நிலையில், ஒரு சிலர்  அமைப்பாளர்களைத் தொடர்பு கொண்டு, என் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களும் தமிழர்கள்தான். தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சியோடு தொடர்புடையவர்கள். ஆனால் அந்தக் கட்சி சார்பில் எதிர்ப்பத் தெரிவிப்பதாக வெளிப்படையாக அவர்கள் கூறவில்லை. "அவர் வரக்கூடாது என்றும், வந்தால் அவமானப்படுத்துவோம்" என்றும் கூறியுள்ளனர்.

அமைப்பாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, நிலைமையை எடுத்துக்  கூறினர். "நீங்கள் வந்தால் அது திமுக சார்பு ஆர்ப்பாட்டம் போல ஆகிவிடும் என்கின்றனர். எனவே நீங்கள் ஆர்ப்பாட்டத்தில் எதுவும் பேச வேண்டாம்" என்பதுபோல் கூறினார்நான் முதல் வரிசையில் நிற்பதையோ, ஊடகங்களுக்கு நேர்காணல் தருவதையோ அவர்கள் விரும்பவில்லை என்பதும் தெரிந்தது.

நான் எப்போதுமே முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசைக்கு வருபவன் இல்லை. அழைத்தவர்கள் கேட்டுக் கொண்டாலன்றி, கூட்டங்களில் பேச வாய்ப்பு வேண்டும் என்று கேட்டவனும் இல்லை. எனினும் நான் எந்த இடத்தில் நிற்க வேண்டும், ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கலாமா கூடாதா என்பதையெல்லாம் வேறு யாரும் முடிவு செய்ய முடியாது. அதே போல, எங்கும் எப்போதும் திமுக வின் குரலாக ஒலிக்கும் விருப்பமும், உரிமையும் என்னுடையது. அதனையெல்லாம் மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது.

படுகொலை செய்யப்பட தமிழர்களுக்காக நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கூட இத்தனை உள்ளூர் அரசியலைக் கலக்கும் குருகிய  மனப்பான்மையினர்  வளர்வது எவ்வளவு பெரிய ஒற்றுமைக் கேடு என்பதை உணர வேண்டிய நிலையில் உள்ளோம். இருப்பினும், இந்தச் சூழலில் நமக்குள் பிளவு இருப்பதுபோல் ஒரு செய்தி வெளியாவது நல்லதில்லை என்று கருதி, நான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்து விடலாம் என்று கருதினேன்அதனை அமைப்பாளர்களிடம் கூறிவிட்டேன்

அடுத்தநாள் லண்டன் நண்பர்கள் பலர் தொலைபேசி, |"நீங்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்பார்த்துக் கொள்ளலாம்" என்றனர். அது மட்டுமின்றி, நீங்கள் வரவில்லையானால், தங்களுக்குப் பயந்து சுபவீ கலந்து கொள்ளவில்லை என்று பேசித் திரிவார்கள், அதற்கு இடம் கொடுக்க வேண்டாம்" என்றனர்.

"இவர்களிடம் மாவீரன் என்று சான்றிதழ் பெற்று எனக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை. என்னைப்  பொருத்தளவு, தூத்துக்குடிப் படுகொலைகளை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டம்தான் முதன்மையானது. என் பங்கேற்பினால் அது திசை திரும்புமானால்உயிர்த் தியாகம் செய்த மக்களைக் கொச்சைப்படுத்துவதாக அது அமையும்.  எனவே நான் கலந்து கொள்ளவில்லை" என்று கூறிவிட்டேன்

எனினும் இரண்டு செய்திகளை இங்கு நான் பதிவிட வேண்டியுள்ளதுயாராயிருப்பினும் "நாம் தமிழர்" என்ற உணர்வு பெருமைக்கு உரியதே. ஆனால் நாங்கள் மட்டுமே தமிழர் என்னும் நிலைப்பாடு, தமிழின ஒற்றுமைக்கு எதிரானதும், அநாகரிகமானதும் ஆகும்

இரண்டாவது, தங்களின் குறுகிய மனநிலையின் மூலம், திமுக வை மறைத்துவிட முடியும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது

          "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்,

           ஆதவன் மறைவ தில்லை."

15 comments:

  1. இரத்தினவேல்27 May 2018 at 12:24

    சிலர் தங்களைச் சுத்தம் சுயம் பிரகாசர்கள் என்று கூறிக் கொண்டு தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். தங்கள் எச்சரிக்கை தேவையான ஒன்று.

    ReplyDelete
  2. எதிலும் அரசியல் செய்வது, திமுக எதிர்ப்பு என்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். இவர்களால் தமிழினம் பின்னோக்கி தான் செல்கிறது

    ReplyDelete
  3. நாம் தமிழர் கட்சி காரர்கள் ளுக்கு வன்மையான கண்டனக்கள்.

    ReplyDelete
  4. தங்களின் முடிவு சரியானதே.

    ReplyDelete
  5. நாம் தமிழர் கட்சியினர் சில விஷயங்களை அறியுங்கள். நம் சொந்தங்கள் தமிழகத்தில் மட்டும் இல்லை என்று அறியுங்கள்.
    தேவர் என்றால் ஜெய்ஸ்வால் என வட இந்தியாவில் தோழமை சாதியாக உள்ளது. நாடார் என்றால் ஈழவர் என கேரளாவிலும் கௌட் என்று ஆந்திராவிலும்
    கவுண்டர் என்றால் கர்நாடகாவில் கவுடா என்றும் ஆந்திராவில் நாயுடு கேரளாவில் நாயருமாகவும்
    வன்னியர் என்றால் கர்நாடகாவில் குருபாஸ் என்றும்
    செட்டியார் என்றால் வைஸ்யா என்றும்
    பிள்ளை ஆந்திராவில் ரெட்டி என்றும் கர்நாடகாவில் லிங்காயத்து எனவும்
    தலித் சமூகம் இந்தியா முழுமையுமாக இப்படி அனைத்து சமூகமுமே பிற மாநிலங்களோடு தொடர்பு உள்ளது. நாம் அனைவரும் தமிழனாக நீருக்காக சகோதரனோடு சண்டை இடுகிறோம். . எனவே ஒரு கற்பனைக்கு கலைஞர் இன்னும் சற்று நேர்மையாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். தமிழ் தேசியம் என்ற ஒரு விஷயம் தோன்ற தேவை இருந்திருக்காது. நான் மேலே சொன்ன சாதிகளை இணைத்திருப்பார்.

    ReplyDelete
  6. தமிழகத்தின் வளர்ச்சியில் திமுகவின் பங்கு என்றும் உண்டு. தமிழரான கலைஞரை திராவிட தெலுங்கன் என்று சொல்லி வசை பாடலாமா என்று நாம் தமிழர் கட்சியினர் எண்ணி பார்க்க வேண்டும். நாம் தமிழரின் கோபம் தெலுங்கரை அதாவது நாயுடு சமூகத்தவரை அரசியலில் ஒதுக்கி வைப்பது என்பதை திமுக ஆரம்ப காலம் தொட்டே ஓரளவு நிலைப்பாடாக வைத்துள்ளது என்பதை உணருங்கள். அதிகம் பேசாமல் செயலில் காட்டியது திமுக. ஆனால் அதிமுக அப்படியல்ல. அந்த கட்சி நில ஜமீன்தார்களுக்கானது. தென்னிந்தியாவில் நாலு நிலவுடைமை சமூகம் மட்டுமே நம்மை இணைய விடாமல் பார்த்துக்கொள்கிறது என்று அறியுங்கள். கவுடா கவுண்டர் நாயுடு நாயர் ஆகியோர் தங்களை மேலே நிறுத்த மற்ற சாதிகளை மொழியால் சாதியால் பிரித்து செயல்படுகிறார்கள் என்பதை அறிவோம்.
    இந்த நாலு சமூகங்களிலும் திராவிடத்தை ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆரியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் சற்று அதிகம்.
    நடிகர் சூர்யா கார்த்தி சத்தியராஜ் எந்த மாநிலத்துக்காரர்களின் சாதிக்காரர்களின் படங்களில் சமீப காலமாக நடிக்கிறார்கள். தமிழ் சமூகத்தை கெடுக்கும் இருட்டு அறையில் .....என்ற படத்தை தமிழகத்தில் ஏன் வெளியிடுகிறார்கள். இதற்குத்தான் அவசரம் அவசரமாக தமிழ் திரைத்துறையை கைப்பற்றினார்களா என்றும் எண்ணிப்பார்க்க வேண்டும். . இவர்களுக்கு துணையாக வடக்கு மாவட்ட பறையர், வன்னியர் சமூகமும் அகம்படியர் சமூகமும் இணைகிறது. நாயுடு சமூகம் எப்படி ஆந்திராவில் மொத்தமாக மற்ற சமூகங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அறிய இந்த வீடியோவை பார்ப்போம்.
    https://youtu.be/_vBvExh7-QY . கர்நாடகாவை சேர்ந்த நண்பர் சொன்னார் இந்த கவுடா சாதியால்தான் தமிழர்களுக்கு அத்தனை பிரச்சனையுமே என்று. இவர்கள்தான் தண்ணீர் விடக்கூடாது என்று முதலில் நிற்பார்கள் என்று. நாயர் சமூகமும் இதற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல தன் சொந்த மாநில பிற சாதி பெண்களையே மேலாடை அணியகூடாது என்று சொல்லி வரியிட்ட சமூகம் அது. பறையர் மற்றும் வன்னியர் குறிப்பிட்ட சதவிகித்தினர் ஆரியத்தை ஏற்றவர்கள். அதற்கு காரணமும் இங்கே விளக்கப்படுகிறது
    https://www.google.co.in/amp/s/dalitskerala.wordpress.com/2010/07/15/history-of-parayas/amp/
    இப்படி வலங்கை சாதிகளாக இருப்பவர் ஆரியத்தை ஏற்றதால் அவர்களை போல உள்ளவர்களை உதாரணமாக வைகோவை விட்டுக்கொடுக்காமல் திருமாவளவன் பேசுகிறார். வேல்முருகனை தமிழ் தேசிய தலைவராக ஏற்கிறார். இவர்கள் மிகச்சிலரே. தமிழகத்தின் வேறு எங்கும் இருக்கும் பறையர் படையாச்சி தேவர் சமூகங்கள் திராவிட மற்றும் தமிழ் சிந்தனையாளர்களே. ஆரியத்தை ஏற்றுக்கொண்டவர்களின் மக்கள்தொகை சுமார் 6 கோடிகள் என்றால் மற்ற தென்னிந்திய சமூகங்களின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 20 கோடி இருக்கும். ஆனால் இந்த 20 கோடி மக்களும் அவர்களுக்கு அடிமையாக இருக்கிறோம். ஏனென்றால் அவர்கள் பரம்பரையாக நில உடைமை சமூகம். பார்ப்பண ஆதரவோடு அனைத்தும் அவர்களுக்கு கிடைத்தது. இந்த 4 சமூகம் அரசியலில் ஓங்கி நிற்க வில்லை என்றால் இந்த நான்கு தென்னிந்திய மாநிலங்களும் என்றோ இணைந்திருக்கும். சகோதரத்துவம் தழைத்திருக்கும். திராவிடன் என்ற பெயரிலோ தமிழன் என்ற பெயரிலோ. ஆரியத்தை ஏற்று கொண்ட இவர்கள் தன் சொந்த சாதியைச் சேர்ந்தவன் ஆனாலும் தன்னுடைய பொருளாதார வளங்களை காப்பதற்காக திராவிடத்தை ஏற்றவன் என்றால் அவர்களை அழிக்கவும் தயங்க மாட்டார்கள். இதுதான் தூத்துகுடியில் நடந்தது. நாம் தமிழர் கட்சியினரை மீம்ஸ் போடுகிறார்கள் திடீரென வைகோ வசை பாட ஆரம்பித்த பின்பு பல சம்பவங்கள் நடந்துள்ளது. தூத்துகுடி சம்பவம் பல நாள்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் உள்ளன. நாம் தமிழர் கட்சியினரை தொடர்ந்து கவனித்து வருவதால் அதனை அறிய முடிகிறது.
    முதலில் மனதால் நாம் நான்கு மாநில சொந்தங்களோடு இணைவோம். அதேபோல நாம் தமிழரும் திமுகவும் இணைய வேண்டிய தேவை காலத்தின் கட்டாயம். தமிழனுக்காக மட்டுமல்ல இந்த நாலு மாநிலங்களில் வாழும் நம் சொந்தங்களுக்காக.

    ReplyDelete
    Replies
    1. சாதிகளை பற்றி பேசாமல் இன்னும் தமிழன் தெலுங்கன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் நாமும் நம் சொந்தங்களும் மாண்டு போவோம்

      Delete
  7. வரலாற்றை பற்றிய எந்த புரிதலும் இல்லாத ஒரு கூட்டத்தை கட்டமைப்பதில் சீமான்கள் தீவீரமாக உள்ளனர். பா.ஜ.க போன்ற கட்சிகளுக்கும் நாங்கள் மட்டுமே தமிழர் என ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் குழுக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. "பிறப்பால் பிரி" என்பது தான் இவர்களின் கொள்கை.இவர்களுக்கு சரியான பதில் கொடுக்க வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது ஐயா.

    ReplyDelete
  8. வரலாற்றை பற்றிய எந்த புரிதலும் இல்லாத ஒரு கூட்டத்தை கட்டமைப்பதில் சீமான் தீவிரமாக உள்ளார். பா.ஜ.க, நாம் தமிழர் இருவருக்கும் ஒரே கொள்கை.. "பிறப்பால் பிரி". அடிப்படை நாகரிகம் இல்லாதவன் மனிதனே இல்லை, பிறகு தானே தமிழன்..

    ReplyDelete
  9. அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து நீதிமன்றம் காலம் தாழ்த்துகிறது என்று ஐநாவிடம் முறையிடுங்கள். ஜனநாயகம் இந்தியாவில் கேலி கூத்தாகி இருப்பதை அங்கே சொல்லுங்கள். இதுதான் தமிழக கட்சிகள் செய்ய வேண்டிய தலையாய வேலை.

    ReplyDelete
  10. TAMIL SOLIDARITY என்ற பெயரில் அமைப்பு நடத்துவர்கள் இத்தகைய குறுகிய எண்ணங்களுக்கு மதிப்பளிப்பது வியப்பாக உள்ளது. தமிழெத்தில் மிகச்சிறிய அந்த கட்சியின் சொல்லுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டிய நிலையில் ஒரு வெளிநாட்டு அமைப்பு இருக்குமானால் அவர்களுக்கு இடையேயான தொடர்பு எத்தகையது?

    ReplyDelete
  11. Talaivaa,

    This is too much, so called tamil groups should be exposed, I think they are more dangerous to tamilians than Brahamism
    I suspect you still have some soft corner for these tamil groups, i suggest you drop this soft approach towards these groups and blast the hell out of them

    வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக,
    கேள்போல் பகைவர் தொடர்பு.

    ReplyDelete
  12. பாராட்டுக்குரிய முடிவு ஐயா

    ReplyDelete
  13. Same situation in Paris , France too

    ReplyDelete
  14. தாங்கள் எடுத்த முடிவே சரி ஐயா..! சமூக நீதியை காற்றில் பறக்க விட்டு...தமிழர்களின் மரபணுக்களுக்கு ஒட்டுமொத்த சொந்தம் கொண்டாடும் இதுபோன்ற வெற்றுச் சீமார்கள் இருக்கும்வரை தமிழன் சமத்துவம் சமூகநீதி மற்றும் பகுத்தறிவில் பின்தங்கிதான் இருப்பான்.

    யாருக்கும் பாருக்குள்
    பொதுநீதி யென்றாக்கிடவே
    பாருக்குள் பெருநெருப்பாய்
    பிரவேசித்தான்
    பகலவன்....!

    எல்லாருக்கும் சேர்த்து
    பொதுவாகத்தான் எரிகிறான்
    அந்தச் சூரியன்...

    சிலர்
    சுகத்திற்காக அவன்
    சூட்டை உறிந்து
    சூரிய குளியல்
    போடுகின்றனர்...

    பலர் அவன் காட்டும்
    வெளிச்சப் பாதையில்
    பாதை வழுவாமல்
    பயணம்
    மேற்கொள்கின்றனர்...!

    கிழக்கே அவன் எழும்பொழுதெல்லாம்
    கிறங்கி உறங்குபவர்களையும்
    சேர்ந்து எழுப்பிவிடுகின்றான்
    ஒளிநீர் தெளித்து....

    காலம் பகடையுருட்டி
    கதிரவனை
    எதிர்திசையில்
    புதைக்கும்
    நேரமெல்லாம்..
    இருள் விரும்பும்
    கள்வர் கூட்டம்
    எக்காளமிட்டு
    சிரிக்கின்றது....

    விரவிக்கிடக்கும்
    இருட்டில்
    கண்ணாம் பூச்சிகள் பல
    கண்ணாமூச்சி
    விளையாட்டு
    காட்டுகின்றன...
    தம்மை
    இரவுச் சூரியனாய்
    சுய உருவகம்
    செய்துகொண்டு...

    பாவம்..
    இந்த கள்வர்களும்
    கண்ணாம் பூச்சிகளும்
    அறிந்திருக்கவில்லை...
    உண்மையில்
    சூரியன்
    செல்லுமிடமெல்லாம்
    கிழக்கென்று....!

    கோபிநாதன் பச்சையப்பன்...

    ReplyDelete