தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 16 September 2015

பகிர்வு - 7


பெரியாரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த குணம் அல்லது செயல் எது?
           -அனானிமஸ் 86

விடை:  அவருடைய குணம் அல்லது செயல்களில் ஒன்றே ஒன்றைப் பிரித்தெடுத்துச் சொல்வது சற்றுக் கடினம்தான். இருப்பினும்,நான்  எழுதியுள்ள,பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' நூலில் குறிப்பிட்டுள்ள ஒன்றை நினைவு கூலாம்  என்று நினைக்கிறேன்.

அவருடைய 'சுய மறுப்பு' மிகப் பெரிய செய்தியாகப் படுகின்றது. அவர், பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தார். ஆனால் காலம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காகவே போராடினார். உயர் ஜாதி என்று சொல்லப்படும் ஜாதியில் பிறந்தார். ஆனால் ஒடுக்கப்பட்ட ஜாதி மக்களுக்காகவே தன் வாழ்வை ஒப்படைத்தார். ஆணாகப் பிறந்தார். பெண்களுக்காகவே விடுதலை இயக்கம் கண்டார். இன்றும் அவரைக் கன்னடர் என்று சொல்வோர் நம்மிடையே உண்டு. அவரோ, தன் இறுதி மூச்சு வரையில் தமிழர்களுக்காகவும், தமிழ் இனத்திற்காகவுமே தொண்டாற்றினார்.

இன்னொரு புகழும் அவருக்கு  உண்டு - அவர் இறந்து 40ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னமும் அவரோடு பலர் முட்டி மோதிக்கொண்டே இருக்கிறார்கள். அதனாலும் அவர் புகழ் வளர்கிறதே அன்றி, குறையவே இல்லை.  


4 comments:

  1. அனானிமஸ் என்பதைத் தவிர்க்கலாமே ...
    "யாரோ" என்று போடலாமே..

    ReplyDelete
  2. தந்தை பெரியார், தமது பொது புத்தியை நன்கு பட்டை தீட்டி, அதில் கிடைத்த பகுத்தறிவு ஒளியைக்கொண்டு, தமிழ் மக்களின் ஏற்றமிகு வாழ்விற்கு வழி காட்டியவர்.

    கடுமையாக உழைத்து உண்மையான தொண்டு செய்தவர்.

    நல்ல பல அறிஞர்களை தமிழர்களுக்கு அறிமுகம் செய்தவர்.

    அவர் மட்டும் பிறந்திராவிடில்,தற்போது தமிழர்களின் சராசரி அறிவு ஐந்திற்கு கீழேதான் இருந்திருக்கும்.

    ReplyDelete