தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 17 September 2015

டான்யூப் நதி


தென் கிழக்கு ஐரோப்பா முழுவதும் வளைந்து வளைந்து ஓடுகிறது டான்யூப் நதி. ஜெர்மனியின் இருண்ட காடுகளில் உற்பத்தியாகி,  ஒன்பது நாடுகளைக்கடந்து, 2680 கிலோ மீட்டர் ஓடி, பிளாக் சீ  எனப்படும் கருங்கடலில் போய்க் கலக்கிறது. ஆஸ்ட்ரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோஷியா, செர்பியா, ரொமேனியா, பல்கேரியா, மோல்டோவா, உக்ரைன் என்று பல்வேறு நாடுகளுக்கும் நீர்வளம் சேர்க்கிறது அந்நதி.  ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட் நகருக்கு அழகு சேர்ப்பதும் டான்யூப் நதிதான்.ஜெர்மனியில் உற்பத்தி ஆனாலும், ரொமேனியாதான் 29% தண்ணீரைப்  பெறுகிறது. ஜெர்மனிக்குக் கிடைப்பது வெறும் 7% தண்ணீர் மட்டுமே!

ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்குள் நதியால் எந்தச் சிக்கலும்  எழவில்லை. எந்த நாடும் நதியைக் கட்டிப் போடவில்லை. இங்குதான், காவிரியும், முல்லைப் பெரியாறும் கர்நாடகத்தையும், கேரளாவையும் தாண்டி வருவதற்குள் எத்தனையோ சிக்கல்கள் எழுகின்றன!


1 comment:

  1. நதி நீர் பிரச்சனை
    நதிநீர் பங்கீடு என்பது உலகளாவிய சட்டம். உலகில் உள்ள நதிகள் ஒரு நாட்டிற்க்கோ அல்லது ஒரு மதத்திற்கோ அல்லது ஒரு இனத்திற்கோ அல்லது ஒரு மொழிக்கோ அல்லது ஒரு ஜாதிக்கோ அல்லது ஒரு பிரிவினருக்கோ சொந்தமானது அல்ல.
    ஆயிரமாயிரமாண்டுகளாக அந்நதிநீரை பயன்படுத்திவரும் பயன்பாட்டாளர்களுக்குத்தான் சொந்தம். ஒரு மத்திய அல்லது மாநில அரசு நினைத்தாலோ அல்லது சட்டம் இயற்றினலோ நதியின் போக்கை மாற்றிவிடமுடியாது.
    உலகில் உள்ள நதிகளில் 95 சதவீதம் நதிகள் மேற்கிலிருந்து கிழக்காகத்தான் பாய்கன்றன. மேற்கிலிருந்து கிழக்காக பாயும் நதியின் போக்கை மேற்கிலிருந்து வடக்கு தெற்காக திருப்ப முயலுவது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
    நதிநீருக்காக மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உண்டென்று உலக அளவில் கருத்து நிலவுகிறது.
    நதிநீர் பங்கீட்டில் அரசியலை தவிர்த்து, நிலமை என்ன என்பதை ஆய்ந்து அதற்கேப்ப நியாயமான முறையில் நடவடிகைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
    சுமார் ஆயிரமாண்டுகளுக்கு முன்பே கரிகால சோழன் கல்லணை கட்டியபோதே, சற்று முற்போக்கு சிந்தனையுடன், தலை காவேரி தடுக்கப்பட்ட பகுதி என்று பிரகடனப்படுத்தி அதை ஆண்டாண்டுக்கு தீர்மானம் போட்டிருந்தால், தற்போது தமிழகம் இத்தகைய அவல நிலயை சந்தித்து இருக்காது.
    மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது, நதிநீர் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு பிரித்திருக்கவேண்டும்.
    நதிநீர் பங்கீடு தீராத தலைவலியை கொடுத்துள்ளது. நதிநீரை பெரும் விவசாயிகள் ஆண்டுக்கு ஆண்டு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
    விவசாயத்திற்கு தேவையானது நீர்மட்டுமே.நீரின்றி அமையாது உலகு. எனவே மத்திய மாநில அரசுகள் சரியான, முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    அப்படி முறையான தீர்வு காணாவிடில் பிரச்சனையின் தீவிரம் எப்படி உருவெடுக்கும் என்று என்னால் சொல்ல இயலாது.
    உலகளாவிய சட்டம் என்பதால், கங்கை நீர் பங்களாதேஷிற்கு முறையான விதத்தில் பகிர்ந்தளிக்கப்படுகிரது. அதபோலவே சிந்து நதிநீர் பாகிஸ்தானுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.இதே முறையில்தான் உலகில் உள்ள அனைத்து நதிகளின் நீர் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
    இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் பதில் வருகிறது.இதற்க்கு காரணம் என்னவென்றால் தமிழகம் கிழக்கு மாநிலமாக இருப்பதுதான்
    அதனால் தமிழ் நாடு மட்டும் நதிநீர் பங்கீட்டில் வஞ்சிக்கப்படுகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் சரியான, முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.வேண்டாத விளைவுகளை தவிர்க்கவேண்டும்.

    ReplyDelete