துட்டனைக் கண்டால் தூர விலகு என்பது சரியானதா?
- பழனியப்பன்
கந்தசாமி, கோவை
விடை: பாதுகாப்புக்
கருதிச் சொல்லப்பட்ட எச்சரிக்கையாக அது இருக்கலாம். தன் வலியும், துணை வலியும்,
மாற்றான் வலியும் கருதிச் செயல்பட வேண்டும் என்பதே சரி. ஆனாலும் துட்டனைக் கண்டு
தூர விலகிக் கொண்டே இருப்பது, துட்டனுக்குத்தான் நல்லது. உரிய வலிமையை உரிய
வழியில் இணைத்துக் கொண்டு, தீயவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று
முடிவெடுப்பதே சரியானது. 'பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது' என்பது
பாரதியின் பாட்டு வரி! இந்த
இடத்தில் பழமொழியை நினைவில் கொள்வோம், பாரதியின் வழி நடப்போம்!!
No comments:
Post a Comment