ம.தி.மு.க.வின் சரிவு உங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி தந்திருக்குமே?
- அருள் மகிமை, டல்லஸ் (அமெ ரிக்கா)
விடை: கண்டிப்பாக இல்லை.
ம.தி.மு.க. அடியோடு வீழ்ச்சி அடைய வேண்டிய கட்சி என்று நான் ஒருநாளும் எண்ணியதில்லை.அதே
நேரம், தேர்தல் நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பதில், வைகோவிற்கு நிகர் எவரும்
இல்லை என்றும் நான் கருதுகிறேன். 2004 நாடாளுமன்றத் தேர்தலைத் தவிர மற்ற எல்லாத்
தேர்தல்களிலும் அவர் எடுத்த முடிவு தவறாகவே இருந்துள்ளது. இம்முறை அவருக்கும்,
அவர் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள பெரும் சரிவுக்கு, அவர் சி.பி.எம். கட்சியை
நம்பியதுதான் முதன்மையான காரணம். காரணம் எதுவாக இருந்தாலும், காரியம் தவறு. இன்றைய
சூழலில், ம.தி.மு.க.வின் எதிர்காலம் இருண்டே தெரிகிறது என்பது கசப்பான உண்மை.
சிவகாசியில் ஏன் சிப்பிபாறை ரவிச்சந்திரனை யாருக்கும் சொல்லாமல் திடீரென அறிவித்தார்? வடித்தெடுத்த சர்வாதிகாரம். இதை ஒரு தியாகம் என்று வைகோ நாடகம் ஆடிய காரணம் என்ன? மதிமுகவில் உள்ள தலைவர்கள் யாரும் தனக்கு போட்டியாக வந்து விடக்கூடாது என்ற ஒரே லட்சியம் தான் வைகோவிடம் இருகிறது. அதற்காக என்ன விலையும் கொடுக்க தயாராக இருக்கும் முட்டாள்தனம் அல்ல மெகாலோ மேனியாக்காக அவர் இருக்கிறார் . இவர் இனியாவது இன்னும் நேர்மையாக வாயை திறக்க வேண்டும்,
ReplyDelete