தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 4 October 2015

பகிர்வு - 15


பாரதி பார்ப்பனீய எதிர்ப்புப் போராளி என்பது உண்மை என்றால், கண்ணன் பாட்டு பாடியது ஏன்?
-         சிறீ. கார்த்திக் கவ்தம்


விடை: உங்கள் வினாவே எனக்கு விந்தையாய் இருக்கிறது. பாரதியைப் பார்ப்பனீய எதிர்ப்புப் போராளி என்று யார் சொன்னது? பாராதியாரே தன்னை அப்படிச் சொல்லிக் கொண்டதில்லை. அவரின் எழுத்துகளில், 'தண்டச் சோறுண்ணும் பார்ப்பு' என்பது போன்ற சில வரிகள் உள்ளன.அதே நேரம்,  பார்ப்பன ஆதரவு வரிகள் பல உள்ளன. எனவே, பாரதி பற்றிய எந்த ஆய்வும் அவரை ஒரு பார்ப்பனீய எதிர்ப்புப் போராளியாகக் காட்டவில்லை, காட்டவும் முடியாது!

4 comments:

  1. மகாகவி பாரதியார் சூத்திரர்களுக்கெல்லாம் பூணூல் அணிவித்து பிராமணர்களாக மாற்றினார். அதனால்தான் என்னவோ பார்ப்பனீய எதிர்ப்புப் போராளி என்று கேள்வியாளர் பதிவு செய்திருக்கலாம்

    ReplyDelete
  2. போராளி என்பவன் இலக்கை அடையும்வரை போராடிக்கொண்டே இருப்பவன்.அப்படிப்பார்த்தால் பார்ப்பனிய எதிர்ப்பு போராளி என்பதற்கு நூற்றுக்கு நூறு மார்க் வாங்குபவர் பெரியார் மட்டுமே. அவர்தான் இந்த brahminocracy என்ற வார்த்தையை சரியாக பிரயோகித்தவர்.கேள்வி கேட்டவர் ஒரு பார்ப்பனர் என்பதாலோ என்னவோ அவரால் பெரியாரை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.ஆனாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது.பாரதியை லவ்கீக பார்ப்பனர் என்றவகையில் சொல்லப்படக்கூடிய முதலில் ஆங்கிலேயனை பாராட்டி கவிஎழுத தொடங்கி பிறகு பார்ப்பனர்களுக்கு தேவைப்பட்ட சுதந்திரபோராட்டகாலத்திர்க்கு பயன்பட்ட இந்திய அளவில் அறியப்பட்ட ஒரு தேசியக் கவிஞர் என்று வேண்டுமானால் சொல்லலாம்

    ReplyDelete
  3. இருக்கிறவர்களுக்கு எல்லாம் பூணூல் அணிவிப்பதை காட்டிலும் அணிந்தவர்களைஅறுக்க செய்திருந்தால் பார்பனீய எதிர்ப்பு போராளி என்று ஒரு பேச்சுக்காவது ஒப்புக்கொண்டிருக்களாம்

    ReplyDelete
  4. பாரதி சாதியை எதிர்த்து பாடினார். பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து பாடினார். ஆனால் கடவுளை நம்பினார். இந்து மதத்தை நம்பினார். இந்த முரணை எப்படி பார்க்கிறீர்கள் ? இந்து மதம் தான் சாதியை உருவாக்கியது என்ற கருத்து அவர் காலத்தில் தோன்றாதது தான் காரணமோ ?

    ReplyDelete