தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 3 October 2015

பகிர்வு - 14


தந்தை பெரியார் பிறப்பிற்குப் பின் திராவிடம் மிக வெளிப்படையாக பிராமணியம் உள்ளிட்ட ஆரியத்தை கடுமையாக வெகு சொற்களால் சாடியுள்ளது, சாடிக்கொண்டும் வருகிறது. ஆனால் தன் நிலையை நியாயப்படுத்தி திராவிடத்தை சுடு சொற்களால் சாடியதாக ஒரு சான்றும் இருப்பதாகத் தெரியவில்லை.இவ்வகையான ஆரியத்தின் போக்கு, திராவிடத்திற்கு பலமா, பலவீனமா?
-         க. சீனிவாசன் 


விடை: அடிபடுகிறவன் மட்டுமே அலறும் சத்தம் கேட்கிறது. அடிக்கிறவன் எந்த ஒலியும எழுப்பவில்லையே, ஏன் என்பது போல்  உங்கள் கேள்வி உள்ளது. திராவிடம் ஆரியத்தைச் சொற்களால் தாக்குகிறது. ஆரியமோ திராவிடத்தைத் தன் செயல்களால் அழிக்க முயல்கிறது.

8 comments:

  1. கணேஷ்வேல்3 October 2015 at 09:20

    அருமையான விளக்கம். நன்றி அய்யா !

    ReplyDelete
  2. S.சேஷாத்ரி3 October 2015 at 17:05

    தமிழ்நாட்டில் உங்களைப் போன்றோர்களின் சொல்களால்,செயல்களால்,வன்ம உணர்வால் இன்று சாதாரண பிராமணர்கள்(especially middle class and below) அனுபவிக்கும் மன வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆள் பலம்,பண பலம்,ஆட்சி அதிகார பலம் என்ற அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு பிராமணர்களை ஒடுக்குவது கேவலனமானதாகும். ரியல் எஸ்டேட் பிசினஸ், பஸ்கள்,லாரிகள், பெரும்பாலான தொழிற்சாலைகள் முதல் கல்லுரிகள்,அனைத்து மருத்துவக் கல்லுரிகளும் பிராமணர் அல்லாதோரிடம் தான் உள்ளது பிராமணர்களிடம் இல்லையே.இன்றுள்ள ஜனநாயக நடைமுறைகளின்படி உங்களின் தாத்தா அல்ல தந்தையார் கொலை செய்தால் கூட உங்களுக்கு ஒரு நாள் சிறை தண்டனை கூட கொடுக்க முடியாது அப்படியிருக்கையில் 2000 வருட நிகழ்வுகளைக் கூறிக்கொண்டு(அந்த சலுகைகளை உங்களைப் போன்றோர்களின் முன்னோர்களும் அனுபவித்தார்கள் அவர்கள் ஒன்றும் இழிதொழில்கள் செய்து விடவில்லையே!.இதையெல்லாம் பிழைப்பிற்காக சௌகரியமாக மறைத்து விடுகிறிர்கள்)பிராமணர்களை பழிவங்குவது வெட்கக்கேடானது மற்றுமின்றி ஜனநாயக விரோதனமாகும்.

    ReplyDelete
    Replies
    1. "தாழ்த்தப்பட்டவங்க வீட்ல இருந்து உங்க மகனுக்கு பெண் எடுபீங்களா ?
      --அதெல்லாம் முடியாதுங்க அவங்க "எங்கள விட" கீழ் ஜாதி அவங்கவேற நாங்கவேற...!
      "தாழ்த்தப்பட்டவங்க வீட்ல உங்க பெண்ணை குடுப்பீங்களா?
      --- ஐயையோ அதெல்லாம் முடியாது அவங்க "எங்கள விட" கீழ் ஜாதி அவங்கவேற நாங்கவேற...!
      "தாழ்த்தப்பட்டவங்கள கோவிலுக்கு உள்ளே விடுவீங்களா?
      ---அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதி. அவங்கவேற நாங்கவேற...! கோயில் தீட்டு பட்டுடும்
      "தாழ்த்தப்பட்டவங்கள உங்க வீட்டுக்கு உள்ளே விடுவீங்களா?
      --அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதி. அவங்கவேற நாங்கவேற...! வீடு தீட்டாயிடும்
      "தாழ்த்தப்பட்டவங்கள ஊருக்குள்ள உங்களோட ஒண்னா சமமா வாழ விடுவீங்களா?
      -- அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதி. அவங்கவேற நாங்கவேற...! அவங்க ஊருக்கு ஒதுக்குப்புறமா சேரிலதான் வாழனும்.
      "சரிங்க கடைசியா ஒன்று தாழ்த்தப்பட்டவங்கள செத்த பிறகு உங்களோட இடுகாடுலயே புதைக்க/எரிக்க விடுவீங்களா?
      -- ஐயையோ அதெல்லாம் முடியவே முடியாது. அவங்க "எங்கள விட" கீழ் ஜாதி அவங்கவேற நாங்கவேற...! அவங்க தனி இடுகாட்டுல தான் புதைக்கணும்.
      "தாழ்த்தப்பட்டவங்களுக்கு இடஒதுக்கீடு பற்றி என்ன நினைகிறீங்க?
      -- அது எப்படிங்க நியாயம் அவங்களுக்கு மட்டும் சலுகைகளா? அரசாங்கம் எல்லாரையும் சமமாகத்தான் பாக்கனும், எல்லாருக்கும் சமமாகத்தான் கொடுக்கனும், இப்படி பிரிச்சு பாக்க கூடாது.
      "செத்த பிறகு கூட எங்கள சமமா நினைக்க மாட்டாங்களாம் ஆனா இடஒதுக்கீடுக்கு எதிரா பக்கம் பக்கமா சமத்துவம் பேசுவாங்கலாம் போங்கடா நீங்களும் உங்க சமத்துவமும்."

      Delete
    2. எஸ் சேஷாத்ரி என்கிற ஒருவர் கருத்து சொல்லிருக்கிறார் எல்லோரும் ஒருமுறை ஜோரா கைத்தட்டுங்கோ.

      அவர் குறிப்பிடுகிறார், "சாதாரண பிராமணன்" என்று.

      பிராமணர்களில் சாதாரண பிராமணன் அசாதாரண பிராமணன் என்று ஏதேனும் உண்டா? பிராமணன் என்றால் பிராமணன்தான். அதில் அவர்களுக்குள் எற்றதாழ்வெ கிடையாது. பணம் அவர்களுக்குள் எத்தகைய ஏற்றத்தாழ்வையும் வகுத்திருக்கவில்லை.

      இஸ்லாத்தின் நெறிமுறை என்ன? அவர்களுக்குள் எற்றதாழ்வெ கிடையாது. அவர்களுக்குள் எல்லாரும் சரி நிகரே.

      அதைப்போல ஹிந்து என்று சொல்லிவிட்டால் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் சேஷாத்ரி குறிப்பிட்டதுபோல "சாதாரண பிராமணன்" என்று ஒருவகை பிராமணன் கிடையாது. பணத்தை வைத்து எடைபோட்டால் ஏழை பிராமணன் என்று ஒருவகை உண்டா என்று கேட்டாலும் அதற்கு பதில் இல்லை என்பதே.

      பிராமணன் என்று சொல்லிவிட்டால் அவன் நாடாளும் பேரரசனை விட உயர்ந்தவன் என்று பிராமண வேத புராண இதிகாச மனு தர்மம் தெளிவாக விளக்கமாக சொல்லிவிட்டப்பிறகு சேஷாத்ரி, "சாதாரண பிராமணன்" என்று சொல்லுவது, அது வேறு ஒன்றும் இல்லை. நமது திராவிட சமுதாய குட்டையை ஒரு குழப்பு குழப்பி அதில் மீன் மன்னிக்கவும் அமிர்தம் எடுத்து பருகலாம் என்கிற ஆசை அவ்வளவுதான்.

      ஹிந்துக்கள் என்று சொல்லிவிட்டால் எல்லோரும் சமம் என்றும் அதில் சாதிகளுக்கு அவசியம் இல்லை என்றும் சொல்லிக்கொண்டு வருகிறார்களே பிறகு பிராமணன் என்றும் அவன் படாத பாடு படுகிறானே என்றும் ஏன் ஒப்பாரி வைக்கிறார் சேஷாத்ரி?

      ஆக ஹிந்துக்கள் என்று சொன்னாலும் பிராமணன் என்கிற அக்கறை சேஷாத்ரிக்கு மிகவும் முக்கியம் அப்படித்தானே. சேஷாத்ரியின் ஹிந்து தர்மப்படி உண்மையான ஹிந்து அவர்களின் உள்நோக்க கண்ணோட்டத்தில் பிராமனந்தானே? அந்த பிராமணர்களுக்கு பணிவிடை செய்யவும் சாமரம் வீசவும் எடிபிடியாக இருக்கவும் ஆட்கள் வேண்டும் அவர்களை பிராமண இனத்திலிருந்து தருவித்து கொள்ளமுடியாது என்பதால் நான்கு வருண தர்மத்தை எடுத்தூதி திராவிடர்களை தமக்கு கீழ்மக்களாக அதே வேளையில் பிராமணனை எதிர்த்துவிடாமல் அவர்களையும் ஏதோ ஒருவகையில் தகுதியுடந்தான் பிரம்மன் படைத்து வைத்துள்ளான் என்று கதை கட்டிவிட்டார்கள் அவ்வளவுதான். இதை திராவிடர்கள் பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரத்தால்தான் நன்கு புரிந்து கொண்டார்கள். திராவிடர்கள் தாம் திராவிடர்கள் என்றும் தாம் தம்மை அறியாமல் மதி மயங்கி ஆரியர்களான பிராமணர்களுக்கு பணிவிடை செய்து வந்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் திராவிடர்கள் புரிந்து கொண்டதால் அதனால் பிராமணர்களுக்கு ஏற்பட்ட இழப்புதான் உண்மையாக அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு. மற்றப்படி வேலை வாய்ப்பில் அவர்களுக்கு எந்த இழப்பும் உண்மையில் இல்லை. ஆட்சி அதிகார ஆதிக்கமும் உள்நாட்டு வெளிநாட்டு உறவு கொள்கையும்கூட அவர்களின் (பிராமணர்கள்) கட்டுப்பாட்டில் இருக்கும் போது சேஷாத்ரி புலம்புவதைப்போல "ரியல் எஸ்டேட் பிசினஸ், பஸ்கள்,லாரிகள், பெரும்பாலான தொழிற்சாலைகள் முதல் கல்லுரிகள்,அனைத்து மருத்துவக் கல்லுரிகளும் பிராமணர் அல்லாதோரிடம் தான் உள்ளது" என்பதெல்லாம் வெறும் வெற்று புலம்பல்தான். அவர் காரியத்தோடுதான் புலம்புகிறார் என்பதை பெரியார் பாதையில் பயணிப்பவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள் என்பதால் சேஷாத்ரியின் புலம்பலால் பிராமணர்களுக்கு பயன் ஏதும் இல்லை. ஆயினும் திராவிடர்கள் தம்மைத்தாமே தமக்குள் சரிநிகர் சமானம் என்கிற கருத்தியல்படி ஆண்டுக்கொள்வதர்க்கு இன்னும் நெடும்பயணம் போகவேண்டி இருப்பதை திராவிடர்கள் உணர்ந்து தொடர்ந்து நமது அண்ணன் சுபவீ காட்டும் பாதையில் சுறுசுறுப்பாக பயணம் போகவேண்டும் என்று பேரனம்புமிக்க திராவிடர்களே தன்மானப்புலிகளே அன்புக்குரிய தமிழர்களே உங்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
    3. சாதாரண பிராமணன் என்றால் என்ன?பூனூலை துறந்து மக்களோடு மக்களாக ஐக்கியமான பிராமணனா?

      தான்தான் உயர்ந்தவன் என தானே நினைத்துக்கொள்ள உதவும் பூனூலை எவனாவது துறந்திருக்கானா இது வரை?

      "வேதம் புதிது" படத்தில் 'பூனூல் அணிந்த' சிறுவன் பாலுத் தேவரைப் பார்த்து, பாலு உன் பெயர்.. தேவர் என்பது நீ படித்து வாங்கிய பட்டமா.. எனக் கேட்பது போல காட்சி அமைந்திருக்கும். சிறுவனின் கேள்வி சரியானதுதான். ஆனால் அச்சிறுவன் அணிந்திருக்கும் பூனூல் மட்டும் ஏதும் படித்து பட்டம் வாங்கியதால் வந்ததா என்பதை காட்சிப்படுத்த தவறிவிட்டார் பாரதிராஜா.

      'சாதாரண' பிராமணர்கள் அந்த அடையாளத்தை விட்டொழித்து, எல்லோரும் போல்தான் நாங்களும் என அறிவிக்க தயாரா?

      Delete
  3. வெகு ஜன பிராமணர்களிடம் நாம் அணுகினால், தந்தை பெரியார் கற்பித்த ஒழுக்கத்துடன் பேசுவதையும், தெளிவான பதில் அளிப்பதினையும் காணலாம். ஓரிருவர் விலக்கு உண்டு.
    பொதுவாக சாந்தமாகவும், அஞ்சி நடப்பவர்களாகவும் தோன்றுகிறார்கள். ஆனால் ஒரு சிறு இடைவெளியுடன் நடந்து கொள்வார்கள்.
    முன்னோக்கு சிந்தனையில் சிறந்த பகுத்தறிவாளர்களாக காட்சியளிப்பார்கள்.

    ReplyDelete
  4. அடிபடுகிறவன் மட்டுமே அலறும் சத்தம் கேட்கிறது. அடிக்கிறவன் எந்த ஒலியும எழுப்பவில்லையே//செம கருத்து !!

    ReplyDelete
  5. நன்றி நவிலல்: என்னுடைய கேள்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு தரமான பதிலளித்த ஐயா திரு.சுபவீ அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    அதனைத் தொடர்ந்து தங்களின் விமரிசன கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி.

    இதன் மூலம் நான் புரிந்து கொண்டது: “ இன்னும் ஆரியமும், திராவிடமும் சமன்பாட்டு நிலைக்கு வரவில்லை” என்பதே.

    இந்த மண்ணில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் சமமானவர்கள் மட்டுமல்ல, நல்லவர்களும் கூடவே.
    மீண்டும் நன்றி.

    க.சீனிவாசன்.

    ReplyDelete