தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday, 5 April 2016

அரசியல் மேடை - 22

ஏலம்  விடும் வைகோ 
                                   
         

விஜயகாந்த்துடன் கூட்டணி சேர்ந்த நாள் முதல், அமைச்சரவையே அமைந்து விட்டது போல ஒரு கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்  வைகோ. போதாக்குறைக்கு, தே.மு.தி.க. சுதீஷ் வேறு, யார் யாருக்கு என்னென்ன அமைச்சர் பதவி என்று அறிவித்து விட்டார். இப்போதெல்லாம் மக்கள் நலக் கூட்டணியினர், உள்துறை அமைச்சராக, நிதித்துறை அமைச்சராகப் பவனி வருகின்றனர். துணை முதல்வர் பதவியை வைகோதான் பாவம்  வேண்டாம் என்று கூறி விட்டார். (சிறுவனாக இருந்தபோது போலீஸ் திருடன், டாக்டர்-நோயாளி விளையாட்டு விளையாண்டது   நினைவுக்கு வருகிறது).


கோவில்பட்டி மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட வைகோ, ஒரு  காவல் துறை அதிகாரியிடம் ஆவேசமாகப் பேசுவது அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. (அவர் யாரிடம்தான் ஆவேசம் இல்லாமல் பேசினார்?) சும்மா நிற்கும் காவல் அதிகாரியை, "எங்கே என்னை அடியுங்கள் பார்க்கலாம்" என்கிறார். யாராவது தொட்டால் அல்லது கைது செய்தால்  அதில் ஒரு பரிவு கிடைக்காதா என்று மனத்திற்குள் ஒரு கணக்கு இருக்கலாம்.

தங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க., அ.தி.மு.க ஊழல் சொத்துகளை எல்லாம் பறிமுதல் செய்து, பொது இடத்தில், "ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்...." என்று ஏலம் விடுவாராம். சொல்கிறார். அந்த உரிமை எல்லாம், சட்டப்படி மாநில ஆரசுக்கு உள்ளதா என்பது ஒரு புறமிருக்க, எனக்கு இன்னொரு நினைவு வந்தது. 


தி.மு.க.வில் இருந்தபோது கலைஞர் இவரை நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் அனுப்பி வைத்தார் அல்லவா! அதனால்தான் இவரும் இப்போது ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்  என்று ஏலம் விடுகிறார்!!

7 comments:

  1. தற்போது தேமுதிக கூடாரம் வெறிச்சோடும் நிலையில் உள்ளது.

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய சுபவீ அய்யா,, தாங்கள் அண்மையில் பேசிய ஒரு கூட்டத்தில், சிறுபான்மை நமக்கு ஆதரவு இஸ்லாமிய கட்சிகள் நமக்கு ஆதரவு, ம ம க, எஸ் டி பி ஐ, முஸ்லீம் லீக் நமக்கு ஆதரவு,, தவ்ஹீத் ஜமாதும் நமக்கு விரோதமாக இல்லை,,என்று கூறினார்கள்,, அனால் அதற்கு பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது,,,தி மு க தலைவர் ஐ இறை தூதர், என்று பேசப்பட்டதுக்கு அணைத்து இஸ்லாமிய சகோதரர்கள் உட்பட முகம் சுளிக்க நேரிட்டது என் உட்பட,, அனால் எதிர்பாரத் திருப்பம்,, தவரை எடுத்து நியாயமாக கோரிக்கை இடாமல் தி மு கழகம் ஏ இஸ்லாமிய எதிர்ப்பு போல பாணி உருவாகிறகு,,, இது பெருந் மோசமான நிலையை பெற்றுள்ளது,, இதை கலைஞர் மற்றும் தளபதி ஒரு சுமுகமான முடிவு கொண்டுவர வேண்டும்,, அல்லது தி மு கழகம் மட்டும் அல்ல ம ம க, முஸ்லீம் லீக், sdpi, கும் இதில் அவதூறுகள் அப்பாவி மக்கள் இடையில் ஏற்பட வாய்ப்புள்ளது,,,,சிறுது நாட்களுக்கு முன் நான் என் க்மென்டில் கலைஞர் ஐ சுற்றி சக்கர வியூகம் அமைக்கப்பட்டிருக்க,,, கலைஞர் கு வெற்றி சதுரங்கம் அல்ல பல்லாங்குழி ஐ போல் எளிதாக வெல்வார் என கூறிருந்தேன்,, இந்த பிரச்சனை முடிய ஆசை படுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய Syed subahan அவர்களுக்கு ,
      சென்னை: கழக மேடைகளில் உரையாற்றுவோர் இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் பேச வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சேலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்துக்களை பேசியதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும், கழக மேடைகளில் உரையாற்றுவோர் நமது இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் பேச வேண்டும். ஆர்வம் மிகுதியால் மத சம்பந்தமாக ஏதாவது தவறாக பேசினால், அதை மிகைப்படுத்திட மாற்று கட்சியினர் இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு சிலர் அதற்காகவே இருக்கின்றனர் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்கி கழகத்தின் மீது அவதூறு வீசிட அவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். எனவே கழக கூட்டங்களில் பேசுவோர் "யாகாவாராயினும் நா காக்க" என்று அய்யன் திருவள்ளுவர் வழங்கியிருக்கும் அறிவுரையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பேச வேண்டும். நாகை நாகராஜன் தவறாக எதுவும் பேசியிருந்தால், அது கழகத்தின் கருத்தல்ல என்று மறுப்புத் தெரிவிப்பதோடு, அந்த குறிப்பிட்ட பேச்சாளரும் இதனையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இனி கழக மேடைகளில் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
      ----------------------------------------------
      கழக மேடைகளில் உரையாற்றுவோர் எப்படி பேசுகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை இரண்டொரு நாட்களில் தெரிந்துகொண்டு அதற்கேற்ப்ப அறிக்கை விடும் தலைவர் எங்கே ,நாம் என்ன பேசுகிறோம் என்பதையே தெரியாத தலைவர்கள் எங்கே(வைகோ ,ஜிரா ,முத்தரசன் ,திருமா ,ராமதாஸ் ,அன்புமணி ,சீமான் etc ....) ,கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கும் தலைவர்கள் எங்கே(ஜெயா ,விஜயகாந்த் ,வாசன்),பொறுத்திருந்து பார்ப்போம் நண்பர்களே

      Delete
  3. மதிப்பிற்குரிய சுபவீ அய்யா அவர்களே,
    நீங்கள் மற்றும் அனைத்து திமுக ஆதரவு கட்சி,அமைப்புகளில் உள்ள ஊடக விவாதத்திற்கு செல்லும் நண்பர்களுக்கும் எனது சிறிய வேண்டுகோள் ,
    மக்கள் நலக் கூட்டணி என்பது கலைஞர் எதிர்ப்பு கூட்டணி என்பதை தெளிவாக எடுத்துரைக்கவும்,
    30 தொகுதிகளை தனி தனியாக வைத்திருக்கும் வைகோ ,ஜிரா,முத்தரசன் ,திருமா விஜயகாந்த்தை முதல்வர் ஆக்கியே தீருவோம் என்கிறார்கள் ,ஆனால் 124 தொகுதிகளை வைத்திருக்கும் பிரேமலதா அவர்களோ தொங்கும் சட்டசபை அமையும் அப்போது ஸ்டாலின் எங்கள் வீட்டிற்க்கு வரநேரிடும் என்கிறார் ,இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் என்றால் ,திமுக முதலிடத்திலும் ,admk இரண்டாம் இடத்திலும் வந்து தொங்கும் சட்டசபை அமையும் என்கிறார் .நாங்கள் கிங் மேக்கராக இருப்போம் என்கிறார் இப்போது முதலமைச்சர் போட்டியல் நாங்கள் இல்லை என்பதை ஒத்துகொள்கிறார் .
    மேலும் ஜெயலலிதா சிறுதா ஊரில் கண்டைனரில் பணம் கட்டு கட்டாக உள்ளதாக வைகோ சொல்கிறார் ,அனால் தாபா அதை மறுபதுபோல் பேசுகிறார் ,
    காங்கிரஸ் மோசமான உழல் கட்சி என்று சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மேற்கு வங்காளத்தில் உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள் ,நல்ல வேலை காங்கிரஸ் மேற்கு வங்காளத்தில் இருக்கிறது ,இல்லையென்றால் அவர்கள் மம்தாவை ஆகற்ற BJP -உடன் உடன்படிக்கை செய்து கொண்டிருப்பார்கள் .
    admk தேமுதிக விலிருந்து 9 MLA வை உருவும் போதும் ,எதிர் கட்சி தலைவர் பதவியை அசிங்கமாக பறித்தபோதும் ,வாய் மூடி வேடிக்கை பார்த்தவர்கள் ,இன்று மாசே கள் போகும் போது ஏன் குதிக்கிறார்கள் ,இதில் திருமா சரியாகத்தான் சொல்கிறார் ,தேர்தல் சமயத்தில் இது மாதிரி நடப்பது சகஜம் என்று .
    தேமுதிக விலிருந்து போனவர்கள் விளைபோனார்கள் என்கிறார்கள் (வைகோ ,ஜிரா,முத்தரசன் ,திருமா),அதையே திருப்பி கேட்டால் , வைகோ ,ஜிரா,முத்தரசன் ,திருமா எவ்வளுக்கு விலைபொனீர்கல் சொல்லமுடியுமா?
    உங்கள் கூட்டணி பெயரிலே குழப்பம், நீங்கள் எல்லாம் எப்படி கரை சேர போகிறிர்கள் ?சரத் குமார் கட்சியை ஜெயா உடைத்தபோது ஏன் வாய் திறக்கவில்லை ,
    மேலும் பருப்பு விலை ,கரண்ட் பில் ,பால் ,நிர்வாகம் இல்லாமை ,சென்னை வெள்ளம் ,அமைச்சர்கள் கொள்ளை ,சினிமா தியேட்டர் ,குன்ஹா vs குமாரசாமி தீர்ப்பு ,மதவெறி ,ஈழ நாடகம் ,7 பேர் விடுதலை நாடகம் ,சல்லிகட்டு நாடகம் ,gail குழாய் பதிப்பு ,விவசாயி தற்கொலை ,அதிகாரிகள் தற்கொலை ,கோகுல்ராஜ் ,இளவரசன் ,சங்கர் மரணம் ,எழுத்தாளர் பெருமாள் முருகன் ,நடிகர் கமல் ,விஜய் ,தூத்துகுடி துப்பாக்கி சூடு ,ஆம்பூர் கலவரம் ,தருமபுரி கலவரம்,ஸ்டிக்கர் காலச்சாரம் ,மண்சோறு ,மக்களை சந்திக்காமை ,நிழல் ஆட்சி ,சசி குடும்ப கொள்ளை இதை மேலும் தெளிவாக எடுத்துரைக்கவும் ஐயா .

    ReplyDelete
  4. தன் சாதி சங்க கூட்டத்தில் சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக பேசிய நாகரத்தர் செட்டியார்களின் திமிறின்,ஆணவத்தின் ஒரு உதரணமான ஜாதிவெறியன் பழ.கருப்பையா திமுக வை ஆதரித்த ஒரே காரணத்தால் சுபவீக்கு திராவிட இயக்க போராளி ஆகிட்டார் பழ கருப்பையா.பழ கருப்பையாவின் சாதி வெறியை கண்டித்து சுப வி அவர்களின் கருஞ்சட்டை தமிழன் இதழில் கருப்பையாக்களின் சாதி வெறி
    வெ.அமிர்தராஜ்(சேலம் மாவட்டச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை )
    அவர்கள் எழுதியது http://keetru.com/index.php…
    நீங்க பண்னூர யாவாரத்துக்கு பெரியார் பேர
    கெடுக்காதிங்கடா சுபவீ அவர்களே!

    ReplyDelete
  5. சாதியும் கருணாநிதியும்
    -----------------------
    உங்களை நேரடியாக சாதி அரசியல் செய்பவர் என்று விமர்சிக்க முடியாது. ஆனால், சாதிகள் ஒழிய வேண்டும் என்று சொல்லும் நீங்கள், அதற்காக அரும்பாடுபட்டதாக பீற்றிக் கொள்ளும் நீங்கள், இத்தனை ஆண்டு கால சாதி ஒழிப்பிற்கு என்ன செய்தீர்கள்.... தயவு செய்து அனைவரும் அர்ச்சகராகும் திட்டத்தை சொல்லாதீர்கள். எங்கள் ஊர் வெக்காலி அம்மன் கோவிலில் எந்தக் காலத்திலும், பிராமணர்கள் பூசாரியாக இருந்ததில்லை... உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலையாகி இரண்டு நாட்கள் கழித்தே அதைக் கண்டிக்கிறீர்கள்.அதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வலிக்காமல். கடுமையாகக் கண்டித்தால், ஓட்டு வங்கி சிதைந்துவிடும் என்கிற பயம்.சேஷசமுத்திரப் பிரச்சனையில் வாயே திறக்கவில்லை!. சரி... நீங்கள் சாதி கட்சி என்று விமர்சிக்கும் பா.ம.க., நாளை உங்கள் கூட்டணிக்கு வந்தால், சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று கூற உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா...? அல்லது கோவையிலோ, தேனியிலோ அல்லது பென்னாகரத்திலோ, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிற்க வைக்கும் மன உறுதி இருக்கிறதா....? பின்பு ஏன் உங்களை கொள்கை குன்றாக காட்டிக் கொள்ள விரும்புகிறீர்கள்...?

    ராஜதந்திரங்கள் என்றும் உதவாது
    --------------------------------
    அறம் மட்டுமே துணை நிற்கும். ராஜதந்திரங்களும், சூழ்ச்சிகளும் என்றுமே துணை நிற்காது என்பதற்கு நீங்கள் ஒரு சரியான சான்று. தமிழகத்தின் பிரச்னை காலங்களில் எல்லாம், நீங்கள் உண்மைக்கும், அறத்திற்கும் பக்கத்தில் நின்று இருப்பீர்களாயின், தமிழக மக்கள் உங்கள் பக்கம் நின்று இருப்பார்கள். இந்த தேர்தலில் உங்களுக்கு பால், பழம் உவமை சொல்ல வேண்டிய நிலை இருந்து இருக்காது. ஆனால், நீங்கள் உங்கள் நலனையே முதன்மையானதாகக் கருதினீர்கள். அரசன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி என்ற முதுமொழிக்கு ஏற்ப உங்கள் கட்சியினரும் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கு பிரச்னை வந்துவிடும் என்று அஞ்சி, கடந்து ஐந்து ஆண்டுகளாக, மாவட்ட அளவில் எந்த பெரிய போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை...இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் வாக்கு கேட்கப் போவார்கள்?
    அப்படியானால், ஜெயலலிதா சிறந்த தலைவர், நிர்வாகி, முதல்வர் என்று சொல்கிறேனா என்று இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்களே கேட்பார்கள்..! இல்லை... எக்காலத்திலும் அப்படிச் சொல்ல முடியாது. ஆனால், அவருக்கு நீங்கள் மாற்று இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்லலாம்!

    ReplyDelete
  6. Respected Mr Suba vee,good day to you.I am one of your ardent fan.I follow most of your speech.I really like your ideology about castesism.All humans must be treated equally.Your tamil is amazing and on top of that your undivided support to Kalaingar has made me to admire you more.My late father was also ardent supporter of Kalaingar and he adored him.I wish and pray DMK should win and Kalaingar should become the CM of Tamil Nadu for 6th time.My sincere wishes to you sir.

    ReplyDelete