கேடுகெட்ட நடுநிலை
சில நாள்களுக்கு
முன், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளரும்,
திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பொண்ணுப் பாண்டி இந்தியப் பொதுவுடமைக்
கட்சியிலிருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில், ஒரு பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க.
உறுப்பினராகச் சேர்ந்து விட்டார்.
அவர் பொதுவுடமைக்
கட்சியில் நெடுநாள் உறுப்பினர். அவருடைய தொலைபேசி கூட, "இன்னும் என்ன தோழா,
எத்தனையோ நாளா..." என்றுதான் பாடி அவரை அழைக்குமாம். அப்படிப்பட்டவர்
திடீரென்று கட்சி மாறி விட்டார்.
உடனே அவர் எவ்வளவு
கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு கட்சி மாறினார் என்று நம் வைகோ சொல்லி விடுவார் என்று
எதிர்பார்த்தேன். எல்லோருக்கும் எவ்வளவு பணம் பரிமாறப்படுகிறது என்பதைக்
கணக்கிடும் அதிகாரி அவர்தானே! ஆனால் இம்முறை அவர் வாயே திறக்கவில்லை.
யாரேனும் தி.மு.க.
பக்கம் சென்றால் மட்டும்தான் அந்தக் கூக்குரல்கள் எழும் போலிருக்கிறது. அண்மையில்
பீட்டர் அல்போன்ஸ் த.மா.கா..விலிருந்து விலகியவுடன் கூட அப்படி ஒரு குரல்
எழுந்தது. தந்தி தொலைக்காட்சியில் உரையாடிய விடியல் சேகர், பீட்டருக்கு எவ்வளவு
விலை பேசப்பட்டதோ என்றார். மனசாட்சி உள்ள எவருக்கும், பணத்துக்கு விலை போகக்
கூடியவர் அல்லர் பீட்டர் என்று தெரியும். ஆனாலும் விடியல் சேகர் ஏன் அப்படிச்
சொன்னார்? "இன்றையத் தேர்தலின் கதாநாயகன் கலைஞர்தான்" என்று பீட்ட்டர் சொல்லி விட்டார்
அல்லவா! உடனே சேற்றை வாரி இறைக்க வேண்டியதுதான்.
யார் வேண்டுமானாலும்
அ. தி.மு.க.விற்குப் போகலாம். அதில் ஒன்றும் தப்பில்லை. அவர்கள் எல்லோரும் காசுக்கு
ஆசைப்பட்டுப் போகின்றவர்கள் இல்லை. அவர்கள் கொள்கை மறவர்கள். ஆனால் தி.மு.க.
பக்கம் சென்றுவிட்டால், விலை போகின்றவர்கள் ஆகி விடுவார்கள்.
தி.மு.க.,
அ.தி.மு.க. இரண்டையும் ஒரே மாதிரி நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்கின்றவர்களை
எல்லாம் கவனித்துப் பாருங்கள். இரண்டு எதிர்ப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு
தெரியும். "நடுநிலையாளர்" தமிழருவி மணியன் தன் இதழில், "அ.தி.மு.க.
ஓர் அரக்குக் கோட்டை, தி.மு.க. காகிதப் புலி" என்று எழுதுகிறார். இதுதான் இவர்களின் கேடுகெட்ட நடுநிலை.
திமுக முதலில் செய்ய வேண்டியது. நம் கட்சி சார்பாக இரண்டு மூன்று நடுநிலை தொலைக்காட்சிகளையும், நடுநிலை ஊடகவியலாளர்களையும் உருவாக்க வேண்டியதுதான்...
ReplyDeleteதிமுக வின் மீது அவதூறு சேற்றை வாரி இறைத்தால் ஊடக வெளிச்சம் அவர்களுக்கு தாராளமாக கிடைக்கும் என்பதால் தான் ' வெகுண்டுஎழுந்தான்கள் ' அது போல் செய்கிறார்கள்
ReplyDeleteஇனிமேலாவது கம்யூனிஸ்ட்கள் கொள்கைவாதிகள் அவர்களுக்குள் மாறுபாடு ஏற்பட்டாலும் வேறு கட்சிகளுக்கு செல்வதில்லை என்று ஊடக விவாதங்களில் பங்கேற்பவர்கள் கூற வேண்டாம்
இந்த நடுநிலை வாதம் ஒரு போலித்தனம் ஆனது!! அதிலும், ஊடகம் அத்தனையும் நடுநிலை என்ற போலித்தனமாக பயனிக்கிறது!
ReplyDeleteதி மு கழகம் கொள்கை மற்றும் கோட்பாடு சார்ந்து உள்ளது,, தளபதி இன் பயணம் வெற்றியை ஈடுத்தரும்.
ReplyDeleteஓர் ஆய்வு தொடர்பாக பேச உங்கள் எண் தாருங்கள்
ReplyDeleteஉங்கள் whatsapp பகிர்வை தினமும் நான் பெற என் எண்ணையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
எனது எண் 9443378355 நன்றி
சுபவீயும்,மீடியாக்கள் போல மீண்டும் திமுகVsஅதிமுக ஆட்டத்தை தொடங்கிவிட்டார்!. இனி பேச்சுகள் அனைத்தும் அவர்களைப் பற்றிதான்.இனிமேல் மீடியாவில் மூன்றாம், நாலாம் அணிகளைப் பற்றி அதிகம் பேச்சு வராது.
ReplyDeleteஊழலம்மாவின் துணிச்சலையும் ஊழலய்யாவின் வியூகத்தையும் அதிகம் பேசுவார்கள்.மக்கள் மத்தியில் மற்ற விஷயங்கள் குறித்தெல்லாம் விவாதங்களை வரவிடக்கூடாது என்பதே இவ்களின் எண்ணம்.இவை மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் அதிமுக vs திமுக பற்றிய சிந்தனை மட்டுமே நிரம்பும்.இனி யோசிக்கவேண்டியது யார் எவ்வளவு தருவார்கள் என்பதைப் பற்றி மட்டுமே.பைநரிக் கூட்டத்தின் கொட்டம் அடங்கவே போவதில்லை!.அதற்கென்ன செய்ய? சில புலிகள் தங்களை எலிகள் போல உணர்கின்றன,சில பூனைகளோ தங்களை புலிகளாக நினைத்துக்கொள்கின்றன.ஏமாந்த சோணகிரிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றன.மாற்றுகள் ஏமாற்றுகளாகவும் ஏமாற்றுகள் மாற்றுகளாகவும் உள்ள நாடு இந்த தமிழ்நாடு.ஆம் மாற்றுகள் ஏமாற்றுகளாகவும் ஏமாற்றுகள் மாற்றுகளாகவும் உள்ள நாடு இந்த தமிழ்நாடு!.யதார்த்த பூதம் நாடெங்கும் வலம் வருகிறது.கனவுகாண்போருக்கு கோடை விடுமுறை!.
‘சீட்டு குடுக்கிறேன் வா’என்று கண்ட கண்ட கழிசடைகளையெல்லாம் இன்னும் கூவி கூவி கூப்பிடுகிற திமுக,தன்னுடனே இருக்கும் ஆதித் தமிழர் பேரவைக்கு இன்னும் எத்தனை தொகுதிகள் என்பதை ஏன் அறிவிக்காமல் இருக்கிறது?.அங்கீகாரமே தரக்கூடாத பல சந்தவர்ப்பாவத கட்சிகளுக்கும்,ஜாதிக் கட்சிகளுக்கும் சீட்டு தருகிறவர்கள்,தலித் மக்களிலேயே மிகவும் பின் தங்கியிருக்கிற,அருந்ததியர் மக்களுக்கான கட்சியின் தேர்தல் அங்கிகாரத்தை மறுக்கிறார்கள்?
ReplyDeleteதிமுக ஆதித் தமிழர் பேரவைக்கு தேர்தலில் வாய்ப்புத் தராமல் புறக்கணித்தால்,நிச்சயம் அது அருந்ததியர் மக்களின் அங்கீகாரத்தை மறுப்பதாகவே வரலாற்றில் பதியப்படும்.நேற்று ஆரம்பித்த ம.தேமுதிகவிற்கு திமுக அழைத்து தொகுதி கொடுக்கிறது.ஆனால் சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடிவரும் ஆதித் தமிழர் பேரவைக்கு கரம் நீட்டவில்லை திமுக.இத்தனைக்கும் ஆதித் தமிழர் பேரவை நீண்ட நாட்களாக திமுகவை ஆதரித்து வந்த இயக்கம்.‘சமூக நீதி கட்சி’ –என்றெல்லாம் கூறிக்கொள்ளும் திமுக சிலருக்காகவாவது ‘ஆதித் தமிழர் பேரவை’ அமைப்புக்கு இடம் கொடுத்திருக்கலாம்!.ஆதித் தமிழர் பேரவைக்கு இதயத்தில் மட்டும்தான் இடம் கொடுப்பார் கருணாநிதி..திமுக இடைநிலை ஆதிக்க சாதிகளின் கட்சி! மீண்டும் சொல்கிறேன்,திமுக இடைநிலை ஆதிக்க சாதிகளின் கட்சி!.நேத்து பிரஸ்மீட் வச்சு கட்சி பேரை சொன்னவனைக் கூட இன்னைக்கு கூப்பிட்டு சீட் ஷேரிங் பேசுற திமுக,அதாவது மக்கள் தேமுதிக கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கியதற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதித் தமிழர் பேரவையை கண்டுகொள்ளவே இல்லை.இதுதான் கருணாநிதி அவர்களின் சமூகநீதி!!
உங்கள் வாட்ஸ் அப் பகிர்வை நான் பெற எனது எண்ணையும் இணைத்துக் கொள்ளுங்கள் எனது எண் 9443378355
ReplyDeleteஊடகங்கள் நடுநிலை என்பது எந்த காலத்திலும் இருந்ததில்லை.அச்சு ஊடகங்களில் தந்தி எப்போதும் ஆளுகின்ற கட்சியின் ’நியாயங்களை’ அதிகமாகவும் எதிர்கட்சி வரிசைக்கு சென்றாலும் அடுத்து ஆளும் வாய்ப்பிருக்கிற கட்சிக்கு ஓரளவு ’நியாயமாகவும்’ ஒரு 70:30 தந்தி ப்ராண்ட் நடுநிலையை பேணி பராமரித்து வருகிறது.பார்ப்பன ஆசிரியர் குழாம்,பார்ப்பன உரிமையாளர்களின் செயல்பாடுகள் என்றைக்குமே ஒரே சிந்தனை தான்.போடுகின்ற முகமூடியின் தரமும் வேலைப்பாடுகளும் தான் வேறுபாடு.செய்திகளுக்கு முக்கியத்துவமும் அதன் உண்மைத்தன்மையும் ஓரளவுக்கு அமைந்து விட்டால் அச்சு ஊடகங்களின் நேர்மை கேள்விக்குள்ளாவதில்லை.
ReplyDeleteஆனால் காட்சி ஊடகங்களில் திமுக வெறுப்புணர்வு என்பது எல்லா ‘ நெறி’யாளர்களுக்கும் பொதுவானது. எனக்கு தெரிந்தவரை சுப வீயைத் தவிர எல்லோருமே ஒரு ஒடுக்குதலுக்கு ஆளாகின்றனர்.பிரசன்னா ஒரு எள்ளலான தோரணையாலும்,அப்பாவு தனது பரந்த அனுபவத்தாலும் அதை கடந்து வருகிறார்கள் என்ற போதிலும் பெரும்பாலோர் பாரபட்ச அணுகுமுறையால் பாதிப்படையவே செய்கின்றனர்.
2014 பாராளுமன்ற தேர்தலில் தனது தந்திர வியூகத்தின் மூலம் திமுகவின் வாடை கூட பாராளுமன்றத்தில் படாமல் தடுத்தவர் தமிழருவி மணியன்,அந்த வயிற்றெரிச்சலிலால் தான் எப்போதும் அவர் மீது வெறுப்புப் பேச்சு பேசுகிறார் சுபவீ.அரசியல் சூத்திரங்களை ஆதியோடு அந்தமாக கரைத்துக் குடித்த மணியன் நியாயமாக அவர் ஒரு ராஜகுருவாக இருந்திருக்க வேண்டும்.2300ஆண்டுகள் கழித்துப் பிறந்த இரண்டாம் சாணக்கியனாகவும்,தனது ஊடக பரப்புரையால் அறநெறி,அருள்நெறி மற்றும் குறள்நெறி ஆகியவற்றுக்கு ரத்த பாத்தியமும் சொத்து பாத்தியமும் உடையவருமான திகழ்கிறார் தமிழருவி மணியன்.ஊடகங்களில் திமுக வெறுப்புணர்வு பற்றி மிகைப்படுத்தி பேசுவது இருக்கட்டும்,தமிழருவி மணியனை பற்றி வெறுப்புணர்வோடு அணுகும் சுபவீயின் செயல் மட்டும் மோசமான செயலில்லாத உகந்த செயலா?
ReplyDeleteஅய்யா அய்யா கொஞ்சம் பொறுங்கள் தமிழருவி மணியனே கூட எண்ணி பார்த்திராத அளவு அவருக்கு வெளிச்சம் பாய்சோ பாய்சோ என்று பாய்சுகிறீகள்.ஒரு நரம்பில்ல நாக்கு எப்படி எப்படியெல்லாம் உண்மையை திரித்து பொய்யை அரங்கேற்ற முடியும் என்பதற்கு மணியனும் ஒரு உதாரணம். அவர் ஈழப்பிரச்சனையில் குளிர்ந்த காய்ந்த சுயநலவாதி. அவரது பேச்சு முழுவதும் புலி ஆதரவாளர்களை உசுப்பி விட்டு, கொம்பு சீவிவிட்டு அதில் தன்னை ஒரு தலைவராக நிலை நிறுத்த எடுத்த முயற்சி ஆகும். அவர்களின் மோசமான வீழ்ச்சிக்கு இவரை போன்ற நுனி நாக்கு கிருமிகளும் ஒரு காரணம். இவர்மட்டும அல்ல வைகோவும் கூட இந்த பாணிதான். இவர்கள் ஈழத்தாய்க்கு மண்சோறு சாப்பிட்ததால் அங்கே மக்கள் அதற்கும் வழி இல்லாமல் போனார்கள். கொஞ்சம் கூட உண்மையில்லாத அரசியலுக்கு இந்த மணியன் மிக தெளிவான ஒரு உதாரணமாகும். இவரது பாவம் எங்கேயும் கழுவ முடியாதது.
Deleteதங்கள் கூட்டணியில் உள்ள,
ReplyDeleteஅ) பலம் வாய்ந்த கட்சியில் இருந்த நபர்கள் விலகி திமுக பக்கம் சென்றாலோ,
ஆ) அதிக மக்கள் செல்வாக்குடன் உள்ள பிரமுகர் திமுக பக்கம் சாய்ந்தாலோ, உடனே வைகோ கூக்குரல் பணம் நோக்கி கொக்கரிக்கும்.
ஏனெனில், மிக எளிமையான தெரிந்த ரகசியம்தான். இந்த கட்சிக்காரர்கள் மாற்றத்தினால், தங்கள் கூட்டணிக்கான சேதாரம் என்ற கவலையை விட அதிமுக – விற்கு பாதகம் வந்துவிடுமோ என்ற கவலைதான் அதிகம் வைகோவிற்கு.
தா பாண்டியன் வெளிப்படையாக செய்யாததை பொன்னுபாண்டி அவர்கள் செய்திருப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியப்படவேண்டிய செயலில்லை
ReplyDelete