தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 25 August 2016

காவேரிதான் சிங்காரி


பகுத்தறிவுக்  கருத்துகளைப்  பேசிக்கொண்டிருந்த நண்பர் சீமான், திடீரென்று, முருகன் நம் முப்பாட்டன் என்று சொல்லிப்  பழனிக்கு காவடி எடுத்தபோது, தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள  கிருஷ்ணன், இந்திரன், வருணன் எல்லாம் நம் முப்பாட்டன்கள் இல்லையா என்று கிண்டலாகக் கேட்டிருந்தேன். அது அவர் காதில் விழுந்துவிட்டது போலிருக்கிறது. இதோ கோகுலாஷ்டமியும் அதுவுமாக கிருஷ்ணனும் நம் மூதாதைதானென்று அறிவித்து ஊர் முழுவதும் சுவரொட்டியும் அடித்து ஒட்டி விட்டார்கள். இந்திரன், வருணன் பிறந்த நாள்   எப்போது வருமென்று தெரியவில்லை.அப்போது அவர்களுக்கும் சுவரொட்டி இல்லாமலா போய்விடும்?  இவர்களைத் தவிர முப்பத்து முக்கோடித் தேவர்கள், அவர்களின் மனைவிமார்கள், அவர்களின் ஆசை நாயகிகள் வேறு இருக்கிறார்கள்.  இனி எல்லோருக்கும் சுவரொட்டி அடித்துவிட வேண்டியதுதான்.


 

இதற்கிடையில் அவர் கிருஷ்ணன் பற்றி முன்பு பேசிய காணொளிக்  காட்சியை எடுத்து இப்போது வலைத்  தளங்களில் யாரோ போட்டு விட்டார்கள். அந்தப் பேச்சும், இந்தச் சுவரொட்டியும் கைகோத்துக் கொண்டு,    "கன ஜோராக" இன்று வலைத்தளங்களில் வலம்  வந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பேச்சைக் கேட்டுவிட்டு, இந்தச் சுவரொட்டியைப் பாருங்கள். துயரமெல்லாம் ஓடிப்போகும்.  

என் சின்ன வயதில், "காவேரிதான் சிங்காரி, சிங்காரிதான்  காவேரி " என்று ஒரு திரைப்படப்பாடல் கேட்டிருக்கிறேன். இப்போது அது  என் நினைவுக்கு வருகிறது. நம்புங்கள் நண்பர்களே, அந்த சீமான்தான் இந்த சீமான், இந்த சீமான்தான் அந்த சீமான்!

9 comments:

  1. காலத்தின் அலங்கோலம் ...!!!

    ReplyDelete
  2. K.எழிலரசி27 August 2016 at 00:43

    சீமான் கோகுலாஷ்டமி கொண்டாடுவதை குற்றம் சொல்லும்,கிண்டல் கேளி பேசும் சுபவீ பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிக்கொண்டிருந்த கலைஞர்,ஸ்டாலின் மற்றும் பிற திராவிட கட்சிகளில் உள்ளவர்கள் ரமலான் நோன்பில் பங்கெடுப்பதை குற்றம் சொல்லாதது கிண்டல் கேளி பேசாதது ஏன்?.எல்லாம் கேவலமான (அரசியல்) உள்நோக்கம் தான் காரணம்.அதனால்தான் உங்களுடைய பேச்சிற்கு உங்களின்(திமுக) வளையத்திற்கு வெளியிலுள்ள மக்களிடம் ஈர்ப்போ,ஆதரவோ,(திமுக)தேர்தலில் வெற்றி பெற வாய்ப்போ இல்லை.

    ReplyDelete
  3. முன்பு அவர் கிருஷ்ணனை பற்றி தவறாக பேசியது உண்மை தான். அதை சீமான் மறுக்கவில்லை. இப்போது அவர் அந்த தவறை உணர்ந்து, கிருஷ்ணனை போற்ற துவங்கியுள்ளார். இது நல்ல மாற்றம். ஒரு காலத்தில் ஒரு தவறான கருத்தியலை ஆதரித்ததால், காலம் முழுக்க அதை தொடரவேண்டும் என்ற அவசியம் இல்லை.
    "மாற்றம் எனப்து மானிட தத்துவம். மாறாமல் இருக்க மரமா செடியா." - கண்ணதாசன்.

    ReplyDelete
    Replies
    1. மாறுதல் என்பது மாறாதது - என்பது அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளுக்கு பொருந்தும் விதியாகும். இதில் ஒரு விதிவிலக்கு உண்டு; அது அடிப்படைக்கொள்கைகள் - அவை என்றும் மாறகூடாது. மற்றவைகள் யாவும் சூழ்நிலைகளால் மாறிக்கொண்டே இருக்கும். திரு.சீமான் அவர்கள், தான் கொண்டுள்ள அடிப்படைக் கொள்கையில் மாறுவதால் தடுமாற்றம் அடைந்துள்ளதாக தோன்றுகிறது. திரு.சீமான் அவர்கள் கொண்டுள்ள அரசியல் இலட்சியம் போற்றத்தக்கது.

      Delete
  4. திராவிடர் கழகம் கடவுள் மறுப்பு கொள்கை பேசலாம்.... திமு கழகம் ஒரு அரசியலில் உள்ள மக்கள் பிரச்னை குரல் குடுக்கும் கட்சி... அவர்கள் கடவுள் மாற்றுப்பு பேசவில்லை, ஆனால் அவர்கள் கடவுள் திணிப்பை எதிர்க்கிறார்கள் ...
    எந்த கடவுளையும் கேவலமாக பேசவில்லை.... அதை கட்டாயபடுத்தும் போது கலைஞர் எதிர்க்கிறார்...
    சீமான் பகுத்தறிவு பேசிவிட்டு இப்போது முருகன் , கிருஷ்ணன் எங்கள் முப்பாட்டன் என்றால் அப்போது இயேசு,அல்லா பற்றி அவர் எண்ணம் என்ன?
    சுப வீ அய்யா சொல்வதில் தவறு இல்லை... ஸ்டாலின் நோன்பிலும் பங்கேற்கிறார், கிறிஸ்துமஸ் விழாவிலும் பங்கேற்கிறார் .... சீமான் அதை செய்வாரா ?

    ReplyDelete
  5. தமிழர்களின் காவற் தெய்வங்கள் எவ்வாறு வண்ணம் தீட்டி உருவாக்கப்பட்ட கதைகள் மூலம் வட தெய்வங்களின் relatives ஆகினார்களோ அதை நாம் மக்களுக்கு தெளிவுபடுத்துதல் இக்கால தேவை.

    ReplyDelete
  6. அவரது பார்வையில் ஆரியமையமாக்கப்பட்ட தமிழ் கடவுள்களை மீட்டெடுக்கிறோம் என்று சொல்கிறார். நாத்திகத்தை சமூக நீதியை ஏற்று கொண்ட தமிழர்கள் என்றும் திராவிட இயக்கத்தை விட்டு நீங்க மாட்டார்கள். அப்படியிருக்க எஞ்சியிருக்கும் தமிழர்கள் இந்துத்துவ இயக்கத்திலோ போலி திராவிட கட்சியான அதிமுக விலோ போய் சேர்வதை விட இது போன்ற இயக்கங்களில் சேர்ந்துவிடுவது ஒப்பிட்டளவில் சிறந்தது தானே ஐயா ?

    இந்துத்துவம் எதிர்த்துநின்று வென்றதை விட உள் வாங்கி செரித்து தான் அதிகம் என்று நீங்களே பேசுவதை கேட்டிருக்கிறேன். அப்படி உள்வாங்கி செரித்ததை மீட்பது நல்லதுதானே ?

    கற்றறிந்த இளைன்கர்கள் பலர் கடவுள் மார்கத்துக்கு இழுத்து செல்லப்படுவதை நாம் விரும்பவில்லை என்றாலும், கடவுளை நம்புகிறவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் எதோ ஒரு இந்துத்துவ இயக்கத்தில் போய் சேர்வதை விட இது போன்ற இயக்கங்களில் சேர்ந்துவிடுவது ஒப்பிட்டளவில் சிறந்தது என்று நினைக்கிறேன். உங்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறேன் .

    நன்றி.

    ReplyDelete
  7. சீமான் அன்று - கிருஷ்ணன் கடவுள் பொறுக்கி நாய், சீமான் இன்று - மாயாண்டி என்கின்ற மாயோன் போற்றி !!! - இரண்டு நிமிட காணொளி:

    https://www.youtube.com/watch?v=oEm24jlR0PE

    சீமான் விகடன் பேட்டி:

    கிருஷ்ணன்? - கண்ணன் - "மாயாண்டி" திரிந்து "மாயோன்" ஆனது - என் முப்பாட்டன்

    அப்போ முருகன்? - அவரும் என் முப்பாட்டந்தே - குறிஞ்சிநிலத் தலைவரு

    பெருமாள்? - மால் என்றால் கருப்பு, திருமால் தான் பெருமாளு, எங்க பெரியகருப்பு!!!

    அடங்கப்பா!! முடியலடா!!


    ReplyDelete
  8. சீமான் விகடன் பேட்டி: http://www.vikatan.com/news/tamilnadu/67594-lord-krishna-is-also-my-forefather-says-seeman.art

    ReplyDelete