சுபவீ அவர்களுக்கு திராவிடத்தைப் பற்றி சில கேள்விகள். கேள்வி கேட்கும் முன்பு, ஒரு தகவலைக் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். திராவிடம் குறித்த தகவலைப் பெரும்பாலும் கேட்டறிந்தது தாங்கள் பேசிய காணொளிக்காட்சிகள் மூலமாகத்தான். அதுபோக இன்னும் சில ஆதாரங்களும் தெரிந்துகொண்டதன் பேரில் சில கேள்விகள் எனக்குள் எழுந்தன. திராவிடத்தைக் குறித்து நான் ஒரு கட்டுரை எழுத எத்தனிக்கிறேன். அதற்குமுன் தங்கள் விளக்கத்தை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அயோத்திதாச பண்டிதர், மறைமலை அடிகளார், அவர்களுக்கு பின்பு திராவிடர் கழகம் சார்பாக பெரியார் ஆகியோர் திராவிடம் என்ற சொல்லை பரவலாக்கினார்கள். இவர்களுக்கு முன் திராவிடம் என்ற சொல்லாடலை கால்டுவெல் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
அம்பேத்கருடைய ஆராய்ச்சி முடிவில், திராவிடர் என்னும் சொல் தமிழரை மட்டுமே குறிக்கும் என்று குறிப்பிடுகிறார். ஆரியர்கள் தமிழர் என்ற சொல்லை சரியாக உச்சரிக்கத் தெரியாமல் டமிலா, ட்ரமிலா, ட்ரவிடா என்று மருவி திராவிடர் என்ற சொல் பிறந்ததாகக் கூறுகிறார். அவர் பார்வையில், ஆரியர்கள் உச்சரிக்கத் தெரியாமல் நமக்கு வைத்த பெயர்தான் திராவிடர் என்பது.
மேலும் தமிழர் என்ற சொல்லாடல் பார்ப்பனரையும் உள்ளடக்கிய சொல், ஆனால் திராவிடர் என்ற சொல்லுக்குள் பார்ப்பனர் அடங்கமாட்டார்கள் என்ற வாதத்தையும் வைக்கிறார்கள். இந்த விளக்கத்திலிருந்து எனது கேள்விகள் இதோ.
திராவிடர் என்கிற பதத்துக்குள், தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்ற அனைத்து தட்சணப்பிரதேச இனத்தவர் அனைவரும் அடங்கும் என்கிற கருத்தை தாங்கள் ஏற்கிறீர்களா?
ஒவ்வொரு இனத்தவருக்கும் தனித்தனியே அடையாளம் இருக்கும்போது இவர்கள் அனைவர்களையும் இணைத்து ஒரு பொது இனம் (திராவிடம்) தேவைதானா? அது சாத்தியமா?
தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்தவரும் திராவிடம் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது நாம் அதனை கட்டாயம் ஏற்கத்தான் வேண்டுமா?
திராவிடம் என்பது 100 ஆண்டுகால வரலாறு என்பது உண்மை. ஆனால் தமிழன் என்பது பல்லாயிரம் ஆண்டு வரலாறு. அதனால் திராவிடத்தை விட தமிழன் என்கிற அடையாளம்தான் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். தங்கள் கருத்து என்ன?
ஒருவேளை திராவிடர், தமிழர் என்ற இரண்டு சொற்களும், தமிழர் என்ற பொருளைத்தான் தருகிறது என்று ஒப்புக்கொண்டால், ஆரியர்கள் நமக்கு வைத்த பெயரை நாம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?
பாப்பனர்கள் தமிழர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களை தமிழர்களா ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?
சமூகநீதியைக் குலைத்தக் குற்றச்சாட்டு பார்ப்பனர்கள் மீது சுமத்தலாம் என்றால், தற்போது ஆதிக்க சாதிகள் எல்லாவற்றின் மீதும் சுமத்தலாம் அல்லவா?
விடுதலை பெறுவதற்கு முன்பு பார்ப்பனர்கள் கீழ்சாதி என்று அவர்கள் கருதியவர்களை எவ்வாறு கீழ்த்தரமாக நடத்தினார்களோ, அப்படித்தான் இப்போதைய ஆதிக்கசாதிகள் அவர்களுக்கு கீழே இருக்கும் சாதிகள் என்று அவர்கள் கருதும் சாதிகளை இன்றும் நடத்துகிறார்கள் என்று நான் கருதுகிறேன். தங்கள் கருத்து என்ன?
சமூக நீதியை குலைத்த குற்றத்திற்காக பார்ப்பனர்களை தமிழர்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென்றால் இன்றைய ஆதிக்க சாதிகளையும் நீடிக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன். தங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.
https://tamil.oneindia.com/news/india/a-rti-report-says-that-bullet-train-scheme-wont-run-successfully-india/articlecontent-pf270970-300369.html
ReplyDeleteSir, can you please suggest good books to understand Dravidian history
ReplyDeleteதிராவிட இயக்க வரலாறு -திருநாவுக்கரசு அவர்கள் எழுதியது
DeleteMy relatives every time say that I am wasting my time here
ReplyDeleteat net, but I know I am getting knowledge everyday by reading thes nice content.
கண் மண் தெரியாமல் செல்பவர்களின் இறுதி நிலை அனைவரும் அறிந்ததே.
ReplyDeleteசுபவீ அவர்களுக்கு திராவிடத்தைப் பற்றி சில கேள்விகள். கேள்வி கேட்கும் முன்பு, ஒரு தகவலைக் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். திராவிடம் குறித்த தகவலைப் பெரும்பாலும் கேட்டறிந்தது தாங்கள் பேசிய காணொளிக்காட்சிகள் மூலமாகத்தான். அதுபோக இன்னும் சில ஆதாரங்களும் தெரிந்துகொண்டதன் பேரில் சில கேள்விகள் எனக்குள் எழுந்தன. திராவிடத்தைக் குறித்து நான் ஒரு கட்டுரை எழுத எத்தனிக்கிறேன். அதற்குமுன் தங்கள் விளக்கத்தை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
ReplyDeleteஅயோத்திதாச பண்டிதர், மறைமலை அடிகளார், அவர்களுக்கு பின்பு திராவிடர் கழகம் சார்பாக பெரியார் ஆகியோர் திராவிடம் என்ற சொல்லை பரவலாக்கினார்கள். இவர்களுக்கு முன் திராவிடம் என்ற சொல்லாடலை கால்டுவெல் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.