(நடிகர் விஜய் படம்)
ஒரு திரைப்படத்தைப்
பார்த்து இவ்வளவு மிரண்டவர்களை இதுவரையில் நாம் பார்த்ததில்லை. அதுவும் மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக ஒரு
திரைப்படத்தில் வரும் சில உரையாடல்களைக் கண்டு இப்படிக் கதிகலங்குவதைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது!
நடிகர் விஜய் நடித்த 'மெர்சல்' என்ற
திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. எதிர்பார்த்ததை விட மக்களிடம் கூடுதல் ஆதரவைப்
பெற்று அது இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் ஜிஎஸ்டி வரி பற்றி ஏதோ
சில உரையாடல்கள் வருகின்றனவாம். அந்தக் காட்சிக்குத் திரையரங்கில் பெரிய
வரவேற்பும் கிடைத்ததாம். பொறுக்கவில்லை இங்குள்ள பாஜகவினருக்கு. அந்தக் காட்சியைத்
தடை செய்ய வேண்டும் என்று ஒரே இரைச்சல். அது மட்டுமின்றி, நடிகர்
விஜய் வருமானவரி ஒழுங்காகக் கட்டியுள்ளாரா என்று ஹெச். ராஜா கேள்வி
எழுப்பியுள்ளார். ஓ...வருமானவரித் துறையின் பயன்பாடு இப்படித்தான் உள்ளது என்று
நமக்குப் புரிகிறது.
பாவம் தயாரிப்பாளர், நமக்கு எதற்கு வம்பு என்று கருதி,
அந்தக் காட்சியை நீக்கிவிடுவதாகக் கூறியுள்ளார். ஆனால் அதற்குப் பிறகுதான் அந்தக் காட்சி மக்களிடம்
வெகு விரைவாகப் பரவத் தொடங்கியுள்ளது. ஆம், வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர்
போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும், அங்கிங்கெனாதபடி
எங்கும் இப்போது அந்தக் காட்சிதான் ஒடிக் கொண்டிருக்கிறது. படம் பார்க்காதவர்கள் கூட, அந்த உரையாடல் வரும் காட்சியை இன்று பார்த்துவிட்டனர். பாஜகவினருக்கு
நம்நன்றி!
அண்ணா, கலைஞர் படங்களுக்கு அன்று எவ்வளவு
எதிர்ப்பு, எவ்வளவு விமர்சனங்கள்! என்றைக்காவது அது கண்டு
அஞ்சியதாக யாரேனும் சொல்ல முடியுமா? பராசக்தி படத்திற்குப் 'பரப்பிரம்மம்' என்று ஓர் ஏடு விமர்சனம் எழுதியது.
கலைஞர் தன் அடுத்த நாடகத்திற்கு அதனையே தலைப்பாக்கினார். அறிஞர் அண்ணாவின் 'தாய் மகளுக்குக் கட்டிய தாலி' திரைப்படத்திற்கு
விமர்சனம் எழுதிய குமுதம் இதழ், ஒரு பக்கம் முழுவதையும்
காலியாக விட்டுவிட்டு, கடைசியில், கீழே,
"வெட்கக்கேடு" என்று மட்டும் எழுதி இழிவுபடுத்த முயன்றது.
எல்லாவற்றையும் கடந்துதான் வந்திருக்கிறோம்!
ஆனால் இன்றோ, மெர்சலைக் கண்டு மெர்சலாகிப் போனார்கள் பாஜகவினர். வென்றுவிட்டார்கள்
விஜய் ரசிகர்கள்!!
கம்யூனிசம் என்றால் என்னவென்று தமிழர்களுக்கு முதல் முதலாக பாடம் எடுத்தவர் விஜய். கத்தி இங்கே ஹிட் அடிக்க தெலுங்கில் சிரஞ்சீவி நடித்தார் அங்கும் மெகாஹிட். இப்போது முருகதாஸ் அவர்கள் இந்தியில் அதே படத்தை எடுக்க நடிகர்களை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறார். இப்படி இந்தியாவுக்கே கம்யூனிசத்தை கொண்டு சென்றவர் விஜய். அரசியலில் அவரது குடும்பமே ரொம்ப நாளாக இருந்து கொண்டிருக்கிறது. அவரது தந்தை சந்திரசேகர் மிக அருமையான சமூக கருத்துள்ள படங்களை எடுத்தவர். எனவே விஜயின் ரத்தத்திலேயே அரசியல் ஊறிப்போய் இருக்கிறது. சுபவீ அய்யா உங்கள் சமூக வலைதளத்தின் மூலமாக நான் ஒரே ஒரு வேண்டுதல் இங்கே உள்ள கம்யூனிச தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். விஜய்யிடம் கம்யூனிச தலைமைப் பொறுப்பை தந்து விட்டு நீங்கள் தயவு செய்து ஒதுங்கி விடுங்கள். விஜய் நிச்சயம் சம்மதிப்பார். கம்யூனிசம் கேரளா மாதிரி தமிழகத்தில் வலுவூன்ற வேண்டுமென்றால் ஒரு வலுவான முகம் தேவை. எதிர்கால தமிழ் சந்ததியினரை கார்ப்பரேட் இந்துத்துவ அரக்கர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் இந்த தியாகத்தை செய்ய வேண்டும் அய்யா. உங்கள் கால்களில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDelete(குறிப்பு : சினிமா இப்போது மிக அருமையான தளத்தில் இயங்குகிறது. இதற்கு உங்களை போன்ற இன்டெலக்சுவல்ஸ் விமர்சனங்கள் மீடியா மூலமாக தேவைப்படுகிறது. முக்காபாஸ் என்ற அனுராக் காஸ்யபின் படம் நவம்பர் பத்து அன்று இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகிறது. பிஜேபியின் பார்ப்பணர்களின் முகத்தை தோலுரித்துக் காட்டுவதாக இருக்கும் என்கிறார்கள். கேரளாவில் காம்ரேட் இன் அமெரிக்கா படம் காங்கிரஸின் உண்மையான முகத்தை காட்டியது)
எந்த ஒரு சமூகங்களிலும் நல்லவர் கெட்டவர் உண்டு. ஆனால் பெரும்பாலானவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்து விமர்சனம் செய்ய வேண்டி இருக்கிறது. எனது ஆந்திராவை சேர்ந்த நண்பர் ரெட்டி சமூகத்தை பற்றி குறிப்பிடும்போது இப்படி சொல்லுவார். அவர்கள் எல்லாரிடமும் நன்றாக சிரித்து பேசுவார்கள். ஆனால் ஆந்திராவை ஆள வேண்டும் போட்டி இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் துடிப்பார்கள் என்று சொல்லுவார். அதே போலத்தான் இங்கே உள்ள பிள்ளை சமூகத்தவரும் இருக்கிறார்கள். நடிகர் விஜயை கம்யூனிச தலைவராக்க துடிக்கும் அதே வேளையில் அவர் நல்ல தலைவராக இருக்க முடியுமா என்ற சந்தேகங்களும் உண்டு. ஆளப்போறான் தமிழன் என்று பாடல் வைத்த அவரிடம் நேரிடையாகவே கேட்கத்தோன்றும் கேள்விகள் உண்டு. தமிழன் என்றால் யார் யார் எல்லாம் தமிழர் என்று அவர் நினைக்கிறார் என்று தெரிய விரும்புகிறேன். பிள்ளை ரெட்டி மட்டும்தான் தமிழர்களா. நாடார்களை தமிழர்கள்தான் என்று அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்று எனது சந்தேகம் உள்ளது. அட்லீ விஜய் இருவரும் பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர்கள். தொடர்ந்து வரிசையாக மெர்சல் உள்பட தனது படங்களில் நாடார்களை வில்லன்களாக காட்டி தனது காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறார் விஜய். எப்படி கூறுகிறாய் என்று கேட்டால் என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் படம் பார்க்குமபோது உணர முடியம். நடிகர் விஜய் இப்படி செய்யும்பட்சத்தில் ஏன் இப்படி செய்கிறார் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. இதற்கு பதில் பொறாமை தொழில் போட்டி எங்கே இவர்கள் கூட்டமாக வளர்கிறானே பொறாமை இதனை தவிர வேறு பதில் கிடைக்க வில்லை. கலைஞர் போல ஒரு சில தனி மனிதர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றால் ஒரு கூட்டமாக அனைவரும் ஏற்றுக்கொண்ட சமூகமாக நாடார் சமூகம் உள்ளது. இதற்கு காரணம் நாடார்களின் தியாகம். இன்று கேரளா மனித வள மேம்பாடு குறியீட்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம அங்கு ஈழவர் என்று அழைக்கப்படும் நாடார்கள் கம்யூனிசத்தை வளர்த்ததே என்பதை எத்தனை தமிழர்கள் அறிவார்கள். சக மனிதர்கள் மேல் அக்கறை இல்லாமல் எதையாவது புகுத்தி அரசியல் செய்து பணம் சம்பாதிக்க துடிக்கும் மற்ற தமிழர்களுக்கு இடையே அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சமூகமாக நாடார்கள் இருக்கிறார்கள். யார் நல்லது செய்தாலும் மனதார வரவேற்கும் சமூகமாகவும் நாடார்கள் இருக்கிறார்கள். பிள்ளை சமூகத்தை போல தன்னை முன்னிலைப்படுத்தி கல்யாண வீடென்றால் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் சாவு வீடென்றால் பிணமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. நாயுடு சமூகமும் பிள்ளை சமூகத்தை சேர்ந்தவர்களும் தொடர்ந்து நாடார்களை தனது படங்களில் தவறாக காட்டும்போது இவர்கள் தமிழர்கள்தானா என்று சீமான் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என கேட்க தோன்றுகிறது.
ReplyDeleteமுதலில் எந்த ஓருத்தரின் சாதி, மதப் பிண்ணனியைப் பார்த்து அவரை விமர்சனம் செய்வதை நிருத்த வேண்டும்.இதை சு.ப.வீ . அவர்களும் ஏற்பார் என நினைக்கிறேன்.
Deleteபார்ப்பனர் அல்லாத சில தமிழர்கள் சங்கராசாரியாரின் படங்களை பூஜை அறையில் வைத்து வணங்குகிறார்கள்.என்ன கொடுமை இது. பிள்ளைமார் தங்களை பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பதாக நினைக்கிறார்கள்.நாய்டுகள் தமிழுக்கு எதிரானவர்கள் ,பார்ப்பன அடிமை பெருமையா?.சுய மரியாதையும் பகுத்தறிவும் உள்ளவர் எவரும் பார்ப்பானை வைத்து திருமணம் செய்ய மாட்டார்.
ReplyDelete